மேலும் அறிய

21 Years of Youth: 'விஜய்யின் கடைசி ரொமான்டிக் ஹீரோ படம்’ .. 21 ஆண்டுகளை நிறைவு செய்த யூத் திரைப்படம்..!

நடிகர் விஜய் நடித்த காதல் திரைப்படங்களில் ஒன்றான ‘யூத்’ படம் வெளியாகி இன்றோடு 21 ஆண்டுகளை நிறைவு செய்கிறது. 

நடிகர் விஜய் நடித்த காதல் திரைப்படங்களில் ஒன்றான ‘யூத்’ படம் வெளியாகி இன்றோடு 21 ஆண்டுகளை நிறைவு செய்கிறது. 

மற்றுமொரு காதல் திரைப்படம் 

தனது ஆரம்ப காலக்கட்டத்தில் காதல் திரைப்படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்தார் விஜய். அவரின் படங்கள் இளம் வயதினருக்கு மட்டுமின்றி சிறுவர்கள், பெரியவர்கள் வரை ஏற்ற வகையில் இருந்தது. விஜய் தனது கேரியரை காதலில் இருந்து ஆக்‌ஷன் ஹீரோவாக 2002 ஆம் ஆண்டு மாற்றிக் கொண்டார். அதற்கு முன்னதாக கடைசியாக யூத் படத்தில் ரொமான்டிக் ஹீரோவாக நடித்திருந்தார். 

விஜய்யின் சினிமா கேரியரில் 1998 ஆம் ஆண்டு வெளியான ப்ரியமுடன் படம் மிக முக்கியமானது. இந்த படத்தில் அவர் நெகட்டிவ் கேரக்டரில் நடித்திருந்தார். இதனாலேயே இயக்குநர் வின்சென்ட் செல்வாவுடன் 2வது முறையாக யூத் படத்தில் இணைந்தார். மேலும் இந்த படத்தில் ஷாகீன் கான், சிந்து மேனன், மணிவண்ணன்,விவேக், விஜயகுமார் உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். மணிசர்மா இசையமைத்திருந்தார். 

படத்தின் கதை

சிரு நவுதோ என்ற தெலுங்குத் திரைப்படத்தின் ரீமேக் தான் இப்படம் உருவாக காரணம். தன்னை காயப்படுத்தியவர்களுக்கு கூட தீங்கு நினைக்காத விஜய், தன் வாழ்வில் நடந்த பிரச்சினைகளுக்கு காரணமானவர்களை எப்படி கையாளுகிறார் என்பதே கதையாக அமைக்கப்பட்டிருந்தது. 

விஜய்யின் கேரக்டர் அமைப்பே யூத் படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற காரணமாக அமைந்தது. விஜய் காதலிக்கும் பெண்ணாக ஷாகீன் கானும், விஜய்க்கு நிச்சயம் செய்த நிலையில், வீட்டை விட்டு செல்லும் பெண்ணாக சிந்து மேனனும் நடித்திருந்தனர். 

காலத்தால் அழியாத பாடல்கள்

யூத் படத்தில் மணி ஷர்மா முத்தான பாடல்களை கொடுத்திருந்தார். ஹரிஷ் ராகவேந்திரா குரலில் உருவான சக்கரை நிலவே பாடல் இன்றளவும் காதலை நினைத்து உருகுபவர்களின் தேசிய கீதமாக உள்ளது. மேலும் சகியே சகியே, அடி ஒன் இஞ்ச் டூ இஞ்ச் என டூயட் பாடல்களும், வாழ்வு குறித்த நேர்மறைப் பார்வையையும் தன்னம்பிக்கையையும் சொன்ன  ‘சந்தோஷம் சந்தோஷம்’ பாடலும் பெரும் வரவேற்பை பெற்றது. மேலும் சிம்ரனுடம் ஆடிய ‘ஆல்தோட்ட பூபதி’ பாடல் பட்டித்தொட்டியெங்கும் பட்டையை கிளப்பியது. 

படத்திற்கு மிகப்பெரிய பலமாக நடிகர் விவேக்கின் காமெடி காட்சிகள் உதவியது. ஆக மொத்தம் பெயரைப் போல யூத் என்றும் இளமையான ஒரு படம் தான்...!

தலைப்பு செய்திகள்

Jailer 2 : ஜெயிலர் 2 பாடல் ப்ரோமோ வெளியானது..சிறப்புத் தோற்றத்தில் பூர்ணா..காவாலா சாதனையை உடைக்குமா?
Jailer 2 : ஜெயிலர் 2 பாடல் ப்ரோமோ வெளியானது..சிறப்புத் தோற்றத்தில் பூர்ணா..காவாலா சாதனையை உடைக்குமா?
நடிப்பிற்கு திரும்பும் கருப்பு இயக்குநர் ஆர் ஜே பாலாஜி !
நடிப்பிற்கு திரும்பும் கருப்பு இயக்குநர் ஆர் ஜே பாலாஜி !
‘விஸ்வநாத் & சன்ஸ்’ படப்பிடிப்பில் ராதிகாவிடம் அடி வாங்கிய ஜி.வி.பிரகாஷ்.. அவரே சொன்ன தகவல்
‘விஸ்வநாத் & சன்ஸ்’ படப்பிடிப்பில் ராதிகாவிடம் அடி வாங்கிய ஜி.வி.பிரகாஷ்.. அவரே சொன்ன தகவல்
Dharman : தர்மன் படத்தில் ரஜினியின் மருமகனாகவும் வில்லனாகவும் நடிக்கு ராம் பொத்தினேனி
Dharman : தர்மன் படத்தில் ரஜினியின் மருமகனாகவும் வில்லனாகவும் நடிக்கு ராம் பொத்தினேனி

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ஊட்டி, கொடைக்கானலில் Rope Car.! ராமேஸ்வரத்திற்கு சொகுசு கப்பல் டூர்- சுற்றுலாத்துறை அசத்தல் அறிவிப்புகள்
ஊட்டி, கொடைக்கானலில் Rope Car.! ராமேஸ்வரத்திற்கு சொகுசு கப்பல் டூர்- சுற்றுலாத்துறை அசத்தல் அறிவிப்புகள்
Netanyahu Fail in Polls: பாழாய் போன பிளான்; போரால் சரிந்த செல்வாக்கு; தேர்தல் கருத்துக்கணிப்பில் சொதப்பிய நெதன்யாகு கட்சி
பாழாய் போன பிளான்; போரால் சரிந்த செல்வாக்கு; தேர்தல் கருத்துக்கணிப்பில் சொதப்பிய நெதன்யாகு கட்சி
Gold and Silver Rate Aug.19th: காலையில் மகிழ்ச்சி, மாலையில் அதிர்ச்சி.! தங்கம் விலை அதிரடி உயர்வு; இப்போ விலை என்ன தெரியுமா.?
காலையில் மகிழ்ச்சி, மாலையில் அதிர்ச்சி.! தங்கம் விலை அதிரடி உயர்வு; இப்போ விலை என்ன தெரியுமா.?
CM Vijay: ”எல்லாம் கொடுக்கிறேன், லஞ்சம் மட்டும் வாங்காதீங்க” MLA-க்களுக்கு கார் அறிவித்து CM விஜய் கோரிக்கை
”எல்லாம் கொடுக்கிறேன், லஞ்சம் மட்டும் வாங்காதீங்க” MLA-க்களுக்கு கார் அறிவித்து CM விஜய் கோரிக்கை
Araghchi Vs Trump: “பேச்சுவார்த்தை நடத்த அமெரிக்கா கெஞ்சுகிறது“; ட்ரம்ப்புக்கு நெத்தியடி பதில் கொடுத்த அப்பாஸ் அராக்சி
“பேச்சுவார்த்தை நடத்த அமெரிக்கா கெஞ்சுகிறது“; ட்ரம்ப்புக்கு நெத்தியடி பதில் கொடுத்த அப்பாஸ் அராக்சி
Skoda Comeback Cars: ஸ்கெட்ச் போடும் ஸ்கோடா.! சூப்பர்ப் மாடலில் மீண்டும் டீசல் எஞ்சின்; கம்பேக் கொடுக்கும் ஆக்டேவியா; பிளான் என்ன.?
ஸ்கெட்ச் போடும் ஸ்கோடா.! சூப்பர்ப் மாடலில் மீண்டும் டீசல் எஞ்சின்; கம்பேக் கொடுக்கும் ஆக்டேவியா; பிளான் என்ன.?
TNPSC Free Coaching: தேர்வர்களே.. டிஎன்பிஎஸ்சி போட்டித் தேர்வுகளுக்கு இலவசப் பயிற்சி; பங்கேற்பது எப்படி?
TNPSC Free Coaching: தேர்வர்களே.. டிஎன்பிஎஸ்சி போட்டித் தேர்வுகளுக்கு இலவசப் பயிற்சி; பங்கேற்பது எப்படி?
Maruti Baleno: குறைந்த பட்ஜெட்டில் பிரீமியம் கார்: ரூ.50,000 முன்பணத்தில் மாருதி பலேனோ- EMI திட்டம்!
Maruti Baleno: குறைந்த பட்ஜெட்டில் பிரீமியம் கார்: ரூ.50,000 முன்பணத்தில் மாருதி பலேனோ- EMI திட்டம்!
Embed widget