மேலும் அறிய

“எல்லாமே சூப்பர்தான்... ஆனால் இதை தவிர்த்திருக்கலாம்” - ஸ்டாலின் ஆட்சி குறித்து நடிகர் விஜய்

தமிழகத்தில் தற்போது நடைபெற்று வரும் ஸ்டாலின் ஆட்சி குறித்து நடிகர் விஜய் மனம் திறந்து பேசியுள்ளார்.

நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள பீஸ்ட் திரைப்படம் வருகிற 13 ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில், அதை ப்ரோமோட் செய்யும் விதமாக 10 ஆண்டுகளுக்கு பிறகு நடிகர் விஜய், சன் டிவிக்கு நேர்காணல் கொடுத்திருக்கிறார். இதில் பல விஷயங்களை பற்றி அவர் பேசியிருக்கிறார். அதில், தமிழ்நாட்டில் செயல்பட்டு வரும் துறைகளை பற்றி பேசினார்.

“அனைத்து துறைகளும் நன்றாக செயல்படுகின்றன காவல்துறை உட்பட. நன்றாக செயல்பட்டு வருகிறார்கள்.  சில சம்பவங்கள் முன்னெச்சரிக்கை இல்லாமல் நடந்து வருகின்றன. புதுக்கோட்டை சிறுவன் குண்டடி பட்டது போன்ற சம்பவங்களை தவிர்க்க, காவல்துறையினர் கூடுதல் முன்னெச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். புதுக்கோட்டை சம்பவம் நடைபெற்ற உடனேயே அந்த பயிற்சி மையம் மூடப்பட்டது வரவேற்கத்தக்கது. பொதுமக்கள் வாழும் பகுதிக்குள் துப்பாக்கி பயிற்சி மையங்கள் இருப்பதைத் தவிர்த்து, ஊருக்கு வெளியே பயிற்சி மையங்களை அமைக்க வேண்டும். கணினி வழியில் stimulator தொழில்நுட்பத்தில் துப்பாக்கிப் பயிற்சி மேற்கொள்ளலாம். முன்னெச்சரிக்கை இல்லாமல் நடக்கும் சம்பவங்களை தடுக்க என்ன வழி வகை செய்ய வேண்டும் என்பதை ஆராய வேண்டும். அதை சரி செய்தால் இன்னும் நன்றாக இருக்கும்” என்று கூறினார். விஜய்யின் இந்த பேச்சை வைத்துபார்க்கும்போது, தமிழ்நாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிறப்பாக ஆட்சி செய்து வருகிறார் என்பதையே விஜய் கூறுகிறார் என திமுகவினர் சொல்கின்றனர்.

சமீபத்தில் கூட, ஒரு திருமண நிகழ்ச்சியில் முதலமைச்சர் ஸ்டாலினும், நடிகர் விஜய்யும் சந்தித்துக் கொண்டனர். அப்போது, இருவரும் சிரித்த முகத்துடன் ஒருவரை நலம் விசாரித்துக்கொண்டனர். அதுதொடர்பான புகைப்படங்களும், வீடியோக்களும் சமூகவலைதளங்களில் வைரலாகி வந்தன.

விஜய்யின் இதற்கு முந்தைய படங்களில் ஆடியோ வெளியிட்டு விழாவில், அப்போதைய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் அதிமுக அரசை விஜய் மறைமுகமாக விமர்சித்திருந்தார். அந்த நேரத்தில் அது பேசுப்பொருளாகி அதிமுகவினரின் விமர்சனத்துக்கு விஜய் உள்ளானர்.

தற்போது,  ‘பீஸ்ட்’ ஆடியோ நிகழ்ச்சிக்கு பதிலாக, விஜய்யிடம் நேர்க்காணல் எடுக்கப்பட்டு, அதை படத்தின் புரோமோஷனுக்காக படக்குழு உபயோகித்து வருகிறது. அதில், விஜய் திமுக அரசை பாராட்டியே பேசியுள்ளதாக தெரிகிறது.

பீஸ்ட் விஜய்

நடிகர் விஜய் நடிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் வரும் ஏப்ரல் 13 ஆம் தேதி வெளியாக உள்ள பீஸ்ட் படத்தின் ட்ரெய்லர் வெளியாகியது. தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர் விஜய். ‘மாஸ்டர்’ படத்தின் வெற்றிக்கு பிறகு நடிகர் விஜய், இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் பீஸ்ட் (Beast) படத்தில் நடித்திருக்கிறார். இந்தப்படம் வருகிற ஏப்ரல் மாதம் 13-ம் தேதி வெளியாக உள்ளது.

படத்தின் ப்ரொமோஷன் வேலைகளில் ஒரு பகுதியாக, முதல் பாடல் கடந்த மாதம் 14-ம் தேதி காதலர் தினத்தை முன்னிட்டு வெளியிடப்பட்டது. சிவகார்த்திகேயன் பாடல் வரிகள் எழுதி அனிருத் இசையமைத்துள்ள அரபிக்குத்து பாடல் பல மில்லியன் பார்வையாளர்களை கடந்து ஹிட் அடித்து இருக்கிறது. அதனைத்தொடர்ந்து வெளியான போஸ்டரும் வைரலான நிலையில், விஜய் குரலில் ‘ஜாலிலோ ஜிம்கானா’ பாடலும் சமூகவலைதளங்களில் வெளியாகி வைரலானது. அதனைத்தொடர்ந்து, படத்தின் ட்ரெய்லரும் வெளியாகி ஏகோபித்த வரவேற்பை பெற்றது.
 

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூடிபில் வீடியோக்களை காண

தலைப்பு செய்திகள்

Karthigai Deepam: விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்.. அவசரம் அவசரமாக தரையிறங்கிய ரேவதி - கைகொடுத்த கார்த்திக் மாஸ்டர் ப்ளான்
Karthigai Deepam: விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்.. அவசரம் அவசரமாக தரையிறங்கிய ரேவதி - கைகொடுத்த கார்த்திக் மாஸ்டர் ப்ளான்
விஜய்யைத் தொடர்ந்து தனுஷும் அதிரடி! வெளியான மாஸ் அறிவிப்பு... ரசிகர்கள் உற்சாகம்!
விஜய்யைத் தொடர்ந்து தனுஷும் அதிரடி! வெளியான மாஸ் அறிவிப்பு... ரசிகர்கள் உற்சாகம்!
தனுஷ் மீது மீண்டும் நடவடிக்கையா? தயாரிப்பாளர் சங்கத்தில் பரபரப்பு
தனுஷ் மீது மீண்டும் நடவடிக்கையா? தயாரிப்பாளர் சங்கத்தில் பரபரப்பு
18 ஆண்டுகளுக்குப் பிறகு தனது படத்தை ப்ரோமோட் செய்யப்போகும் அஜித் !
18 ஆண்டுகளுக்குப் பிறகு தனது படத்தை ப்ரோமோட் செய்யப்போகும் அஜித் !

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: பீச்சோரம் வீட்டருகிலேயே புதிய தலைமை செயலகம் - ப்ளான் சொன்ன CM விஜய்? களமிறங்கிய அதிகாரிகள்?
பீச்சோரம் வீட்டருகிலேயே புதிய தலைமை செயலகம் - ப்ளான் சொன்ன CM விஜய்? களமிறங்கிய அதிகாரிகள்?
Nainar Nagendran: தமிழ் மொழியை விட மதம் பெரியதா? - மரிய வில்சனை வெளுத்து வாங்கிய நயினார்!
Nainar Nagendran: தமிழ் மொழியை விட மதம் பெரியதா? - மரிய வில்சனை வெளுத்து வாங்கிய நயினார்!
RBI Loan Recovery: லோன் வசூல் நடவடிக்கைகள் - கடும் கட்டுப்பாடுகளை விதித்த ஆர்பிஐ - புதிய விதிகள் என்ன?
லோன் வசூல் நடவடிக்கைகள் - கடும் கட்டுப்பாடுகளை விதித்த ஆர்பிஐ - புதிய விதிகள் என்ன?
TN Weather News: சென்னையில் இன்றும் மழை தொடருமா? எந்தெந்த மாவட்டங்களுக்கு வார்னிங்? தமிழக வானிலை அறிக்கை
சென்னையில் இன்றும் மழை தொடருமா? எந்தெந்த மாவட்டங்களுக்கு வார்னிங்? தமிழக வானிலை அறிக்கை
Toyota 7 Seater: நாட்டின் பெஸ்ட் 7 சீட்டர் - டொயோட்டா தரும் 5 பயங்கரமான அப்டேட்கள் - மைலேஜ் ஏறுமா? விலை?
நாட்டின் பெஸ்ட் 7 சீட்டர் - டொயோட்டா தரும் 5 பயங்கரமான அப்டேட்கள் - மைலேஜ் ஏறுமா? விலை?
T.T.Praveen: தமிழை மலையாளத்தில் எழுதி பேச்சு.. சட்டசபையில் கவனம் ஈர்த்த பிரவீன் யார் தெரியுமா?
T.T.Praveen: தமிழை மலையாளத்தில் எழுதி பேச்சு.. சட்டசபையில் கவனம் ஈர்த்த பிரவீன் யார் தெரியுமா?
"ஓ.பி.எஸ்.ஐ சகோதரன் போல ஜெயலலிதா பார்த்தார்.." மனம் திறந்த முன்னாள் அதிமுக எம்பி
Rasi Palan Today (11-08-2026): கடகத்துக்கு லாபம்.. கும்பத்துக்கு வெற்றி.. உங்க ராசிக்கு இன்னைக்கு நல்லது நடக்குமா?
Rasi Palan Today (11-08-2026): கடகத்துக்கு லாபம்.. கும்பத்துக்கு வெற்றி.. உங்க ராசிக்கு இன்னைக்கு நல்லது நடக்குமா?
Embed widget