மேலும் அறிய

Suriya: ''காலேஜ்ல அவ்வளவு அரியர்ஸ்... அவன் பேசவே மாட்டான்’’- சூர்யா குறித்து பேசிய சிவக்குமார்!

"அவன் பள்ளிக்காலங்கள்ல கூட கேள்வியை எதிர்க்கொள்ள பயந்தவன்.நான் சூர்யாவுக்கு கல்லூரியில சேர்த்த பொழுது , ஏன் சார் ஒரு சீட்டை வேஸ்ட் பண்ணுறீங்கன்னு கேட்டாங்க."

சூர்யா தயாரிப்பில் , அருண் விஜய் நடிப்பில் வருகிற 21 ஆம் தேதி  அமேசான் பிரைமில் வெளியாக இருக்கும் திரைப்படம் ஓ மை டாக். இந்த படத்தில் அருண் விஜயுடன்  அவரது தந்தை விஜயகுமாரும் , மகன் ஆர்ணவும் இணைந்து நடித்துள்ளனர். மூன்று தலைமுறை நடிகர்கள் இணைந்திருக்கும் இந்த படத்தை சூர்யாவின் 2 டி எண்டர்டைன்மெண்ட் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்நிலையில் புரமோஷன் நிகழ்ச்சியில் கலந்துக்கொண்ட சூர்யாவின் தந்தையும் நடிகருமான சிவக்குமார், தனது மகன் குறித்து நெகிழ்ந்து பேசியிருக்கிறார். 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Suriya Sivakumar (@actorsuriya)

சிவக்குமார் பகிர்ந்ததாவது:

"எனக்கு என்ன வேடிக்கையா இருக்குன்னா ...போன வருஷம் ஜெய் பீம்னு ஒரு படம் வெளியாகி மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. ஒரு படத்தை பார்த்துவிட்டு , தமிழக அரசு இருளர் என்னும் பழங்குடி மக்கள் எவ்வளவு பேர் இருக்காங்கன்னு கணக்கு பார்த்து, அவங்களுக்கு பட்டா கொடுத்து, ரேஷன் கார்ட் கொடுத்ததெல்லாம் தமிழக வரலாற்றிலேயே இதுதான் முதல்முறை .யாருமே படம் எடுக்கும் போது இப்படியான வரவேற்பு வரும் என நினைக்கவில்லை. அதே பொல சூர்யா நீதிபதி சந்துருவாக நடித்தது இன்னும் பெரிய விஷயமா பார்க்குறேன். என்னுடைய பார்வையில சூர்யாவின் வேறு எந்தவொரு திரைப்படத்திற்கும் இப்படியான வரவேற்பு கிடைத்ததே கிடையாது. எனக்கும் , எனது  மனைவிக்கும் எப்போதுமே சூர்யாவை நினைத்து கவலையாக இருக்கும். ஏன்னா நாம நாலு வார்த்தை பேசினா அவர் ஒரு வார்த்தைதான் பேசுவான்.

அவன் பள்ளிக்காலங்கள்ல கூட கேள்வியை எதிர்கொள்ள பயந்தவன்.நான் சூர்யாவுக்கு கல்லூரியில சேர்த்த பொழுது , ஏன் சார் ஒரு சீட்டை வேஸ்ட் பண்ணுறீங்கன்னு கேட்டாங்க. ஏன் சார் என கேட்ட பொழுது சினிமாக்காரர்களின் மகன்கள் யாருமே டிகிரி வாங்கியது கிடையாது சார் அப்படினு சொன்னாங்க.அந்த சமயத்தில் நான் ஹீரோவாக நடித்து உச்சத்தில் இருந்தேன். சூர்யா கல்லூரியில் அடுத்தடுத்த ஆண்டு முன்னேறும் பொழுது அரியர்ஸும் அதிகமாகிக்கொண்டே சென்றது. கஷ்டப்பட்டி டிகிரி வாங்கினான். எம்.காம் படினு சொன்னேன் , நான் வீட்டை விட்டு ஓடிப்போயிடுவேன்னு சொல்லிட்டான்.

துறைமுகத்துக்கு போய் வேலை செய்தான், திருப்பூர்ல ஏதாவது எக்ஸ்போர்ட் பண்ணலாம்னு முடிவு செய்து வைத்திருந்த பையன் ,  காலங்கள் மாறி வசந்த் என்னிடம் கேட்டாரு , உங்க பையனை நடிக்க வைக்குறீங்களானு, நான் சொன்னேன் அவன் பேசவே மாட்டான் . நடிப்பு ஒன்னுமே தெரியாது அப்படினு சொன்னேன். அப்படியான ஆள்தான் சார் வேண்டும் ராவா இருந்தாதான் சார் சரியாருக்கும், முன்னதாக எதுவும் தெரிந்திருந்தால் கஷ்டம்னு சொன்னாரு. முதல் இரண்டு படம் பண்ணி ஊத்திக்கிச்சு . அந்த பையனுக்கு பாலானு ஒருத்தர் வந்து வேற இடத்துக்கு கொண்டு போனார். அந்த பையன் இன்னைக்கு இப்படி ஒரு படம் பண்ணியிருக்கான், 2டி அப்படினு ஒரு தயாரிப்பு நிறுவனம் வச்சிருக்கான்னு நினைக்குறப்போ பெருமையா இருக்கு . “ என மகனை மேடையில் பெருமைபட பேசியிருக்கிறார் சிவக்குமார்.

தலைப்பு செய்திகள்

சூர்யாவின் சீன் முதல் பாடல்...'ஆத்தி இவ யார்ரா' முழு லிரிக்ஸ் இதோ
சூர்யாவின் சீன் முதல் பாடல்...'ஆத்தி இவ யார்ரா' முழு லிரிக்ஸ் இதோ
Indian 3: விட்டதை பிடிக்க சீறி வரும் கமல்ஹாசன்? இந்தியன் 3 கை கொடுக்குமா? காலை வாருமா?
Indian 3: விட்டதை பிடிக்க சீறி வரும் கமல்ஹாசன்? இந்தியன் 3 கை கொடுக்குமா? காலை வாருமா?
ஆசிய விளையாட்டு போட்டியில் தங்கம் வென்ற வித்யா ராமராஜை நேரில் சந்தித்து வாழ்த்தி ரஜினி
ஆசிய விளையாட்டு போட்டியில் தங்கம் வென்ற வித்யா ராமராஜை நேரில் சந்தித்து வாழ்த்தி ரஜினி
Karthigai Deepam: ரிலீசான கார்த்திக்.. கடத்தப்பட்ட சந்திரகலா! கார்த்திகை தீபத்தில் இன்று?
Karthigai Deepam: ரிலீசான கார்த்திக்.. கடத்தப்பட்ட சந்திரகலா! கார்த்திகை தீபத்தில் இன்று?

வீடியோ

பூண்டி ஏரி பணியில் ஊழல்? முதல்வர் PA பெயரை பயன்படுத்தி முறைகேடு! நடவடிக்கை எடுப்பாரா அமைச்சர்?
GEM Veeramani : சிறுமிகளை சீரழித்த கொடூரன்.. முதல்முறையாக வெளியே வீரமணி! போக்சோ நீதிமன்றத்தில் ஆஜர்
ஆசை காட்டிய பெண்! பேருந்தில் அசந்த முதியவர் ரூ.1 கோடி தங்கக் கட்டி அபேஸ்!
புடவையிலேயே மின்னல் வேகம்! வெறுங்காலில் 1600மீ ஓட்டம்! பிரமிக்க வைத்த தாய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK vs DMK:
TVK vs DMK: "ஊழல் இல்லாத ஆட்சிக்கு டம்மி டாடி ஸ்டிக்கர் ஒட்ட முடியுமா?" திமுக-விற்கு தவெக கேள்வி
Ration Card Correction: மிஸ் பண்ணிடாதீங்க மக்களே! ரேஷன் கார்டில் பெயர் சேர்த்தல், நீக்கம் செய்ய சூப்பர் சான்ஸ்.!
Ration Card Correction: மிஸ் பண்ணிடாதீங்க மக்களே! ரேஷன் கார்டில் பெயர் சேர்த்தல், நீக்கம் செய்ய சூப்பர் சான்ஸ்.!
AIADMK Vs TVK: டயலாக் பேசுவது போதாது முதல்வரே! சட்டம்-ஒழுங்கு சந்தி சிரிக்கிறது! லிஸ்ட்டு போட்டு இறங்கி அடிக்கும் இபிஎஸ்!
AIADMK Vs TVK: டயலாக் பேசுவது போதாது முதல்வரே! சட்டம்-ஒழுங்கு சந்தி சிரிக்கிறது! லிஸ்ட்டு போட்டு இறங்கி அடிக்கும் இபிஎஸ்!
TN By Election Result 2026: நாளை வாக்கு எண்ணிக்கை.. இடைத்தேர்தலில் வெற்றி வாகை யாருக்கு? 5 முனைப்போட்டியில் அசத்துமா தவெக?
TN By Election Result 2026: நாளை வாக்கு எண்ணிக்கை.. இடைத்தேர்தலில் வெற்றி வாகை யாருக்கு? 5 முனைப்போட்டியில் அசத்துமா தவெக?
“நான் சுமந்து வளர்த்தெடுத்த மெட்ரோ எனும் குழந்தை.. மக்கள் பயன்பாட்டுக்கு வருவதில் பெருமை” – மு.க ஸ்டாலின்
“நான் சுமந்து வளர்த்தெடுத்த மெட்ரோ எனும் குழந்தை.. மக்கள் பயன்பாட்டுக்கு வருவதில் பெருமை” – மு.க ஸ்டாலின்
Elon MusK: “அம்பானி தான் இந்தியாவோட பாஸா.?“ ஸ்டார்லிங்க் விவகாரத்தில் மோடி அரசை வெளுத்துவிட்ட எலான் மஸ்க்
“அம்பானி தான் இந்தியாவோட பாஸா.?“ ஸ்டார்லிங்க் விவகாரத்தில் மோடி அரசை வெளுத்துவிட்ட எலான் மஸ்க்
​
​"2 நிமிட 'ரீல்ஸ்' எடுக்க தான் சட்டமன்றமா ?" – மேடையில் ஆவேசப்பட்ட கனிமொழி
Chennai Power Cut: சென்னைல வெள்ளிக்கிழமை (09.10.2026) எந்தெந்த ஏரியாக்கள்ல பவர் கட் ஆகப் போகுதுன்னு பாருங்க
சென்னைல வெள்ளிக்கிழமை (09.10.2026) எந்தெந்த ஏரியாக்கள்ல பவர் கட் ஆகப் போகுதுன்னு பாருங்க
Embed widget