மேலும் அறிய

Rashmika Mandana: நடிகை மாதிரியே இல்லை! ஆடிஷனில் தொடர்ந்து நிராகரிக்கப்பட்ட ராஷ்மிகா மந்தனா!

ஒவ்வொரு முறையும் ஆடிஷனில் நிராகரிக்கப்படும் போதும் தான் அழுதுகொண்டே வீடு திரும்பியதாக நடிகர் ராஷ்மிகா மந்தனா தெரிவித்துள்ளார்

ராஷ்மிகா மந்தனா

அண்மைக் காலங்களில் தென் இந்திய நடிகைகளில் அதிக கவனம் ஈர்த்தவர் நடிகை ராஷ்மிகா மந்தனா. தெலுங்கு , மற்றும் தமிழ் ரசிகர்களிடையே பிரபலமாக வலம் வந்த ராஷ்மிகா மந்தனா அனிமல் படத்தின் மூலம் இந்தி ரசிகர்களையும் கவர்ந்தார். ஒரு பக்கம் பாராட்டுக்களைப் பெற்றாலும் மறுபக்கம் பல்வேறு விமர்சனங்களையும் சந்தித்து வருகிறார் ராஷ்மிகா மந்தனா. கடந்த 2016 ஆம் ஆண்டு கன்னடத்தில் வெளியான கிரிக் பார்ட்டி படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமான ராஷ்மிகா தெலுங்கில்  கீதா கோவிந்தம் , டியர் காம்ரேட் ஆகிய படங்களின் மூலம் பிரபலமானார். கடந்த ஆண்டு ரன்பீர் கபூர் நடித்த அனிமல் படத்தின் மூலம் இந்தியில் அறிமுகமானார். இப்படம் மிகப்பெரிய வசூல் வெற்றிபெற்றதைத் தொடர்ந்து இந்தியில் அவருக்கு அடுத்தடுத்த வாய்ப்புகள் வருகின்றன. 

தற்போது அல்லு அர்ஜூன் நடிக்கும் புஷ்பா 2 , தனுஷ் நடிக்கும் குபேரா , இந்தியில் ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் சல்மான் கான் நடிக்கும் சிகந்தர் உள்ளிட்ட படங்களில் ராஷ்மிகா மந்தனா நடித்து வருகிறார். இன்று பிரபல நடிகையாக வலம் வரும் ராஷ்மிகா மந்தனா ஒரு காலத்தில் பார்ப்பதற்கு நடிகை மாதிரியே இல்லை என பல அவமானங்களை எதிர்கொண்டுள்ளார். 

அழுதுகொண்டே வீட்டிற்கு திரும்புவேன்

சமீபத்திய  நேர்காணல் ஒன்றில் தான் நடிகையாவதற்கு முன்பு எதிர்கொண்ட அவமானங்கள் பற்றி மனம் திறந்து பேசியுள்ளார் ராஷ்மிகா மந்தனா. இதில் ' ஒரு நடிகை மாதிரி நீங்கள் தெரியவில்லை என்று 20 முதல் 25 ஆடிஷன்களில் என்னை நிராகரித்துள்ளார்கள். ஒவ்வொரு முறை ஆடிஷன் முடித்து வீட்டிற்கு திரும்பும் போதும் அழுதுகொண்டே தான் செல்வேன். இருந்தும் நான் தொடர்ந்து முயற்சி செய்தேன். ஒரு படத்திற்கான ஆடிஷனுக்காக நிறைய முறை சென்றேன். பின் ஒரு படத்திற்கு தேர்வு செய்தார்கள் . படத்திற்கான பயிற்சி எல்லாம் அளித்துவிட்டு படத்தை நிறுத்திவிட்டார்கள். எனக்கு கிடைத்த வாய்ப்புகளை சரியாக பயன்படுத்திக் கொண்டு இந்த இடத்திற்கு வந்திருக்கிறேன். ஒவ்வொரு படத்திலும் சிறப்பாக நடிக்க வேண்டும் என்கிற ஆசை இருக்கும். நான் நடித்த படங்களை திரும்பிப் பார்க்கும்போது இந்த காட்சியில் இன்னும் சிறப்பாக நடித்திருக்கலாமே என்று யோசித்துக் கொண்டே இருப்பேன்" என்று ராஷ்மிகா மந்தனா தெரிவித்துள்ளார். 

ராஷ்மிகா மந்தனா நடித்த முதல் படமான கிரிக் பார்ட்டி படத்திற்கு அவர் ஆடிஷன் செய்த வீடியோ ஒன்றும் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது

தலைப்பு செய்திகள்

Karthigai Deepam: விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்.. அவசரம் அவசரமாக தரையிறங்கிய ரேவதி - கைகொடுத்த கார்த்திக் மாஸ்டர் ப்ளான்
Karthigai Deepam: விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்.. அவசரம் அவசரமாக தரையிறங்கிய ரேவதி - கைகொடுத்த கார்த்திக் மாஸ்டர் ப்ளான்
விஜய்யைத் தொடர்ந்து தனுஷும் அதிரடி! வெளியான மாஸ் அறிவிப்பு... ரசிகர்கள் உற்சாகம்!
விஜய்யைத் தொடர்ந்து தனுஷும் அதிரடி! வெளியான மாஸ் அறிவிப்பு... ரசிகர்கள் உற்சாகம்!
தனுஷ் மீது மீண்டும் நடவடிக்கையா? தயாரிப்பாளர் சங்கத்தில் பரபரப்பு
தனுஷ் மீது மீண்டும் நடவடிக்கையா? தயாரிப்பாளர் சங்கத்தில் பரபரப்பு
18 ஆண்டுகளுக்குப் பிறகு தனது படத்தை ப்ரோமோட் செய்யப்போகும் அஜித் !
18 ஆண்டுகளுக்குப் பிறகு தனது படத்தை ப்ரோமோட் செய்யப்போகும் அஜித் !

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"ஓ.பி.எஸ்.ஐ சகோதரன் போல ஜெயலலிதா பார்த்தார்.." மனம் திறந்த முன்னாள் அதிமுக எம்பி
DMK: சீண்டிய அமைச்சர் ரமேஷ்.. நெல் சேமிப்பு டேட்டாவை ரிலீஸ் செய்த திமுக!
DMK: சீண்டிய அமைச்சர் ரமேஷ்.. நெல் சேமிப்பு டேட்டாவை ரிலீஸ் செய்த திமுக!
Archana Kalpathi : ’கேரளா மட்டும் சும்மாவா?’ அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு கொடுத்த முதல்வர் விஜய்..!
’கேரளா மட்டும் சும்மாவா?’ அர்ச்சனா கல்பாத்தி அரசு பொறுப்பு..!
M.Ed. admission : அரசு கல்லூரிகளில் M.Ed. மாணவர் சேர்க்கை.? விண்ணப்பிப்பது எப்படி.? இதோ ஈசி வழிமுறை
அரசு கல்லூரிகளில் M.Ed. மாணவர் சேர்க்கை.? விண்ணப்பிப்பது எப்படி.? இதோ ஈசி வழிமுறை
Archana Kalpathi Agoram : பிகில் பட தயாளரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு.! பதவியை தூக்கி கொடுத்த CM விஜய்
பிகில் பட தயாளரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு.! பதவியை தூக்கி கொடுத்த CM விஜய்
E20 பெட்ரோல் பிரச்சினையா? கவலையே வேணாம்! ஹூண்டாய் வென்யூ டீசல் ஆட்டோமேட்டிக்: இன்ஜின், மைலேஜ், விலை
E20 பெட்ரோல் பிரச்சினையா? கவலையே வேணாம்! ஹூண்டாய் வென்யூ டீசல் ஆட்டோமேட்டிக்: இன்ஜின், மைலேஜ், விலை
CV Shanmugam Vs EPS: தைரியம், திராணி , தெம்பு இருந்தால் கூட்டத்தை கூட்டுங்கள்.! இபிஎஸ்க்கு எதிராக கொந்தளித்த சி.வி.சண்முகம்
தைரியம், திராணி , தெம்பு இருந்தால் கூட்டத்தை கூட்டுங்கள்.! இபிஎஸ்க்கு எதிராக கொந்தளித்த சி.வி.சண்முகம்
ஆவின் பால் தட்டுப்பாடு; விலையை ஏற்றாமல் வெயிலை குறை சொல்வதா? அன்புமணி கேள்வி
ஆவின் பால் தட்டுப்பாடு; விலையை ஏற்றாமல் வெயிலை குறை சொல்வதா? அன்புமணி கேள்வி
Embed widget