மேலும் அறிய

Actor Siddharth: திரைப்பட விழாவுக்கு வராத சித்தார்த்.. உண்மையை போட்டுடைத்த இயக்குநர்!

மகாசமுத்திரம் படத்தில் நடித்துள்ள சித்தார்த் அந்த படத்தின் நிகழ்ச்சியில் பங்கேற்காமல் லண்டன் சென்றது ஏன் என்று படத்தின் இயக்குனர் அஜய்பூபதி விளக்கம் அளித்துள்ளார்.

 தென்னிந்திய திரையுலகில் பிரபலமானவர் நடிகர் சித்தார்த். இவர் தமிழில் பாய்ஸ் படத்தின் மூலம் அறிமுகமான அவர், தமிழிலும், தெலுங்கிலும் பல படங்களில் நடித்துள்ளார். இந்தியிலும் அமீர்கான் உள்பட பல நடிகர்களுடனும் இணைந்தும், தனியாகவும் நடித்துள்ளார். கடந்த சில ஆண்டுகளாக தமிழ் திரையுலகில் தொடர்ந்து கவனம் செலுத்தி வந்த சித்தார்த் மீண்டும் தெலுங்கு படத்தில் நடித்துள்ளார்.

மகாசமுத்திரம் என்று பெயரிடப்பட்ட இந்த படத்தை அஜய்பூபதி இயக்கியுள்ளார். நீண்ட இடைவேளைக்கு பிறகு சித்தார்த் நடிக்கும் இந்த படத்தில் சர்வானந்த், அதிதிராவ், அனு இமானுவேல் உடன் நடித்துள்ளனர். நீண்ட வருடங்களுக்கு பிறகு தெலுங்கில் சித்தார்த் நடித்துள்ளதால், மகா சமுத்திரம் திரைப்படத்தை பல இடங்களில் பெருமிதத்துடன் சித்தார்த் சுட்டிக்காட்டியிருந்தார்.

Actor Siddharth: திரைப்பட விழாவுக்கு வராத சித்தார்த்.. உண்மையை போட்டுடைத்த இயக்குநர்!

இந்த நிலையில், மகாசமுத்திரம் திரைப்படத்தின் ட்ரெய்லர் சமீபத்தில் வெளியிடப்பட்டது. இதற்காக நடைபெற்ற நிகழ்ச்சியில் நடிகர் சித்தார்த் பங்கேற்கவில்லை. இது பெரும் விவாதத்தை ஏற்படுத்தியது. மேலும், மகாசமுத்திரம் படத்தை பற்றி பெருமிதமாக குறிப்பிடும் சித்தார்த்த ஏன் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் பங்கேற்கவில்லை என்றும் கேள்வி எழுப்பினர்.

இந்த நிலையில், இந்த விவாதங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக மகாசமுத்திரம் படத்தின் இயக்குனர் அஜய்பூபதி, சித்தார்த் ஏன் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் பங்கேற்கவில்லை என்று விளக்கம் அளித்துள்ளார். அவர் அளித்துள்ள விளக்கத்தில், அறுவை சிகிச்சை ஒன்றை மேற்கொள்வதற்காக நடிகர் சித்தார்த் லண்டன் சென்றிருப்பதால் அவரால் நிகழ்ச்சியில் பங்கேற்க முடியவில்லை என்று கூறியுள்ளார்.

நடிகர் சித்தார்த் திடீரென அறுவை சிகிச்சை செய்து கொள்ள லண்டன் சென்றிருப்பது அவரது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நடிகர் சித்தார்த் நடிப்பில் உருவாகியுள்ள மகாசமுத்திரம் திரைப்படம் தெலுங்கு மட்டுமின்றி தமிழிலும் வெளியாக உள்ளது.

Actor Siddharth: திரைப்பட விழாவுக்கு வராத சித்தார்த்.. உண்மையை போட்டுடைத்த இயக்குநர்!

நடிகர் சித்தார்த் நடிப்பில் கடைசியாக 2013ம் ஆண்டு தீயா வேலை செய்யனும் குமாரு படமும், 2017ம் ஆண்டு வெளியான அவள் படமும் தெலுங்கில் வெளியாகியது. இந்த நிலையில், நீண்ட வருடங்களுக்கு பிறகு சித்தார்த் தெலுங்கில் நேரடியாக நடிக்கும் படம் மகாசமுத்திரம் என்பதால் மிகுந்த எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. நேரடியாக தெலுங்கில் சித்தார்த் கடைசியாக 2013ம் ஆண்டு ஜபார்டஸ்த் என்ற படத்தில் நடித்திருந்தார். அதன் பின்னர், 8 ஆண்டுகளுக்கு பின்னர் தற்போதுதான்  நேரடியாக மகாசமுத்திரம் என்ற படத்தில் நடிக்கிறார்.

ஆனால், 2013ம் ஆண்டுக்கு பிறகு உதயம் என்.எச்.4, தீயா வேலை செய்யனும் குமாரு, ஜிகர்தண்டா, காவியதலைவன், எனக்குள் ஒருவன், அரண்மனை 2, ஜில் ஜங் ஜக், அவள், சிவப்பு மஞ்சள் பச்சை, அருவம் ஆகிய தமிழ் படங்களில் நடித்துவிட்டார். இடையில் கம்மாரா சம்பவம் என்ற மலையாள படத்திலும் நடித்துள்ளார். இந்தியன் 2ம் பாகத்திலும் சித்தார்த் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

தலைப்பு செய்திகள்

Mansoor Ali Khan: ஆண்மை இருக்கா.. நான் என்ன பிச்சையா கேட்டேன்.. சூர்யா, RJ பாலாஜியை விளாசிய மன்சூர் அலிகான்
Mansoor Ali Khan: ஆண்மை இருக்கா.. நான் என்ன பிச்சையா கேட்டேன்.. சூர்யா, RJ பாலாஜியை விளாசிய மன்சூர் அலிகான்
பல் விளக்கிட்டே கதை கேட்ட பிரபல தயாரிப்பாளர்.. அசராமல் கதை சொன்ன ப்ளாக்பஸ்டர் பட இயக்குனர்கள்! யாருப்பா அது?
பல் விளக்கிட்டே கதை கேட்ட பிரபல தயாரிப்பாளர்.. அசராமல் கதை சொன்ன ப்ளாக்பஸ்டர் பட இயக்குனர்கள்! யாருப்பா அது?
Viswanath & Sons Review: விஸ்வநாத் அண்ட் சன்ஸ் விமர்சனம்... சூர்யாவின் படம் வெற்றியா? தோல்வியா?
விஸ்வநாத் அண்ட் சன்ஸ் விமர்சனம்... சூர்யாவின் படம் வெற்றியா? தோல்வியா?
Actress Khushbu: தமிழால் தடுமாறிய காதல்.. விஜயால் கதறி அழுத மகள்.. நேர்காணலில் பகிர்ந்த குஷ்பு
Actress Khushbu: தமிழால் தடுமாறிய காதல்.. விஜயால் கதறி அழுத மகள்.. நேர்காணலில் பகிர்ந்த குஷ்பு

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Annamalai: ஆஃப் மோடிலே இருக்கும் அண்ணாமலை.. பாஜக-விற்கு பல்டி அடிக்கத்தொடங்கிய ஆதரவாளர்கள்!
Annamalai: ஆஃப் மோடிலே இருக்கும் அண்ணாமலை.. பாஜக-விற்கு பல்டி அடிக்கத்தொடங்கிய ஆதரவாளர்கள்!
CM Joseph Vijay: கோட்டையில் கொடியேற்றிய முதல்வர் விஜய்.. சுதந்திர தினம் கோலாகலம்.. வெளியான முக்கிய அறிவிப்புகள்!
CM Joseph Vijay: கோட்டையில் கொடியேற்றிய முதல்வர் விஜய்.. சுதந்திர தினம் கோலாகலம்.. வெளியான முக்கிய அறிவிப்புகள்!
Independence Day PM Modi Speech: நிறைய அணுமின் நிலையங்கள் அமைக்கணும்.. வேறு மாதிரி இந்தியா மாறணும்.. பிரதமர் மோடி பேச்சு!
Independence Day PM Modi Speech: நிறைய அணுமின் நிலையங்கள் அமைக்கணும்.. வேறு மாதிரி இந்தியா மாறணும்.. பிரதமர் மோடி பேச்சு!
விஜய்யிடம் ‘தகைசால் தமிழர்’ விருது பெற்ற கிருஷ்ணசாமி: குஷியில் காங்கிரஸ், பாமக! காரணம் என்ன?
விஜய்யிடம் ‘தகைசால் தமிழர்’ விருது பெற்ற கிருஷ்ணசாமி: குஷியில் காங்கிரஸ், பாமக! காரணம் என்ன?
Trisha: கோட்டையில் கொடியேற்றப்போகும் நண்பன் விஜய்.. நேரில் வந்த நடிகை த்ரிஷா!
Trisha: கோட்டையில் கொடியேற்றப்போகும் நண்பன் விஜய்.. நேரில் வந்த நடிகை த்ரிஷா!
Udhayanidhi : நேற்று அமுதன்.. இன்று தனுஷ்.! தொடரும் கொலைகளே சாட்சி- விஜய் அரசை விளாசிய உதயநிதி
நேற்று அமுதன்.. இன்று தனுஷ்.! தொடரும் கொலைகளே சாட்சி- விஜய் அரசை விளாசிய உதயநிதி
Drone Training : 10ஆம் வகுப்பு பாஸ் போதும்! ட்ரோன் இயக்க சூப்பர் சான்ஸ்- விண்ணப்பிப்பது எப்படி.? தமிழக அரசு அறிவிப்பு
10ஆம் வகுப்பு பாஸ் போதும்.! ட்ரோன் இயக்க சூப்பர் சான்ஸ்- விண்ணப்பிப்பது எப்படி.? தமிழக அரசு அறிவிப்பு
2026 Independence Day: வரலாற்று சம்பவம்.. சுதந்திர தின விழா.. தேசிய கொடியேற்றும் முதல்வர் விஜய்!
2026 Independence Day: வரலாற்று சம்பவம்.. சுதந்திர தின விழா.. தேசிய கொடியேற்றும் முதல்வர் விஜய்!
Embed widget