மேலும் அறிய

Vijay On Instagram: ஏஞ்சலினா ஜோலிக்கு அடுத்து விஜய்தான்..! உலகத்துலே 3வது நபர் நம்ம தளபதி..! அலறும் இன்ஸ்டாகிராம்..!

இன்ஸ்டாகிராம் கணக்கு தொடங்கிய 99 நிமிடங்களில் 1 மில்லியன் ஃபாலோயர்களைக் குவித்து, உலகின் அதிவேகமாக ஒரு மில்லியன் ஃபாலோயர்களைப் பெற்ற டாப் 3 நபர்களின் பட்டியலில் விஜய் இடம்பிடித்துள்ளார்.

நடிகர் விஜய் இன்ஸ்டாகிராமின் அதிகாரப்பூர்வ கணக்கு தொடங்கி இணையத்தில் பேசுபொருளாகியுள்ளார்.

உலகின் அதிவேக பாலோயர்கள்:

இந்நிலையில், இன்ஸ்டாகிராம் கணக்கு தொடங்கிய 99 நிமிடங்களில் 1 மில்லியன் ஃபாலோயர்களைக் குவித்து உலகின் அதிவேகமாக ஒரு மில்லியன் ஃபாலோயர்களைப் பெற்ற டாப் 3 நபர்களின் பட்டியலில் இடம்பிடித்து விஜய் சாதனைப் படைத்துள்ளார்.

முன்னதாக கொரியாவின் பிரபல பாண்ட் இசைக்குழுவான பிடிஎஸ் (BTS) பாடகர் வி (V) 43 நிமிடங்களில் ஒரு மில்லியன் ஃபாலோயர்களையும், பிரபல ஹாலிவுட் நடிகை ஏஞ்சலினா ஜோலி 59 நிமிடங்களில் ஒரு மில்லியன் ஃபாலோயர்களையும் பெற்று சாதனைப் படைத்துள்ள நிலையில்,  தற்போது 99 நிமிடங்களில் அதிவேகமாக ஒரு மில்லியன் ஃபாலோயர்களைப் பெற்று விஜய் சாதனைப் படைத்துள்ளார்.

மேலும் இந்தியாவில் அதிவேகமாக ஒரு மில்லியன் ஃபாலோயர்களைக் குவித்த நபர் எனும் சாதனையையும் நடிகர் விஜய் படைத்துள்ளார். மேலும் நொடிக்கு நொடி நடிகர் விஜய்யின் இன்ஸ்டாகிராம் கணக்குக்கு ஃபாலோயர்கள் எகிறி வரும் நிலையில், அவரது முதல் பதிவும் லைக்ஸ் அள்ளி வருகிறது.

View this post on Instagram
 
A post shared by Vijay (@actorvijay)

அதிகரிக்கும் ஃபாலோயர்ஸ்:

ஹலோ நண்பா, நண்பிஸ் எனும் பதிவுடன் விஜய் கருப்பு நிற ஓவர் கோட் அணிந்த புகைப்படத்தைப் பகிர்ந்துள்ள நிலையில், விஜய்யின் இந்த முதல் பதிவு 17 லட்சத்துக்கும் மேல் லைக்ஸ் அள்ளி இன்ஸ்டாவில் ட்ரெண்டாகி வருகிறது.

இந்நிலையில், பிரபல மலையாளர் நடிகர் பிருத்விராஜ் நடிகர் விஜய்யை வெல்கம் செய்து தன் இன்ஸ்டா ஸ்டோரியில் பகிர்ந்துள்ளார்.

ஹேஷ்டேக் ட்ரெண்ட்:

மேலும் இயக்குநர்கள் அட்லி, லோகேஷ் கனகராஜ், மற்றும் நடிகர் நடிகைகள் ராஷ்மிகா மந்தானா, ரம்யா பாண்டியன், ஐஸ்வர்யா லெஷ்மி,  ஐஸ்வர்யா ராஜேஷ், அர்ஜூன் தாஸ், கவின், தொலைக்காட்சி பிரபலங்கள் டிடி, மாகாபா ஆனந்த், பாலாஜி முருகதாஸ்  உள்ளிட்ட பலரும் விஜய் கணக்கை பின் தொடந்துள்ளனர்.

லியோ கெட் அப்பில் காஷ்மீர் லியோ படப்பிடிப்பின்போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை விஜய் பகிர்ந்துள்ள நிலையில், சமூக வலைதளங்களில் #ThalapathyOnInstagram எனும் ஹாஷ்டேக் ட்ரெண்டாகி வருகிறது.

இதேபோல், 2019ஆம் ஆண்டு ஹாலிவுட்டின் பிரபல நடிகை ஜெனிஃபர் ஆனிஸ்டன் இன்ஸ்டாகிராமில் இணைந்தபோது அவருக்கு இதேபோல் ஃபாலோயர்களின் எண்ணிக்கை பெருவாரியாக அதிகரித்ததுடன் இன்ஸ்டாகிராம் ஸ்தம்பித்து அவரது கணக்கு முடங்கியது.

இந்நிலையில்,  99 நிமிடங்களில் ஒரு மில்லியன் ஃபாலோயர்களைப் பெற்ற விஜய்  24 மணி நேரத்தில் எவ்வளவு ரசிகர்களாக் குவிப்பார் என்றும் அவரது ரசிகர்கள் எதிர்பார்த்துக் காத்துள்ளனர்.

”இன்ஸ்டாகிராமத்துல வாடி வாழலாம்...” என 2014ஆம் ஆண்டு பாடிய நடிகர் விஜய், 9 ஆண்டுகள் கழித்து தற்போது இன்ஸ்டாவில் எண்ட்ரி கொடுத்துள்ளது அவரது ரசிகர்களை பெரும் உற்சாகக் கொண்டாட்டத்தில் ஆழ்த்தியுள்ளது.

தலைப்பு செய்திகள்

இது இல்லையென்றால் ரஜினி படமாக இருந்தாலும் தயாரிக்க மாட்டோம்..ஓப்பனாக பேசிய அர்ச்சனா கல்பாத்தி
இது இல்லையென்றால் ரஜினி படமாக இருந்தாலும் தயாரிக்க மாட்டோம்..ஓப்பனாக பேசிய அர்ச்சனா கல்பாத்தி
மிஸ் ஆகும் பழைய மேஜிக்...ஆல்பம் ஹிட் கொடுத்த ஜிவி பிரகாஷ் என்ன ஆனார்?
மிஸ் ஆகும் பழைய மேஜிக்...ஆல்பம் ஹிட் கொடுத்த ஜிவி பிரகாஷ் என்ன ஆனார்?
'செய்! செய்யாதே!' இசை, டிரெய்லர் வெளியீடு... சமூக விழிப்புணர்வு படத்திற்கு பிரபலங்கள் வாழ்த்து
'செய்! செய்யாதே!' இசை, டிரெய்லர் வெளியீடு... சமூக விழிப்புணர்வு படத்திற்கு பிரபலங்கள் வாழ்த்து
விஜயின் 'ஜன நாயகன்' வசூலை முந்திய ஸ்பைடர்மேன்... இந்தியாவில் ஹாலிவுட் படைத்த புதிய சாதனை!
விஜயின் 'ஜன நாயகன்' வசூலை முந்திய ஸ்பைடர்மேன்... இந்தியாவில் ஹாலிவுட் படைத்த புதிய சாதனை!

வீடியோ

CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
மாற்றம் என்றீர்கள்.? இதுதான் மாற்றமா.? வெளுத்து வாங்கிய அதிமுக- சீறிய அமைச்சர்கள்- சட்டசபையில் காரசார விவாதம்
மாற்றம் என்றீர்கள்.? இதுதான் மாற்றமா.? வெளுத்து வாங்கிய அதிமுக- சீறிய அமைச்சர்கள்- சட்டசபையில் காரசார விவாதம்
இனி பள்ளிப் பாடத்திட்டத்தில் போதைப்பொருள் விழிப்புணர்வு; அதிரடி முடிவெடுத்த அரசு!
இனி பள்ளிப் பாடத்திட்டத்தில் போதைப்பொருள் விழிப்புணர்வு; அதிரடி முடிவெடுத்த அரசு!
ABP Exclusive: காவிரி குறுக்கே தமிழகம் அணை கட்டுவதில் என்ன சிக்கல்? வீணாகும் தண்ணீரை சேமிக்க வழி என்ன? விளக்கம் தரும் சேதுராமன்
ABP Exclusive: காவிரி குறுக்கே தமிழகம் அணை கட்டுவதில் என்ன சிக்கல்? வீணாகும் தண்ணீரை சேமிக்க வழி என்ன? விளக்கம் தரும் சேதுராமன்
CM Vijay: ”கருணாநிதி மீது மறைமுக அட்டாக், பேப்பர் படிக்கணும்” - உதயநிதிக்கு சட்டப்பேரவையில் CM விஜய் பதிலடி
”கருணாநிதி மீது மறைமுக அட்டாக், பேப்பர் படிக்கணும்” - உதயநிதிக்கு சட்டப்பேரவையில் CM விஜய் பதிலடி
சியரா டச்சில் காமோ; ரூ.9.99 லட்சத்தில் டேஷ்கேம், ADAS உடன் அசத்தும் டாடா நெக்ஸான் புது எஸ்யூவி!
சியரா டச்சில் காமோ; ரூ.9.99 லட்சத்தில் டேஷ்கேம், ADAS உடன் அசத்தும் டாடா நெக்ஸான் புது எஸ்யூவி!
E3 Trion EV Scooter Variants Price: 52L இடவசதி.! மளிகை பொருள் இல்ல, கடையையே கொண்டு வரலாம்.! E3 Trion-ன் வேரியண்ட்டுகள், விலை என்ன.?
52L இடவசதி.! மளிகை பொருள் இல்ல, கடையையே கொண்டு வரலாம்.! E3 Trion-ன் வேரியண்ட்டுகள், விலை என்ன.?
அம்மாடியோவ்… கார் விலையில் கல்வி- மாருதி பிரெஸ்ஸா விலையில் ப்ரீஸ்கூல் கட்டணம்! எங்கே?
அம்மாடியோவ்… கார் விலையில் கல்வி- மாருதி பிரெஸ்ஸா விலையில் ப்ரீஸ்கூல் கட்டணம்! எங்கே?
Tata Nexon: டாப் சேல் கார்.. டாடா நெக்ஸான் வாங்க ரூ.2 லட்சம் முன்பணம்: EMI, வட்டி சேமிப்பு ரகசியம்
Tata Nexon: டாப் சேல் கார்.. டாடா நெக்ஸான் வாங்க ரூ.2 லட்சம் முன்பணம்: EMI, வட்டி சேமிப்பு ரகசியம்
Embed widget