மேலும் அறிய

Vijay Sethupathi in Malaysia: விஜய் சேதுபதியுடன் செல்ஃபி வேணும்... மலேசியாவில் அலைஅலையாய் திரண்ட அயல்நாட்டு ரசிகர்கள்!

இந்தோனேசியா, தாய்லாந்து ஆகிய நாடுகளில் இருந்து ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வருகை தரும் நிலையில், விஜய் சேதுபதியுடன் செல்ஃபி எடுத்துக் கொள்ள தினம் தினம் இவர்கள் கூடி வருகின்றனர்.

விஜய் சேதுபதியுடன் செல்ஃபி எடுத்துக்கொள்ள படப்பிடிப்பு தளத்தில் அலைஅலையாய் வெளிநாட்டு ரசிகர்கள் திரண்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது.

'மக்கள் செல்வன்' எனக் கொண்டாடப்படும் நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் தயாராகி வரும் பெயரிடப்படாத திரைப்படத்தின் படப்பிடிப்பு மலேசியாவில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்தப்  படப்பிடிப்பு நடைபெற்று வரும் ஷூட்டிங் தளத்தில் நடிகர் விஜய் சேதுபதியை சந்திக்க மலேசியா, இந்தோனேசியா, தாய்லாந்து உள்ளிட்ட தென்கிழக்கு ஆசிய நாடுகளைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் அதிக அளவில் வருகை தந்து வருவதாகக் கூறப்படுகிறது.

'ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன்' எனும் படத்தை இயக்கிய இயக்குநர் பி. ஆறுமுக குமார் இயக்கத்தில் தயாராகி வரும் இந்தப்  பெயரிடப்படாத படத்தில், யோகி பாபு, ருக்மணி வசந்த், பி. எஸ். அவினாஷ், திவ்யா பிள்ளை, பப்லு, ராஜ்குமார் உள்ளிட்ட பலரும் நடித்து வருகிறார்கள்.

கரண் பகதூர் ராவத் இந்தப் படத்துக்கு ஒளிப்பதிவு செய்து வருகிறார். ஜஸ்டின் பிரபாகரன் இசையமைக்கிறார். படத்தொகுப்பு பணிகளை ஆர் கோவிந்தராஜ் கவனிக்க, கலை இயக்கத்தை ஏ. கே. முத்து மேற்கொண்டு வருகிறார்.

சண்டைக் காட்சிகளை தினேஷ் சுப்பராயன் அமைத்துள்ள நிலையில், ஆக்சன் என்டர்டெய்னர் ஜானரில் தயாராகும் இந்தத் திரைப்படத்தை 7 சிஸ் என்டர்டெய்ன்மென்ட் எனும் பட நிறுவனம் சார்பில் பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரித்து வருகிறது.

இப்படத்தின் படப்பிடிப்பு  முதற்கட்டமாக மலேசிய நாட்டின் வடமேற்கு பகுதியில் உள்ள ஈப்போ எனும் மாநகரில் நடைபெற்று வருகிறது.  இந்நிலையில், படப்பிடிப்பு தளத்திற்கு தினசரி உள்நாட்டிலிருந்து மட்டுமல்லாமல் இந்தோனேசியா, தாய்லாந்து ஆகிய நாடுகளில் இருந்தும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வருகை தருகின்றனர்.

அவர்கள் படப்பிடிப்பனை பார்வையிடுவதுடன், படத்தின் நாயகனான விஜய் சேதுபதியுடன் செல்ஃபி எடுத்துக் கொள்வதிலும் ஆர்வம் காண்பித்து வருகின்றனர். இதனால் படப்பிடிப்பு தளத்தில் பணியாற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் மற்றும் படக்குழுவினர், சுற்றுலா பயணிகளையும், விஜய் சேதுபதியின் ரசிகர்களையும் கட்டுப்படுத்த முடியாமல் தவிப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. 


Vijay Sethupathi in Malaysia: விஜய் சேதுபதியுடன் செல்ஃபி வேணும்... மலேசியாவில் அலைஅலையாய் திரண்ட அயல்நாட்டு ரசிகர்கள்!

நடிகர் விஜய் சேதுபதி தற்போது பான் இந்தியப் படங்களில்  கவனம் செலுத்தி வருகிறார். முன்னதாக இந்தியில் த ஃபேமிலி மேன் தொடர் மூலம் புகழ்பெற்ற ராஜ் அண்ட் டிகே இயக்கிய ஃபார்ஸி சீரிஸில் விஜய் சேதுபதி நடித்திருந்தார். இந்த சீரிஸ் பாசிட்டிவ் விமர்சனங்களைக் குவித்தது. இந்நிலையில் அடுத்ததாக கத்ரினா கைஃப் உடன் ‘மெர்ரி க்ரிஸ்துமஸ்’ படத்தில் இணைந்து நடித்து வருகிறார் விஜய் சேதுபதி. ஸ்ரீராம் ராகவன் இயக்கும் இந்தப்படம் இந்த ஆண்டு இறுதியில் க்ரிஸ்துமஸ் பண்டிகையை ஒட்டி வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தலைப்பு செய்திகள்

Kamal Hassan : 67 ஆண்டுகள் சினிமா பயணம்… இந்திய சினிமாவில் கமல்ஹாசன் அறிமுகப்படுத்திய தொழில்நுட்பங்கள்!
Kamal Hassan : 67 ஆண்டுகள் சினிமா பயணம்… இந்திய சினிமாவில் கமல்ஹாசன் அறிமுகப்படுத்திய தொழில்நுட்பங்கள்!
வைரல் இன்ஸ்டாகிராம் வ்ளாகருக்கு நடந்த சோகம்: பஸ் கண்டக்டருடன் ஓடிய மனைவி!
வைரல் இன்ஸ்டாகிராம் வ்ளாகருக்கு நடந்த சோகம்: பஸ் கண்டக்டருடன் ஓடிய மனைவி!
அட்லி வழங்கும், விஜய் சேதுபதி நடிக்கும் ‘பத்தா’ – அக்டோபர் 1ம் தேதி திரையரங்குகளில் வெளியீடு!
அட்லி வழங்கும், விஜய் சேதுபதி நடிக்கும் ‘பத்தா’ – அக்டோபர் 1ம் தேதி திரையரங்குகளில் வெளியீடு!
பில்லியன் நிமிடங்களுக்கும் அதிகமான பார்வை நேரத்தைப் பதிவு செய்த Premier League
பில்லியன் நிமிடங்களுக்கும் அதிகமான பார்வை நேரத்தைப் பதிவு செய்த Premier League

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
அரசு கஜானாவிற்கு 15,000 கோடி வந்தது உண்மையா? அந்தர் பல்டி அடித்த மரிய வில்சன் – இன்று சொன்னது என்ன?
அரசு கஜானாவிற்கு 15,000 கோடி வந்தது உண்மையா? அந்தர் பல்டி அடித்த மரிய வில்சன் – இன்று சொன்னது என்ன?
பெஸ்ட் மிட் சைஸ் SUV ஹூண்டாய் கிரெட்டா: மாதம் ரூ.16000 EMI-ல் சொந்தமாக்கலாம்- விவரம்!
பெஸ்ட் மிட் சைஸ் SUV ஹூண்டாய் கிரெட்டா: மாதம் ரூ.16000 EMI-ல் சொந்தமாக்கலாம்- விவரம்!
Imran Khan News: இம்ரான் கான் இறந்துவிட்டாரா.?! உண்மை என்ன.? பாகிஸ்தான் ராணுவம் வெளியிட்ட முக்கிய அறிக்கை
இம்ரான் கான் இறந்துவிட்டாரா.?! உண்மை என்ன.? பாகிஸ்தான் ராணுவம் வெளியிட்ட முக்கிய அறிக்கை
Trump Great Escape: உணவு லாரியில் பதுங்கிச் சென்ற ட்ரம்ப்; ரகசியமாக விமானம் மாறியது ஏன்.? வெளியான பரபரப்பு தகவல்
உணவு லாரியில் பதுங்கிச் சென்ற ட்ரம்ப்; ரகசியமாக விமானம் மாறியது ஏன்.? வெளியான பரபரப்பு தகவல்
டாடா பஞ்ச் காருக்கு நேரடிப் போட்டி; அமோக விற்பனையில் ஹூண்டாய் எக்ஸ்டர்- விலை, மைலேஜ்!
டாடா பஞ்ச் காருக்கு நேரடிப் போட்டி; அமோக விற்பனையில் ஹூண்டாய் எக்ஸ்டர்- விலை, மைலேஜ்!
Vijay vs Udhayanidhi : சிஎம் விஜய்யோடு கை கோர்த்த திமுக.! சட்டசபையில் திடீர் ட்விஸ்ட் - உதயநிதி பேசியது என்ன.?
சிஎம் விஜய்யோடு கை கோர்த்த திமுக.! சட்டசபையில் திடீர் ட்விஸ்ட் - உதயநிதி பேசியது என்ன.?
Honda Amaze Price Features: மாருதி டிசையரா, ஹோண்டா அமேஸா-ன்னு குழப்பத்துல இருக்கீங்களா.? இத படிச்சுட்டு தெளிவா முடிவெடுங்க
மாருதி டிசையரா, ஹோண்டா அமேஸா-ன்னு குழப்பத்துல இருக்கீங்களா.? இத படிச்சுட்டு தெளிவா முடிவெடுங்க
Mahindra Scorpio N Pickup: டொயோட்டா ஹிலக்ஸுக்கு நெருக்கடி கொடுக்குமா மஹிந்திரா ஸ்கார்பியோ என் பிக்கப்.? ஆக. 14 லாஞ்ச்
டொயோட்டா ஹிலக்ஸுக்கு நெருக்கடி கொடுக்குமா மஹிந்திரா ஸ்கார்பியோ என் பிக்கப்.? ஆக. 14 லாஞ்ச்
Embed widget