மேலும் அறிய

“குகன் தாஸ்” என பெயர் சூட்டியிருக்கிறோம் - சிவகார்த்திகேயன் ட்விட்டர் பதிவு

சிவகார்த்திகேயனின் தந்தை பெயர் ’தாஸ்’ என்பது குறிப்பிடத்தக்கது. நடிகர் சிவகார்த்திகேயன் மனைவி ஆர்த்திக்கு அண்மையில் ஆண் குழந்தை பிறந்தது.

நடிகர் சிவகார்த்திகேயன் தனது மகனுக்கு ‘குகன்தாஸ்’ எனப் பெயர் சூட்டியுள்ளார். சிவகார்த்திகேயனின் தந்தை பெயர் ’தாஸ்’ என்பது குறிப்பிடத்தக்கது. நடிகர் சிவகார்த்திகேயன் மனைவி ஆர்த்திக்கு அண்மையில் ஆண் குழந்தை பிறந்தது.

சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் கவர்ந்த நடிகர் சிவகார்த்திகேயன். சின்னத்திரையில் தொடங்கி வெள்ளித்திரையில் அதிரடிகாட்டி வரும் அவருக்கு, இப்போது ’டாக்டர்’ படம் ஓடிடியில் வெளியாக உள்ளது.கடந்த 2010-ம் ஆண்டு ஆர்த்தி என்பவருடன் சிவகார்த்திகேயன் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஆராதனா என்ற பெண் குழந்தை உள்ளது. கனா திரைப்படத்தில், “வாயாடி பெத்த புள்ள” என்ற பாடலை பாடியதன் மூலம் ஆராதனா பிரபலமானார்.

இந்நிலையில், சிவகார்த்திகேயன் – ஆர்த்தி தம்பதிக்கு இரண்டாவது குழந்தை அண்மையில் பிறந்துள்ளது. இந்த மகிழ்ச்சியான செய்தியை, சிவகார்த்திகேயன் தனது ட்விட்டர் பக்கத்தில் அண்மையில் பகிர்ந்திருந்தார்.

“18 வருடங்களுக்குப் பிறகு இன்று என் அப்பா என் விரல் பிடித்திருக்கிறார் என் மகனாக என் பல வருட வலி போக்க தன் உயிர்வலி தாங்கிய என் மனைவி ஆர்த்திக்கு கண்ணீர்த்துளிகளால் நன்றி. அம்மாவும் குழந்தையும் நலம்” என பதிவிட்டுள்ளார். சிவகார்த்திகேயன் நடிப்பில் டாக்டர் மற்றும் அயலான் ஆகிய இரண்டு படங்கள்  தயார் நிலையில் உள்ளன.கடந்த மார்ச்  மாதம் வெளியாக இருந்த டாக்டர் திரைப்படம், சட்டமன்ற தேர்தல் நடைபெற்றதால் படத்தின் ரிலீஸ் தேதியை தள்ளி வைத்தது படக்குழு. கடந்த மே மாதம் 11 ஆம் தேதி படத்தை வெளியிட திட்டமிட்டிருந்த நிலையில் கொரோனா இரண்டாம் அலை காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதால், படம் வெளியிடப்படாமல் முடங்கி போனது. இதனால் ரசிகர்கள் மிகுந்த ஏமாற்றம் அடைந்தனர். இந்நிலையில் படம் மீண்டும் திரையரங்கம் திறந்த பிறகு வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஓடிடியில் வெளியிடுவதற்கான முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இத்திரைப்படம், தமிழ், மலையாளம்,தெலுங்கு , கன்னடம் உள்ளிட்ட 4 மொழிகளில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது

இதனை தொடர்ந்து, அயலான் திரைப்படம் வருகிற டிசம்பர் மாதம் திரையரங்கு வெளியீட்டிற்காக காத்திருக்கிறது. இதற்கடுத்ததாக சிவகார்த்திகேயன் மற்றும் லைகா ஆகிய நிறுவனங்கள் இணைந்து ”டான்” திரைப்படத்தை தயாரித்து வருகின்றன. இது தவிர சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் 5 படங்களில் நடிக்க சிவகார்த்திகேயன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது. அடுத்தடுத்து சிவகார்த்தியேயனின் படங்கள் வெளியாக காத்திருப்பதால், ரசிகர்கள் வெயிட்டிங்கில் உள்ளனர்.

தலைப்பு செய்திகள்

கமல் பட நடிகையை கடிக்கப் பாய்ந்த நாய்... பதறிப்போன ரசிகர்கள்! வைரலாகும் வீடியோ
கமல் பட நடிகையை கடிக்கப் பாய்ந்த நாய்... பதறிப்போன ரசிகர்கள்! வைரலாகும் வீடியோ
இது இல்லையென்றால் ரஜினி படமாக இருந்தாலும் தயாரிக்க மாட்டோம்..ஓப்பனாக பேசிய அர்ச்சனா கல்பாத்தி
இது இல்லையென்றால் ரஜினி படமாக இருந்தாலும் தயாரிக்க மாட்டோம்..ஓப்பனாக பேசிய அர்ச்சனா கல்பாத்தி
மிஸ் ஆகும் பழைய மேஜிக்...ஆல்பம் ஹிட் கொடுத்த ஜிவி பிரகாஷ் என்ன ஆனார்?
மிஸ் ஆகும் பழைய மேஜிக்...ஆல்பம் ஹிட் கொடுத்த ஜிவி பிரகாஷ் என்ன ஆனார்?
'செய்! செய்யாதே!' இசை, டிரெய்லர் வெளியீடு... சமூக விழிப்புணர்வு படத்திற்கு பிரபலங்கள் வாழ்த்து
'செய்! செய்யாதே!' இசை, டிரெய்லர் வெளியீடு... சமூக விழிப்புணர்வு படத்திற்கு பிரபலங்கள் வாழ்த்து

வீடியோ

CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
மாற்றம் என்றீர்கள்.? இதுதான் மாற்றமா.? வெளுத்து வாங்கிய அதிமுக- சீறிய அமைச்சர்கள்- சட்டசபையில் காரசார விவாதம்
மாற்றம் என்றீர்கள்.? இதுதான் மாற்றமா.? வெளுத்து வாங்கிய அதிமுக- சீறிய அமைச்சர்கள்- சட்டசபையில் காரசார விவாதம்
இனி பள்ளிப் பாடத்திட்டத்தில் போதைப்பொருள் விழிப்புணர்வு; அதிரடி முடிவெடுத்த அரசு!
இனி பள்ளிப் பாடத்திட்டத்தில் போதைப்பொருள் விழிப்புணர்வு; அதிரடி முடிவெடுத்த அரசு!
ABP Exclusive: காவிரி குறுக்கே தமிழகம் அணை கட்டுவதில் என்ன சிக்கல்? வீணாகும் தண்ணீரை சேமிக்க வழி என்ன? விளக்கம் தரும் சேதுராமன்
ABP Exclusive: காவிரி குறுக்கே தமிழகம் அணை கட்டுவதில் என்ன சிக்கல்? வீணாகும் தண்ணீரை சேமிக்க வழி என்ன? விளக்கம் தரும் சேதுராமன்
CM Vijay: ”கருணாநிதி மீது மறைமுக அட்டாக், பேப்பர் படிக்கணும்” - உதயநிதிக்கு சட்டப்பேரவையில் CM விஜய் பதிலடி
”கருணாநிதி மீது மறைமுக அட்டாக், பேப்பர் படிக்கணும்” - உதயநிதிக்கு சட்டப்பேரவையில் CM விஜய் பதிலடி
Iran Missile Plan: ட்ரம்ப்புக்கு காத்திருக்கும் பேரதிர்ச்சி.! அமெரிக்கா வரை சென்று தாக்கும் ஏவுகணை.! ஈரானின் மாஸ் திட்டம்
ட்ரம்ப்புக்கு காத்திருக்கும் பேரதிர்ச்சி.! அமெரிக்கா வரை சென்று தாக்கும் ஏவுகணை.! ஈரானின் மாஸ் திட்டம்
E3 Trion EV Scooter Variants Price: 52L இடவசதி.! மளிகை பொருள் இல்ல, கடையையே கொண்டு வரலாம்.! E3 Trion-ன் வேரியண்ட்டுகள், விலை என்ன.?
52L இடவசதி.! மளிகை பொருள் இல்ல, கடையையே கொண்டு வரலாம்.! E3 Trion-ன் வேரியண்ட்டுகள், விலை என்ன.?
Trump on Iran War: என்னா சாரே சொல்றீங்க, நிஜமாவா.? ஈரான் போர் விரைவில் முடிவுக்கு வரப்போகுதா.? ட்ரம்ப் கூறியது என்ன.?
என்னா சாரே சொல்றீங்க, நிஜமாவா.? ஈரான் போர் விரைவில் முடிவுக்கு வரப்போகுதா.? ட்ரம்ப் கூறியது என்ன.?
சியரா டச்சில் காமோ; ரூ.9.99 லட்சத்தில் டேஷ்கேம், ADAS உடன் அசத்தும் டாடா நெக்ஸான் புது எஸ்யூவி!
சியரா டச்சில் காமோ; ரூ.9.99 லட்சத்தில் டேஷ்கேம், ADAS உடன் அசத்தும் டாடா நெக்ஸான் புது எஸ்யூவி!
Embed widget