மேலும் அறிய

Nayanthara Engagement: நிச்சயதார்த்தம் முடிஞ்சிட்டு.. இதுதான் மோதிரம் - நடிகை நயன்தாரா சொன்ன தகவல்

நடிகை நயன்தாரா இயக்குனர் விக்னேஷ் சிவனுடன் தனக்கு நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளதை தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் உறுதி செய்துள்ளார்.

தென்னிந்திய திரையுலகில் நம்பர் நடிகையாக வலம் வருபவர் நயன்தாரா. இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் என்று தென்னிந்தியாவில் இதுவரை 50க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். குறிப்பாக, தமிழில் இவருக்கென்று தனி ரசிகர்கள் பட்டாளம் உள்ளது. நயன்தாரா தற்போது சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் அண்ணாத்த படத்தில் நடித்து வருகிறார்.

நடிகை நயன்தாராவும், திரைப்பட இயக்குனர் விக்னேஷ் சிவனும் கடந்த சில வருடங்களாக காதலித்து வருகின்றனர். இந்த நிலையில், இருவருக்கும் திருமணம் ஆகிவிட்டதாகவும், நிச்சயதார்த்தம் முடிந்துவிட்டதாகவும் அடிக்கடி செய்திகள் வெளியாகி வந்தது.

Nayanthara Engagement: நிச்சயதார்த்தம் முடிஞ்சிட்டு.. இதுதான் மோதிரம் - நடிகை நயன்தாரா சொன்ன தகவல்

இந்த நிலையில், ஆகஸ்டு 15-ந் தேதி சுதந்திர தினத்தை முன்னிட்டு, விஜய் தொலைக்காட்சி நடிகை நயன்தாராவுடன் ஒரு சிறப்பு நேர்காணலை ஏற்பாடு செய்துள்ளது. இந்த நிகழ்ச்சிக்கான ப்ரோமா இன்று விஜய் தொலைக்காட்சியில் வெளியிடப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் நடிகை நயன்தாரா தனது திருமணம் பற்றி வெளிப்படையாக கருத்து தெரிவித்துள்ளார். 45 நொடிகள் மட்டுமே அந்த ப்ரோமாவில் நிகழ்ச்சித் தொகுப்பாளர் டி.டி. நயன்தாராவிடம் கையில் அணிந்துள்ள மோதிரம் பற்றி கேட்டுள்ளார்.

அதற்கு பதிலளித்த நயன்தாரா, அந்த மோதிரம் நிச்சயதார்த்த மோதிரம் என்று கூறினார். மேலும், விக்னேஷ் சிவனிடம் பிடித்தது என்ன? பிடிக்காதது என்ன? என்று தொகுப்பாளர் டி.டி. கேட்டதற்கு விக்னேஷ் சிவனிடம் எல்லாமே பிடிக்கும் என்று புன்னகையுடன் பதிலளிப்பார். மேலும், இந்த நிகழ்ச்சியில் தனது வாழ்வில் நடைபெற்ற பல்வேறு சுவாரஸ்யமான விஷயங்கள் குறித்தும் நயன்தாரா பகிர்ந்து கொண்டுள்ளார்.

Nayanthara Engagement: நிச்சயதார்த்தம் முடிஞ்சிட்டு.. இதுதான் மோதிரம் - நடிகை நயன்தாரா சொன்ன தகவல்

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய்சேதுபதி நாயகனாகவும், நயன்தாரா நாயகியாகவும் நடித்த நானும் ரெளடிதான் படம் கடந்த 2015ம் ஆண்டு வெளியானது. இந்த படத்தின்போது நடிகை நயன்தாராவிற்கும், விக்னேஷ் சிவனுக்கும் இடையே நெருக்கமான நட்பு ஏற்பட்டது. இந்த நட்பு நாளடைவில் காதலாக மாறியது.

விக்னேஷ் சிவனுக்கும், நயன்தாராவிற்கும் எப்போது திருமணம் என்று எதிர்பார்த்திருந்த அவர்களது ரசிகர்களுக்கு இன்ப செய்தியாக நயன்தாராவிற்கு நிச்சயதார்த்தம் நடைபெற்ற தகவல் கிடைத்துள்ளது. இதனால், விரைவில் நயன்தாராவிற்கு திருமணம் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தலைப்பு செய்திகள்

Venkat Prabhu: வெங்கட் பிரபுவிற்கு கால்ஷீட் கொடுத்து ஏமாற்றிய பிரபல நடிகர்! யாரு அந்த ஹீரோ?
Venkat Prabhu: வெங்கட் பிரபுவிற்கு கால்ஷீட் கொடுத்து ஏமாற்றிய பிரபல நடிகர்! யாரு அந்த ஹீரோ?
Azhagae Azhagu: தங்கராஜிடம் வசமாக மாட்டிய பெண்கள் குரூப்.. அழகே அழகு சீரியலில் இந்த வாரம் நடப்பது என்ன?
Azhagae Azhagu: தங்கராஜிடம் வசமாக மாட்டிய பெண்கள் குரூப்.. அழகே அழகு சீரியலில் இந்த வாரம் நடப்பது என்ன?
முதல் பாதியில் கேள்விகள்... 2-ஆம் பாதியில் அதிரடி திருப்பங்கள்: மிரட்ட வரும் 'கிட்டி'..
முதல் பாதியில் கேள்விகள்... 2-ஆம் பாதியில் அதிரடி திருப்பங்கள்: மிரட்ட வரும் 'கிட்டி'..
எவனோ முட்டாள் சொன்னானு சண்டைக்கு போகாதீங்க...ரசிகர்களுக்கு சூர்யா அறிவுரை
எவனோ முட்டாள் சொன்னானு சண்டைக்கு போகாதீங்க...ரசிகர்களுக்கு சூர்யா அறிவுரை

வீடியோ

VS Babu in Hospital : ICU-வில் V.S பாபு.. சுவாச கருவியில் தீவிர சிகிச்சை! HOSPITAL பரபரப்பு அறிக்கை
Tiruvotriyur CRIME : மிரட்டிய போலீஸ்! பேட்டி கொடுத்த மறுநாளே இளைஞர் கொலை! திருவொற்றியூரில் பயங்கரம்!
Oothangarai News : பள்ளி மாணவியிடம் அத்துமீறல்! பேருந்தை மறித்து கண்டக்டரை ஓட ஓட அடித்த பொதுமக்கள்!
Vijay London Trip : Phone போட்ட ஆளுநர்! ”லண்டனுக்கு போகாதீங்க ” பயணத்தை மாற்றிய CM விஜய்
SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
RTI Act: இதுதான் விஜயின் வெளிப்படைத்தன்மையா? புதிய அரசாணையால் RTI ஆர்வலர்கள் ஆவேசம் - குவியும் எதிர்ப்பு
இதுதான் விஜயின் வெளிப்படைத்தன்மையா? புதிய அரசாணையால் RTI ஆர்வலர்கள் ஆவேசம் - குவியும் எதிர்ப்பு
CM Joseph Vijay: சொல்ல முடியாத சோகம்.. கரூர் சம்பவத்தின் ஓராண்டு.. வேதனையுடன் அஞ்சலி செலுத்திய விஜய்!
CM Joseph Vijay: சொல்ல முடியாத சோகம்.. கரூர் சம்பவத்தின் ஓராண்டு.. வேதனையுடன் அஞ்சலி செலுத்திய விஜய்!
Chennai Airport: போரூர் பைபாஸ் டூ சென்னை ஏர்போர்ட்டிற்கு நேரடி மேம்பால சாலை - அடையாறு ஆறின் மீது திட்டம்
போரூர் பைபாஸ் டூ சென்னை ஏர்போர்ட்டிற்கு நேரடி மேம்பால சாலை - அடையாறு ஆறின் மீது திட்டம்
Virat Kohli: சண்டே ஜாலிடே.. 86வது சதத்தை விளாசினார் கோலி! செஞ்சுரி மெஷின் இஸ் பேக்!
Virat Kohli: சண்டே ஜாலிடே.. 86வது சதத்தை விளாசினார் கோலி! செஞ்சுரி மெஷின் இஸ் பேக்!
Tasmac: 43 டாஸ்மாக் கடைகளை தூக்கியே ஆகனும்..! தலைமை செயலாளருக்கே லெட்டர் போட்ட ரயில்வே, ஏன்? எங்கே?
43 டாஸ்மாக் கடைகளை தூக்கியே ஆகனும்..! தலைமை செயலாளருக்கே லெட்டர் போட்ட ரயில்வே, ஏன்? எங்கே?
Toyota Innova flex fuel: 1 கிமீ-க்கு ரூ.25 செலவில் சொகுசுப் பயணம்.! இன்னோவா 100% Flex Fuel அறிமுகம்; நிதின் கட்கரி முக்கிய தகவல்
1 கிமீ-க்கு ரூ.25 செலவில் சொகுசுப் பயணம்.! இன்னோவா 100% Flex Fuel அறிமுகம்; நிதின் கட்கரி முக்கிய தகவல்
IND vs WI: 296 ரன்கள் டார்கெட்.. இமாலய இலக்கை நோக்கி இந்தியா! வெற்றியுடன் தொடங்குமா கில் படை?
IND vs WI: 296 ரன்கள் டார்கெட்.. இமாலய இலக்கை நோக்கி இந்தியா! வெற்றியுடன் தொடங்குமா கில் படை?
Mahindra Thar OG Review: புதிய மஹிந்திரா தார் OG உண்மையிலேயே கெத்து காட்டுதா.? அதன் நிறை, குறைகள பற்றி தெரிஞ்சுக்கோங்க
புதிய மஹிந்திரா தார் OG உண்மையிலேயே கெத்து காட்டுதா.? அதன் நிறை, குறைகள பற்றி தெரிஞ்சுக்கோங்க
Embed widget