மேலும் அறிய

Actor Vadivelu birthday: போட்றா வெடிய...வெட்றா கேக்க...இணையத்தை கலக்கும் வடிவேலுவின் புகைப்படம்..!

புகைப்படத்தில் வடிவேலு தனக்கே உரிய பாணியில் சூப்பரான பாடி லேங்கஜ்ல போஸ் கொடுத்துள்ளார்.

தனது பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடிய நடிகர் வடிவேலுவின் புகைப்படம் சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.

நகைச்சுவை நடிகர் வைகைப்புயல் வடிவேலு இன்று தனது 61ஆவது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு திரையுலகினர், ரசிகர்கள் உள்பட பலரும் தங்களின் வாழ்த்துகளை தெரிவித்தனர். வடிவேலுவின் மீம்ஸ்களை சமூகவலைதளங்களில் தெறிக்கவிட்டு நெட்டிசன்கள் வடிவேலுவை கொண்டாடி தீர்த்தனர்.  #HBDVadivelu என்ற ஹேஷ்டேக் டுவிட்டர் ட்ரெண்டிங்கில் உள்ளது. இந்த நிலையில், வடிவேலு தனது பிறந்தநாளை இயக்குநர் சுராஜ் உடன் கேக் வெட்டி கொண்டாடினார். அது தொடர்பான புகைப்படம் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அந்தப் புகைப்படம் தற்போது இணையத்தை கலக்கிக்கொண்டிருக்கிறது. அந்தப் புகைப்படத்தில் வடிவேலு தனக்கே உரிய பாணியில் சூப்பரான பாடி லேங்கஜ்ல போஸ் கொடுத்துள்ளார்.

 

கடந்தாண்டு 10 ஆண்டுகளுக்கு மேலாக பல பிரச்னைகளால், சினிமாவில் சரியாக தோன்றாத இருந்த வடிவேலுவின் அனைத்து பிரச்னைகளும் சமீபத்தில் தீர்த்து வைக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, மீண்டும் ‘நாய்சேகர்’ படத்தின் மூலம் ரீ எண்ட்ரி கொடுக்க உள்ளார் வடிவேலு. இந்தப்படத்தை சுராஜ் இயக்குகிறார். லைக்கா நிறுவனம் தயாரிக்க உள்ளது.

இந்த படத்தின் அறிவிப்பு நிகழ்ச்சி சென்னையில் சமீபத்தில் நடைபெற்றது. இதில் நடிகர் வடிவேலு கலந்து கொண்டு பேசினார்.  அப்போது மிகவும் உருக்கமாக பேசினார். குறிப்பாக தான் பலரையும் சிரிக்க வைத்தாலும், பெரிய மன வருத்தத்தில் இருந்ததாகவும் அதற்கு ஒரு குட்டிக்கதையையும் அவர் கூறினார். 

''ஒரு நோயாளி டாக்டரிம் போய் ஐயா, எனக்கு மனசே சரியில்லை. தூக்கம் இல்லை. எனக்கு எதாவது ஒரு மருத்துவம் பண்ணுங்கனு கேட்டு இருக்கார். அதுக்கு அந்த டாக்டர், இன்று சனிக்கிழமை, நாளை ஞாயிற்றுக்கிழமை, நீங்கள் திங்கள்கிழமை வாங்க. நான்  மருத்துவம் பார்க்கிறேன் என தெரிவித்துள்ளார். அதற்கு அந்த நோயாளி, இல்லைங்க எனக்கு இப்போதுதான் ரெஸ்ட், உண்மையிலேயே எனக்கு மனசு சரி இல்லை. நிம்மதி இல்லை. மருத்துவம் தாங்க என்றார். அதற்கு பதிலளித்த டாக்டர், அப்படியென்றால் ஒன்று செய்யுங்க, பக்கத்துல ஒரு சர்க்கஸ் நடக்குது. அங்கே ஒரு பஃபூன் பிரமாதமாக காமெடி பண்றார். அந்த சர்க்கஸ நாம் பார்ப்போம். அந்த காமெடியை பார்த்த உங்க மனசுல உள்ள பாரமெல்லாம் இறங்கிடும். அதற்கு பின் எளிதாக மருத்துவம் பார்க்கலாம் என்றுள்ளார். அதனைக் கேட்டுக்கொண்டிருந்த நோயாளி கூறியுள்ளார், அந்த பஃபூனே நான் தான் என்றுள்ளார். அந்த வாழ்க்கையைத் தான் நான் வாழ்ந்தேன் என்றார்''

இயக்குனர் ஷங்கர் படங்களில் நடிப்பீர்களா என்ற கேள்விக்கு, “ஷங்கர் படத்தில் இனி நடிக்க மாட்டேன். இனி அந்த பக்கம் தலைவைத்து கூட படுக்க மாட்டேன்” என்று தெரிவித்துள்ளார். மேலும், திரைத்துறையில் மீண்டும் நடிக்க இருப்பது குறித்தும் அவர் பேசினார்.

 

 

 

தலைப்பு செய்திகள்

ரூ.500 கோடி பட்ஜெட்.. இன்னும் விற்கப்படாத டாக்சிக் ஓடிடி உரிமைகள்? யாஷ் படத்திற்கு புதிய சிக்கல்!
ரூ.500 கோடி பட்ஜெட்.. இன்னும் விற்கப்படாத டாக்சிக் ஓடிடி உரிமைகள்? யாஷ் படத்திற்கு புதிய சிக்கல்!
அஜித்துடன் இணையும் ஷங்கர்? அடுத்த படத்திற்கு இப்படியொரு திட்டம்!
அஜித்துடன் இணையும் ஷங்கர்? அடுத்த படத்திற்கு இப்படியொரு திட்டம்!
டாக்சிக் பட விழாவில் கலந்துகொண்ட நயன்தாரா..மீண்டும் தொடரும் விமர்சனங்கள்
டாக்சிக் பட விழாவில் கலந்துகொண்ட நயன்தாரா..மீண்டும் தொடரும் விமர்சனங்கள்
"என்னைப் பத்தி கிசுகிசு வந்துடும்னு பயம்.." மனம் திறந்த ஜமீன்கோட்டை ஹீரோயின்! ஞாபகம் இருக்கா?

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ADMK to TVK: எந்த பதவியும் இன்னும் கொடுக்கலையே.!! ஏண்டா இங்க வந்தோம்.? தவெகவில் தவிக்கும் அதிமுக மாஜிக்கள்.?
எந்த பதவியும் இன்னும் கொடுக்கலையே.!! ஏண்டா இங்க வந்தோம்.? தவெகவில் தவிக்கும் அதிமுக மாஜிக்கள்.?
விவசாயிகளுக்கு சட்டசபையில் ஜாக்பாட்.! நெல், கரும்புக்கு ஊக்கத்தொகை உயர்வு- முதலமைச்சர் விஜய் அறிவிப்பு
விவசாயிகளுக்கு சட்டசபையில் ஜாக்பாட்.! நெல், கரும்புக்கு ஊக்கத்தொகை உயர்வு- முதலமைச்சர் விஜய் அறிவிப்பு
TN Assembly Debate : ’மாண்புமிகு சாமி அமைச்சர் என்ற பன்னீர்செல்வம்’ குலுங்கி, குலுங்கி சிரித்த முதல்வர் விஜய்..!
’சாமி அமைச்சர் என்ற பன்னீர்செல்வம்’ குலுங்கி சிரித்த முதல்வர் விஜய்..!
பிரதமர் ரிசர்ச் ஃபெல்லோஷிப்: கோடிக்கணக்கில் மானியம், தகுதி, முன் அனுபவம்- விண்ணப்பிப்பது எப்படி?
பிரதமர் ரிசர்ச் ஃபெல்லோஷிப்: கோடிக்கணக்கில் மானியம், தகுதி, முன் அனுபவம்- விண்ணப்பிப்பது எப்படி?
TN Assembly : 'யார் ஆட்சியில் அதிக டென்ஷன்?' பேரவையில் MRK பன்னீர்செல்வம் – அமைச்சர் ஆனந்த் இடையே ஜாலியான விவாதம்..!
யார் ஆட்சியில் அதிக டென்ஷன்? பேரவையில் ஜாலியான விவாதம்..!
'தமிழ் என்றால் கெத்து, தமிழ் என்றால் POWER' சட்டப்பேரவையில் முதல்வர் விஜய் கர்ஜனை
'தமிழ் என்றால் கெத்து, தமிழ் என்றால் POWER' சட்டப்பேரவையில் முதல்வர் விஜய் கர்ஜனை
இது தான் மாற்றமா.? லஞ்சம் வாங்கிய கணவனை நீக்கிட்டு மனைவிக்கு பொறுப்பு.! TVK- வை கிண்டல் செய்யும் நெட்டிசன்கள்
இது தான் மாற்றமா.? லஞ்சம் வாங்கிய கணவனை நீக்கிட்டு மனைவிக்கு பொறுப்பு.! TVK- வை கிண்டல் செய்யும் நெட்டிசன்கள்
FCRA Bill: உங்க சந்தோஷம் தான் முக்கியம்..! DMK-விற்காக FCRA மசோதாவை தாமதப்படுத்த BJP முடிவு? காரணம் என்ன?
உங்க சந்தோஷம் தான் முக்கியம்..! DMK-விற்காக FCRA மசோதாவை தாமதப்படுத்த BJP முடிவு? காரணம் என்ன?
Embed widget