மேலும் அறிய

Viduthalai: "விடுதலை 2"க்காக தந்தை விஜய் சேதுபதியுடன் நடிக்கும் மகன் சூர்யா சேதுபதி..! ரசிகர்கள் எதிர்பார்ப்பு..!

விடுதலைப் படட்த்தின் இரண்டாம் பாகத்தில் நடிகர் விஜய் சேதுபதியின் மகனான சூர்யா சேதுபதி நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

வெற்றிமாறன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகி வரும் விடுதலைத் திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தில் முக்கிய கதாபாத்திரன் ஒன்றில் விஜய் சேதுபதியின் மகனான சூர்யா சேதுபதி நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

வெற்றிமாறனின் விடுதலை:

விடுதலைத் திரைப்படம் கடந்த மார்ச் மாதம் திரையரங்குகளில் வெளியானது. சூரி,விஜய் சேதுபதி, பவானி ஷ்ரி, சேதன் ஆகியவர்கள் இந்தப் படத்தில் நடித்திருந்தார்கள். சூரி இந்தப் படத்தில் முதல்முறையாக கதாநாயகனாக அறிமுகமானார்.எழுத்தாளர் ஜெயமோகனின் கதை ஒன்றினை மையமாக கொண்டு எடுக்கப்பட்ட விடுதலைத் திரைப்படம் ரசிகர்களிடையே பெறும் வரவேற்பைப் பெற்றது. முதல் பாகத்தில் சூரி கதையின் மையக் கதாபாத்திரமாக இருந்தார் இதனால் விஜய் சேதுபதி ரசிகர்களுக்கு ஒரு சின்ன வருத்தம் இருக்கதான் செய்கிறது.

விஜய்சேதுபதி நடித்துள்ள பெரும்பாலான காட்சிகள் விடுதலைப் படத்தின் இரண்டாம் பாகத்தில் இடம்பெற்றிருக்கிறது. இதனால் விடுதலைப் படத்தின் இரண்டாம் பாகத்தினை பெறும் ஆர்வத்துடன் எதிர்பார்த்து வருகிறார்கள் விஜய் சேதுபதியின் ரசிகர்கள். தற்போது விடுதலைப் இரண்டாம் பாகத்தில் விஜய் சேதுபதியின் மகனான சூர்யா சேதுபதி நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரமாக இது இருக்கும் என எதிர்பார்க்கப் படுகிறது.இதனால் விஜய் சேதுபதியின் ரசிகர்கள் இரட்டிப்பு சந்தோஷத்தில் உள்ளார்கள்.

விஜய் சேதுபதி மகன்:

நடிகர்  விஜய் சேதுபதியின் மகன் சூர்யா சேதுபதி. தந்தையும் மகனுமான இவர்கள் இருவர் திரையில் இணைவது இது முதல் முறை அல்ல. ஏற்கனவே  விஜய் சேதுபதி நயன்தாரா நடித்த நானும் ரவுடிதான் திரைப்படத்தில் விஜய் சேதுபதியின் சிறிய வயது கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் சூர்யா சேதுபதி. இதற்கடுத்ததாக இயக்குனர் அருன் இயக்கிய சிந்துபாத் திரைப்படத்தில் இருவரும் இணைந்து நடித்தனர்.ஆனால் எதிர்பார்த்த அளவிற்கு இந்தப் படம் வெற்றிபெறவில்லை. தற்ப்போது மூன்றாவது முறையாக இவர்கள் வெற்றிமாறனின் படத்தில் இணைய இருக்கிறார்கள். இந்த முறை இவர்கள் இருவரும் நிச்சயம் சேர்ந்து கலக்குவார்கள் என எதிர்பார்க்கப் படுகிறது.

விடுதலைத் திரைப்படம் கடந்த வாரம் ஜீ ஃபைவில் வெளியானது.வெளியான மிகக் குறைவான நேரத்திலேயே கிட்டதட்ட 50 மில்லியன் ஸ்ட்ரிமீங் மினிட்ஸைக் கடந்துள்ளது இந்தப் படம்.விடுதலை  இரண்டாம் பாகம் இந்த ஆண்டின் இறுதியில் வெளியாகும் என எதிர்பார்க்கப் படுகிறது.

வாடிவாசல்:

இயக்குனர் வெற்றிமாறன் விடுதலை இரண்டாம் பாகம்  மட்டுமில்லாமல் தற்போது சூர்யா நடிக்கும் வாடிவாசல் திரைப்படத்தையும் இயக்கி வருகிறார்.வாடிவாசல் திரைப்படத்தின் கிராஃபிக்ஸ் வேலைகளுக்காக அண்மையில் லண்டன் சென்று திரும்பியுள்ளார் வெற்றிமாறன்.வாடிவாசல் பத்தின் கிராஃபிக்ஸ் காட்சிகளை ஹாலிவுட் திரைப்படமான அவதார் திரைப்படத்தில் வேலை செய்த தொழில்நுட்பக் கலைஞர்களைக் கொண்டு செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியிருந்தது.சூர்யா மற்றும் விஜய் சேதுபதி ரசிகர்களுக்கு இந்த ஆண்டு சிறப்பான சம்பவங்கள் காத்திருக்கின்றன

He covers Tamil cinema, film and OTT reviews, entertainment news, and key developments across the film industry for ABP Nadu. He explores film criticism, storytelling, performances, and the evolving landscape of cinema and streaming platforms. He has produced and conducted interviews with film-industry personalities, including director Thiyagarajan Kumararaja and playback singer Chinmayi. Beyond journalism, he pursues his passion for writing, filmmaking, and creative storytelling. He also co-authored the Tamil non-fiction book Noruṅgum Puvi Arangal (Breaking Planetary Boundaries).

Read More

தலைப்பு செய்திகள்

திருநங்கைகள் பற்றி கேவலமான பேச்சு.. இயக்குநர் மோகன் ஜியை வெளுத்து வாங்கிய கார்த்திக் சுப்பராஜ்!
திருநங்கைகள் பற்றி கேவலமான பேச்சு.. இயக்குநர் மோகன் ஜியை வெளுத்து வாங்கிய கார்த்திக் சுப்பராஜ்!
2 நிமிடப் காட்சிக்காக நோக்கியா அலுவலகத்திற்கே சென்ற ஷங்கர்! கண்ணும் கண்ணும் நோக்கியா பாடல் பின்னணி
2 நிமிடப் காட்சிக்காக நோக்கியா அலுவலகத்திற்கே சென்ற ஷங்கர்! கண்ணும் கண்ணும் நோக்கியா பாடல் பின்னணி
 “யுவர்ஸ் லவ்விங்லி” … இறுதிக்கட்டத்தை நெருங்கும் படப்பிடிப்பு!
 “யுவர்ஸ் லவ்விங்லி” … இறுதிக்கட்டத்தை நெருங்கும் படப்பிடிப்பு!
விஜய் மில்டனின் ‘தொண்டர் படை – Chapter 1: Gods and Soldiers’ படத்தின் முதல் பாடல் ‘நந்தினி’ வெளியீடு!
விஜய் மில்டனின் ‘தொண்டர் படை – Chapter 1: Gods and Soldiers’ படத்தின் முதல் பாடல் ‘நந்தினி’ வெளியீடு!

வீடியோ

Nepal Flood | அதிகாலையில் திடீர் வெள்ளம் அலறியடித்து ஓடிய மக்கள் நேபாளத்தில் மீண்டும் பேரதிர்ச்சி!
லவ் டார்ச்சர் கொடுத்த இளைஞர் இளம்பெண் விபரீத முடிவு அடித்தே கொன்ற உறவினர்கள்!
கோவிலுக்குள் பாலியல் தொல்லை சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் அதிர்ச்சியூட்டும் CCTV காட்சிகள்!
அன்று இந்தியாவுக்கு நெருக்கடி இன்று ரஷ்யாவுடன் டீல் அந்தர் பல்டி அடித்த ட்ரம்ப்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Govt: கிடுகிடுவென உயர்ந்த விலை..! சன்னரக அரிசியை ரூ..50-க்கு விற்க தமிழக அரசு முடிவு? மக்கள் ஹாப்பி
கிடுகிடுவென உயர்ந்த விலை..! சன்னரக அரிசியை ரூ..50-க்கு விற்க தமிழக அரசு முடிவு? மக்கள் ஹாப்பி
Chennai Water: சென்னை குடிநீர் பிரச்னைக்கான தீர்வு..! 98KM, 9 நிலையங்கள், ரூ.3,108 கோடி பட்ஜெட் - இணையும் நீராதாரங்கள்
சென்னை குடிநீர் பிரச்னைக்கான தீர்வு..! 98KM, 9 நிலையங்கள், ரூ.3,108 கோடி பட்ஜெட் - இணையும் நீராதாரங்கள்
Mamata Banerjee: மமதா பானர்ஜியை கத்தியால் குத்த முயன்ற பெண்.. திட்டமிட்ட சதியா? .. தேசிய அளவில் பரபரப்பு!
Mamata Banerjee: மமதா பானர்ஜியை கத்தியால் குத்த முயன்ற பெண்.. திட்டமிட்ட சதியா? .. தேசிய அளவில் பரபரப்பு!
TN Weather News: சென்னையில் தொடங்கிய மழை - இன்று எந்தெந்த மாவட்டங்களுக்கு வார்னிங்? தமிழக வானிலை அறிக்கை
சென்னையில் தொடங்கிய மழை - இன்று எந்தெந்த மாவட்டங்களுக்கு வார்னிங்? தமிழக வானிலை அறிக்கை
திருநங்கைகள் பற்றி கேவலமான பேச்சு.. இயக்குநர் மோகன் ஜியை வெளுத்து வாங்கிய கார்த்திக் சுப்பராஜ்!
திருநங்கைகள் பற்றி கேவலமான பேச்சு.. இயக்குநர் மோகன் ஜியை வெளுத்து வாங்கிய கார்த்திக் சுப்பராஜ்!
DMK MLA: மாற்றுத்திறனாளி நிலத்தை அபகரித்த திமுக எம்.எல்.ஏ.,? கடையநல்லூர் ராஜேந்திரன் மீது வழக்குப்பதிவு
மாற்றுத்திறனாளி நிலத்தை அபகரித்த திமுக MLA? கடையநல்லூர் ராஜேந்திரன் மீது வழக்குப்பதிவு
ABP Nadu Top 10, 14 October 2026: இன்றைய காலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்! - Morning
ABP Nadu Top 10, 14 October 2026: இன்றைய காலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்! - Morning
CM Vijay:
CM Vijay: "தளபதி விஜய்.." ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு சொன்னதும் அதிர்ந்த அரங்கம்!
Embed widget