மேலும் அறிய

Prashanth: ரீல்ஸ் மூலம் ட்ரெண்டாகும் பாடல்கள்.. மகிழ்ச்சியின் உச்சத்தில் நடிகர் பிரஷாந்த்!

சமீப காலமாக  சமூக வலைத்தளங்களில் பிரஷாந்த் நடித்த ஜீன்ஸ் படத்தில் இடம் பெற்ற ஹை ரப்பா பாடல் ரீல்ஸ் மூலம் ட்ரெண்டானது. பலரும் இப்பாடலுக்கு நடனமாடி பதிவிட்டு வருகின்றனர்.

தான் நடித்த படங்களின் பாடல்கள் இன்றைய தலைமுறையினருக்கும் சென்று சேர்வதில் மகிழ்ச்சியடைவதாக நடிகர் பிரஷாந்த் நேர்காணல் ஒன்றில் தெரிவித்துள்ளார்.

டாப் ஸ்டார் பிரஷாந்த்

இயக்குநர் தியாகராஜனின் மகனாக அறியப்பட்டு தமிழ் சினிமாவில் வைகாசி பொறந்தாச்சு படம் மூலம் ஹீரோவாக அறிமுகமானவர் பிரஷாந்த். தமிழ் சினிமாவில் 90களின் காலக்கட்டங்களில் குறிப்பாக விஜய், அஜித்துக்கு முன்னால் முன்னணி நடிகராக திகழ்ந்தார். பாலு மகேந்திரா, ஆர்.கே.செல்வமணி, மணி ரத்னம், ஷங்கர், பிரவீன் காந்தி,ராசு மதுரவன், வசந்த், சரண், ஏ. வெங்கடேஷ், ஹரி, சுசி கணேசன், சுந்தர்.சி. என தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்களின் படங்களில் நடித்தார். ரசிகர்களால் அன்புடன் “டாப் ஸ்டார்” என அடைமொழியிட்டு அழைக்கப்பட்டு வந்தார். 

தொடர் சரிவும்.. முயற்சியும்

2004ம் ஆண்டுக்குப் பிறகு பிரஷாந்த் நடித்த படங்கள் யாவும் பெரிய அளவில் வெற்றி பெறவில்லை. தனிப்பட்ட வாழ்க்கையில் ஏற்பட்ட கசப்பான சம்பவங்களும் சில காலங்கள் அவர் சினிமாவை விட்டு விலகும் சூழலுக்கு தள்ளியது. எனினும் மீண்டும் சினிமாவில் நடிக்க வந்த பிரஷாந்த் வலுவான வெற்றிக்காக காத்திருக்கிறார். பல தரப்பட்ட கதையம்சம் கொண்ட படங்களிலும் தேர்வு செய்து நடித்து வருகிறார். இப்படியான நிலையில் 2024ம் ஆண்டு விஜயுடன் அவர் நடித்த தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படம் இன்றைய தலைமுறையினர் இடையே பிரஷாந்த் பற்றிய அறிமுகத்தைக் கொண்டு சேர்த்தது. 

Also Read: பாக்யராஜ் மறைந்ததும் வெடித்த சீனியர் - ஜூனியர் மோதல்.. வார்த்தையை விட்ட பார்த்திபன்.. நடந்தது என்ன?

ரீல்ஸ் மூலம் ட்ரெண்டாகும் பாடல்கள்

இந்த நிலையில் சமீப காலமாக  சமூக வலைத்தளங்களில் பிரஷாந்த் நடித்த ஜீன்ஸ் படத்தில் இடம் பெற்ற ஹை ரப்பா பாடல் ரீல்ஸ் மூலம் ட்ரெண்டானது. பலரும் இப்பாடலுக்கு நடனமாடி பதிவிட்டு வருகின்றனர். இவ்வளவு ஏன் பிரஷாந்த் நடுவராக பணியாற்றும் ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் டான்ஸ் ஜோடி டான்ஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற நடிகை சுவாசிகாவுடன்  ஹை ரப்பா பாடலுக்கு நடனமாடினார்.

தொடர்ந்து நடிகை சிம்ரனுடன் ஜோடி படத்தில் இடம் பெற்ற “காதல் கடிதம்”,  சினேகாவுடன் ஜீன்ஸ் படத்தில் இடம் பெற்ற “அன்பே அன்பே” பாடலுக்கும் நடனமாடினார். இது மிகப்பெரிய அளவில் வைரலானது. இன்றைய தலைமுறையினர் பிரஷாந்த் யார் என்பதை அறிந்து வியந்து வருகின்றனர். 

இதனிடையே ஊடகம் ஒன்றிற்கு பேட்டியளித்துள்ள நடிகர் பிரசாந்த், “காலத்தால் அழிக்க முடியாத இந்த பாடல்கள் ஜென்ஸி மற்றும் ஜென் ஆல்ஃபா தலைமுறையினர் இடையே பிரபலமாவதைக் கண்டு நான் பெருமகிழ்ச்சியடைகிறேன். இது சமூக ஊடகங்களில் ஒரு ட்ரெண்டாக மாறியிருப்பது எனக்கு மகிழ்ச்சியளிக்கிறது என தெரிவித்தார். தொடர்ந்து அவரிடம்,  பிரசாந்த், ஐஸ்வர்யா ராய் மற்றும் ஷங்கர் ஆகியோர் மீண்டும் இணைவார்களா என்ற கேள்வி ரசிகர்களிடத்தில் எழுந்துள்ளது பற்றி கேட்கப்பட்டது. அதற்கு, நாங்கள் இன்னும் அதைப் பற்றி யோசிக்கவில்லை. எனினும் அந்த நிகழ்வுக்கான திட்டத்தை நான் தொடங்க முயற்சிப்பேன் எனவும் தெரிவித்தார். 

Advertisement

தலைப்பு செய்திகள்

Rajinikanth Old Video: இதுவரை பார்க்காத ரஜினியின் வீடியோ.. சூப்பர்ஸ்டார் எவ்ளோ க்யூட்டா இருக்காரு!
Rajinikanth Old Video: இதுவரை பார்க்காத ரஜினியின் வீடியோ.. சூப்பர்ஸ்டார் எவ்ளோ க்யூட்டா இருக்காரு!
திருப்பூர் சுப்பிரமணியம் சொன்ன அந்த டைரக்டர் இவரா? நம்ம லிஸ்ட்லயே இல்லயே!
திருப்பூர் சுப்பிரமணியம் சொன்ன அந்த டைரக்டர் இவரா? நம்ம லிஸ்ட்லயே இல்லயே!
SK 27: சிவகார்த்திகேயன் படத்திற்கு இசையமைக்கும் சாய் அபியங்கர்..! அப்போ ப்ளாக்பஸ்டர் கன்ஃபர்மா?
SK 27: சிவகார்த்திகேயன் படத்திற்கு இசையமைக்கும் சாய் அபியங்கர்..! அப்போ ப்ளாக்பஸ்டர் கன்ஃபர்மா?
Karthigai Deepam: மாட்டிக்கொண்ட மாயா, மகேஷ்.. உஷாரான கார்த்திக்! அடுத்து நடக்கப்போவது என்ன?
Karthigai Deepam: மாட்டிக்கொண்ட மாயா, மகேஷ்.. உஷாரான கார்த்திக்! அடுத்து நடக்கப்போவது என்ன?
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

Nepal Flood | அதிகாலையில் திடீர் வெள்ளம் அலறியடித்து ஓடிய மக்கள் நேபாளத்தில் மீண்டும் பேரதிர்ச்சி!
லவ் டார்ச்சர் கொடுத்த இளைஞர் இளம்பெண் விபரீத முடிவு அடித்தே கொன்ற உறவினர்கள்!
கோவிலுக்குள் பாலியல் தொல்லை சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் அதிர்ச்சியூட்டும் CCTV காட்சிகள்!
அன்று இந்தியாவுக்கு நெருக்கடி இன்று ரஷ்யாவுடன் டீல் அந்தர் பல்டி அடித்த ட்ரம்ப்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Governor Rajendra Arlekar: தமிழகத்திற்கு முழு நேர ஆளுநராக அர்லேகர் நியமனம்.. யார் இவர்?
TN Governor Rajendra Arlekar: தமிழகத்திற்கு முழு நேர ஆளுநராக அர்லேகர் நியமனம்.. யார் இவர்?
CM Vijay: கோவை செல்லும் முதல்வர் விஜய்.. பயணத் திட்டம் விவரம் இதோ!
CM Vijay: கோவை செல்லும் முதல்வர் விஜய்.. பயணத் திட்டம் விவரம் இதோ!
DMK: தவெக போடும் பிஸ்கட்டுக்காக திமுகவை விமர்சிக்க வேண்டாம்! ரஜினி ஸ்டைலில் மாணிக்கம் தாகூருக்கு பதிலடி!
DMK: தவெக போடும் பிஸ்கட்டுக்காக திமுகவை விமர்சிக்க வேண்டாம்! ரஜினி ஸ்டைலில் மாணிக்கம் தாகூருக்கு பதிலடி!
EPS-க்கு எதிராக ரகசிய மீட்டிங்..! அதிமுக-வில் விரைவில் வெடிக்கப்போகும் பூகம்பம்!
EPS-க்கு எதிராக ரகசிய மீட்டிங்..! அதிமுக-வில் விரைவில் வெடிக்கப்போகும் பூகம்பம்!
Holiday: தொடர்ந்து 4 நாட்கள் பள்ளிகள் விடுமுறை... குஷியில் மாணவர்கள், அரசு ஊழியர்கள்!
Holiday: தொடர்ந்து 4 நாட்கள் பள்ளிகள் விடுமுறை... குஷியில் மாணவர்கள், அரசு ஊழியர்கள்!
ரூபாய் 3.5 லட்சம்தான் பட்ஜெட்.. வாகன ஓட்டிகளின் ட்ரீம் பைக் Harley-Davidson X440 T..! சிறப்புகள் இத்தனையா?
ரூபாய் 3.5 லட்சம்தான் பட்ஜெட்.. வாகன ஓட்டிகளின் ட்ரீம் பைக் Harley-Davidson X440 T..! சிறப்புகள் இத்தனையா?
விருதுநகர் கல்லூரி மாணவர்களுக்கு நேரடி பேருந்து சேவை: அமைச்சர் கீர்த்தனா தொடங்கி வைத்தார்!
விருதுநகர் கல்லூரி மாணவர்களுக்கு நேரடி பேருந்து சேவை: அமைச்சர் கீர்த்தனா தொடங்கி வைத்தார்!
Gold Rate: தங்கம் வாங்க இதுதான் சரியான நேரம்.! மாலை நேரத்தில் இன்ப அதிர்ச்சி கொடுத்த விலை!
Gold Rate: தங்கம் வாங்க இதுதான் சரியான நேரம்.! மாலை நேரத்தில் இன்ப அதிர்ச்சி கொடுத்த விலை!
Embed widget