மேலும் அறிய

Priyanka Mohan: காமெடி ட்ராக்.. பிரபல நடிகருடன் கைகோக்கும் டாக்டர் நாயகி பிரியங்கா?

டாக்டர் திரைப்படத்தில் அசத்தலாக நடித்து பல ரசிகர்களை கவர்ந்தார் பிரியங்கா மோகன்.

தமிழ் திரையுலகில் முதல் படம் மூலமாக அறிமுகமான நடிகை பிரியங்கா மோகன். சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான டாக்டர் திரைப்படத்தில் அசத்தலாக நடித்து பல ரசிகர்களை கவர்ந்தார். அதன் பிறகு சூர்யாவுக்கு ஜோடியாக எதற்கும் துணிந்தவன் திரைப்படத்திலும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார். தற்போது சிவகார்த்திகேயனுடன் டான் படத்திலும் நடித்துள்ளார். 

அறிமுக இயக்குனர் சி.பி சக்ரவர்த்தி இயக்கியுள்ள டான் திரைப்படம் வருகிற மே மாதம் 13-ந் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது. இது தவிர ரஜினிகாந்தின் அடுத்த படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார். இந்நிலையில் இயக்குநர் எம்.ராஜேஷ் இயக்கத்தில் ஜெயம் ரவி நடிக்கும் திரைப்படத்தில் பிரியங்கா மோகன் நாயகியாக நடிக்க உள்ளதாகவும் அது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Priyanka Mohan (@priyankaamohanofficial)

 

பொறியியல் பட்டதாரியான நடிகை பிரியங்கா மோகன் தனது சினிமா கெரியர் மற்றும் தனிப்பட்ட விஷயங்கள் குறித்து நேர்காணலில் பகிர்ந்திருக்கிறார். “நான் பெங்களூரில்தான் பிறந்து வளர்ந்தேன் ஆனால் தமிழ் பொண்ணுதான். என்னை பற்றி நிறைய மீம் வீடியோக்களை பார்க்க முடிஞ்சுது. அதெல்லாம் நான் வேணும்னே சொன்னது கிடையாது. அதெல்லாம் உண்மை. நான் கொஞ்சமும் எதிர்பார்க்காத கேள்விகள்தானே. அந்த பதில் அப்படி அமைஞ்சுடுது. நான்  தமிழ் படங்களில் நடிப்பேன்னு எதிர்பார்க்கவே இல்லை. அதெல்லாம் ஆசிர்வாதம்” என்றார்

ராஜேஷ்..

ஜீவா நடித்த  'சிவா மனசுல சக்தி' படம் மூலமாக இயக்குநராக அறிமுகமானவர் இயக்குநர் ராஜேஷ். முழுக்க முழுக்க காமெடி ஜானர் படமாக அவர் உருவாகியிருந்த இந்தப்படத்தில், இப்போதைய தலைமுறைக்கான காதலை ராஜேஷ் கையாண்டிருந்த விதமும், இடையில் வந்த அம்மா செண்டிமெண்டும் மக்களுக்கு பிடித்திருந்தது. அதைத்தொடர்ந்து பாஸ் என்ற பாஸ்கரனிலும், ஒரு கல் ஒரு கண்ணாடியிலும் அதே காமெடி ஃபார்முலாவை பிடித்த ராஜேஷ் ஹிட் கொடுத்தார்.

அதற்கடுத்தபடியாக இவரது இயக்கத்தில் வந்த “ஆல் இன் அழகுராஜா”, வாசுவும் சரவணனும் ஒன்னா படிச்சவங்க, “ கடவுள் இருக்கான் குமாரு” உள்ளிட்ட படங்கள் வரிசையாக தோல்வியை சந்தித்தது. இதற்கடுத்த படியாக இவர் சிவகார்த்திகேயனோடு மிஸ்டர் லோக்கல் படத்தில் இணைந்தார். இந்தப்படமும் அட்டர் ப்ளாப் ஆனது. அடுத்ததாக, இவரது இயக்கத்தில், ஜிவி பிரகாஷ் நடிப்பில் உருவாகியிருக்கும் “வணக்கம் டா மாப்ள” தோல்வி அடைந்தது. இந்த நிலையில்தான் இவர் ஜெயம் ரவியுடன் இணைய இருப்பதாக அறிவிப்பு வெளியாகியிருக்கிறது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement
corona
corona in india
6491
Active
6861
Recovered
65
Deaths
Last Updated: Mon 9 June, 2025 at 06:46 pm | Data Source: MoHFW/ABP Live Desk

தலைப்பு செய்திகள்

தமிழில் பேச முடியவில்லை என்பதை நினைத்து வருந்துகிறேன் -  மதுரையில் அமித்ஷா உருக்கம் !
தமிழில் பேச முடியவில்லை என்பதை நினைத்து வருந்துகிறேன் - மதுரையில் அமித்ஷா உருக்கம் !
BJP's South Plan: பாஜக-வின் தெற்கத்தி பிளான்; ஐடியா உடன் வந்த அமித் ஷா - பலிக்குமா தேர்தல் திட்டம்.?
பாஜக-வின் தெற்கத்தி பிளான்; ஐடியா உடன் வந்த அமித் ஷா - பலிக்குமா தேர்தல் திட்டம்.?
TNEA 2025:பொறியியல் மாணவர் சேர்க்கை; சான்றிதழ் பதிவேற்றம், தரவரிசை பட்டியல்- A- Z அலசல்!
TNEA 2025:பொறியியல் மாணவர் சேர்க்கை; சான்றிதழ் பதிவேற்றம், தரவரிசை பட்டியல்- A- Z அலசல்!
மதுரையில் பா.ஜ.க., நிர்வாகிகள் கூட்டத்தில் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலை குழம்பியபடி  பாடப்பட்டதால் சர்ச்சை !
மதுரையில் பா.ஜ.க., நிர்வாகிகள் கூட்டத்தில் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலை குழம்பியபடி  பாடப்பட்டதால் சர்ச்சை !
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

மோடியை திட்டிய ராகுல்! எதிர்த்து நிற்கும் சசி தரூர்! ஷாக்கில் காங்கிரஸ் கட்சியினர்TVK Vijay Alliance | பாமக - தேமுதிக  - தவெக! உருவாகும் மெகா கூட்டணி? விஸ்வரூபம் எடுக்கும் விஜய்தங்கத்தின் மதிப்பில் 85% கடன் அள்ளிக் கொடுக்க RBI அனுமதி  பிரச்னை ஓவர்..! RBI Gold Loan Rules”வைரமுத்து சமரசம் பேசுனாரு என்கிட்ட ஆதாரம் இருக்கு” சீறிய சின்மயி Chinmayi on Vairamuthu

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
தமிழில் பேச முடியவில்லை என்பதை நினைத்து வருந்துகிறேன் -  மதுரையில் அமித்ஷா உருக்கம் !
தமிழில் பேச முடியவில்லை என்பதை நினைத்து வருந்துகிறேன் - மதுரையில் அமித்ஷா உருக்கம் !
BJP's South Plan: பாஜக-வின் தெற்கத்தி பிளான்; ஐடியா உடன் வந்த அமித் ஷா - பலிக்குமா தேர்தல் திட்டம்.?
பாஜக-வின் தெற்கத்தி பிளான்; ஐடியா உடன் வந்த அமித் ஷா - பலிக்குமா தேர்தல் திட்டம்.?
TNEA 2025:பொறியியல் மாணவர் சேர்க்கை; சான்றிதழ் பதிவேற்றம், தரவரிசை பட்டியல்- A- Z அலசல்!
TNEA 2025:பொறியியல் மாணவர் சேர்க்கை; சான்றிதழ் பதிவேற்றம், தரவரிசை பட்டியல்- A- Z அலசல்!
மதுரையில் பா.ஜ.க., நிர்வாகிகள் கூட்டத்தில் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலை குழம்பியபடி  பாடப்பட்டதால் சர்ச்சை !
மதுரையில் பா.ஜ.க., நிர்வாகிகள் கூட்டத்தில் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலை குழம்பியபடி  பாடப்பட்டதால் சர்ச்சை !
வட இந்தியாவுக்கு ராமர்.. தமிழ்நாட்டுக்கு முருகர்! பலிக்குமா பா.ஜ.க.வின் கணக்கு?
வட இந்தியாவுக்கு ராமர்.. தமிழ்நாட்டுக்கு முருகர்! பலிக்குமா பா.ஜ.க.வின் கணக்கு?
இனி குடையுடனே போங்க.. அடுத்த ஒரு வாரம் சென்னையில் பெய்யப்போகும் மழை! இதுதான் ரிப்போர்ட்
இனி குடையுடனே போங்க.. அடுத்த ஒரு வாரம் சென்னையில் பெய்யப்போகும் மழை! இதுதான் ரிப்போர்ட்
சினிமாவுல அட்ஜெஸ்ட்ஸ்மென்ட் இருக்கா? மனம்  திறந்த டூரிஸ்ட் பேமிலி ஹீரோயின்
சினிமாவுல அட்ஜெஸ்ட்ஸ்மென்ட் இருக்கா? மனம் திறந்த டூரிஸ்ட் பேமிலி ஹீரோயின்
மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் அமைச்சர் அமித் ஷா சாமி தரிசனம்.. பூரண கும்ப மரியாதை அளித்த கோயில் நிர்வாகம்
மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் அமைச்சர் அமித் ஷா சாமி தரிசனம்.. பூரண கும்ப மரியாதை அளித்த கோயில் நிர்வாகம்
Embed widget