மேலும் அறிய

Yogi Babu: சிம்புதேவனுடன் கூட்டணி வைக்கும் யோகிபாபு.. நாளை வெளியாகும் முக்கிய அறிவிப்பு..என்ன தெரியுமா?

பிரபல இயக்குநர் சிம்புதேவன் இயக்கத்தில் நடிகர் யோகிபாபு நடிக்கும் படத்தின் அறிவிப்பு வெளியாகி ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

பிரபல இயக்குநர் சிம்புதேவன் இயக்கத்தில் நடிகர் யோகிபாபு நடிக்கும் படத்தின் அறிவிப்பு வெளியாகி ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

சின்னத்திரையில் நடிகராக அறிமுகமாகி, தற்போது பெரிய திரையில் முன்னணி காமெடி நடிகராக உள்ளவர் யோகிபாபு. பருமனான உடல்,  வித்தியாசமான ஹேர்ஸ்டைல் என தோற்றத்திலேயே ரசிகர்களை கவர்ந்த அவர், பல முன்னணி ஹீரோக்களின் படங்களிலும் காமெடி வேடத்தில் நடித்துள்ளார். அதுமட்டுமல்லாமல் கோலமாவு கோகிலா, கூர்கா,தர்மபிரபு, யானை முகத்தான், பேய் மாமா, பன்னிக்குட்டி,  மண்டேலா, பொம்மை நாயகி என சில படங்களில் ஹீரோவாக நடித்திருந்தார். 

அந்த வகையில் யோகிபாபு, அடுத்ததாக இயக்குநர் சிம்புதேவன் இயக்கத்தில் நடிக்கவுள்ளார். இதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த படத்தின் டைட்டில் லுக் போஸ்டர் நாளை மாலை 6 மணிக்கு வெளியாகும் என்றும், இதனை இயக்குநர்கள் வெங்கட் பிரபு, விக்னேஷ் சிவன் இருவரும் வெளியிடுவார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

சிம்புதேவனின் திரைப்பயணம் 

கார்ட்டூனிஸ்ட் ஆக தனது வாழ்க்கையை தொடங்கிய சிம்புதேவன், காமெடி நடிகர் வடிவேலு ஹீரோவாக அறிமுகமான ‘இம்சை அரசன்’ படத்தை இயக்கி இயக்குநராக அறிமுகமானார். சமகால அரசியலை என்றைக்கும் மக்கள் ரசிக்கும்படி வெளியான இப்படம் சூப்பர்ஹிட் அடித்தது. தொடர்ந்து ‘அறை எண் 305ல் கடவுள், இரும்புக்கோட்டை முரட்டு சிங்கம், ஒரு கண்ணியும் மூன்று களவாணிகளும், புலி, கசடதபற, விக்டிம்’ உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ளார். 

இதில் இம்சை அரசன் படம் தவிர்த்து மற்ற எந்த படங்களும் பெரிய அளவில் வெற்றி பெறாவிட்டாலும், ஒவ்வொரு படத்திலும் வித்தியாசமான கதைகளை கையாண்டதால் சிம்புதேவன் தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு தனியிடத்தை பிடித்து விட்டார் என்றே சொல்லலாம். இப்படியான நிலையில் 2019 ஆம் ஆண்டு இம்சை அரசன் படத்தின் 2ஆம் பாகமாக ‘24ஆம் புலிகேசி’ படம் உருவாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டது. 

ஆனால் சிம்புதேவனுக்கும், வடிவேலுக்கும் இடையே கதையில் கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டதால் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டு கிடப்பில் போடப்பட்டது. இந்த பிரச்சினை இதுவரை தீர்வுக் காணப்படாமல் உள்ளது குறிப்பிடத்தக்கது.   

லைவ் டிவி

ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

ஜெயிலர் 2 திரையிடல் நாளை முதல் நிறுத்தம்...திரையரங்க அறிவிப்பால் ரசிகர்கள் அதிர்ச்சி
ஜெயிலர் 2 திரையிடல் நாளை முதல் நிறுத்தம்...திரையரங்க அறிவிப்பால் ரசிகர்கள் அதிர்ச்சி
தசரா நிகழ்ச்சியில் நடிகை ரச்சிதா ராமிடம் அத்துமீறிய நபர்!
தசரா நிகழ்ச்சியில் நடிகை ரச்சிதா ராமிடம் அத்துமீறிய நபர்!
ஆதி சாய்குமார் நடிப்பில் ஐந்து மொழிகளில் உருவாகும் பிரம்மாண்ட பான் இந்திய திரைப்படம்!
ஆதி சாய்குமார் நடிப்பில் ஐந்து மொழிகளில் உருவாகும் பிரம்மாண்ட பான் இந்திய திரைப்படம்!
ரஜினியும் மோகன்லாலும் உறவினர்களா! இத்தன நாள் இது தெரியாம போச்சே
ரஜினியும் மோகன்லாலும் உறவினர்களா! இத்தன நாள் இது தெரியாம போச்சே

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Magalir Urimai Thogai: தீபாவளிக்கு சர்ப்ரைஸ் கிப்ட் கொடுக்கப்போகும் தமிழக அரசு.. மகளிர் தொகை குறித்து சூப்பர் அப்டேட்!
Magalir Urimai Thogai: தீபாவளிக்கு சர்ப்ரைஸ் கிப்ட் கொடுக்கப்போகும் தமிழக அரசு.. மகளிர் தொகை குறித்து சூப்பர் அப்டேட்!
Chennai Airport: ஒரு வழியா..! தனியாருக்கு குத்தகைக்கு விடப்படும் சென்னை விமான நிலையம்? தரமான சேவை, பயணம்
ஒரு வழியா..! தனியாருக்கு குத்தகைக்கு விடப்படும் சென்னை விமான நிலையம்? தரமான சேவை, பயணம்
Annamalai: ”பாஜகவின் செயல்பாடு சலிப்படைய செய்கிறது, கேள்வி கேட்டால் முத்திரையா?” - அண்ணாமலை ஆவேசம்
”பாஜகவின் செயல்பாடு சலிப்படைய செய்கிறது, கேள்வி கேட்டால் முத்திரையா?” - அண்ணாமலை ஆவேசம்
TN Govt: அப்ப இன்னோவா இல்லையா? கார் வாங்க நிதி ஒதுக்கி தமிழக அரசு அரசாணை - MLA-க்கள் ஏமாற்றம்..!
அப்ப இன்னோவா இல்லையா? கார் வாங்க நிதி ஒதுக்கி தமிழக அரசு அரசாணை - MLA-க்கள் ஏமாற்றம்..!
தமிழகத்தில் இடைவிடாமல் வெளுத்து வாங்கும் கனமழை! இன்று எந்தெந்த மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை?
தமிழகத்தில் இடைவிடாமல் வெளுத்து வாங்கும் கனமழை! இன்று எந்தெந்த மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை?
TN Weather News:17 மாவட்டங்களுக்கு இன்று மிக கனமழை எச்சரிக்கை.. சென்னையில் பொளக்கும்? தமிழக வானிலை அறிக்கை
17 மாவட்டங்களுக்கு இன்று மிக கனமழை எச்சரிக்கை.. சென்னையில் பொளக்கும்? தமிழக வானிலை அறிக்கை
பள்ளி மாணவர்களுக்கு காத்திருக்கும் சர்ப்ரைஸ்.. மீண்டும் தொடர் விடுமுறை.. எப்போது தெரியுமா?
பள்ளி மாணவர்களுக்கு காத்திருக்கும் சர்ப்ரைஸ்.. மீண்டும் தொடர் விடுமுறை.. எப்போது தெரியுமா?
ரூ.40 கோடியில் ஹெலிகாப்டர்! தந்தைக்கு திமுக எம்.எல்.ஏ கொடுத்த பிரம்மாண்ட பிறந்தநாள் பரிசு! யார் இந்த கதிரவன்!
ரூ.40 கோடியில் ஹெலிகாப்டர்! தந்தைக்கு திமுக எம்.எல்.ஏ கொடுத்த பிரம்மாண்ட பிறந்தநாள் பரிசு! யார் இந்த கதிரவன்!
Embed widget