மேலும் அறிய

Siddharth - Aditi Engaged: "நடந்தது நிச்சயதார்த்தம்.. திருமணம் அல்ல" - சஸ்பென்ஸ் உடைத்த நடிகர் சித்தார்த்!

Siddharth - Aditi engaged: தனக்கும் அதிதி ராவ் ஹைதாரிக்கும் நிச்சயதார்த்தம் முடிந்ததாக இன்ஸ்டாகிராம் மூலம் உறுதிப்படுத்தியுள்ளார் நடிகர் சித்தார்த். 

 

இயக்குநர் மணிரத்னத்திடம் உதவி இயக்குநராக சினிமா பயணத்தைத் தொடங்கி,  இயக்குநர் ஷங்கரின் 'பாய்ஸ்' திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமானார் சித்தார்த். அதன் வெற்றியை தொடர்ந்து தெலுங்கு மற்றும் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக உயர்ந்தார்.


மலையாள திரைப்படம் மூலம் அறிமுகம் அதிதி ராவ், 2007ம் ஆண்டு வெளியான ஸ்ரீரங்கம் திரைப்படம் மூலம் அறிமுகமாகி பின்னர் பாலிவுட்டில் என்ட்ரி கொடுத்து அங்கு முன்னணி நடிகையாக இருந்து வருகிறார்.  

 

 

Siddharth - Aditi Engaged:

கடந்த சில ஆண்டுகளாக லவ் பர்ட்ஸ் போல சிறகடித்து பறந்து வந்தனர் நடிகர் சித்தார்த் மற்றும் நடிகை அதிதி ராவ் ஹைதாரி. இருவரும் ஒருவரை ஒருவர் பார்ட்னர் என செல்லமாக கொஞ்சி கொள்வதும், எங்கு சென்றாலும் ஜோடியாக கலந்து கொள்வதும், டான்ஸ் ஆடி ரீல்ஸ், ஊரூராக டேட்டிங் செல்வதும் என ஜோடியாகவே காட்சி அளித்தனர். 


2021ம் ஆண்டு 'மகா சமுத்திரம்' என்ற தெலுங்கு திரைப்படத்தில் ஒன்றாக இணைந்து நடித்ததன் மூலம் சித்தார்த் மற்றும் அதிதி ராவ் இடையே நட்பு ஏற்பட்டு பின்னர் அது டேட்டிங் வரை சென்றது. அன்று முதல் இருவரும் மிகவும் பிஸியாக டேட்டிங் செய்து வந்த நிலையில் அவர்கள் இருவருக்கும் இடையில் ஏதாவது பீல் இருக்கா இல்லையா என்ற குழப்பத்திலேயே ரசிகர்களை அல்லாட வைத்தனர். 

 

Siddharth - Aditi Engaged:

இந்நிலையில் தான் சித்தார்த் மற்றும் அதிதி ராவ், தெலங்கானா மாநிலம், வனபர்தி மாவட்டம், ஸ்ரீ ரங்கநாயக ஸ்வாமி கோயிலில் நேற்று ரகசியமாக திருமணம் செய்து கொண்டனர் என டோலிவுட் சினிமா வட்டாரம் தொடங்கி சமூக வலைத்தளம் எங்கும் அவர்கள் திருமணம் குறித்த தகவல் காட்டு தீயாய் பரவ துவங்கியது. இருவரும் நேற்று மாலை திருமண புகைப்படங்களுடன் திருமணம் முடிந்த அறிவிப்பை வெளியிடுவார்கள் என மீடியா முதல் ரசிகர்கள் வரை அனைவரும் மிகவும் ஆவலாக காத்திருந்தனர். ஆனால் எந்த ஒரு தகவலும் அவர்கள் தரப்பில் இருந்து வெளியாகாமல் மிகவும் சஸ்பென்சாகவே இருந்தது. அதிகாரபூர்வமான அறிவிப்பு வெளியாகவில்லை என்றாலும் அவர்கள் இருவருக்கும் வாழ்த்துக்கள் குவிய துவங்கின. 

 


இந்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் இன்று நடிகர் சித்தார்த் தனது இன்ஸ்டாகிராம் பக்கம் மூலம் போஸ்ட் ஒன்றை பகிர்ந்துள்ளார். “ஆம், அவர் ஓகே சொல்லிவிட்டார்” எனக் கூறி நிச்சயதார்த்தம் நடைபெற்றுவிட்டது என்பதை உறுதிப்படுத்தியுள்ளார். மேலும் இருவரும் நிச்சயதார்த்த மோதிரத்துடன் இருக்கும் புகைப்படத்தினை சித்தார்த் பகிர்ந்துள்ளார். இந்நிலையில், நிச்சயம் முடிந்துள்ளதே தவிர திருமணம் முடியவில்லை என, இருவரும் விரைவில் திருமணம் குறித்த அறிவிப்பை வெளியிடுவார்கள் என ரசிகர்கள் உற்சாகமாகக் காத்திருக்கிறார்கள். 

தலைப்பு செய்திகள்

Jailer 2:
Jailer 2: "என்றைக்கும் ஒரே தலைவன்.." ஜெயிலர் 2 ட்ரெயிலரை கொண்டாடும் ரஜினி ரசிகர்கள்!
அதிமுக ஆட்சியில் கண்ணீர்...தவெக ஆட்சியில் அங்கீகாரம்...நெகிழ்ச்சியில் புஷ்பவனம் குப்புசாமி
அதிமுக ஆட்சியில் கண்ணீர்...தவெக ஆட்சியில் அங்கீகாரம்...நெகிழ்ச்சியில் புஷ்பவனம் குப்புசாமி
Vijay Sethupathi:
Vijay Sethupathi: "நான் சந்தோஷமா இருந்தால் காய்ச்சல் வரும்.." பத்தா வெற்றி விழாவில் விஜய் சேதுபதி
"என் பாடல்கள் சமுதாயத்திற்கு தீங்கா?" - விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்து ரூ.5 லட்சம் நன்கொடை அளித்த அசல் கோலார்!

வீடியோ

கேப்டனை கொல்ல சதி மிகப்பெரிய கட்டிடம் டார்கெட் கோ பைலட் பகீர் வாக்குமூலம்
Noida supernova suicide | 41வது மாடியில் இருந்து தற்கொலை! 28 வயது இளைஞர் பகீர்! விசாரணையில் அதிர்ச்சி தகவல்
TVK MLA vs Cong MP | காங்.MP-தவெக MLA மோதல்! மெழுகுவர்த்தியை தட்டிவிட்ட MLA.. அமைச்சர் முன்பே வாக்குவாதம்
Toor Dal issue :துவரம் பருப்பில் நடந்த மோசடி?அரசு கஜானாவிற்கு வந்த 187 கோடி..சாட்டையை சுழற்றிய விஜய்
Sivakarthikeyan Politics : CM விஜய் ரூட்டில் SK..ரசிகர் மன்றம் டூ நற்பணி இயக்கம்! குஷியில் ரசிகர்கள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ABP Nadu Exclusive:
ABP Nadu Exclusive: "தவெக அரசுதான் தமிழ் உணர்வோடு செயல்படுகிறது.. கேட்காமலே பதவி.." புஷ்பவனம் குப்புசாமி ஏபிபி நாடுக்கு பிரத்யேக பேட்டி
"தொட்டு தொட்டுப் பேசும் சுல்தானா... இயல் இசைக்கு இனி நீதானா.." தவெக ஆட்சியில் புஷ்பவனம் குப்புசாமிக்கு முக்கிய பதவி!
Holiday: குட்நியூஸ்.. நாளை சம்பளத்துடன் கூடிய பொது விடுமுறை அறிவிப்பு.. யார் யாருக்கு தெரியுமா?
Holiday: குட்நியூஸ்.. நாளை சம்பளத்துடன் கூடிய பொது விடுமுறை அறிவிப்பு.. யார் யாருக்கு தெரியுமா?
GOLD LOAN : அடி தூள்.! நகைக் கடன் வாங்கப்போறீங்களா- இனி ஒரு கிராமிற்கு இவ்வளவு பணமா - வெளியான சூப்பர் அறிவிப்பு
அடி தூள்.! நகைக் கடன் வாங்கப்போறீங்களா- இனி ஒரு கிராமிற்கு இவ்வளவு பணமா - வெளியான சூப்பர் அறிவிப்பு
SC On CEC: “நீங்களே சொந்தமா முடிவெடுத்திங்களா?” ஞானேஷிற்கு செக்? தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
“நீங்களே சொந்தமா முடிவெடுத்திங்களா?” ஞானேஷிற்கு செக்? தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
Maruti Suzuki Alto K10: நடுத்தர குடும்பங்களின் முதல் தேர்வு.! ரூ.3.70 லட்சத்தில் 33கிமீ மைலேஜ்.! புதிய நவீன மாருதி ஆல்டோ K10
நடுத்தர குடும்பங்களின் முதல் தேர்வு.! ரூ.3.70 லட்சத்தில் 33கிமீ மைலேஜ்.! புதிய நவீன மாருதி ஆல்டோ K10
Russia Vs Ukraine: கருங்கடலில் இந்தியர்கள் இருந்த கப்பலை தாக்கிய ரஷ்ய ட்ரோன்கள்; கேப்டன் உயிரிழந்ததாக கூறும் ஜெலன்ஸ்கி
கருங்கடலில் இந்தியர்கள் இருந்த கப்பலை தாக்கிய ரஷ்ய ட்ரோன்கள்; கேப்டன் உயிரிழந்ததாக கூறும் ஜெலன்ஸ்கி
Jailer 2:
Jailer 2: "என்றைக்கும் ஒரே தலைவன்.." ஜெயிலர் 2 ட்ரெயிலரை கொண்டாடும் ரஜினி ரசிகர்கள்!
Embed widget