மேலும் அறிய

Actor Sathish: 'பேச சொன்னதை தான் நான் பேசினேன்...’ தர்ஷா குப்தா விவகாரம் பற்றி நடிகர் சதீஷ் விளக்கம்!

மூடர்கூடம் திரைப்பட இயக்குனர் நவீன், பாடகி சின்மயி, பாடகர் ஸ்ரீனிவாஸ் ஆகியோர் இது குறித்து காட்டமாக விமர்சித்திருந்த நிலையில் தற்போது நடிகர் சதீஷ் தனது சர்ச்சை கருத்துக்கு விளக்கம் அளித்துள்ளார்.

ஹாரர் காமெடி படமாக உருவாகியுள்ள 'ஓ மை கோஸ்ட்' படத்தின் ஆடியோ வெளியீட்டு  விழா கடந்த நவம்பர் 2 ஆம் தேதி சென்னை நந்தம்பாக்கம் ட்ரேட் சென்டரில் நடைபெற்றது. ஜாவித் ரியாஸ் இசை அமைத்துள்ள இந்த படத்தில் இந்த படத்தில் சதீஷ், யோகி பாபு, தர்ஷா குப்தா, ரமேஷ் திலக், ரவிமரியா, மொட்டை ராஜேந்திரன், ஜி.பி.முத்து உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.  ஓ மை கோஸ்ட்' படத்தின் ஆடியோ வெளியீட்டு  விழாவில் சன்னி லியோன், ஜி.பி.முத்து ஆகியோரின் மேடை பேச்சுக்கள் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது சர்ச்சை எழுந்துள்ளது. Actor Sathish: 'பேச சொன்னதை தான் நான் பேசினேன்...’ தர்ஷா குப்தா விவகாரம் பற்றி நடிகர் சதீஷ் விளக்கம்!

இந்நிகழ்ச்சியில் நடிகைகளில் சன்னி லியோன் புடவை அணிந்தும், தர்ஷா குப்தா மாடர்ன் உடையிலும் வந்ததை சுட்டிக்காட்டி நடிகர் சதீஷ் பேசினார். அப்போது பம்பாயில் இருந்து தமிழ் நாட்டுக்கு வந்த சன்னி லியோன் எப்படி டிரஸ் பண்ணியிருக்காங்க. கோயம்புத்தூர்ல இருந்து ஒரு பொண்ணு வந்துருக்கு தர்ஷா குப்தா என சொல்லிவிட்டு அவங்க எப்படி நம்ம கலாச்சாரத்துக்கு மாறிட்டாங்கன்னு சொல்ல வந்தேன் என அவர் பேசியிருந்தார். அவரின் இந்த பேச்சுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. மூடர்கூடம் திரைப்பட இயக்குனர் நவீன், பாடகி சின்மயி, பாடகர் ஸ்ரீனிவாஸ் ஆகியோர் இது குறித்து காட்டமாக விமர்சித்திருந்த நிலையில் தற்போது நடிகர் சதீஷ் தனது சர்ச்சை கருத்துக்கு விளக்கம் அளித்துள்ளார்.

தர்ஷா பேச சொன்னதை தான் நான் பேசினேன் !


Actor Sathish: 'பேச சொன்னதை தான் நான் பேசினேன்...’ தர்ஷா குப்தா விவகாரம் பற்றி நடிகர் சதீஷ் விளக்கம்!

நடிகர் சதீஷ் வீடியோ வெளியீட்டு இதுகுறித்து பேசியுள்ளார். அவர் பேசுகையில், சமீபத்தில் நடந்த 'ஓ மை கோஸ்ட்' திரைப்படத்தின் ஆடியோ விழாவில் தர்ஷா குப்தா எனது அருகில் அமர்ந்திருந்தார்.அப்போது தர்ஷா என்னிடம் கூறினார், "நான் சன்னி லியோனை விட மாடர்னாக டிரஸ் பண்ணிட்டு வந்திருக்கிறேன். அவங்க எப்படி வராங்க என்று பார்ப்போம்" என்று சொன்னார்கள். சன்னிலியோன் பட்டு புடவை கட்டிக்கொண்டு வந்திருந்தார்கள். அதை பார்த்த தர்ஷா, அப்செட் ஆகி என்னிடம் கூறினார்.  "என்னங்க..நான் இப்படி வந்திருக்கிறேன். அவங்க புடவை கட்டிகிட்டு வந்து இருக்காங்க" என்று கூறினார். அதைக் கேட்டு நான் 'நல்ல பாயிண்ட் இது' என்று கூறினேன். இதை போய் மேடையில் பேசும்போது சொல்லுங்க என்று சொன்னார்கள். இதை தான் நான் மேடையில் பேசினேன்.

ஜாலியாக நடந்தது:Actor Sathish: 'பேச சொன்னதை தான் நான் பேசினேன்...’ தர்ஷா குப்தா விவகாரம் பற்றி நடிகர் சதீஷ் விளக்கம்!

ஆனால் அதை "உடை உடுத்துவது பெண்களின் உரிமை; சுதந்திரம்" என்றது போல் சொல்கிறார்கள். அந்த கருத்து உண்மைதான்… பெண்களும் ஆண்களும் உடை உடுத்துவது அவரவர்களின் சுதந்திரம் தான். நான் பேசிய கருத்து, இரண்டு நண்பர்கள் சாதாரணமாக பேசி கூறிய கருத்துதானே தவிர, வேறு எதுவும் இல்லை. அதுவும் தர்ஷா சொல்லுங்க என்று கூறி சொல்லிய விஷயம் தான். அதை நிறைய பேர் சீரியஸாக எடுத்துக் கொண்டு பொதுவாக அனைவரையும் கூறியது போல் எடுத்துக் கொண்டார்கள். அப்படி கிடையாது. மூடர்கூடம் இயக்குனர் நவீன், பாடகர் சீனிவாஸ், இசை பாடகி சின்மயி என திரைத்துறையில் இருந்தும் சிலர் கமெண்ட்டுகளில் குறிப்பிட்டிருந்தனர். அவர்களுக்கும் நான் சொல்லுகிறேன். "இது ஜாலியாக நடந்ததுதானே தவிர.வேறொன்றுமில்லை." மேலும் சிலர் என்னை செல்போனில் அழைத்து,  இப்படி பேசி நீங்களே காசு கொடுத்து எதிர்ப்பு தெரிவிக்க சொல்லி படத்தை பிரமோட் செய்கிறீர்களா? என்று கேட்டார்கள்..அதெல்லாம் எதுவும் கிடையாது. அவை அனைத்துமே அவர்களின் தனிப்பட்ட கருத்துக்கள் தான். அதை நான் முற்றிலுமாக ஏற்கிறேன்.


Actor Sathish: 'பேச சொன்னதை தான் நான் பேசினேன்...’ தர்ஷா குப்தா விவகாரம் பற்றி நடிகர் சதீஷ் விளக்கம்!

 நியாயமான கருத்து தான். ஆனால் இது வேண்டும் என்று சொல்லப்படவில்லை. வேடிக்கையாக பேசப்பட்டது தான். அவர்களின் (தர்ஷா) சம்மதத்துடன் கூறிய ஒன்றுதான்.

நல்ல விஷயங்களையும் பின்பற்றுங்கள்!

இந்த விஷயத்திற்கு இவ்வளவு ரியாக்ட் செய்வதை நான் நேர்மறையாகவே எடுத்துக் கொள்கிறேன். ஆனால் நான் நிறைய நல்ல விஷயங்களையும் பேசி இருக்கிறேன். யாரும் புகைபிடிக்க வேண்டாம், மது அருந்த வேண்டாம் என்று கூறி இருக்கிறேன். இதை பார்ப்பவர்கள் அதையும் பின்பற்றினால் நன்றாக இருக்கும் என்று நினைக்கிறேன். கெட்ட விஷயங்களுக்கு ரியாக்ட் செய்வது போல், நல்ல விஷயங்களையும் பின்பற்றினால் ரொம்ப சந்தோசமாக இருக்கும் என்று கூறியுள்ளார் நடிகர் சதீஷ்.

 

 

தலைப்பு செய்திகள்

விஜய்யின் உடைந்த குடும்பத்தை காப்பாற்றியது யார்? - சங்கீதாவின் திடீர் முடிவுக்கு காரணம் என்ன? வெளியான உண்மைகள்
விஜய்யின் உடைந்த குடும்பத்தை காப்பாற்றியது யார்? - சங்கீதாவின் திடீர் முடிவுக்கு காரணம் என்ன? வெளியான உண்மைகள்
"விஜய், அஜித், விக்னேஷ்னு இருந்துச்சு.. காலம் கைவிட்ருச்சு.." நொந்து பேசிய முன்னாள் ஹீரோ!
‘வதந்தி 2’ எப்படி இருக்கு? சசிகுமாரின் விசாரணை கதை வென்றதா? – முழு விமர்சனம்
‘வதந்தி 2’ எப்படி இருக்கு? சசிகுமாரின் விசாரணை கதை வென்றதா? – முழு விமர்சனம்
Karthigai Deepam: ரேவதியை நெருங்குவானா கார்த்திக்? சதி செய்யும் சின்ன மாமியார்? அடுத்து நடப்பது என்ன?
Karthigai Deepam: ரேவதியை நெருங்குவானா கார்த்திக்? சதி செய்யும் சின்ன மாமியார்? அடுத்து நடப்பது என்ன?

வீடியோ

Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பாஜகவிற்கு பயந்து கூட்டத்தை புறக்கணித்த விஜய்.! இப்போ துரோகத்தை மறைக்க M.P.கூட்டமா.? திமுக கேள்வி
பாஜகவிற்கு பயந்து கூட்டத்தை புறக்கணித்த விஜய்.! இப்போ துரோகத்தை மறைக்க M.P.கூட்டமா.? திமுக கேள்வி
E20 பெட்ரோலால் கார்களுக்கு அதிக ஆபத்தா; பைக்குக்கா? துரு, மைலேஜ் பாதிப்பு உறுதி
E20 பெட்ரோலால் கார்களுக்கு அதிக ஆபத்தா; பைக்குக்கா? துரு, மைலேஜ் பாதிப்பு உறுதி
US Tariff on India: இந்தியாவிற்கு பெரிய ஆப்பாக வைத்த US நாடாளுமன்றம்; 100% வரி விதிக்க வழிவகுக்கும் மசோதா நிறைவேற்றம்
இந்தியாவிற்கு பெரிய ஆப்பாக வைத்த US நாடாளுமன்றம்; 100% வரி விதிக்க வழிவகுக்கும் மசோதா நிறைவேற்றம்
டேங்க் ஃபுல் செய்தால் 1200 கி.மீ; 30 மாதங்களில் 4 லட்சம் கார்கள் விற்பனையாகி சாதனை- எந்த கார் தெரியுமா?
டேங்க் ஃபுல் செய்தால் 1200 கி.மீ; 30 மாதங்களில் 4 லட்சம் கார்கள் விற்பனையாகி சாதனை- எந்த கார் தெரியுமா?
Lottery Martin's donation ; ”லாட்டரி கிங் மார்ட்டின்” ஒவ்வொரு கட்சிக்கும் இத்தனை கோடியில் நன்கொடை கொடுத்தாரா.!! ஷாக் கொடுக்கும் பட்டியல்
”லாட்டரி கிங் மார்ட்டின்” ஒவ்வொரு கட்சிக்கும் இத்தனை கோடியில் நன்கொடை கொடுத்தாரா.!! ஷாக் கொடுக்கும் பட்டியல்
China Firm Unhappy Leave: அட, இது லிஸ்ட்லயே இல்லையே.! மன வருத்தத்துல இருக்குற பணியாளர்களுக்கு விடுப்பு கொடுக்கும் கம்பெனி; எங்கே.?
அட, இது லிஸ்ட்லயே இல்லையே.! மன வருத்தத்துல இருக்குற பணியாளர்களுக்கு விடுப்பு கொடுக்கும் கம்பெனி; எங்கே.?
CM விஜய் விடுத்த அழைப்பு.! நிராகரித்த திமுக, அதிமுக,தேமுதிக.! அப்போ யார் தான் கலந்துக்குவாங்க.?
CM விஜய் விடுத்த அழைப்பு.! நிராகரித்த திமுக, அதிமுக,தேமுதிக.! அப்போ யார் தான் கலந்துக்குவாங்க.?
Madurai ; 60 கோடி மீனாட்சி கோயில் சொத்து மோசடி: பத்திரப்பதிவு கும்பல் வலையில் மேலும் ஒருவர்!
Madurai ; 60 கோடி மீனாட்சி கோயில் சொத்து மோசடி: பத்திரப்பதிவு கும்பல் வலையில் மேலும் ஒருவர்!
Embed widget