மேலும் அறிய

Actor Vimal: 'நான் குடிச்சு 45 நாட்கள் ஆச்சு’ .. ரோபோ ஷங்கரால் திருந்திட்டேன்.. விமலுக்கு என்ன ஆச்சு? என்ன சொன்னார்?

இயக்குனர் வேலுதாஸ் இயக்கத்தில் நடிகர் விமல் நடித்துள்ள படம் ‘துடிக்குக் கரங்கள்’. இந்த படத்தில் ஹீரோயினாக மிஸ்ரா நரங் நடித்துள்ளார்.

நடிகர் ரோபோ ஷங்கர் பலர் தங்கள் வாழ்க்கையில் மாறிப்போக ஒரு காரணமாக இருந்துள்ளார் என நடிகர் விமல் நேர்காணல் ஒன்றில் தெரிவித்துள்ளார்.

இயக்குனர் வேலுதாஸ் இயக்கத்தில் நடிகர் விமல் நடித்துள்ள படம் ‘துடிக்கும் கரங்கள்’. இந்த படத்தில் ஹீரோயினாக மிஸ்ரா நரங் நடித்துள்ளார். மேலும் சதீஷ், சௌந்தர பாண்டியன், சுரேஷ் மேனன் உள்ளிட்ட பலரும் இந்த படத்தில் நடித்துள்ளனர். ராகவ் பிரசாத் இசையமைத்துள்ள இப்படத்தை ஒடியன் டாக்கீஸ் சார்பில் கே அண்ணாதுரை தயாரித்துள்ளார். ராமி ஒளிப்பதிவு செய்ய, லாரன்ஸ் கிஷோர் எடிட்டிங் பணியை மேற்கொண்டுள்ளார். ராகவ் பிரசாத் இசையமைத்துள்ளார். இந்த படத்தின் போஸ்ட் புரொடக்‌ஷன்ஸ் பணிகள் நிறைவடைந்து நீண்ட நாட்களாக ரிலீசுக்கு காத்திருக்கும் நிலையில் நேற்று படத்தின் ட்ரெய்லர் வெளியானது. 

ஆக்‌ஷன் த்ரில்லர் கதைக்களத்தை கொண்ட இப்படம் விமல் நடிப்பில் திருப்புமுனையாக அமையும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. துடிக்கும் கரங்கள் படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. இதில் பேசிய விமல், கேரியரில் தான் சந்தித்த இறக்கங்களை பற்றி பகிர்ந்து கொண்டார். 

என்னிடம் நிறைய பேர், முன்னாடி எல்லாம் அடுத்தடுத்து படங்கள் வந்து கொண்டிருந்தது. இப்போதெல்லாம்  படமே வரவில்லை என சொல்கிறார்கள். 2022ல் இருந்து ஆண்டவன் புண்ணியத்தில் நிறைய படம் நடித்துக் கொண்டிருக்கிறேன். இனிமேல் தொடர்ந்து வரும். அதற்கு காரணம் இப்போதெல்லாம் எந்த கையெழுத்தும் நான் போடுவதில்லை. சினிமாவுக்கு வந்த புதிதில் தெரியாமல் நீட்டிய இடத்தில் எல்லாம் கையெழுத்து போட்டுக் கொண்டிருக்கிறேன்.

இவை எல்லாம் சேர்த்து வைத்ததால் 2018 முதல் 2020 ஆம் ஆண்டு வரை படங்கள் வெளியாகாமல் இருந்தது. அந்த நேரத்தில் எனக்கு வந்தது தான் ‘துடிக்கும் கரங்கள்’ படம். கொரோனா நேரத்தில்  எனக்கு இப்படம் கைக்கொடுத்தது என சொல்லலாம். காரணம் இப்படத்தில் நடிப்பதை கேள்விப்பட்டு தான் விலங்கு வெப் சீரிஸூக்கு என்னை அணுகினார்கள். அது எனக்கு நல்ல திருப்புமுனையாக அமைந்தது. 

துடிக்கும் கரங்கள் தயாரிப்பாளர், இயக்குநர், படக்குழுவினர் என அனைவரும் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். இயக்குநர் என்னிடம் நீங்க இந்த நிகழ்ச்சிக்கு 4 பேரை அழைத்து வாருங்கள் என சொன்னார். ஆனால் நான் கூப்பிட்டு வரவில்லை என்றால் ஒரு மாதிரி இருக்கும். உன் படத்தை பார்க்க முடியல என சொன்னார்கள், அப்படி இருக்கும்போது நான் கூப்பிட்டு யார் வரப்போகிறார்கள். அதனால் அதற்கான நேரத்தில் கூப்பிடலாம் என விட்டுவிட்டேன். 

ரோபோ ஷங்கர் 6 மாதமாக உடல்நிலை சரியில்லை என சொன்னார். நான் 3 மாசமா அவர் கிட்ட போன் கூட பேசவில்லை. அவரின் மனைவியிடம் மட்டும் விசாரித்துக் கொள்வேன். கவலைப்படாதீங்க மாமா,நீங்க ஒரு பல்கலைகழகம். பலபேர் உங்களை பார்த்து திருந்திட்டாங்க. யாரை கேட்டாலும் உடல்நலத்தில் கவனம் செலுத்துவதாக சொல்கிறார்கள். அதற்கு காரணம் ரோபோ ஷங்கர் தான். நானும் குடிச்சி 45 நாட்கள் ஆச்சு. நானும் மாறிட்டேன் என விமல் தெரிவித்துள்ளார்.  

தலைப்பு செய்திகள்

நூலிழையில் நெருப்பில் இருந்து தப்பிய சிவராஜ்குமார்.. உயிர் போய் உயிர் வந்த ரசிகர்கள்! நடந்தது என்ன?
நூலிழையில் நெருப்பில் இருந்து தப்பிய சிவராஜ்குமார்.. உயிர் போய் உயிர் வந்த ரசிகர்கள்! நடந்தது என்ன?
ஜெயிலர் 2 படத்திற்கு U/A சான்றிதழ்
ஜெயிலர் 2 படத்திற்கு U/A சான்றிதழ்
"எனக்கு தூக்கமே வரல.." பதற்றத்தின் உச்சிக்கே சென்ற நடிகர் மணிகண்டன்! எதற்காக தெரியுமா?
15 நிமிடங்கள் மூச்சை அடக்கிய வித்யுத் ஜம்வால்.. வைரலாகும் வீடியோ
15 நிமிடங்கள் மூச்சை அடக்கிய வித்யுத் ஜம்வால்.. வைரலாகும் வீடியோ

வீடியோ

TVK Cadre Issue : செல்போன் கடைக்காரரிடம் வழிப்பறி.. அடிக்க சொன்ன தவெக நிர்வாகி! போலீஸ் வலைவீச்சு
Dindigul Murder : திமுக பிரமுகர் கொலை வழக்கு! ஜாமீனில் வந்த முக்கிய குற்றவாளி.. ஓட ஓட வெட்டிக் கொலை
VS Babu Health : V.S பாபுக்கு டிரக்கியாஸ் சிகிச்சை? வெளியான பகீர் தகவல் குடும்பத்தினரின் அப்டேட்
வாக்காளர்களுக்கு டோக்கன்? தவெகவினரை மடக்கிய அதிமுகவினர் தாராபுரத்தில் பரபரப்பு!
செவிலியர்கள் போராட்டம் இரவோடு இரவாக கைது போலீஸ் செயலால் பரபரப்பு!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Thattanchavady byElection 2026 : தட்டாஞ்சாவடி இடைத்தேர்தல் முடிந்தது: 80.83% வாக்குப்பதிவு... ரங்கசாமி தொகுதியில் வெல்லப்போவது யார்?
Thattanchavady byElection 2026 : தட்டாஞ்சாவடி இடைத்தேர்தல் முடிந்தது: 80.83% வாக்குப்பதிவு... ரங்கசாமி தொகுதியில் வெல்லப்போவது யார்?
TN By Election 2026: மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நிறைவு; ஆர்வத்துடன் வாக்களித்த மக்கள்
மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நிறைவு; ஆர்வத்துடன் வாக்களித்த மக்கள்
நாளை அக்டோபர் 7: தமிழகத்தில் மின்தடை அறிவிப்பு! உங்கள் பகுதி உள்ளதா?
நாளை அக்டோபர் 7: தமிழகத்தில் மின்தடை அறிவிப்பு! உங்கள் பகுதி உள்ளதா?
Maragatham Kumaravel:
Maragatham Kumaravel: "செவ்வாய்க்கிழமை பெண்கள் ஓட்டு நமக்குத்தான்" தவெக வேட்பாளரின் விநோத நம்பிக்கை பலிக்குமா?
Saturn: 30 ஆண்டுகளுக்கு பிறகு மீன ராசியில் சனியின் நேரடி இயக்கம்.. இந்த 3 ராசிகளுக்கு கோடீஸ்வர ராஜயோகம்!
Saturn: 30 ஆண்டுகளுக்கு பிறகு மீன ராசியில் சனியின் நேரடி இயக்கம்.. இந்த 3 ராசிகளுக்கு கோடீஸ்வர ராஜயோகம்!
Toyota Glanza on EMI: டொயோட்டா கார் வாங்கணும்னு ஆசையா.? கிளான்ஸாவோட விலை, முன்பணம், EMI எவ்வளவு வரும்னு பாருங்க
டொயோட்டா கார் வாங்கணும்னு ஆசையா.? கிளான்ஸாவோட விலை, முன்பணம், EMI எவ்வளவு வரும்னு பாருங்க
ஆதார் பெயர் மாற்றம்: UIDAI-ன் புதிய விதிகள், ஆவணங்கள் வெளியீடு! தெரிந்துகொள்ளுங்கள் மக்களே!..
ஆதார் பெயர் மாற்றம்: UIDAI-ன் புதிய விதிகள், ஆவணங்கள் வெளியீடு! தெரிந்துகொள்ளுங்கள் மக்களே!..
Durimurugan: துரைமுருகனை சுத்து போடும் தவெக அரசு..! குவாரிகளில் சுருட்டபட்ட ரூ.4,730 கோடி? திமுகவிற்கு DVAC ஷாக்
துரைமுருகனை சுத்து போடும் தவெக அரசு..! குவாரிகளில் சுருட்டபட்ட ரூ.4,730 கோடி? திமுகவிற்கு DVAC ஷாக்
Embed widget