தமிழர்கள் எடுக்க வேண்டிய படத்தை தெலுங்கு ஆட்கள் எடுக்கிறார்கள்..எம்.எஸ் பையோபிக் குறித்து சிவகுமார்
ராஷ்மிகா மந்தனா நடிக்கும் எம் எஸ் சுப்புலட்சுமி பையோபிக் பட விழாவில் நடிகர் சிவகுமார் தனது அதிருப்தியை வெளிப்படுத்தினார்

மறைந்த கர்நாடக இசை கலைஞர் எம் எஸ் சுப்புலட்சுமியின் பையோபிக் இன்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அல்லு அரவிந்த், ராக்லைன் வெங்கடேஷ் மற்றும் பன்னி வாசு ஆகிய மூவரும் இணைந்து இப்படத்தை தயாரிக்கின்றனர். ராஷ்மிகா மந்தனா எம் எஸ் சுப்புலட்சுமியாக இப்படத்தில் நடிக்க அனிருத் படத்திற்கு இசையமைக்கிறார். இன்று சென்னையில் நடைபெற்ற பட துவக்க விழாவில் உலகநாயகன் கமல்ஹாசன் கிளாப் அடித்து படத்தை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட நடிகர் சிவகுமார் தமிழ் இசைக்கலைஞரான எம் எஸ் சுப்புலட்சுமியின் வாழ்க்கை வரலாற்றை தெலுங்கு திரையுலகைச் சேர்ந்தவர்கள் தயாரிப்பது குறித்து தனது அதிருப்தியை வெளிப்படுத்தினார்.
இதில் என்ன பெருமை இருக்கிறது
சென்னையில் உள்ள தி மியூசிக் அகாடமியில் நடைபெறும் நிகழ்வில் பேசிய நடிகர் சிவகுமார் " உலக நாயகன் கமல்ஹாசன் முன்னிலையில் இந்த படத்தின் அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில் வேடிக்கை என்னவென்றால் இந்த படத்தை தயாரிப்பவர்கள் அனைவரும் தெலுங்கு திரையுலகைச் சேர்ந்தவர்கள். நாம் செய்ய வேண்டிய விஷயத்தை அவர்கள் செய்துகொண்டிருக்கிறார்கள். அதில் என்ன பெருமிதம் இருக்கிறது அவர்களுக்கு நான் சல்யூட் அடித்துக்கொள்கிறேன். எம் எஸ் அம்மாவின் வாழ்க்கை வரலாற்றை நான் சிறுவயதில் படித்திருக்கிறேன். அந்த மாதிரியான மகத்தான ஒரு குரல் மீண்டும் இந்த மண்ணில் பிறப்பதற்கான வாய்ப்பு கிடையாது. எம் எஸ் அம்மா பாட்டு கேட்பதற்கு அவரது வீட்டில் வசதி இல்லை என்பதால் அவர் பார்க்கில் போய்தான் பாட்டு கேட்பார் என்று நான் கேள்வி பட்டிருக்கிறேன். அந்த மகத்தான அம்மாவின் வாழ்க்கை வரலாறை திரைப்படமாக எடுக்கிறார்கள் என்பதில் மிக மகிழ்ச்சி. அதற்கு அனிருத் இசையமைக்கப் போகிறார் என்பதிலும் ரொம்ப சந்தோஷம் . எல்லோருக்கும் வாழ்த்துக்கள் " என்று கூறினார்.
Telugu filmmakers and creators are doing the Tamil Film. Namma Seiya vendiyatha Avanga Seiranga.Salute.
— Lenin - ʜɪꜰɪ ᴛᴀʟᴋɪᴇꜱ (@HiFiTalkies) September 16, 2026
- Sivakumar at the #MSBiopic launch pic.twitter.com/S8YKKE9abq
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்






















