மேலும் அறிய

Rajinikanth speech: ‘தளபதி ரஜினி சம்பவம்’.. கமல் முன் பொ.செ மேடையை அலறவிட்ட ரஜினி.. ஆர்ப்பரித்த அரங்கம்..!

பொன்னியின் செல்வன் இசை வெளியீட்டு விழாவில் நடிகர் ரஜினிகாந்த் ‘தளபதி’ படத்தில் இயக்குநர் மணிரத்னத்துடன் இணைந்து பணியாற்றியது தொடர்பான அனுபவங்களை பகிர்ந்தார்.

 ‘பொன்னியின் செல்வன்’ இசை வெளியீட்டு விழாவில் நடிகர் ரஜினிகாந்த்  ‘தளபதி’ படத்தில் இயக்குநர் மணிரத்னத்துடன் இணைந்து பணியாற்றியது  தொடர்பான அனுபவங்களை பகிர்ந்தார்.  

மணிரத்னம் இயக்கத்தில் வருகிற செப்டம்பர் 30 ஆம் வெளியாக உள்ள திரைப்படம்  ‘பொன்னியின் செல்வன்’.  இந்தத்திரைப்படத்தின் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா  நேற்று சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் வைத்து பிரமாண்டமாக நடைபெற்றது.  நடிகர்கள் கமல்ஹாசன் மற்றும் ரஜினிகாந்த் ஆகியோர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர். மேடையில் பேசிய ரஜினிகாந்த்   ‘தளபதி’  படத்தில் மணிரத்னத்துடன் பணியாற்றிய அனுபவத்தை சுவாரசிமான கதையாக பகிர்ந்தார்.  


Rajinikanth speech: ‘தளபதி ரஜினி சம்பவம்’.. கமல் முன் பொ.செ மேடையை அலறவிட்ட ரஜினி.. ஆர்ப்பரித்த அரங்கம்..!

அவர் பேசும் போது, “அப்போது இந்தி படத்தில் நடித்து கொண்டிருந்தேன். அதன் பிறகு இந்த படத்தில் நடிக்க ஆரம்பித்தேன். 
மணி சாருடன் முதல் காம்பினேசன். முதல் நாள் படபிடிப்புக்கு சென்று, நல்லா பளிச்சின்னு மேக்கப் போட சொன்னேன். ஏன்னா..மம்முட்டி ஆப்பிள் மாதிரி இருப்பாருயில்லையா.. 

என்னோட காஸ்டியுமை கொண்டு வர சொன்னேன். பார்த்தா லூசா பேண்ட், பனியன், சப்பல் வந்தது. அதெல்லாம் வேண்டாம் என்று சொல்லி.. இதெல்லாம் நமக்கு சரிப்பட்டு வராது அப்படின்னு நான் வழக்கமாக அணியும் பேண்ட், சர்ட் அப்புறம் நான் போட்டிருந்த வாக்கிங் ஷூ அணிந்து கொண்டு படப்பிடிப்பு தளத்துக்கு போனேன். 

மணி சார் என்னை பாத்ததும்.. என்ன இன்னும் டிரஸ் சேஞ்ச் பண்ணலையா.. பண்ணிட்டு வந்திருங்ன்னு சொன்னார். மாத்தியாச்சி சார்.. இதுதான்னு சொன்னேன். அவரும் சரின்னு சொல்லிட்டு.. அவர் டெக்னீஷியன்ஸ் கூட டிஸ்கஸ் பண்ணிகிட்டிருந்தார். ரொம்ப நேரமாச்சி..  வெயிட் பண்ணிகிட்டே இருந்தேன். ஷூட்டிங் ஆரம்பிக்கவே இல்ல. 


Rajinikanth speech: ‘தளபதி ரஜினி சம்பவம்’.. கமல் முன் பொ.செ மேடையை அலறவிட்ட ரஜினி.. ஆர்ப்பரித்த அரங்கம்..!

முதல் நாள் ஷூட்டிங் ஷோபனாக் கூட. ஷோபனா எல்லாரையும் கலாக்கிற பார்ட்டி வேற.. அவர்கிட்ட கேட்டா சரியா தெரியும்ன்னு நினைச்சி.. என்ன நடக்குது.. இன்னும் ஒரு காட்சி எடுக்கலைன்னு கேட்டேன்.அவரும் விசாரிச்சிகிட்டு வந்து.. என்னாச்சி.. டைரக்ட்டருக்கும் உங்களுக்கும் ஏதாவது பிரச்னையா.. இன்னைக்கு ஷூட்டிங் முதல் நாள்.. வந்ததுக்கு ஷூட்டிங் முடிச்சி அனுப்பி வைச்சிகிட்டு.. அப்புறம் ஹீரோவ கமல போட்டுடலாம்ன்னு பேசிகிட்டிருக்காங்கன்னு சொன்னாங்க.. அப்பத்தான் புரிஞ்சது.. 

காரணம், நம்ம இஷ்டத்துக்கு மேக்கப்பும் டிரஸ், ஷூவெல்லாம் போட்டு கிட்டு வந்ததுன்னு..
முதல் நாளே எங்கிட்ட இதெல்லாம் சொல்லி எப்படி புரிய வைக்க.. அதுக்கு ஹீரோவை மாத்திடலாம் மணி சொன்னத கேள்விபட்ட பிறகு.. அப்புறம் போய் அவங்க சொன்னபடி எல்லாத்தையும் மாத்தி கிட்டு வந்து நடிச்சேன். அப்படி ஒரு கண்டிஷனான இயக்குனர் மணி சார். 


Rajinikanth speech: ‘தளபதி ரஜினி சம்பவம்’.. கமல் முன் பொ.செ மேடையை அலறவிட்ட ரஜினி.. ஆர்ப்பரித்த அரங்கம்..!

இப்படி மூணு நாள் ஷூட்டிங் போய்கிட்டிருக்கு. நம்ம எப்பவுமே ஒவ்வொரு காட்சியிலுமே எப்படி நடிக்கணும்ன்னு ஒரு 'டெம்ப்ளேட்' வெச்சுருப்போம். இதிலேயும் அப்படிதான் நடிச்சிகிட்டிருந்தேன். ஒரு காட்சியில் நடித்துக் கொண்டிருக்கும் போது..  இன்னும் பீல்.. கொடுங்கன்னு திரும்ப திரும்ப சொல்லிகிட்டேயிருந்தார். இதுக்கமேல என்ன பீல் பண்ண.. நாம தான் ஒரு டெம்ப்ளேட் வைச்சிருக்கோமே.. அப்படிதான் நடித்து முடிச்சேன்.  நான் அப்போ நடிச்சிகிட்டிருந்ததெல்லாம், தூக்குடா.. அடிடா.. அப்படிதான். எப்படியோ அன்னைக்கு ஷூட்டிங் முடிந்தது. 

தினமும் இது இப்படியே போய்கிட்டிருந்தா சரியா வராதுன்னு நினைச்சி.. கமலுக்கு போன் பண்ணி.. , 
10 டேக்..12 டேக்கெல்லாம் எடுக்குறாரு.. இன்னும் கொஞ்சம் பீல் பண்ணி நடிக்க சொல்றாரு.. அப்படி நடந்ததை எல்லாம் சொன்னேன். மணி படம் நீங்க நடிக்கும் போதே நான் நினைச்சேன். சரியா மாட்டுனேங்களா.. மணிகிட்ட நான் எவ்வளவு அனுபவிச்சிருப்பேன்.. அப்படின்னார். சரி இப்போ என்ன பண்ணலாம்ன்னு கேட்டேன். ஒண்ணு பண்ணுங்க.. எப்படி நடிக்கணும்ன்னு அவரையே நடிச்சி காட்ட சொல்லி, அதை அப்படியே மனசுல ஏத்திகிட்ட மாதிரி பொய்யா அதை அப்படியே நடிச்சிருங்கன்னு சொன்னார். நானும் கமல் சொன்னது மாதிரி மணிகிட்ட நடிச்சி காட்ட சொல்லி.. அதை அப்படியே தம்பிடிச்சு கிட்டு அங்க இங்குமா நடந்து கிட்டு.. பெருசா பீல் பண்ணின மாதிரி பொய்ய சொல்லி ( மீண்டும் பலத்த கரவொலி ) தான் மணிகிட்ட நடிச்சு முடிச்சேன்.” என்று பேசினார். 

தலைப்பு செய்திகள்

"முடிந்தால் இதைச் செய்து காட்டுங்கள்!"... சவால்விட்ட சிவாஜி... எம்ஜிஆர் கொடுத்த பதில்
வேகமெடுக்கும் காவேரி பிரச்சனை..கர்நாடக திரையரங்குகளில் இருந்து நீக்கப்படும் ஜனநாயகன்
வேகமெடுக்கும் காவேரி பிரச்சனை..கர்நாடக திரையரங்குகளில் இருந்து நீக்கப்படும் ஜனநாயகன்
மூன்று தீபாவளி வரை ஹவுஸ்ஃபுல்... இதுவரை எந்த தமிழ் படமும் முறியடிக்காத சாதனை!
மூன்று தீபாவளி வரை ஹவுஸ்ஃபுல்... இதுவரை எந்த தமிழ் படமும் முறியடிக்காத சாதனை!
Sasikumar:
Sasikumar: "விஜய் முதலமைச்சரானதில் ஒரே ஒரு வருத்தம்தான்.." இயக்குனர் சசிகுமார் சொன்னது ஏன்?

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK: காவிரிக்காக ஒருநாளாவது பதவியை உதறியதாக திமுக? மு.க.ஸ்டாலினுக்கு தவெக கேள்வி!
TVK: காவிரிக்காக ஒருநாளாவது பதவியை உதறியதாக திமுக? மு.க.ஸ்டாலினுக்கு தவெக கேள்வி!
Minister Nirmal Kumar: “தமிழகத்திற்கு தண்ணீர் வரக்கூடாது என்று இங்குள்ள கட்சிகளே வேலை செய்கின்றன“: அமைச்சர் நிர்மல் குமார் விளாசல்
“தமிழகத்திற்கு தண்ணீர் வரக்கூடாது என்று இங்குள்ள கட்சிகளே வேலை செய்கின்றன“: அமைச்சர் நிர்மல் குமார் விளாசல்
US to Attack Iran: “வளைகுடாவிலிருந்து உடனே வெளியேறுங்கள்“ குடிமக்களை எச்சரித்த அமெரிக்கா; வெடிக்கும் பயங்கர போர்.?
“வளைகுடாவிலிருந்து உடனே வெளியேறுங்கள்“ குடிமக்களை எச்சரித்த அமெரிக்கா; வெடிக்கும் பயங்கர போர்.?
திருப்பதியில் தமிழக பட்ஜெட்; ரகசிய காப்பு பிரமாணத்தை மீறிய அமைச்சர் வினோத்! ஆக்ஷன் எடுப்பாரா விஜய்?
திருப்பதியில் தமிழக பட்ஜெட்; ரகசிய காப்பு பிரமாணத்தை மீறிய அமைச்சர் வினோத்! ஆக்ஷன் எடுப்பாரா விஜய்?
தமிழ்நாட்டிற்கு 4 ஆயிரம் கோடி ஒதுக்கீடு! எந்தெந்த மாநிலத்திற்கு எவ்வளவு கொடுத்துள்ளது மோடி அரசு?
தமிழ்நாட்டிற்கு 4 ஆயிரம் கோடி ஒதுக்கீடு! எந்தெந்த மாநிலத்திற்கு எவ்வளவு கொடுத்துள்ளது மோடி அரசு?
கபிணி நீர் கர்நாடகாவின் கருணையல்ல... இயற்கையின் கொடை! - கிருஷ்ணராஜ சாகர் அணையை திறக்க அன்புமணி வலியுறுத்தல்!
கபிணி நீர் கர்நாடகாவின் கருணையல்ல... இயற்கையின் கொடை! - கிருஷ்ணராஜ சாகர் அணையை திறக்க அன்புமணி வலியுறுத்தல்!
ஆவின் பால் துர்நாற்றம்: பாலிஃபிலிம் தவறு அம்பலம், சப்ளையர் மீது கடும் நடவடிக்கை!
ஆவின் பால் துர்நாற்றம்: பாலிஃபிலிம் தவறு அம்பலம், சப்ளையர் மீது கடும் நடவடிக்கை!
Royal Enfield Shotgun 650: 3 நிமிஷத்தில் விற்றுத் தீர்ந்த ராயல் என்ஃபீல்ட்டின் காஸ்ட்லி பைக்.! அதுல அப்படி என்ன இருக்கு.?
3 நிமிஷத்தில் விற்றுத் தீர்ந்த ராயல் என்ஃபீல்ட்டின் காஸ்ட்லி பைக்.! அதுல அப்படி என்ன இருக்கு.?
Embed widget