மேலும் அறிய

JaiBhim Surya : புதுப்புது ஸ்டில்ஸ்.. சூர்யாவுடன் முன்னாள் நீதிபதி.. வைரலாகும் ஜெய்பீம்!

சூர்யாவுடன் ஓய்வுபெற்ற நீதிபது சந்துரு உடனிருக்கும் புகைப்படமும் வைரலாகி வருகிறது.

தா.சே.ஞானவேல் இயக்கத்தில் சூர்யா தயாரித்து நடித்து வரும் அவரது 39வது படத்துக்கு ‘ஜெய் பீம்’ என பெயரிடப்பட்டுள்ளது. படத்தின் டைட்டில் வெளியான சில நிமிடங்களிலேயே வைரலாகி பெரிய அளவிலான வரவேற்பைப் பெற்றுள்ளது. சூர்யா இந்தப் படத்தில் வழக்கறிஞராக நடிக்கிறார் என்பது படத்தின் பர்ஸ்ட் லுக்கின் வழி தெரியவந்துள்ளது. மேலும் ’ஜெய் பீம்’ என்றால் என்ன? அந்த டைட்டிலுக்கும் சூர்யாவின் கதாப்பாத்திரத்துக்கும் என்ன தொடர்பு என்று கூகுளில் அவர் ரசிகர்கள் பலர் தேடினர். இந்தப்படத்தின் தலைப்பு வைரலாகியுள்ள நிலையில் படம் மீதான எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.

இந்நிலையில் ஜெய்பீம் படம் தொடர்பான புகைப்படங்கள் சில வெளியாகியுள்ளன. அதில் சூர்யா அச்சு அசலாக வழக்கறிஞர் போலவே மாறியுள்ளார். வித்தியாசமான ஹேர்ஸைல், கண்ணாடி என சூர்யா வேர கெட்டப்பில் உள்ளார். மேலும் நாயகி ரஜிஷா விஜயன் புகைப்படமும் வெளியாகியுள்ளது. சூர்யாவுடன் ஓய்வுபெற்ற நீதிபது சந்துரு உடனிருக்கும் புகைப்படமும் வைரலாகிவருகிறது.

JaiBhim Surya : புதுப்புது ஸ்டில்ஸ்.. சூர்யாவுடன் முன்னாள் நீதிபதி.. வைரலாகும் ஜெய்பீம்!

ஓய்வுபெற்ற மெட்ராஸ் உயர்நீதிமன்ற நீதிபதி சந்துரு ஒரு பழங்குடிப் பெண்ணுக்காக (அவர் வழக்கறிஞராக இருந்தபோது) போராடிய வழக்கை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்படுகிறது ஜெய் பீப் திரைப்படம். இந்தப் படம் பழங்குடிப் பெண்ணுக்கு போலீசாரால்  செய்யப்பட்ட அநீதி மற்றும் சந்திருவின் சட்டப் போர் ஆகியவற்றை குறித்து பேசும் எனக் கூறப்படுகிறது.

பொதுவில் ’ஜெய் பீம்’ என்கிற சொல் பாபாசாகேப் அம்பேத்கரை பின்பற்றுபவர்கள் பயன்படுத்தும் சொல்லாடல். பீம் என்றால் அம்பேத்கரைக் குறிப்பது. ஜெய் என்றால் இந்தியில் வெற்றி என்று பொருள். ஜெய் பீம் என்றால் அம்பேத்கருக்கு வெற்றி என்பது பொருள். 1936ல் அம்பேத்கரின் பிறந்தநாள் சமயத்தில் மும்பை சால் பகுதியில் அவரது ஆதரவாளர் ஒருவர் அவருக்கு வாழ்த்து தெரிவிப்பதற்காக ஜெய்பீம் எனச் சொன்னதாகவும். பிறகு பெரும்பான்மையான மக்கள் அந்தச் சொல்லை உபயோகிக்கத் தொடங்கிவிட்டதாகவும் கூறப்படுகிறது. 

1 ஜனவரி 1818ல் கோரேகான் போர் சமயத்தில் பீமா நதியைக் கடந்த வீரர்கள் ஜெய்பீம் என முழங்கிச் சென்றதாலும் இந்த பெயர் உருவானதாக கூறப்படுகிறது. அம்பேத்கர் ஒவ்வொரு வருடமும் கோரேகான் பகுதிக்குச் சென்று போர் நடந்த இடத்தில் அஞ்சலி செலுத்தி வந்தார். இந்திய வழக்கறிஞர், அரசியல்வாதி, பொருளாதார வல்லுநர், பெண்ணியவாதி, கல்வியாளர், ஒடுக்கப்பட்ட மக்களுக்கான ஒற்றைக்குரலாக ஒலித்தவர் பாபாசாகேப் அம்பேத்கர். மிக முக்கியமாக இந்திய அரசியல் சாசனத்தை வடிவமைத்தவர்களில் முதன்மையானவர். தற்போது அவரது பெயரையொட்டிதான் சூர்யாவின் 39-வது படத்துக்கும் டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. 

காட்சி ஊடகத்துறையில் 7 ஆண்டுகளுக்கு மேலாக அனுபவம் கொண்டவர். சோஷியல் மீடியா இன்சார்ஜ், டிக்கர் இன்சார்ஜ், கன்டண்ட் ரைட்டர், கன்டண்ட் இன் சார்ஜ் என பல்வேறு பிரிவுகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர் / பணியாற்றி வருபவர். அனைத்து பிரிவு செய்திகளையும் திறம்பட கையாளக் கூடிய நபர். குறிப்பாக சினிமா ரிவியூ, டெக்னாலஜி, ஆட்டோமொபைல் பிரிவுகளை அதிகம் பின்பற்றி எழுதுபவர். தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் கதை, கவிதை, கட்டுரை என தொடர்ந்து எழுதி வருபவர்.
Read More

தலைப்பு செய்திகள்

சூர்யாவின் விஸ்வநாத் & சன்ஸ்' திரைப்படத்தின் கதை இதுவா!
சூர்யாவின் விஸ்வநாத் & சன்ஸ்' திரைப்படத்தின் கதை இதுவா!
திரையரங்கிலும் ஓடிடியிலும் நாளை வெளியாகும் முக்கிய படங்கள், வெப் சீரிஸ்கள்
திரையரங்கிலும் ஓடிடியிலும் நாளை வெளியாகும் முக்கிய படங்கள், வெப் சீரிஸ்கள்
'துரந்தர்' உலக சாதனை... இந்த ஆண்டில் நெட்ஃப்ளிக்ஸில் அதிகம் பார்க்கப்பட்ட Non-English திரைப்படம்!
'துரந்தர்' உலக சாதனை... இந்த ஆண்டில் நெட்ஃப்ளிக்ஸில் அதிகம் பார்க்கப்பட்ட Non-English திரைப்படம்!
"கருத்து சுதந்திரத்திற்கு எல்லை உண்டு" – உதயநிதி கைது விவகாரத்தில் நடிகர் விஷால் கருத்து

வீடியோ

CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DMK vs TVK: தவெக வெள்ளை அறிக்கை VS தவெக பட்ஜெட்! கம்பேர் செய்த திமுக - பரபரப்பு அறிக்கை
DMK vs TVK: தவெக வெள்ளை அறிக்கை VS தவெக பட்ஜெட்! கம்பேர் செய்த திமுக - பரபரப்பு அறிக்கை
CM Joseph Vijay: திமுக, அதிமுக MPக்களுக்கு முதல்வர் விஜய் திடீர் அழைப்பு.. என்ன காரணம்?
CM Joseph Vijay: திமுக, அதிமுக MPக்களுக்கு முதல்வர் விஜய் திடீர் அழைப்பு.. என்ன காரணம்?
Maruti Car Offers: ரூபாய் 1.55 லட்சம் தள்ளுபடி.. ஆடி மாத ஆஃபரை அள்ளித்தெளித்த மாருதி சுசுகி - எந்தெந்த காருக்கு?
Maruti Car Offers: ரூபாய் 1.55 லட்சம் தள்ளுபடி.. ஆடி மாத ஆஃபரை அள்ளித்தெளித்த மாருதி சுசுகி - எந்தெந்த காருக்கு?
முதல் பட்ஜெட்டிலேயே பெரும் ஏமாற்றம்... கரும்பு விவசாயிகள் சங்க செயலாளர் வேதனை
முதல் பட்ஜெட்டிலேயே பெரும் ஏமாற்றம்... கரும்பு விவசாயிகள் சங்க செயலாளர் வேதனை
அறிமுகமாகியது டாடாவின் Nexon Camo Edition கார்! இத்தனை வசதிகளா? என்ன விலையா?
அறிமுகமாகியது டாடாவின் Nexon Camo Edition கார்! இத்தனை வசதிகளா? என்ன விலையா?
Sekar Babu: ஓரங்கட்டப்படுகிறாரா சேகர்பாபு? உளறிக்கொட்டிய திமுக எம்எல்ஏ - குறைக்கப்படுகிறதா அதிகாரம்?
Sekar Babu: ஓரங்கட்டப்படுகிறாரா சேகர்பாபு? உளறிக்கொட்டிய திமுக எம்எல்ஏ - குறைக்கப்படுகிறதா அதிகாரம்?
சென்னைவாசிகளுக்கு செம்ம நியூஸ்! தாம்பரத்தில் திடீரென உருவாகும் ‘கிரீன் மேஜிக்’..!
சென்னைவாசிகளுக்கு செம்ம நியூஸ்! தாம்பரத்தில் திடீரென உருவாகும் ‘கிரீன் மேஜிக்’..!
டாஸ்மாக் மதுபானங்கள் விலை உயர்வா? .. குடிமகன்கள் அதிர்ச்சி.. அமைச்சர் விக்னேஷ் சொன்ன பதில்!
டாஸ்மாக் மதுபானங்கள் விலை உயர்வா? .. குடிமகன்கள் அதிர்ச்சி.. அமைச்சர் விக்னேஷ் சொன்ன பதில்!
Embed widget