மேலும் அறிய

Udhayanidhi Stalin: தேவர்மகன் குறித்த மாரிசெல்வராஜ் விமர்சனம்; உதயநிதி ஸ்டாலின் சொன்னது என்ன தெரியுமா..?

தேவர் மகன் திரைப்படமும், மாமன்னன் திரைப்படமும் வெவ்வேறு கதைக்களங்களை கொண்டது என நடிகர் உதயநிதி ஸ்டாலின் விளக்கம் அளித்துள்ளார்.

‘மாமன்னன்’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில், தேவர் மகன் படம் குறித்து இயக்குநர் மாரி செல்வராஜ் பேசியது, சமூக வலைத்தளங்களில் விவாதமாக மாறியுள்ள நிலையில், இது தொடர்பாக அமைச்சரும், நடிகருமான உதயநிதி ஸ்டாலின் பேட்டி ஒன்றில் விளக்கம் அளித்துள்ளார். 

மாரி செல்வராஜ் சர்ச்சை பேச்சு:

பரியேறும் பெருமாள், கர்ணன் ஆகிய திரைப்படங்களை இயக்கிய மாரி செல்வராஜ் ‘மாமன்னன்’ திரைப்படத்தை இயக்கி உள்ளார். படத்தில் உதயநிதி ஸ்டாலின் கதாநாயகனாகவும், கீர்த்தி சுரேஷ் கதாநாயகியாகவும் நடித்துள்ளனர். இப்படத்தில் நடிகர் பகத் பாசில், நடிகர் வடிவேலு ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.  இப்படத்தை ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. கடந்த 1ம் தேதி மாமன்னன் படத்தின் இசை வெளியீட்டு விழா மிகப் பிரம்மாண்டமாக நடைபெற்றது. 

இந்த நிகழ்ச்சியில் பேசிய மாரி செல்வராஜ் மாமன்னன்’ படம் உருவாவதற்கு  காரணம் ‘தேவர் மகன்’ படம்தான். அந்த படத்தை பார்த்தபோது எனக்கு நிறைய வலி, மனப்பிறழ்வு, பாசிட்டிவ் , நெகட்டிவ் என அனைத்து உணர்வுகளுமே ஏற்பட்டன. படம் பார்த்த பின்னர் அந்த நாளை என்னால் கடந்து போகமுடியவில்லை. இந்த படத்தை  எப்படி  புரிந்துகொள்வது என்பதே எனக்கு தெரியவில்லை. தேவர் மகன் படத்தில் வடிவேலு நடித்த அந்த இசக்கி கதாபாத்திரம் தான் ‘மாமன்னன்’. அந்த இசக்கி மாமன்னனாக மாறினால் எப்படி இருக்கும் என்பதுதான் இந்தப் படம்” இவ்வாறு மாரி செல்வராஜ் பேசியிருந்தார்.

எந்த தொடர்பும் இல்லை:

நடிகர் கமல்ஹாசன் முன்னிலையில் இயக்குநர் மாரி செல்வராஜ் இவ்வாறு பேசியது சமூக வலைதளத்தில் பெரும் விவாதத்திற்குள்ளாகி உள்ளது.  இந்த நிலையில் மாமன்னன் திரைப்படம் குறித்து நடிகர் உதயநிதி ஸ்டாலின் நேர்காணல் ஒன்றை அளித்துள்ளார். அதில் அவர் பேசியதாவது: ”தேவர் மகன் திரைப்படம்  20 வருடங்களுக்கு முன் வந்த திரைப்படம். அதை பார்த்த பின்பு மாரி செல்வராஜ் அப்போதே கமலஹாசனுக்கு கடிதம் ஒன்றை எழுதியிருந்தார். அதனை ஏன் இப்போது பேச வேண்டும். அதனை கடந்துவிடுவது நல்லது. மாமன்னன் படத்திற்கும் , தேவர் மகன் படத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை.

தேவர் மகன் படத்தில் நடித்த இசக்கி என்ற கதாபாத்திரம் தற்போது இருந்தால் எப்படி இருக்கும் என்பது தான் மாமன்னன் படத்தின் கதை. இரண்டு படமும் வெவ்வேறு கதைக்களங்கள் கொண்டவை. தேவர் மகன் படம் சாதி பெருமை பேசும் படம் அல்ல. அது ஒரு பங்காளி சண்டையை விவரிக்கும் படம். மாமன்னன் படத்தில் சாதிக்கு எதிரான சமூக நீதியை வலியுறுத்தும் கருத்து பேசியுள்ளோம். சாதி பெருமை இருக்க கூடாது என பேசியுள்ளோம், அனைவரும் சமம் என்று பேசி உள்ளோம்” என உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க 

Abpnadu டெலிகிராமில் இணைய: https://t.me/abpnaduofficial

 

தலைப்பு செய்திகள்

AK 64 Title: அஜித்தின் புதிய அவதாரம்... ஏகே 64 படத்தின் டைட்டில் டேர்டெவில் - இன்னொரு மங்காத்தாவா?
AK 64 Title: அஜித்தின் புதிய அவதாரம்... ஏகே 64 படத்தின் டைட்டில் டேர்டெவில் - இன்னொரு மங்காத்தாவா?
பிறந்தநாளை ஏன் கொண்டாடவில்லை? மனம் திறந்த சூர்யா...
பிறந்தநாளை ஏன் கொண்டாடவில்லை? மனம் திறந்த சூர்யா...
'விஸ்வநாத் & சன்ஸ்' படத்தில் தமிழ் டப்பிங் பேசிய மமிதா... மேடையில் சூர்யா பகிர்ந்த தகவல்
'விஸ்வநாத் & சன்ஸ்' படத்தில் தமிழ் டப்பிங் பேசிய மமிதா... மேடையில் சூர்யா பகிர்ந்த தகவல்
5,000 பேரின் ரத்ததானம் முதல் 40,000 பேருக்கான நலத்திட்ட உதவி வரை... ரசிகர்களை பாராட்டிய சூர்யா
5,000 பேரின் ரத்ததானம் முதல் 40,000 பேருக்கான நலத்திட்ட உதவி வரை... ரசிகர்களை பாராட்டிய சூர்யா

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
நடிகை பற்றி உதயநிதி சர்ச்சை பேச்சு.. நடவடிக்கை எடுங்க.. தேசிய மகளிர் ஆணையத்தில் தவெக புகார்!
நடிகை பற்றி உதயநிதி சர்ச்சை பேச்சு.. நடவடிக்கை எடுங்க.. தேசிய மகளிர் ஆணையத்தில் தவெக புகார்!
Kanimozhi: அருவருப்பான பேச்சு, மருமகனை கண்டிப்பாரா? கனிமொழி வாய் திறக்காதது ஏன்? - TVKவினர் சரமாரி கேள்வி
அருவருப்பான பேச்சு, மருமகனை கண்டிப்பாரா? கனிமொழி வாய் திறக்காதது ஏன்? - TVKவினர் சரமாரி கேள்வி
Donald Trump: ட்ரம்பே ஷாக்..! கூடுதல் வரிக்கு எதிராக அமெரிக்காவின் 25 மாநிலங்கள் போட்ட வழக்கு - இந்தியா ஹாப்பி..!
ட்ரம்பே ஷாக்..! கூடுதல் வரிக்கு எதிராக அமெரிக்காவின் 25 மாநிலங்கள் போட்ட வழக்கு - இந்தியா ஹாப்பி..!
முதல்வர் பற்றி சர்ச்சை பேச்சு.. அவை அடக்கம் இல்லாத ஆபாசநிதி.. உதயநிதியை வெளுத்து வாங்கிய ஆனந்த்!
முதல்வர் பற்றி சர்ச்சை பேச்சு.. அவை அடக்கம் இல்லாத ஆபாசநிதி.. உதயநிதியை வெளுத்து வாங்கிய ஆனந்த்!
TN Weather News: 7 மாவட்டங்களுக்கு இடி, மின்னலுடன் மழை எச்சரிக்கை - சென்னை? தமிழக வானிலை அறிக்கை
7 மாவட்டங்களுக்கு இடி, மின்னலுடன் மழை எச்சரிக்கை - சென்னை? தமிழக வானிலை அறிக்கை
Actor Dhanush : ’பாஜகவில் இணையும் நடிகர் தனுஷ்?’ அறிவிப்பு எப்போது?
’பாஜகவில் இணையும் நடிகர் தனுஷ்?’ அறிவிப்பு எப்போது?
Bankipur Bypoll: பீகாரில் பாஜவின் கோட்டையில் ஓட்டையை போட்ட பிரசாந்த் கிஷோர்; வெற்றி பெற்றது எப்படி தெரியுமா.?
பீகாரில் பாஜவின் கோட்டையில் ஓட்டையை போட்ட பிரசாந்த் கிஷோர்; வெற்றி பெற்றது எப்படி தெரியுமா.?
டெல்லியை தொடர்ந்து ஜார்க்கண்ட்.. 6 நாட்களாக மாணவர்கள் உண்ணாவிரத போராட்டம்- கோரிக்கைகள் என்ன?
டெல்லியை தொடர்ந்து ஜார்க்கண்ட்.. 6 நாட்களாக மாணவர்கள் உண்ணாவிரத போராட்டம்- கோரிக்கைகள் என்ன?
Embed widget