மேலும் அறிய

Yogi Babu: 'ரஜினி கேரக்டர்ல நடிக்க நான் ரெடி’ .. ஓப்பனாக பேசிய யோகிபாபு..

16 வயதினிலே படத்தில் என்னை நடிக்க சொன்னால் ரஜினி நடித்த கேரக்டரில் தான் நடிப்பேன் என நடிகர் யோகிபாபு தெரிவித்துள்ளார். 

16 வயதினிலே படத்தில் என்னை நடிக்க சொன்னால் ரஜினி நடித்த கேரக்டரில் தான் நடிப்பேன் என நடிகர் யோகிபாபு தெரிவித்துள்ளார். 

நீண்ட இடைவெளிக்குப் பிறகு  இயக்குநர் தங்கர்பச்சான்   “கருமேகங்கள் கலைகின்றன” என்ற படத்தின் மூலம் இயக்குநராகி உள்ளார். இந்த படத்தில் பாரதிராஜா, அதிதி பாலன். எஸ்.ஏ.சந்திரசேகர், கௌதம் வாசுதேவ் மேனன், யோகிபாபு உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். என்.கே.ஏகாம்பரம் ஏகாம்பரம் ஒளிப்பதிவு செய்ய, ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ளார். சிறுகதை ஒன்றை தழுவி  எடுக்கப்பட்டுள்ள இந்த படத்தின் ஆடியோ மற்றும் இசை வெளியீட்டு விழா சென்னை கலைவாணர் அரங்கத்தில் நேற்று நடைபெற்றது. 

இந்நிகழ்ச்சியில் பேசிய நடிகர் யோகிபாபு, “ கருமேகங்கள் கலைகின்றன படத்தில் வாய்ப்பு கொடுத்த தயாரிப்பாளர் வீரசக்தி மற்றும் தங்கர் பச்சானுக்கு நன்றி. இப்படத்தின் கதையை தங்கர்பச்சான் என்னிடம் கூறியபோது இந்த கதையில் முக்கியமான பாத்திரம் குழந்தை தான் என தெரிந்தது. அவர் எவ்வளவுதான் கோபப்பட்டாலும், அவருடைய மனைவி, 'மாமா கோபப்படாதீர்கள்' என்று தெரிவிப்பார்.  அதற்கு, “இல்லமா இவர்களுக்கு தமிழே வர மாட்டேங்குது.. கோபப்பட்டால் தான் நடிகர்கள் சரியாகப் பேசுவார்கள்” என்று கூறுவார். இப்படித்தான் ஷூட்டிங் சென்றது” என கூறினார். 

இதனைத் தொடர்ந்து யோகிபாபுவிடம்,  '16 வயதினிலே' படத்தில், சப்பாணி, பரட்டை, டாக்டர் இந்த மூன்று கேரக்டரில் நீங்கள் நடித்தால் எந்த கேரக்டரில் நடிப்பீர்கள் என்ற கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு, அதில் வரும் டாக்டர் மயில் வாழ்க்கையை ஏமாத்திட்டு போயிட்டான். அது எனக்கு வேண்டாம். எனக்கு ரஜினி நடித்த நடித்த 'பரட்டை' கதாபாத்திரத்தில் தான் நான் நடிக்க விரும்புவேன் என தெரிவிக்க அரங்கில் கரவொலி எழுந்தது. 

இதற்கிடையில் தங்கர்பச்சான் முந்திரி பருப்பும், பலாப்பழமும் கொடுத்து பாராட்டி யோகி பாபுவை பேசினார்.  அவர் பேசுகையில், “எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் நடிக்கக் கூடியவர் யோகிபாபு, அவரை சரியாக கையாண்டால் மிகச் சிறந்த நடிப்பைப் பெறலாம். இதுவரை எல்லோரையும் சிரிக்க வைத்தவர். இந்த படத்தில் எல்லோரையும் அழ வைப்பார். யோகிபாபு நடிக்க ஒப்புக் கொண்ட பின்பு தான் இந்த படம் அடுத்தக் கட்டத்திற்கு நகர்ந்தது என்பதில் சந்தேகமில்லை. இசையோடு சேர்ந்து இவருடைய காட்சிகளைப் பார்க்கும்போது சிறப்பாக இருந்தது. இப்படத்தில் மூன்று விதமான இசை இருக்கிறது என தங்கர் பச்சான் கூறினார். 

இதன்பின்னர் நிகழ்ச்சியில் பேசிய தயாரிப்பாளர், நடிகர் பிரமிட் நடராஜன், “மணி ரத்னம், கே.எஸ்.ரவிக்குமார், தங்கர் பச்சான் மூவரும் எனக்கு மிகப்பெரிய புகழை வாங்கிக் கொடுத்திருக்கிறார்கள். இன்று பெரிய அளவில் வாய்ப்புகள் இல்லையென்றாலும் என்னை பார்ப்பவர்கள் எல்லோரும் அழகி படத்திற்காகவும், சொல்ல மறந்த கதைக்காகவும் கிடைக்கும் பாராட்டுகள் என்னை எப்போதும் உற்சாகமாகவே வைத்திருக்கிறது. அவர் படத்தில் ஒரு ஓரத்தில் நிற்கக் கூடிய பாத்திரமாக இருந்தாலும் நடிப்பேன்” என தெரிவித்தார்.

தலைப்பு செய்திகள்

பார்ட் 2 என்றாலே சரக்கு தீர்ந்துப்போச்சுனு சொல்லுவாங்க..ஜெயிலர் 2 படம் ஏன்..விளக்கம் கொடுத்த ரஜினி
பார்ட் 2 என்றாலே சரக்கு தீர்ந்துப்போச்சுனு சொல்லுவாங்க..ஜெயிலர் 2 படம் ஏன்..விளக்கம் கொடுத்த ரஜினி
Jailer 2 Booking : ஜெயிலர் 2 முன்பதிவுகள் தொடக்கம்!
Jailer 2 Booking : ஜெயிலர் 2 முன்பதிவுகள் தொடக்கம்!
“நான் எப்போ தப்பா நடந்தேன்?” – முத்துக்குமரன் கேள்வி.. வஹிதா வெளியிட்ட ஆடியோவால் பரபரப்பு!
“நான் எப்போ தப்பா நடந்தேன்?” – முத்துக்குமரன் கேள்வி.. வஹிதா வெளியிட்ட ஆடியோவால் பரபரப்பு!
ஜெய் பீம் பார்த்து இயக்குநரை திட்டிய அம்மா...மணிகண்டன் பகிர்ந்த சுவாரஸ்ய நிகழ்வு
ஜெய் பீம் பார்த்து இயக்குநரை திட்டிய அம்மா...மணிகண்டன் பகிர்ந்த சுவாரஸ்ய நிகழ்வு

வீடியோ

Elon musk Rahul Gandhi : ”நிஜ பாஸ் யார்?இன்னொருத்தர் இருக்காரு”கொளுத்தி போட்ட மஸ்க்-ராகுல்
Thoothukudi Police Issue :
Elon musk on Ambani : இந்தியாவின் BOSS அம்பானியா? மோடி மீது எலான் மஸ்க் அட்டாக்! ஸ்டார்லிங்க்
TVK MLA Saravanan : ”பணத்தை வாங்கிட்டு மிரட்டுறாங்க” தவெக MLA மீது பகீர் புகார் வாலிபரின் வைரல் வீடியோ!
Uttarakhand iPhone theft :

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay:
CM Vijay: "தமிழக மக்களுக்கு 100 சதவீதம் விசுவாசமாக இருப்போம்.." வெற்றி மகிழ்ச்சியில் விஜய் திட்டவட்டம்
Sivakrishnamurthy IAS : ‘கலெக்டரான கூலித் தொழிலாளியின் மகன்’ யார் இந்த தேனி ஆட்சியர் சிவகிருஷ்ணமூர்த்தி..!
‘கலெக்டரான கூலித் தொழிலாளியின் மகன்’ யார் இந்த தேனி ஆட்சியர் சிவகிருஷ்ணமூர்த்தி..!
TVK:
TVK: "தேர்தல் தோல்வியை சமாளித்து திமுக எப்படி உருட்டும்?" நக்கல் செய்த தவெக!
ADMK: இரண்டாவது இடம்கூட இல்ல.. 3வது இடம்..! தொடர் சறுக்கலில் அதிமுக! என்னதான் செய்வார் இபிஎஸ்?
ADMK: இரண்டாவது இடம்கூட இல்ல.. 3வது இடம்..! தொடர் சறுக்கலில் அதிமுக! என்னதான் செய்வார் இபிஎஸ்?
Rajesh Lakhoni IAS : ’மின்சாரத்துறைக்கு புதிய அதிகாரி – டிக் அடித்த அமைச்சர்’ யார் இந்த ராஜேஸ் லக்கானி..!
’மின்சாரத்துறைக்கு புதிய அதிகாரி' யார் இந்த ராஜேஸ் லக்கானி..!
TN Election Results 2026 LIVE: தாராபுரத்தில் 2ஆம் இடத்தில் திமுக.! 3 இடத்தில் அதிமுக-முதல் இடத்தில் கில்லியாக தவெக
தாராபுரத்தில் 2ஆம் இடத்தில் திமுக.! 3 இடத்தில் அதிமுக-முதல் இடத்தில் கில்லியாக தவெக
TN Bypoll: மக்கள் ஏமாளிகள்? அம்பலப்பட்ட உண்மை, உற்சாகத்தில் விஜயபாஸ்கர்கள் - திருந்த வேண்டியது யார்?
மக்கள் ஏமாளிகள்? அம்பலப்பட்ட உண்மை, உற்சாகத்தில் விஜயபாஸ்கர்கள் - திருந்த வேண்டியது யார்?
தனி ஆளாக போராடிய ரஜத் படிதார்.. ஆஸ்திரேலிய பந்துவீச்சுடன் சளைக்காமல் மல்லுகட்டு!
தனி ஆளாக போராடிய ரஜத் படிதார்.. ஆஸ்திரேலிய பந்துவீச்சுடன் சளைக்காமல் மல்லுகட்டு!
Embed widget