மேலும் அறிய

Thalapathy 68: விஜய்சேதுபதியின் ரீல் மகள் விஜய்க்கு ஜோடியா..? யாரு தெரியுமா..?

வாரிசு படத்தை அடுத்து நடிகர் விஜய் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் கவனம் செலுத்தி வரும் நிலையில், ஹீரோயின் குறித்த இந்தத் தகவல் வெளியாகியுள்ளது.

வீர சிம்ஹா ரெட்டி இயக்குநருடன் நடிகர் விஜய் கைக்கோர்க்கவிருப்பதாகக் கூறப்படும் நிலையில், இந்தப் படத்தில் விஜய்க்கு ஜோடியாக டோலிவுட்டின் பிரபல இளம் நடிகை நடிக்கவிருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

தளபதி 68:

நடிகர் விஜய் தற்போது லோகேஷ் கனகராஜின் லியோ படத்தில் முழுவீச்சில் கவனம் செலுத்தி வருகிறார். இந்தப் படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு காஷ்மீரில் நிறைவடைந்த நிலையில், தற்போது சென்னை பிரசாத் ஸ்டுடியோவில் இப்படத்தின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.

லியோ படத்தின் பூஜை அன்றே இப்படம் வரும் அக்டோபர் 19ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுவிட்ட நிலையில், முழுவீச்சில் படப்பணிகளை லியோ குழு மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், விஜய் நடிக்கும் அடுத்த படமான தளபதி 68 பற்றிய அறிவிப்புகள் வெளியாகி வருகின்றன.

வீரசிம்ஹாரெட்டி இயக்குனர்:

அந்த வகையில் வாரிசு படத்தில் இயக்குநர் வம்சி பைடிப்பள்ளி உடன் முன்னதாக விஜய் கூட்டணி வைத்ததைத் தொடர்ந்து, மற்றொரு பிரபல தெலுங்கு இயக்குநரான கோபிசந்த் மலினேனி உடன் அடுத்ததாக விஜய் இணைவதாகத் தகவல்கள் கடந்த மாதம் வெளியாகின.

இந்த ஆண்டு தெலுங்கு சினிமாவில் சங்கராந்தி ஸ்பெஷலாக பாலகிருஷ்ணா, ஸ்ருதி ஹாசன், ஹனி ரோஸ் ஆகியோர் நடிப்பில் வெளியாகி ஹிட் அடித்த வீர சிம்ஹா ரெட்டி திரைப்படத்தை இயக்கியவர் கோபிசந்த் மலினேனி. இதற்கு முன்னதாக தெலுங்கில் பாடிகாட், வின்னர், க்ராக் உள்ளிட்ட சில படங்களை இவர் டோலிவுட்டில் இயக்கியுள்ளார்.

ஹீரோயின் யார்?

இந்நிலையில் கோபிசந்த் விஜய்யிடம் ஒரு அட்டகாசமான ஆக்‌ஷன் எண்டெர்டெய்னர் கதையை சொன்னதாகவும், விஜய் இந்தக் கதையைக் கேட்டு ஓகே சொல்லியதாகவும் தளபதி 68 படத்துக்காக கிட்டத்தட்ட அடுத்த கோபிசந்தை உறுதி செய்துவிட்டதாகவும் முன்னதாகத் தகவல் வெளியானது. இந்நிலையில் இந்தப் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை க்ரித்தி ஷெட்டி நடிப்பதாகத் சினிமா வட்டாரத்தில் தகவல்கள் பகிரப்பட்டு வருகின்றன.

டோலிவுட்டில் உப்பென்னா படத்தில் விஜய் சேதுபதி மகளாக அறிமுகமான நடிகை க்ரித்தி ஷெட்டிக்கு தற்போது 19 வயதே ஆகும் நிலையில், இவர் விஜய்யின் ஜோடியாக செட் ஆவாரா எனவும் சினிமா வட்டாரத்தில் முணுமுணுத்து வருகின்றனர். முன்னதாக தமிழ், தெலுங்கு மொழிகளில் தயாரான கஸ்டடி படத்தில் க்ரித்தி ஷெட்டி நடித்திருந்த நிலையில் அவர் அடுத்தடுத்து கோலிவுட் பக்கம் கவனம் செலுத்த உள்ளதாகக் கூறப்படுகிறது.

அதேபோல் வாரிசு படத்தை அடுத்து நடிகர் விஜய் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் கவனம் செலுத்தி வரும் நிலையில், க்ரித்தி ஷெட்டி குறித்த இந்தத் தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் படிக்க: The Kerala Story: ரூ.100 கோடி வசூலித்த தி கேரளா ஸ்டோரி.. சர்ச்சைகள் தொடங்கி பிரதமர் பாராட்டு வரை... கடந்து வந்த பாதை!

தலைப்பு செய்திகள்

"ஒருவர் வேலை செய்தால், மற்றொருவர் குழந்தைகளுடன் இருப்போம்"... பெற்றோர்களாக சூர்யா–ஜோதிகா எடுத்த முடிவு
'கருப்பு' படத்திற்காக கடைசி நேரத்தில் வாங்கிய கடன்... மனம் திறந்த சூர்யா!
'கருப்பு' படத்திற்காக கடைசி நேரத்தில் வாங்கிய கடன்... மனம் திறந்த சூர்யா!
*விஜய் ஆண்டனியின் நூறு சாமி படத்தின் ஓடிடி தேதி அறிவிப்பு வெளியானது
*விஜய் ஆண்டனியின் நூறு சாமி படத்தின் ஓடிடி தேதி அறிவிப்பு வெளியானது
Karthigai Deepam: சந்திரகலா ஆட்கள் ரகசிய க்ளிக்.. ஆதாரத்தை பார்த்த சாமுண்டீஸ்வரி - கார்த்திகை தீபத்தில் இன்று
Karthigai Deepam: சந்திரகலா ஆட்கள் ரகசிய க்ளிக்.. ஆதாரத்தை பார்த்த சாமுண்டீஸ்வரி - கார்த்திகை தீபத்தில் இன்று

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Udhayanidhi Stalin: “நான் சிங்கிள் மீனிங்கில் தான் பேசினேன், பயப்பட மாட்டேன், மீண்டும் பேசுவேன்“; உதயநிதி அதிரடி பேட்டி
“நான் சிங்கிள் மீனிங்கில் தான் பேசினேன், பயப்பட மாட்டேன், மீண்டும் பேசுவேன்“; உதயநிதி அதிரடி பேட்டி
CM Vijay : ’கைது செய்யப்பட்ட உதயநிதி – போராட்டத்தில் இறங்கிய திமுகவினர்’ கூலாக ஆய்வுக் கூட்டம் நடத்திய முதல்வர் விஜய்..!
’கைது செய்யப்பட்ட உதயநிதி’ கூலாக ஆய்வுக் கூட்டம் நடத்திய முதல்வர் விஜய்..!
CM Vijay VS DMK: உதயநிதி ஸ்டாலின் கைது.. திமுக-வினருக்கு முதலமைச்சர் விஜய்யின் வார்னிங்!
CM Vijay VS DMK: உதயநிதி ஸ்டாலின் கைது.. திமுக-வினருக்கு முதலமைச்சர் விஜய்யின் வார்னிங்!
CLAT: கிளாட் நுழைவுத் தேர்வுக்கான பதிவு தொடக்கம்: அக். 31 வரை விண்ணப்பிக்கலாம்; முழு விவரங்கள்
CLAT: கிளாட் நுழைவுத் தேர்வுக்கான பதிவு தொடக்கம்: அக். 31 வரை விண்ணப்பிக்கலாம்; முழு விவரங்கள்
MK STALIN : தொடர்ச்சியான ஆணவம், அழிவை விரைவுபடுத்தும் .! தவெகவின் பாசிச தன்மைக்கு விழுந்த அடி- ஸ்டாலின்
தொடர்ச்சியான ஆணவம், அழிவை விரைவுபடுத்தும் .! தவெகவின் பாசிச தன்மைக்கு விழுந்த அடி- மு.க.ஸ்டாலின்
Oppo A7 Pro Max: 10,000mAh மெகா பேட்டரியுடன் தனது முதல் 5ஜி ஃபோனை வெயிட்டாக இறக்கிய ஓப்போ.! விலை, அம்சங்கள் என்ன.?
10,000mAh மெகா பேட்டரியுடன் தனது முதல் 5ஜி ஃபோனை வெயிட்டாக இறக்கிய ஓப்போ.! விலை, அம்சங்கள் என்ன.?
Trump Vs Pakistan: சீன் போட்டு சுற்றிவந்த பாகிஸ்தான்; மூக்கை உடைத்துவிட்ட ட்ரம்ப்; பல்பு வாங்கிய ஷாபாஸ்-முனீன்.! நடந்தது என்ன.?
சீன் போட்டு சுற்றிவந்த பாகிஸ்தான்; மூக்கை உடைத்துவிட்ட ட்ரம்ப்; பல்பு வாங்கிய ஷாபாஸ்-முனீன்.! நடந்தது என்ன.?
BYD Festive Offers India: ஒன்னு ரெண்டு இல்ல, ஏகப்பட்ட ஆஃபர்.! பண்டிகைக்கால சலுகைகளை வாரி வழங்கும் BYD; ஐடியா இருந்தா முந்துங்க.!
ஒன்னு ரெண்டு இல்ல, ஏகப்பட்ட ஆஃபர்.! பண்டிகைக்கால சலுகைகளை வாரி வழங்கும் BYD; ஐடியா இருந்தா முந்துங்க.!
Embed widget