மேலும் அறிய

Rajinikanth - Vasanth Ravi: ரகுவரனை நியாபகப்படுத்தியதாக சொன்ன ரஜினி... ஜெயிலர் மகன் வசந்த் ரவியின் ஹாப்பி மொமண்ட்ஸ்!

தரமணி படத்தைப் பார்த்து தனது நடிப்பை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பாராட்டியதாகத் தெரிவித்துள்ளார் நடிகர் வசந்த் ரவி.

தரமணி , ராக்கி முதலிய படங்களில் கதாநாயகனாக நடித்தவர் வசந்த் ரவி. வளர்ந்து வரும் நடிகர்களின் கதைகளுக்கு முக்கியத்துவம் அளித்து வரும் நடிகர்களில் வசந்த் ரவியும் ஒருவர். சினிமாவுக்கு வருகை தந்து ஆறு ஆண்டுகளை கடந்துவிட்டிருக்கும் வசந்த் ரவி, தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ஜெயிலர் படத்தில் முக்கியமான கதாபாத்திரம் ஒன்றில் நடித்திருக்கிறார்.

நெல்சனின் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் நடித்த தனது அனுபவத்தை பேட்டி ஒன்றில் பகிர்ந்துகொண்டார்.

இதனால்தான்  நடித்தேன்...

தான் நடிக்கும் படங்களின் கதையைத் தேர்வு செய்வதில் அதிக கவனம் செலுத்திவரும் வசந்த், ஜெயிலர் படத்தில் நடிக்க நினைத்ததற்கு இதுதான் காரணம் என்று கூறியிருக்கிறார்.

“நான் ஜெயிலர் படத்தில் நடிக்க சம்மதம் தெரிவித்த காரணம், முதலில் அது நெல்சன் இயக்கும் படம். இரண்டாவது ரஜினிகாந்த் நடிக்கும் படம். என்னுடைய கதாபாத்திரம் எவ்வளவு சின்னதாக இருந்தாலும் அதைப் பற்றி நான் கவலைப்படவில்லை. ரஜினிகாந்தின் அருகில் இருந்து அவரது அனுபவத்தைப் பார்த்து தெரிந்துகொள்வதே எனக்கு மிகப்பெரிய படிப்பினையாக இருக்கும் என்று நான் கருதினேன்.அதனால் இந்தப் படத்தில் நான் நடிக்க சம்மதித்தேன்” என்றார்

தரமணி பார்த்து பாராட்டிய ரஜினிகாந்த்

Rajinikanth - Vasanth Ravi: ரகுவரனை நியாபகப்படுத்தியதாக சொன்ன ரஜினி... ஜெயிலர் மகன் வசந்த் ரவியின் ஹாப்பி மொமண்ட்ஸ்!

தரமணி படத்தின் மூலமாக கதாநாயகனாக அறிமுகமான வசந்த் ரவிக்கு  தனது நடிப்பிற்கான மிகப்பெரிய பாராட்டு ரஜினியிடம் கிடைத்திருக்கிறது. தரமணி படத்தை பார்த்த ரஜினி தனக்கு ஃபோன் செய்து வசந்த் சிற்பாக நடித்திருந்ததாகவும், மேலும் பல இடங்களில் ரகுவரனை நினைவுபடுத்தியதாகவும் கூறியிருக்கிறார் ரஜினி. திரைப்படங்களில் ரஜினிக்கு  சவால் விடும் வில்லன் கதாபாத்திரங்களில் நடித்தவர் நடிகர் ரகுவரன் அப்படியான ஒரு நடிகரை தன்னுடன் ஒப்பிட்டு பேசியது குறித்து தனது மகிழ்ச்சியைத் தெரிவித்துள்ளார் நடிகர் வசந்த் ரவி.

‘கமல்ஹாசன் எனர்ஜி உங்ககிட்ட இருக்கு’

மேலும் தரமணி படம் வெளியாகி நான்கு ஆண்டுகள் கழித்து வெளியான ராக்கி படத்தைப் பார்த்த ரஜினி அவரை மீண்டும் அழைத்து இந்த முறை என்ன சொல்லியிருக்கிறார் தெரியுமா? முன்பு ரகுவரன் என்றால் இந்த முறை ரகுவரனின் சாயல் மற்றும் கமல்ஹாசனின் என்ர்ஜி வசந்திடம் இருந்ததாக கூறியுள்ளார் ரஜினி. ரஜினியிடம் வந்த இந்த இரு பாராட்டுக்களும் தனது வாழ்க்கையில் மிக முக்கியமானத் தருணங்கள் என்று கூறியுள்ளார் வசந்த் ரவி.

ஜெயிலர்

சூப்பர்ஸ்டார் ரஜினி நடித்து நெல்சன் திலீப்குமார் இயக்கியிருக்கும் ஜெயிலர் திரைப்படம் வரும் ஆக்ஸ்ட் 10ஆம் தேதி வெளியாக இருக்கிறது. வசந்த் ரவி தமன்னா, ரம்யா கிருஷ்ணன், ஜாக்கி ஷ்ராஃப், விநாயகன், யோகிபாபு, ஷிவ ராஜ்குமார் உள்ளிட்டோர் இந்தப் படத்தில் நடித்துள்ளார்கள். ராக்ஸ்டார் அனிருத் இசையமைத்திருக்கிறார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது.

He covers Tamil cinema, film and OTT reviews, entertainment news, and key developments across the film industry for ABP Nadu. He explores film criticism, storytelling, performances, and the evolving landscape of cinema and streaming platforms. He has produced and conducted interviews with film-industry personalities, including director Thiyagarajan Kumararaja and playback singer Chinmayi. Beyond journalism, he pursues his passion for writing, filmmaking, and creative storytelling. He also co-authored the Tamil non-fiction book Noruṅgum Puvi Arangal (Breaking Planetary Boundaries).

Read More

தலைப்பு செய்திகள்

Jailer 2: ரஜினியின் ஜெயிலர் 2 படத்தில் பிரபல நடிகரின் காட்சிகள் திடீர் நீக்கம்! என்ன காரணம்?
Jailer 2: ரஜினியின் ஜெயிலர் 2 படத்தில் பிரபல நடிகரின் காட்சிகள் திடீர் நீக்கம்! என்ன காரணம்?
விஜய் நல்லது பண்ணாரு.. புகழ்ந்தது ஒரு தப்பா.. தற்குறிகள்ன்னு திட்டுறாங்க.. அனிதா குப்புசாமி வேதனை!
விஜய் நல்லது பண்ணாரு.. புகழ்ந்தது ஒரு தப்பா.. தற்குறிகள்ன்னு திட்டுறாங்க.. அனிதா குப்புசாமி வேதனை!
Karthigai Deepam: கடத்தப்பட்ட சதீஷ்... தேடிவந்த கார்த்திக்.. ஷாக்கான மாயா! கார்த்திகை தீபத்தில் இன்று
Karthigai Deepam: கடத்தப்பட்ட சதீஷ்... தேடிவந்த கார்த்திக்.. ஷாக்கான மாயா! கார்த்திகை தீபத்தில் இன்று
பார்ட் 2 என்றாலே சரக்கு தீர்ந்துப்போச்சுனு சொல்லுவாங்க..ஜெயிலர் 2 படம் ஏன்..விளக்கம் கொடுத்த ரஜினி
பார்ட் 2 என்றாலே சரக்கு தீர்ந்துப்போச்சுனு சொல்லுவாங்க..ஜெயிலர் 2 படம் ஏன்..விளக்கம் கொடுத்த ரஜினி

வீடியோ

Samantha ZOY Launch: பெண்கள் ஆரோக்கியத்தில் புதிய புரட்சி! நடிகை சமந்தாவின் ZOY லான்ச்
Navanethem pillay : மண்டேலாவுக்காக வாதாடிய தமிழச்சி! ஈழத்தமிழர்களுக்காக குரல் அமைதிக்கான நோபல் பரிசு யார் இந்த நவநீதம் பிள்ளை?
Elon musk Rahul Gandhi : ”நிஜ பாஸ் யார்?இன்னொருத்தர் இருக்காரு”கொளுத்தி போட்ட மஸ்க்-ராகுல்
Thoothukudi Police Issue :
Elon musk on Ambani : இந்தியாவின் BOSS அம்பானியா? மோடி மீது எலான் மஸ்க் அட்டாக்! ஸ்டார்லிங்க்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Rice Price: எகிறும் அரிசி விலை.. வியாபாரிகளின் பதுக்கல்தான் காரணமா? உடனடி ஆக்ஷனில் இறங்குவாரா விஜய்?
Rice Price: எகிறும் அரிசி விலை.. வியாபாரிகளின் பதுக்கல்தான் காரணமா? உடனடி ஆக்ஷனில் இறங்குவாரா விஜய்?
DMK: நிதி கொடுக்காத மோடி.. இன்று போட்டோவுக்கு போஸ்.. விஜய்யை சாடிய ராஜீவ் காந்தி!
DMK: நிதி கொடுக்காத மோடி.. இன்று போட்டோவுக்கு போஸ்.. விஜய்யை சாடிய ராஜீவ் காந்தி!
VS Babu Health Condition: வி.எஸ்.பாபுவின் தற்போதைய நிலை என்ன? சொல்லுங்க.. தமிழக அரசுக்கு அதிமுக கேள்வி!
VS Babu Health Condition: வி.எஸ்.பாபுவின் தற்போதைய நிலை என்ன? சொல்லுங்க.. தமிழக அரசுக்கு அதிமுக கேள்வி!
தமிழ்நாடு நெக்ஸ்ட் லெவல்! ரூ.13,000 கோடியில் திட்டங்கள், வேலைவாய்ப்பு.. முதல்வர் விஜய் குறித்து பிரதமர் மோடி பேசியது என்ன? முழு விவரம்
தமிழ்நாடு நெக்ஸ்ட் லெவல்! ரூ.13,000 கோடியில் திட்டங்கள், வேலைவாய்ப்பு.. முதல்வர் விஜய் குறித்து பிரதமர் மோடி பேசியது என்ன? முழு விவரம்
IND vs WI: 224 ரன்கள் டார்கெட்.. அபிஷேக், இஷான் அபாரம்! இந்த முறையும் எட்டிப்பிடிக்குமா வெஸ்ட் இண்டீஸ்?
IND vs WI: 224 ரன்கள் டார்கெட்.. அபிஷேக், இஷான் அபாரம்! இந்த முறையும் எட்டிப்பிடிக்குமா வெஸ்ட் இண்டீஸ்?
ரூ.10 லட்சத்துக்கு கீழ் கார் வாங்க மக்கள் தயக்கம் ஏன்? 6 ஆண்டு டேட்டா சொல்லும் ஆச்சரிய தகவல்!
ரூ.10 லட்சத்துக்கு கீழ் கார் வாங்க மக்கள் தயக்கம் ஏன்? 6 ஆண்டு டேட்டா சொல்லும் ஆச்சரிய தகவல்!
CM Vijay: மேடையிலேயே முதல்வர் விஜய் வைத்த அதிரடி கோரிக்கை.. மோடியின் ரியாக்ஷன்.. அதிர்ந்த அரங்கம்
CM Vijay: மேடையிலேயே முதல்வர் விஜய் வைத்த அதிரடி கோரிக்கை.. மோடியின் ரியாக்ஷன்.. அதிர்ந்த அரங்கம்
"பெண்கள் நின்றால் பஸ் நிக்காதா?" - மகளிர் இலவச பேருந்தின் கொடூர முகம்! கொந்தளிக்கும் மக்கள்
Embed widget