மேலும் அறிய

Nayanthara : எரிச்சு பாத்தாலும்.. கிள்ளி பாத்தாலும்.. பிளாஸ்டிக் சர்ஜரி விமர்சனம்.. நயன்தாரா பதிலடி

Nayanthara On Plastic Surgery : நடிகை நயன்தாரா பிளாஸ்டிக் சர்ஜரி செய்துகொண்டதாக கூறப்பட்ட விமர்சனங்களுக்கு தற்போது பதிலளித்துள்ளார்

நயன்தாரா

2003-ஆம் ஆண்டு மலையாளத்தில் வெளியான மன்சின்னகரே படத்தின் மூலம் சினிமாவிற்கு அறிமுகமானவர் நடிகை நயன்தாரா. 2005-ஆம் ஆண்டு சரத்குமார் நடித்த ஐயா படத்தின் மூலம் தமிழுக்கு அறிமுகமானார். சந்திரமுகி , கஜினி ஆகிய படங்களில் துணைக்கதாபாத்திரங்களில் நடித்த நயன்தாரா தனக்கான ஆடியன்ஸை உருவாக்கினார். அடுத்தடுத்து வெளியான பாஸ் என்கிற வல்லவன் , யாரடி டீ மோகினி உள்ளிட்ட படங்கள் இவரது மார்கெட்டை பெரிதுபடுத்தின. கடந்த 20 இருபது ஆண்டுகளாக தொடர்ச்சியாக படங்களில் நடித்து வரும் நயன்தாரா கோலிவுட்டின் லேடி சூப்பர்ஸ்டார் என்று ரசிகர்களால் அழைக்கப்படுகிறார்.

முன்னணி நடிகர்களில் படங்கள் தவிர்த்து இவர் சோலோவாக நடித்த கோலமாவு கோகிலா , ஐரா , அறம் ஆகிய படங்கள் நல்ல வெற்றியைப் பெற்றன. நடிப்பு தவிர்த்து ரவுடி பிக்ச்சர்ஸ் என்கிற தயாரிப்பு நிறுவனம் சார்பாக நிறைய படங்களையும் தயாரித்து வருகிறார்.

நயன் என்கிற சொந்த பிராண்ட் ஒன்றை சமீபத்தில் தொடங்கிய நயன்தாரா தனது வணிகத்தை விரிவுபடுத்த பல்வேறு முன்னெடுப்புகளையும் எடுத்து வருகிறார்.

பிளாஸ்டிக் சர்ஜரி குறித்து நயன்தாரா

நயன்தாரா தனது அழகை அதிகரிக்க பிளாஸ்டிக் சர்ஜரி செய்துகொண்டதாக அவர் மீது விமர்சனங்கள் வைக்கப்படுவது வழக்கம். தொடக்க காலத்தில் இருந்த நயன்தாராவுக்கும் தற்போது இருக்கும் நயன்தாராவின் தோற்றத்தில் நிறைய மாற்றங்கள் இருப்பதை இதற்கு காரணமாக தெரிவிக்கிறார்கள். தற்போது நயன் இது குறித்து விளக்கமளித்துள்ளார்.

"எந்த ஒரு முக்கியமான நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும்போதும் என்னுடைய புருவத்தை அழகுபடுத்திக் கொள்வது என்னுடைய வழக்கம்.  என்னுடைய புருவத்தை நிறைய மாதிரி நான் அழகுபடுத்தி இருக்கிறேன். அதனால் தான் மக்கள் என் முகத்தை நான் ஏதோ செய்துவிட்டதாக நினைக்கிறார்கள். ஆனால் அது உண்மையில்லை. இது வெறும் டயட் தான். என்னுடைய உடல் எடையில் நிறைய ஏற்ற இறக்கங்கள் ஏற்பட்டிருக்கின்றன். அதே நேரம் என்னுடைய் கன்னங்களிலும் மாற்றங்கள் ஏற்பட்டிருக்கின்றன. என் கன்னத்தை கிள்ளியும் பார்க்கலாம், எரித்தும் பார்க்கலாம்" என நயன்தாரா பதிலடி தெரிவித்துள்ளார். 

 நடிகைகள் பிளாஸ்டிக் சர்ஜரி செய்துகொள்வது ஏன்?

கடந்த 10 ஆண்டுகளில் நடிகைகள் பிளாஸ்டிக் சர்ஜரி செய்துகொள்ளும் வழக்கம் அதிகரித்துள்ளது. எல்லா நடிகைகளும் இதை விருப்பபப்பட்டு செய்கிறார்கள் என்றும் சொல்லிவிட முடியாது. திரைத்துறையில் நீடிக்க வேண்டும் என்றால் பிளாஸ்டிக் சர்ஜரி செய்துகொள்ளவேண்டும் என்கிற நிலைக்கு சிலர் தள்ளப்படுவதும் உண்டு . தன்னை பலர் மார்பக மாற்று சிகிச்சை செய்துகொள்ளும் படி கட்டாயப்படுத்தியதாக சமீபத்தில் நடிகை சமீரா ரெட்டி தெரிவித்திருந்தார். குறையே சொல்ல முடியாத அழகு என்று திரைத்துறை நடிகைகளுக்கு சில விதிகளை தீர்மானிக்கிறது. இந்த பொதுவரையறைகளுக்குள் வராத நடிகைகள் அழகாக கருதப்பட மாட்டார்கள் என்கிற புரிதல் பல நடிகைகளிடமே உள்ளதைப் பார்க்கலாம்.  

தலைப்பு செய்திகள்

"ஒருவர் வேலை செய்தால், மற்றொருவர் குழந்தைகளுடன் இருப்போம்"... பெற்றோர்களாக சூர்யா–ஜோதிகா எடுத்த முடிவு
'கருப்பு' படத்திற்காக கடைசி நேரத்தில் வாங்கிய கடன்... மனம் திறந்த சூர்யா!
'கருப்பு' படத்திற்காக கடைசி நேரத்தில் வாங்கிய கடன்... மனம் திறந்த சூர்யா!
*விஜய் ஆண்டனியின் நூறு சாமி படத்தின் ஓடிடி தேதி அறிவிப்பு வெளியானது
*விஜய் ஆண்டனியின் நூறு சாமி படத்தின் ஓடிடி தேதி அறிவிப்பு வெளியானது
Karthigai Deepam: சந்திரகலா ஆட்கள் ரகசிய க்ளிக்.. ஆதாரத்தை பார்த்த சாமுண்டீஸ்வரி - கார்த்திகை தீபத்தில் இன்று
Karthigai Deepam: சந்திரகலா ஆட்கள் ரகசிய க்ளிக்.. ஆதாரத்தை பார்த்த சாமுண்டீஸ்வரி - கார்த்திகை தீபத்தில் இன்று

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: ஆளுநருக்கு பவர் கட்..! அதிகாரத்தை கையிலெடுத்த CM விஜய் - அனுமதி கட்டாயம், கலக்கத்தில் அதிகாரிகள்
ஆளுநருக்கு பவர் கட்..! அதிகாரத்தை கையிலெடுத்த CM விஜய் - அனுமதி கட்டாயம், கலக்கத்தில் அதிகாரிகள்
Udhayanidhi: போலீஸ் விசாரணை முடிந்ததும், முதலமைச்சரை கடுமையாக விமர்சித்து பேசிய உதயநிதி - வீடியோ வைரல்
போலீஸ் விசாரணை முடிந்ததும், முதலமைச்சரை கடுமையாக விமர்சித்து பேசிய உதயநிதி - வீடியோ வைரல்
TN Weather News: சென்னையில் விடிய விடிய மழை..! 9 மாவட்டங்களுக்கு இன்று எச்சரிக்கை - தமிழக வானிலை அறிக்கை
சென்னையில் விடிய விடிய மழை..! 9 மாவட்டங்களுக்கு இன்று எச்சரிக்கை - தமிழக வானிலை அறிக்கை
Udhayanidhi Stalin: “நான் சிங்கிள் மீனிங்கில் தான் பேசினேன், பயப்பட மாட்டேன், மீண்டும் பேசுவேன்“; உதயநிதி அதிரடி பேட்டி
“நான் சிங்கிள் மீனிங்கில் தான் பேசினேன், பயப்பட மாட்டேன், மீண்டும் பேசுவேன்“; உதயநிதி அதிரடி பேட்டி
CM Vijay : ’கைது செய்யப்பட்ட உதயநிதி – போராட்டத்தில் இறங்கிய திமுகவினர்’ கூலாக ஆய்வுக் கூட்டம் நடத்திய முதல்வர் விஜய்..!
’கைது செய்யப்பட்ட உதயநிதி’ கூலாக ஆய்வுக் கூட்டம் நடத்திய முதல்வர் விஜய்..!
CM Vijay VS DMK: உதயநிதி ஸ்டாலின் கைது.. திமுக-வினருக்கு முதலமைச்சர் விஜய்யின் வார்னிங்!
CM Vijay VS DMK: உதயநிதி ஸ்டாலின் கைது.. திமுக-வினருக்கு முதலமைச்சர் விஜய்யின் வார்னிங்!
CLAT: கிளாட் நுழைவுத் தேர்வுக்கான பதிவு தொடக்கம்: அக். 31 வரை விண்ணப்பிக்கலாம்; முழு விவரங்கள்
CLAT: கிளாட் நுழைவுத் தேர்வுக்கான பதிவு தொடக்கம்: அக். 31 வரை விண்ணப்பிக்கலாம்; முழு விவரங்கள்
MK STALIN : தொடர்ச்சியான ஆணவம், அழிவை விரைவுபடுத்தும் .! தவெகவின் பாசிச தன்மைக்கு விழுந்த அடி- ஸ்டாலின்
தொடர்ச்சியான ஆணவம், அழிவை விரைவுபடுத்தும் .! தவெகவின் பாசிச தன்மைக்கு விழுந்த அடி- மு.க.ஸ்டாலின்
Embed widget