மேலும் அறிய

சிவாஜிக்கு பிறகு விஜயிடம் தான் அந்த திறமை இருக்கிறது...நடிகர் ரமேஷ் கண்ணா பாராட்டு

ஃபரண்ட்ஸ் படத்தின் ரீரிலீஸ் டிரைலர் வெளியீட்டு விழாவில் நடிகர் ரமேஷ் கண்ணா விஜயின் திறமையை நடிகர் திலகம் சிவாஜி கணேசனோடு ஒப்பிட்டு பேசினார்

2001ம் ஆண்டில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற 'ப்ரண்ட்ஸ்' திரைப்படம்  24 ஆண்டுகளுக்கு பின்னர் 4K தொழில்நுட்பத்தில் புதுப்பிக்கப்பட்டு வரும் 21ம் தேதி முதல் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது. இப்படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது.

ஃபரண்ட்ஸ் ரீரிலீஸ்

இவ்விழாவில் இப்படத்தை வெளியிடும் ஜாக்குவார் ஸ்டுடியோஸ் தயாரிப்பாளர் வினோத் ஜெயின், நடிகர் விஜய் சார்பில் தமிழக வெற்றி கழகத்தின் சென்னை புறநகர் மாவட்ட செயலாளர் இசிஆர் பி. சரவணன், சூர்யா சார்பில் அகில இந்திய சூர்யா நற்பணி இயக்கத்தின் செயல் தலைவர் ஆர். ஏ. ராஜா, நடிகர் ரமேஷ் கண்ணா, இயக்குநர்கள் பேரரசு, கௌதம் ராஜ், பொன் குமரன், கணேஷ் பாபு, தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் 'ப்ரண்ட்ஸ்'  படத்தை விநியோகிக்கும் விநியோகஸ்தர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். 

ஃபரண்ட்ஸ் படம் பற்றி ரமேஷ் கண்ணா

ப்ரண்ட்ஸ் படத்தை பொருத்தவரை இயக்குநர் ரசித்து ரசித்து உருவாக்கினார். அவர் ஒரு சிறந்த நகைச்சுவை உணர்வு மிக்கவர். அது போன்றதொரு சிறந்த இயக்குநர் தற்போது இல்லாதது நமக்கு மிகப்பெரிய இழப்புதான். நேசமணி அவர் உருவாக்கிய அற்புதமான கதாபாத்திரம். இந்த கதாபாத்திரத்தை மலையாளத்தில் சீனிவாசன் நடித்திருப்பார்.  இந்தப் படம் 24 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் வெளியாகிறது அதற்கு ஒரு ட்ரெய்லர் வெளியீட்டு விழா நடைபெறுகிறது என்றால் நமக்கெல்லாம் ஆண்டவனின் ஆசி இருக்கிறது என்றுதான் அர்த்தம்.  

நாங்கள் சினிமாவில் அறிமுகமாகும் போது எங்களுக்கு பிடித்த காமெடி படம் எது, என்று கேட்டால்.. நாங்கள் 'காதலிக்க நேரமில்லை', 'ஊட்டி வரை உறவு' ஆகிய படங்களை சொல்வோம். இந்தப் படங்களை எப்போது பார்த்தாலும் சிரிக்கலாம். அதேபோல் 'ப்ரண்ட்ஸ்' படத்தை எப்போது பார்த்தாலும் சிரிக்கலாம். இதனால் இந்த படம் ரீ ரிலீசிலும் மிகப்பெரிய வெற்றி பெறும். 

படப்பிடிப்பில் சிரித்துக்கொண்டே இருந்த விஜய் சூர்யா

இந்தப் படத்தில் இடம்பெறும் கடிகாரம் உடையும் காட்சியை படமாக்கும் போது விஜய்யும், சூர்யாவும் சிரித்து விடுவார்கள். மீண்டும் அந்த காட்சியை படமாக்குவதற்கு அரை மணி நேரத்திற்கு மேலாகும். மீண்டும் படமாக்கும் போது 'ஐயோ நான் பிடிக்கலடா' என்ற டயலாக் சொல்லும்போது மீண்டும் விஜயும், சூர்யாவும் சிரித்து விடுவார்கள். படத்தை நீங்கள் உற்றுப்பார்த்தால் விஜயும், சூர்யாவும் திரும்பி நின்று கொண்டு சிரிப்பார்கள். 

சிவாஜிக்கு பின் விஜயிடம் தான் அந்த திறமை இருக்கு

விஜய் படப்பிடிப்புக்கு தளத்திற்கு வந்தால் அமைதியாக இருப்பார். ஆனால் நடிக்கும் போது அற்புதமாக நடித்து அசத்தி விடுவார். அது அவருக்கான கடவுள் கொடுத்த பரிசு. அதேபோல் டப்பிங்கிலும் அவர் நடித்த காட்சிகளை ஒரு முறை தான் பார்ப்பார். அதன் பிறகு எந்த ஒரு பிசிறு இல்லாமல் கச்சிதமாக பேசி விடுவார். எனக்குத் தெரிந்தவரை நடிகர் திலகம் சிவாஜி கணேசன் தான் இது போல் அவர் நடித்த காட்சிகளை ஒரு முறை பார்த்துவிட்டு டப்பிங்கில்  முதல் முறையிலேயே கச்சிதமாக பேசி விடுவார். அந்த வகையில் விஜய் அற்புதமான நடிகர் மற்றும் அற்புதமான டப்பிங் ஆர்ட்டிஸ்ட். அதே போல் படப்பிடிப்பு தளங்களில் ஹீரோ என்ற பந்தா எதுவும் இல்லாமல் எங்களுடன் சகஜமாக பழகுவார். 

தலைப்பு செய்திகள்

AK 64 Title: அஜித்தின் புதிய அவதாரம்... ஏகே 64 படத்தின் டைட்டில் டேர்டெவில் - இன்னொரு மங்காத்தாவா?
AK 64 Title: அஜித்தின் புதிய அவதாரம்... ஏகே 64 படத்தின் டைட்டில் டேர்டெவில் - இன்னொரு மங்காத்தாவா?
பிறந்தநாளை ஏன் கொண்டாடவில்லை? மனம் திறந்த சூர்யா...
பிறந்தநாளை ஏன் கொண்டாடவில்லை? மனம் திறந்த சூர்யா...
'விஸ்வநாத் & சன்ஸ்' படத்தில் தமிழ் டப்பிங் பேசிய மமிதா... மேடையில் சூர்யா பகிர்ந்த தகவல்
'விஸ்வநாத் & சன்ஸ்' படத்தில் தமிழ் டப்பிங் பேசிய மமிதா... மேடையில் சூர்யா பகிர்ந்த தகவல்
5,000 பேரின் ரத்ததானம் முதல் 40,000 பேருக்கான நலத்திட்ட உதவி வரை... ரசிகர்களை பாராட்டிய சூர்யா
5,000 பேரின் ரத்ததானம் முதல் 40,000 பேருக்கான நலத்திட்ட உதவி வரை... ரசிகர்களை பாராட்டிய சூர்யா

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CTR Nirmal Kumar: ”உதயநிதி பேச்சை திமுகவினர் வீட்டில் போட்டு காட்ட வேண்டும்” - தவெக அமைச்சர் காட்டம்
”உதயநிதி பேச்சை திமுகவினர் வீட்டில் போட்டு காட்ட வேண்டும்” - தவெக அமைச்சர் காட்டம்
Udhayanidhi Arrest : உதயநிதியை கைது செய்ய இது தான் காரணம்.! தவெக புகாரில் இருப்பது என்ன.?
உதயநிதியை கைது செய்ய இது தான் காரணம்.! தவெக புகாரில் இருப்பது என்ன.?
Kanimozhi: ஆபாச பேச்சு விவகாரம்; உதயநிதி ஸ்டாலின் கைது- கனிமொழி சொன்னது என்ன தெரியுமா?
Kanimozhi: ஆபாச பேச்சு விவகாரம்; உதயநிதி ஸ்டாலின் கைது- கனிமொழி சொன்னது என்ன தெரியுமா?
Udhayanidhi Arrest : சிஎம் விஜய் போட்ட உத்தரவு.? உதயநிதியை கைது செய்ய வீட்டிற்குள் சென்ற போலீஸ்
சிஎம் விஜய் போட்ட உத்தரவு.? உதயநிதியை கைது செய்ய வீட்டிற்குள் சென்ற போலீஸ்
Udhayanidhi Stalin: உதயநிதி கைது.. கொண்டாட்டத்தில் தமிழக பாஜக.. தலைவர்கள் மகிழ்ச்சி பதிவு!
Udhayanidhi Stalin: உதயநிதி கைது.. கொண்டாட்டத்தில் தமிழக பாஜக.. தலைவர்கள் மகிழ்ச்சி பதிவு!
உதயநிதியை முடக்கி சட்டப்பேரவையை நடத்த திட்டம்.! விஜய் அரசின் நடவடிக்கையை விளாசிய இபிஎஸ்
உதயநிதியை முடக்கி சட்டப்பேரவையை நடத்த திட்டம்.! விஜய் அரசின் நடவடிக்கையை விளாசிய இபிஎஸ்
Maruti Suzuki: லிட்டருக்கு 35 கி.மீ. மைலேஜ்; மாருதியின் புதிய ஹைபிரிட் கார்: நடுத்தர மக்களின் கனவு!
Maruti Suzuki: லிட்டருக்கு 35 கி.மீ. மைலேஜ்; மாருதியின் புதிய ஹைபிரிட் கார்: நடுத்தர மக்களின் கனவு!
LIVE | Kerala Lottery Result Today (04.08.2026): கேரளா ஸ்த்ரீ சக்தி லாட்டரியில் இன்று குலுக்கல்; கோடிகளை வெல்வது யார்?
LIVE | Kerala Lottery Result Today (04.08.2026): கேரளா ஸ்த்ரீ சக்தி லாட்டரியில் இன்று குலுக்கல்; கோடிகளை வெல்வது யார்?
Embed widget