மேலும் அறிய

KULANTHAI C/O KAVUNDAMPALAYAM: சர்ச்சையை கிளப்பிய டீசர்! என்ன சொல்ல வருகிறார் ரஞ்சித்? வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்!

KULANTHAI C/O KAVUNDAMPALAYAM: நடிகர் ரஞ்சித் இயக்கி நடித்துள்ள படம் குழந்தை C/O கவுண்டம்பாளையம். இப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியானது.

தமிழ் சினிமாவில் பலதரப்பட்ட மக்களின் வாழ்க்கையைப் பேசும் படங்கள் வெளியாகி மக்களிடம் வரவேற்பைப் பெற்றுள்ளது மட்டும் இல்லாமல் தமிழ்நாடு அரசு பல நல்லதிட்டங்களை நடைமுறைப்படுத்தவும் காரணமாக இருந்துள்ளது. குறிப்பாக சூர்யா, மணிகண்டன் நடிப்பில் வெளியான “ஜெய் பீம்” திரைப்படம், பழங்குடியின மக்களின் வாழ்வியலையும் அவர்களுக்கு அரசு அதிகாரிகளால் நடத்தப்பட்ட அநீதிகளையும் எடுத்துரைக்கும் விதமாக வெளிவந்தது. இது உண்மைக் நிகழ்வை மையப்படுத்திய படமாக இருந்தாலும், இதனால் மக்கள் மத்தியில் ஏற்பட்ட தாக்கம் ஆட்சியாளர்களையும் விட்டு வைக்கவில்லை. இதனால் பழங்குடியின மக்களின் வாழ்க்கை மேம்பாட்டிற்கு உதவும் பல்வேறு நல்ல திட்டங்களை நடைமுறைப்படுத்தியது. 

திரைப்படங்களினால் பல்வேறு சமூக மாற்றங்கள் நடந்துவரும் இந்த நவீன உலகில் மிகவும் பிற்போக்குத்தனமான திரைப்படங்களும் வெளிவருவதை பார்க்கத்தான் முடிகின்றது. அந்த வரிசையில் இடம்பிடிக்க தயாராக உள்ள குழந்தை C/O கவுண்டம்பாளையம். இந்த படத்தினை இயக்கி நடித்துள்ளார் நடிகர் ரஞ்சித். இந்த படத்தின் டீசர் கடந்த 16ஆம் தேதி அதாவது மாட்டுப்பொங்கல் தினத்தன்று வெளியாகி உள்ளது. மொத்தம் 30 நொடிகளில் வெளியிடப்பட்டுள்ள இந்த படத்தின் டீசரில் இடம் பெற்றுள்ள வசனங்கள், “நாமெல்லாம் மாட்டுக்கறி திங்கறவங்கடா. ஒருமுறை ருசி கண்டுட்டா நம்ம காலடியிலேயே கெடப்பாளுக, நானு ஓசிக மாநிலத் தலைவர், காதலிக்கும்போது சாதி தேவையில்லை, ரிஜிஸ்ட்டர் ஆஃபீஸ் போகும்போது தேவையில்லை. ஏன் பெத்த அப்பா அம்மாவே தேவையில்ல.. சமத்துவம்” இந்த வசனங்கள்தான். 

டீசர் வெளியீடின்போது நடிகர் ரஞ்சித், இந்த படம் நாடகக் காதல் குறித்துதான் இந்த படம் பேசுகின்றது. இந்த படத்தின் கதை 20 ஆண்டுகளாக எனது மனதில் ஓடிக்கொண்டே இருந்த கதைதான். என்னை சுற்றியுள்ளவர்களுக்கு நடந்ததை வைத்து இந்த படத்தினை எடுத்துள்ளேன் எனக் கூறினார்.

டீசரில் இடம் பெற்றுள்ள வசனங்கள் மூலம் இந்த படத்தின் இயக்குநரும் நடிகருமான ரஞ்சித் கூற வருவதை ரசிகர்களால் புரிந்துகொள்ள முடிந்தாலும், அவரே இந்தபடத்தின் கதை என்பது ” நாடகக்காதல்” எனக் கூறியுள்ளார். நாடகக் காதல் என்ற ஒற்றை வார்த்தையை எடுத்துக்கொண்டு அவர் பேசியுள்ளது முழுக்க முழுக்க விஷமத்தனமான கருத்துக்களைக் கக்கியுள்ளார் என்றே மக்களால் விமர்சிக்கப்படுகிறது. இதற்கு முன்னர் காதலித்தவர்கள் தாங்களாகவே பிரிவதை வெளிக்காட்டி ரசிகர்கள் மத்தியில் பெறும் வரவேற்பைப் பெற்று இன்றுவரை பாராட்டைப் பெற்றுள்ள படங்கள் உள்ளன. உதாரணத்திற்கு நாடோடிகள், ஆதலால் காதல் செய்வீர் போன்றவை. ஆனால் ஒரு குறிப்பிட்ட சமூக மக்களை குற்றவாளிகளாக சித்தரிக்க முயற்சி செய்யும் போக்குகளின் ஒருபகுதியாகத்தான் இந்த படத்தின் டீசர் அமைந்துள்ளது. 

இந்த படத்தின் டீசரில் மாட்டுக்கறி, ஓசிக போன்ற வார்த்தைகள் பட்டியலின சமூகத்தையும், தமிழ்நாடு அரசியல் களத்தில் முக்கிய அங்கம் வகிக்கும் ஒரு கட்சியையும் அந்தக் கட்சியின் தலைவரையும் குறிவைத்து காட்சிப்படுத்தப்பட்டுள்ளதாக விமர்சகர்கள் கூறுகின்றனர். விமர்சகர்கள் கூறுவது உண்மையாக இருந்தால் படத்தின் இயக்குநர் ரஞ்சித் இந்த படம் ஒரு உண்மைக் கதையை மையப்படுத்தி எடுக்கப்பட்டது எனக் கூறி, நேரடியாகவே அந்த சமூகத்தின் பெயரையும் அந்த கட்சியின் பெயரையும் கட்சியின் தலைவரின் பெயரையும் குறிப்பிடலாமே? ஆனால் படத்தின் டீசர் தொடங்கும்போது இது உண்மை சம்பவங்ங்களை மையப்படுத்தி எடுக்கப்பட்ட திரைப்படம் என குறிப்பிடவில்லை. இதன் மூலம் தெரியவருவது, நடிகர் ரஞ்சித் இயக்குநர் அவதாரம் எடுக்க ஒரு சமூக மக்களையும் ஒரு அரசியல் கட்சியையும் அதன் தலைவரையும் வேண்டுமென்றே இட்டுக்கட்டி குளிர்காய நினைக்கின்றார் என்றே தெரிகிறது. 

மேலும் இந்த டீசரில் இடம்பெற்றுள்ள முதல் வசனமான நாமெல்லாம் மாட்டுக்கறி திங்கறவங்கடா. ஒருமுறை ருசி கண்டுட்டா நம்ம காலடியிலேயே கெடுப்பாளுக எனும் வசனத்தின் மூலம் பெண்களையே தரக்குறைவாக சித்தரித்துள்ளது அம்பலமாகின்றது. அதாவது அந்த வசனம் மாட்டுக்கறி சாப்பிடும் ஒருவருடன் உடலறவு கொள்ளும் பெண் உடலுறவுக்காகவே அந்த நபரை நாடியிருப்பார் என பெண்களை மிகவும் கொச்சைப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது. பீப் பாடலுக்கு கொதித்தெழுந்த மாதர் சங்கங்கள் இந்த டீசரைக் கவனிக்கவில்லையா என்ற கேள்வி எழாமல் இல்லை. 

உள்ளதைச் சொல்கின்றேன்,  என்னைச் சுற்றியுள்ளவர்களுக்கு நடந்ததை படமாக்கியுள்ளேன் எனக் கூறி நடிகர் ரஞ்சித் செய்ய முயல்வது இருநபர்களுக்கு இடையே நடந்ததை ஒட்டுமொத்தமாக இரண்டு சமூகங்களை எதிரெதிர் துருவங்களில் நிறுத்தி அவர்களை எதிரிகளாக மாற்ற முயல்வது அப்பட்டமாகத் தெரிகின்றது.  ஏற்கனவே குறிப்பிட்டதைப் போல் காதலர்கள் பிரிவை கதைக்களமாகக் கொண்டு அனைத்து தரப்பு மக்களும் புரிந்து கொள்ளும் வகையில் தமிழ் சினிமாவில் பல்வேறு திரைப்படங்கள் வெளிவந்துள்ளது. அதைவிடுத்து நடிகர் ரஞ்சித் தேர்ந்தெடுத்துள்ள திரைக்கதை அவரின் காழ்புணர்ச்சியினை தோலுரித்துக் காட்டுகின்றது. 

இப்படத்தின் இயக்குநரும் நடிகருமான ரஞ்சித் கடந்த சில மாதங்களுக்கு முன்னதாக மாநில தலைநகர் தொடங்கி மாவட்டத் தலைநகர் வரை ஹேப்பி ஸ்டீரீட்ஸ் மிகவும் பிற்போக்குத்தனமானது என்ற கருத்தினை தெரிவித்திருந்தார். இதற்கு நெட்டிசன்கள் இவரை பூமர் என கமெண்ட் செக்ஸனில் தெரிவித்திருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

ரஷ்ய ராணுவத்தில் பணியாற்றிய 12 பேர் பலி; 16 பேரை காணவில்லை - இந்திய வெளியுறவுத்துறை தகவல்
ரஷ்ய ராணுவத்தில் பணியாற்றிய 12 பேர் பலி; 16 பேரை காணவில்லை - இந்திய வெளியுறவுத்துறை தகவல்
மாறி மாறி தூதுவிடும் ஓபிஎஸ்! - கண்டுகொள்வாரா இபிஎஸ்! - அதிமுகவின் புது வியூகம் எடுபடுமா?
மாறி மாறி தூதுவிடும் ஓபிஎஸ்! - கண்டுகொள்வாரா இபிஎஸ்! - அதிமுகவின் புது வியூகம் எடுபடுமா?
SVAMITVA: சொத்து - நிலப் பிரச்னைக்கு தீர்வு: ஸ்வமித்வா திட்டத்தை அறிமுகம் செய்த அரசு: திட்டம் சொல்வது என்ன?
சொத்து - நிலப் பிரச்னைக்கு தீர்வு: ஸ்வமித்வா திட்டத்தை அறிமுகம் செய்த அரசு: திட்டம் சொல்வது என்ன?
"குண்டும் குழியாக சாலை அமைத்தால் சிறை" கொதித்த மத்திய அமைச்சர் நிதின் கட்காரி!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

கையை விரித்த கூட்டணியினர்! கழற்றி விடப்பட்ட காங்கிரஸ்! என்ன செய்யப் போகிறார் ராகுல்?BJP state executive: மாணவிக்கு பாலியல் தொல்லை.. தலைமறைவான BJP  நிர்வாகி! தட்டித்தூக்கிய காவல் துறை!Velumani Vs Munusamy | கே.பி.முனுசாமி Vs எஸ்.பி.வேலுமணி.. பிரிந்து நிற்கும் MLA-க்கள்! தலைவலியில் EPSVijay Vs Ajith : அஜித்தை கண்டுக்காத விஜய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ரஷ்ய ராணுவத்தில் பணியாற்றிய 12 பேர் பலி; 16 பேரை காணவில்லை - இந்திய வெளியுறவுத்துறை தகவல்
ரஷ்ய ராணுவத்தில் பணியாற்றிய 12 பேர் பலி; 16 பேரை காணவில்லை - இந்திய வெளியுறவுத்துறை தகவல்
மாறி மாறி தூதுவிடும் ஓபிஎஸ்! - கண்டுகொள்வாரா இபிஎஸ்! - அதிமுகவின் புது வியூகம் எடுபடுமா?
மாறி மாறி தூதுவிடும் ஓபிஎஸ்! - கண்டுகொள்வாரா இபிஎஸ்! - அதிமுகவின் புது வியூகம் எடுபடுமா?
SVAMITVA: சொத்து - நிலப் பிரச்னைக்கு தீர்வு: ஸ்வமித்வா திட்டத்தை அறிமுகம் செய்த அரசு: திட்டம் சொல்வது என்ன?
சொத்து - நிலப் பிரச்னைக்கு தீர்வு: ஸ்வமித்வா திட்டத்தை அறிமுகம் செய்த அரசு: திட்டம் சொல்வது என்ன?
"குண்டும் குழியாக சாலை அமைத்தால் சிறை" கொதித்த மத்திய அமைச்சர் நிதின் கட்காரி!
மாமனார் மருமகன் இடையே மோதல்; அம்மிக்கல்லில் விழுந்து உயிரிழந்த மாமனார் - சீர்காழியில் சோகம்
மாமனார் மருமகன் இடையே மோதல்; அம்மிக்கல்லில் விழுந்து உயிரிழந்த மாமனார் - சீர்காழியில் சோகம்
அடடே.. ஆசிரியர்களுக்கு இத்தனை நாட்கள் லீவா? யுஜிசி வரைவு அறிக்கை சொல்வது என்ன?
அடடே.. ஆசிரியர்களுக்கு இத்தனை நாட்கள் லீவா? யுஜிசி வரைவு அறிக்கை சொல்வது என்ன?
கரூர்: சட்டவிரோதமாக சேவல் சண்டை: 26 பேர் கைது! கட்டுக்கட்டாக சிக்கிய ரூபாய் நோட்டுகள்!
கரூர்: சட்டவிரோதமாக சேவல் சண்டை: 26 பேர் கைது! கட்டுக்கட்டாக சிக்கிய ரூபாய் நோட்டுகள்!
Suchitra on Ajith; அஜித்தை சீண்டிய சுசித்ரா... கொந்தளிக்கும் ரசிகர்கள்!! அப்படி என்ன சொன்னாங்க.?
அஜித்தை சீண்டிய சுசித்ரா... கொந்தளிக்கும் ரசிகர்கள்!! அப்படி என்ன சொன்னாங்க.?
Embed widget