மேலும் அறிய

Sathyaraj: மீண்டும் ரஜினியுடன் இணையும் சத்யராஜ்: புது லுக்கில் மிரட்டல்; சம்பவம் இருக்கு!

நடிகர் சத்யராஜின் புதிய லுக் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. லோகேஷ் கனகராஜ் இயக்கும் ரஜினியின் கூலி படத்தில் சத்யராஜ் இந்த லுக்கில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது

சத்யராஜ்

 வில்லனாக தமிழ் சினிமாவில்  அறிமுகமாகி அதன்பின்  முன்னணி நடிகராக மக்களை கவர்ந்தவர் நடிகர் சத்யராஜ் . தற்போது மாதத்திற்கு ஒரு படத்தில் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்.  75 படங்களில் வில்லனாக நடித்துள்ள சத்யராஜ் தமிழ், தெலுங்கு, மலையாள உள்ளிட்ட 200 படங்களில் நாயகனாக நடித்திருக்கிறார். மூத்த இயக்குநர்கள் தொடங்கி இன்றைய தலைமுறை இயக்குநர் பிரதீப் ரங்கநாதன் வரை இணைந்து பணியாற்றி இருக்கிறார். 

 சத்யராஜ் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நண்பன், வருத்தப்படாத வாலிபர் சங்கம், ராஜா ராணி, சிகரம் தொடு, பூஜை, பாகுபலி, மெர்சல், கடைக்குட்டி சிங்கம், கனா, வீட்ல விசேஷம், லவ் டுடே, சிங்கப்பூர் சலூன் ஆகிய படங்கள் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றன. தற்போது தனது கரியரில் மற்றொரு முக்கியமான படம் ஒன்றில் நடிக்க இருக்கிறார் சத்யராஜ்.

கூலி

ரஜினிகாந்துக்கு திரையில் வில்லனாக தோன்றி தனக்கென தனி ரசிகரையும் கொண்டிருந்தார் சத்யராஜ் . தம்பிக்கு எந்த ஊரு, மூன்று முகம், நான் சிகப்பு மனிதன், மிஸ்டர் பாரத், பாயும் புலி உள்ளிட்ட படங்களில் ரஜினிக்கு வில்லனாக நடித்துள்ளார் சத்ய்ராஜ். மிஸ்டர் பாரத் படத்தைத் தொடர்ந்து ரஜினி மற்றும் சத்யராஜூக்கு இடையில் கருத்து வேறுபாடுகள் இருந்ததாக சினிமா வட்டாரங்களில் நிறைய கதைகள் பரவியுள்ளன. மேலும் சத்யராஜ் பல மேடைகளில் ரஜினியின் அரசியல் நிலைப்பாட்டை விமர்சித்துப் பேசியது ரஜினி ரசிகர்களிடையே பெரும் ஆவேசத்தை ஏற்படுத்தியது. ஆனால் சமீப காலங்களில் இந்த மாதிரியான விமர்சனங்களை தவிர்த்து ஒரு நடிகராக ரஜினியின் வளர்ச்சியை பாராட்டி வருகிறார் சத்யராஜ்.

தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கவிருக்கும் கூலி படத்தில் ரஜினிக்கு நண்பனாக சத்யராஜ் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். கிரிஷ் கங்காதரன் இந்தப் படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார். இப்படத்தில் நடிக்கவிருக்கும் நடிகர்கள் குறித்த தகவல்களை விரைவில் வெளியாகும் என லோகேஷ் கனகராஜ் தெரிவித்துள்ளார். இப்படியான நிலையில் நடிகர் சத்யராஜின் புதிய லுக் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. 

அவரது இந்த புதிய லுக் கூலி படத்திற்காக என்று தகவல்கள் கூறப்படுகின்றன. ஆனால் சத்யராஜின் இந்த புதிய லுக் ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் இந்தியில் அவர் நடிக்க இருக்கும் சிகந்தர் படத்திற்காக என்றும் கூறப்படுகிறது. இந்த புதிய லுக் ரஜினி படத்திற்கா அல்லது சல்மான் கான் படத்திற்கா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்  

தலைப்பு செய்திகள்

விஜய்யின் உடைந்த குடும்பத்தை காப்பாற்றியது யார்? - சங்கீதாவின் திடீர் முடிவுக்கு காரணம் என்ன? வெளியான உண்மைகள்
விஜய்யின் உடைந்த குடும்பத்தை காப்பாற்றியது யார்? - சங்கீதாவின் திடீர் முடிவுக்கு காரணம் என்ன? வெளியான உண்மைகள்
"விஜய், அஜித், விக்னேஷ்னு இருந்துச்சு.. காலம் கைவிட்ருச்சு.." நொந்து பேசிய முன்னாள் ஹீரோ!
‘வதந்தி 2’ எப்படி இருக்கு? சசிகுமாரின் விசாரணை கதை வென்றதா? – முழு விமர்சனம்
‘வதந்தி 2’ எப்படி இருக்கு? சசிகுமாரின் விசாரணை கதை வென்றதா? – முழு விமர்சனம்
Karthigai Deepam: ரேவதியை நெருங்குவானா கார்த்திக்? சதி செய்யும் சின்ன மாமியார்? அடுத்து நடப்பது என்ன?
Karthigai Deepam: ரேவதியை நெருங்குவானா கார்த்திக்? சதி செய்யும் சின்ன மாமியார்? அடுத்து நடப்பது என்ன?

வீடியோ

Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பாஜகவிற்கு பயந்து கூட்டத்தை புறக்கணித்த விஜய்.! இப்போ துரோகத்தை மறைக்க M.P.கூட்டமா.? திமுக கேள்வி
பாஜகவிற்கு பயந்து கூட்டத்தை புறக்கணித்த விஜய்.! இப்போ துரோகத்தை மறைக்க M.P.கூட்டமா.? திமுக கேள்வி
UDISE+: என்ன கொடுமை? வகுப்பறைகளில் ஏஐ; ஆனா 1 லட்சம்+ பள்ளிகளில் மாணவிகளுக்கு கழிப்பறையே இல்லை!
UDISE+: என்ன கொடுமை? வகுப்பறைகளில் ஏஐ; ஆனா 1 லட்சம்+ பள்ளிகளில் மாணவிகளுக்கு கழிப்பறையே இல்லை!
E20 பெட்ரோலால் கார்களுக்கு அதிக ஆபத்தா; பைக்குக்கா? துரு, மைலேஜ் பாதிப்பு உறுதி
E20 பெட்ரோலால் கார்களுக்கு அதிக ஆபத்தா; பைக்குக்கா? துரு, மைலேஜ் பாதிப்பு உறுதி
US Tariff on India: இந்தியாவிற்கு பெரிய ஆப்பாக வைத்த US நாடாளுமன்றம்; 100% வரி விதிக்க வழிவகுக்கும் மசோதா நிறைவேற்றம்
இந்தியாவிற்கு பெரிய ஆப்பாக வைத்த US நாடாளுமன்றம்; 100% வரி விதிக்க வழிவகுக்கும் மசோதா நிறைவேற்றம்
டேங்க் ஃபுல் செய்தால் 1200 கி.மீ; 30 மாதங்களில் 4 லட்சம் கார்கள் விற்பனையாகி சாதனை- எந்த கார் தெரியுமா?
டேங்க் ஃபுல் செய்தால் 1200 கி.மீ; 30 மாதங்களில் 4 லட்சம் கார்கள் விற்பனையாகி சாதனை- எந்த கார் தெரியுமா?
Lottery Martin's donation ; ”லாட்டரி கிங் மார்ட்டின்” ஒவ்வொரு கட்சிக்கும் இத்தனை கோடியில் நன்கொடை கொடுத்தாரா.!! ஷாக் கொடுக்கும் பட்டியல்
”லாட்டரி கிங் மார்ட்டின்” ஒவ்வொரு கட்சிக்கும் இத்தனை கோடியில் நன்கொடை கொடுத்தாரா.!! ஷாக் கொடுக்கும் பட்டியல்
China Firm Unhappy Leave: அட, இது லிஸ்ட்லயே இல்லையே.! மன வருத்தத்துல இருக்குற பணியாளர்களுக்கு விடுப்பு கொடுக்கும் கம்பெனி; எங்கே.?
அட, இது லிஸ்ட்லயே இல்லையே.! மன வருத்தத்துல இருக்குற பணியாளர்களுக்கு விடுப்பு கொடுக்கும் கம்பெனி; எங்கே.?
CM விஜய் விடுத்த அழைப்பு.! நிராகரித்த திமுக, அதிமுக,தேமுதிக.! அப்போ யார் தான் கலந்துக்குவாங்க.?
CM விஜய் விடுத்த அழைப்பு.! நிராகரித்த திமுக, அதிமுக,தேமுதிக.! அப்போ யார் தான் கலந்துக்குவாங்க.?
Embed widget