Watch Video: விஜய் சேதுபதி மீது கொலைவெறி தாக்குதல்: பெங்களூரு விமான நிலையத்தில் ‛அட்டாக்’
மாஸ்டர் செஃப் சூட்டிங் சமயத்தில் ஏற்பட்ட வாக்குவாதம் காரணமாக இந்த தாக்குதல் நடந்துள்ளதாக கூறப்படுகிறது.
![Watch Video: விஜய் சேதுபதி மீது கொலைவெறி தாக்குதல்: பெங்களூரு விமான நிலையத்தில் ‛அட்டாக்’ Actor Vijay Sethupathi attacked at Bangalore airport Watch Video: விஜய் சேதுபதி மீது கொலைவெறி தாக்குதல்: பெங்களூரு விமான நிலையத்தில் ‛அட்டாக்’](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/11/03/e016b394c40f806fe087e0371e35e4db_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
பெங்களூரு விமான நிலையம் வந்த நடிகர் விஜய் சேதுபதி மீது கொலைவெறி தாக்குதல் நடத்தப்பட்ட வீடியோ தற்போது வெளியாகி கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஏர்போர்ட்டில் சிஆர்பிஎப் பாதுகாப்பில் செல்லும் விஜய்சேதுபதியை பின் தொடர்ந்து வந்த ஒருவர் ஓங்கி மிதிக்கிறார். உடனே அவருடன் வந்த சிலர், அந்த நபரை பிடிக்க முயற்சிக்கின்றனர். நிலை தடுமாறிய விஜய் சேதுபதி, அந்த நபரிட் ஓடுகிறார். தடுக்க ஓடுகிறாரா... அல்லது விசாரிக்க ஓடுகிறாரா... அல்லது பதில் தாக்குதலுக்கு ஓடுகிறாரா என்பது தெரியாத நிலையில், சற்று முன் வெளியான அந்த வீடியோ பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பெங்களூரு விமான நிலையத்தில் நடந்த இந்த தாக்குதலுக்கான காரணம் தெரியவில்லை. தமிழ் நடிகர் என்பதால் அவர் தாக்கப்பட்டாரா... அல்லது வேறு ஏதாவது ஒரு காரணத்திற்காக தாக்கப்பட்டாரா என்பது இன்னும் சரிவரத் தெரியவில்லை.
#JUSTIN பெங்களூரு விமான நிலையத்தில் நடிகர் விஜய் சேதுபதி மீது தாக்குதல்#VijaySethupathi #banglore pic.twitter.com/mOmqrg4f1P
— Dhamotharan (@dhamurmm91) November 3, 2021
மேலே உள்ள ட்விட்டர் பதிவில், விஜய் சேதுபதி தாக்கப்படும் காட்சி உள்ளது. மாஸ்டர் செஃப் சூட்டிங் சமயத்தில் ஏற்பட்ட வாக்குவாதம் காரணமாக இந்த தாக்குதல் நடந்துள்ளதாக கூறப்படுகிறது.
ஜெய்பீம் தொடர்பான முக்கியச் செய்திகள் சில...
‛தமிழில் பேசுடா...’ இந்தியில் இல்லாமல் போனது ஏன்? வர்த்தக சமரசம் செய்ததா ஜெய்பீம்?https://t.co/8bsnIK1BL8#JaiBhim #PrakashRaj #JaiBhimOnPrime
— ABP Nadu (@abpnadu) November 3, 2021
Kalaingar on Justice Chandhru: 'நெறி தவறாத வழிகள்'- நீதிபதி சந்துரு குறித்து முன்னாள் முதல்வர் கருணாநிதியின் போஸ்ட்..#KalaignarKarunanidhi #JusticeChandruhttps://t.co/lxsqbzQFdu
— ABP Nadu (@abpnadu) November 3, 2021
Kalaingar on Justice Chandhru: 'நெறி தவறாத வழிகள்'- நீதிபதி சந்துரு குறித்து முன்னாள் முதல்வர் கருணாநிதியின் போஸ்ட்..#KalaignarKarunanidhi #JusticeChandruhttps://t.co/lxsqbzQFdu
— ABP Nadu (@abpnadu) November 3, 2021
Jaibhim Rajakannu Manikandan | "என் அம்மா, படம் பாத்துட்டு ரெண்டு நாளா தூங்கல.." ஜெய்பீம் ’ராஜாகண்ணு’ மணிகண்டன்..#Jaibhim #Manikandan #Rajakannuhttps://t.co/jUnerYTJfN
— ABP Nadu (@abpnadu) November 3, 2021
Jai Bhim Tamizh Interview : ‛என் மனைவியே என்னைப் பார்த்து பயப்படுறா...’ ஜெய்பீம் ‛டெரர் எஸ்ஐ’ தமிழ் பேட்டி..!#Jaibhim #Tamizh #Guruhttps://t.co/fyjMAKUjIf
— ABP Nadu (@abpnadu) November 3, 2021
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)