மேலும் அறிய

HBD Prabhu : கன்னக்குழி நாயகன்.. சார்மிங் நடிகர்.. பப்ளி நடிகர் பிரபு பிறந்தநாள் இன்று..

Prabhu birthday : வாரிசு நடிகர் என்றாலும் தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்த நடிகர் பிரபு பிறந்தநாள் இன்று.

நடிகர் திலகம் சிவாஜி கணேசன் என்ற மகா கலைஞனின் வாரிசு என அடையாளப்படுத்தப்பட்டாலும் தனக்கென ஒரு தனி இடத்தை தமிழ் சினிமாவில் மிகவும் ஆழமாக பதித்தவர் நடிகர் பிரபு. 200க்கும் மேற்பட்ட படங்களில் ஹீரோவாக நடித்துள்ள பிரபு தமிழ் சினிமா மட்டுமின்றி ஒரு சில தெலுங்கு மற்றும் மலையாள படங்களில் நடித்துள்ளார். இன்றும் திரைப்படங்களில் துணை கதாபாத்திரங்களில் நடித்து வரும் பிரபு இன்று தனது 67வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். 

HBD Prabhu : கன்னக்குழி நாயகன்.. சார்மிங் நடிகர்.. பப்ளி நடிகர் பிரபு பிறந்தநாள் இன்று..
பெங்களூருவில் உள்ள பிஷப் காட்டன் பள்ளியில் தனது பள்ளி படிப்பை முடித்த பிரபு தனது மாமா VC சண்முகனிடம் நிர்வாக தயாரிப்பாளராக வேலை பார்த்தார். மகன் திரைத்துறையில் நுழைவதை நடிகர் திலகம் விரும்பவில்லை என்றாலும் திரைப்பட தயாரிப்பாளர்களிடம் இருந்து தொடர்ந்து சலுகைகள் வர பிரபு ஒரு வழியாக நடிகரானார்.  

பிரபுவின் திரைப்பயணம் :

1980ல் வெளியான 'சங்கிலி' என்ற திரைப்படத்தின் மூலம் திரைத்துறையில் அடியெடுத்து வைத்தார். அதை தொடர்ந்து ஏராளமான படங்களில் ஹீரோவாகவும், துணை கதாபாத்திரங்களிலும் நடித்து வந்தார். பி. வாசு - பிரபு கூட்டணியில் உருவான குரு சிஷ்யன், தங்கச்சி படிச்சவ, அக்னி நட்சத்திரம், செந்தமிழ் பாட்டு என தொடர் வெற்றி படங்களை தொடர்ந்து  1991ம் ஆண்டு வெளியான 'சின்ன தம்பி' திரைப்படம் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்த படம். அப்படத்தில் வெகுளித்தனமான நடிப்பை சிறப்பாக வெளிப்படுத்தியதற்காக அந்த ஆண்டின் சிறந்த நடிகருக்கான தமிழ்நாடு மாநில திரைப்பட விருதை பெற்றார்.

அதை தொடர்ந்து பேமிலி ஆடியன்ஸை கவரும் படங்களாக தேர்ந்து எடுத்து நடித்து வந்தார். மேலும் மற்ற ஹீரோக்களின் படங்களில் துணை கதாபாத்திரங்களிலும் நடித்து வந்தார். 

துணை கதாபாத்திரங்கள் :

டூயட், அக்னி நட்சத்திரம், அறுவடை நாள், சார்லி சாப்ளின், சந்திரமுகி, அயன், தாமிரபரணி, உனக்கும் எனக்கும், இராவணன், மனசுக்குள் மத்தாப்பு உள்ளிட்ட ஏராளமான படங்களில் தன்னுடைய திறமையான நடிப்புக்காக சிறந்த நடிகருக்கான விருதுகளை பெற்றார். நடிகர் கமல்ஹாசனுடன் இணைந்து நடித்த வசூல் ராஜா எம்.பி.பி.எஸ், நடிகர் ரஜினிகாந்துடன் இணைந்து சந்திரமுகி உள்ளிட்ட படங்கள் மூலம் பாராட்டுகளை குவித்தார்.

நடிகர் பிரபு நடிப்பில் சமீபத்தில் நடிகர் விஜய் நடித்த வாரிசு மற்றும் இயக்குநர் மணிரத்னத்தின் 'பொன்னியின் செல்வன்' உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தார். 

HBD Prabhu : கன்னக்குழி நாயகன்.. சார்மிங் நடிகர்.. பப்ளி நடிகர் பிரபு பிறந்தநாள் இன்று..

தனிப்பட்ட வாழ்க்கை:

நடிகர் பிரபுவுக்கு 1982-ஆம் புனிதாவுடன் திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதியினருக்கு ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர். மகன் விக்ரம் பிரபு ஏற்கனவே தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகராக இருந்து வருகிறார். மகள் ஐஸ்வர்யாவுக்கு சமீபத்தில் தான் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரனுடன் திருமணம் நடைபெற்றது. 

தலைப்பு செய்திகள்

நூலிழையில் நெருப்பில் இருந்து தப்பிய சிவராஜ்குமார்.. உயிர் போய் உயிர் வந்த ரசிகர்கள்! நடந்தது என்ன?
நூலிழையில் நெருப்பில் இருந்து தப்பிய சிவராஜ்குமார்.. உயிர் போய் உயிர் வந்த ரசிகர்கள்! நடந்தது என்ன?
ஜெயிலர் 2 படத்திற்கு U/A சான்றிதழ்
ஜெயிலர் 2 படத்திற்கு U/A சான்றிதழ்
"எனக்கு தூக்கமே வரல.." பதற்றத்தின் உச்சிக்கே சென்ற நடிகர் மணிகண்டன்! எதற்காக தெரியுமா?
15 நிமிடங்கள் மூச்சை அடக்கிய வித்யுத் ஜம்வால்.. வைரலாகும் வீடியோ
15 நிமிடங்கள் மூச்சை அடக்கிய வித்யுத் ஜம்வால்.. வைரலாகும் வீடியோ

வீடியோ

TVK Cadre Issue : செல்போன் கடைக்காரரிடம் வழிப்பறி.. அடிக்க சொன்ன தவெக நிர்வாகி! போலீஸ் வலைவீச்சு
Dindigul Murder : திமுக பிரமுகர் கொலை வழக்கு! ஜாமீனில் வந்த முக்கிய குற்றவாளி.. ஓட ஓட வெட்டிக் கொலை
VS Babu Health : V.S பாபுக்கு டிரக்கியாஸ் சிகிச்சை? வெளியான பகீர் தகவல் குடும்பத்தினரின் அப்டேட்
வாக்காளர்களுக்கு டோக்கன்? தவெகவினரை மடக்கிய அதிமுகவினர் தாராபுரத்தில் பரபரப்பு!
செவிலியர்கள் போராட்டம் இரவோடு இரவாக கைது போலீஸ் செயலால் பரபரப்பு!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Min Arunraaj: மனோ தங்கராஜிற்கு என்ன சம்மந்தம்? செவிலியர்களுக்கு நல்ல சேதி சொன்ன அமைச்சர் அருண் ராஜ்
மனோ தங்கராஜிற்கு என்ன சம்மந்தம்? செவிலியர்களுக்கு நல்ல சேதி சொன்ன அமைச்சர் அருண் ராஜ்
மாத்திரை கவரில் இடம்பெற்ற இந்தி.. திமுகவுக்கு இதே வேலையா போச்சு.. பாயிண்ட் எடுத்து வெளுத்து வாங்கிய தவெக!
மாத்திரை கவரில் இடம்பெற்ற இந்தி.. திமுகவுக்கு இதே வேலையா போச்சு.. பாயிண்ட் எடுத்து வெளுத்து வாங்கிய தவெக!
TN Weather News: தமிழ்நாட்டில் இன்று எந்தெந்த மாவட்டங்களுக்கு கனமழை வார்னிங் - சென்னை? வானிலை அறிக்கை
தமிழ்நாட்டில் இன்று எந்தெந்த மாவட்டங்களுக்கு கனமழை வார்னிங் - சென்னை? வானிலை அறிக்கை
Honda Elevate: புது எலிவேட்டிற்கு எலிவேஷன் கொடுத்த ஹோண்டா..! கூடுதல் அம்சங்கள், சொகுசு வசதிகள் - விலை எப்படி?
புது எலிவேட்டிற்கு எலிவேஷன் கொடுத்த ஹோண்டா..! கூடுதல் அம்சங்கள், சொகுசு வசதிகள் - விலை எப்படி?
Thattanchavady byElection 2026 : தட்டாஞ்சாவடி இடைத்தேர்தல் முடிந்தது: 80.83% வாக்குப்பதிவு... ரங்கசாமி தொகுதியில் வெல்லப்போவது யார்?
Thattanchavady byElection 2026 : தட்டாஞ்சாவடி இடைத்தேர்தல் முடிந்தது: 80.83% வாக்குப்பதிவு... ரங்கசாமி தொகுதியில் வெல்லப்போவது யார்?
TN By Election 2026: மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நிறைவு; ஆர்வத்துடன் வாக்களித்த மக்கள்
மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நிறைவு; ஆர்வத்துடன் வாக்களித்த மக்கள்
நாளை அக்டோபர் 7: தமிழகத்தில் மின்தடை அறிவிப்பு! உங்கள் பகுதி உள்ளதா?
நாளை அக்டோபர் 7: தமிழகத்தில் மின்தடை அறிவிப்பு! உங்கள் பகுதி உள்ளதா?
Maragatham Kumaravel:
Maragatham Kumaravel: "செவ்வாய்க்கிழமை பெண்கள் ஓட்டு நமக்குத்தான்" தவெக வேட்பாளரின் விநோத நம்பிக்கை பலிக்குமா?
Embed widget