எவனோ முட்டாள் சொன்னானு சண்டைக்கு போகாதீங்க...ரசிகர்களுக்கு சூர்யா அறிவுரை
அடுத்தடுத்த வெற்றிகளை கொண்டாடிய சூர்யா இன்று தனது ரசிகர்களை நேரில் சந்தித்து அவர்களுக்கு சில அறிவுரைகளை வழங்கியுள்ளார் .

நடிகர் சூர்யா இன்று தனது ரசிகர்களை நேரில் சந்தித்து பேசினார். இந்த சந்திப்பில் ரசிகர்களிடம் பல்வேறு விஷயங்கள் குறித்து பேசிய சூர்யா, சமூக வலைதளங்களில் வரும் பதிவுகளுக்காக தேவையில்லாமல் சண்டையிட வேண்டாம் என்று அறிவுறுத்தினார்.
சூர்யாக்கு அடுத்தடுத்த வெற்றி
கடந்த சில ஆண்டுகளோடு ஒப்பிடுகையில் 2026 ஆம் ஆண்டு சூர்யாவின் கரியரில் மிக குறிப்பிடத் தகுந்த ஆண்டாக அமைந்துள்ளது. நீண்ட இடைவெளிக்குப் பிறகு தொடர்ந்து இரண்டு படங்கள் வெளியாகி, இரண்டுமே வசூல் ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளதால் சூர்யா ரசிகர்களும் உற்சாகத்துடன் காணப்படுகிறார்கள்.
கடந்த மே மாதம் வெளியான‘கருப்பு’ திரைப்படம் இந்த ஆண்டு அதிகம் வசூல் செய்த தமிழ் திரைப்படமாக அமைந்துள்ளது. சூர்யாவின் திரைப்படங்களில் அதிக வசூல் செய்த படமும் கருப்பு என்பது குறிப்பிடத்தக்கது. இதனைத் தொடர்ந்து வெளியான ‘விஸ்வநாத் & சன்ஸ்’ திரைப்படமும் ரூ.200 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்தது
ரசிகர்களுக்கு சூர்யா அறிவுரை
இந்த வெற்றியை தொடர்ந்து தனது ரசிகர்களை சந்தித்த சூர்யா, அவர்களிடம் அன்பு மற்றும் நேர்மறையான எண்ணங்களை பகிர்ந்துகொண்டார். அப்போது பேசிய அவர், “அன்பை மட்டுமே விதைப்போம். சோசியல் மீடியாவில் எவனோ ஒரு முட்டாள் பதிவிட்டால் அவர்களுடன் நாம் போய் சண்டை போட தேவையில்லை. நம்முடைய வேலையை நாம் பார்ப்போம். அவர்களுடைய வேலையை அவர்கள் பார்க்கட்டும். புரிந்துகொள்ளாதவர்களை நம்மால் மாற்ற முடியாது” என்றார்.
தொடர்ந்து பேசிய சூர்யா, “இந்த உலகம் மாறிக்கொண்டிருக்கிறது. ஏஐ வருகிறது. உங்களுக்குப் பிடித்த விஷயத்தை தினம் தினமும் செய்துகொண்டிருங்கள். நிச்சயமாக உங்களுக்கு வெற்றி கிடைக்கும். உங்களைச் சுற்றி இருப்பவர்களுக்கும், உங்களது குடும்பத்திற்கும் அன்பை மட்டுமே கொடுங்கள்” என்று தெரிவித்தார்.
சீன்
அடுத்ததாக சூர்யா நடிப்பில் ‘சீன்’ திரைப்படம் வெளியாக உள்ளது.‘ஆவேஷம்’ படத்தை இயக்கிய ஜீத்து மாதவன் இயக்கியுள்ள இப்படத்தில் சூர்யா போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். நஸ்ரியா, நஸ்லென், ஜான் விஜய், ஆனந்த் ராஜ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு சுஷின் ஷியாம் இசையமைத்துள்ளார். சூர்யா மற்றும் ஜோதிகா இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளனர். சூர்யாவின் 47-வது படமான ‘சீன்’ வரும் நவம்பர் 6ஆம் தேதி தீபாவளியை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாகிறது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்























