மேலும் அறிய

Nasser Father Death: தமிழ் திரையுலகில் சோகம்.. பிரபல நடிகர் நாசரின் தந்தை உயிரிழப்பு!

செங்கல்பட்டு தட்டான்மலை தெருவைச் சேர்ந்த நடிகர் நாசரின் தந்தை, உடல் நலக்குறைவு காரணமாக தனது வீட்டில் உயிரிழந்தார்.

பிரபல நடிகரும் நடிகர் சங்கத் தலைவருமான நாசரின் தந்தை உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார்.

கோலிவுட்டின் பிரபல நடிகர்களுள் ஒருவரான நாசர், தமிழ் சினிமாவில் 80களில் தொடங்கி பிரபல நடிகர்களுள் ஒருவராக விளங்கி வருகிறார். 1985ஆம் ஆண்டு தமிழ் சினிமாவின்  இயக்குநர் இமயமாகக் கொண்டாடப்படும் கே.பாலச்சந்தரின் இயக்கத்தில் கல்யாண அகதிகள் படத்தில் அறிமுகமானார் நாசர்.

நடிகராக மட்டுமில்லாமல் டப்பிங் ஆர்டிஸ்ட், இயக்குநர், தயாரிப்பாளர், பாடகர் என பன்முகம் கொண்ட ஒரு கலைஞராக நாசர் வலம் வருகிறார். ஒரு சில படங்களில் கதாநாயகனாக  நடித்த நாசர், பெரும்பாலும் வில்லன் கதாபாத்திரங்கள் மற்றும் குணச்சித்திர கதாபாத்திரங்களில்  நடித்து மக்கள் மனதில் நிலையான இடத்தைப் பிடித்துள்ளார். தமிழ் , தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஆங்கிலம் , பெங்காலி உள்ளிட்ட மொழிப் படங்களில் நடித்துள்ளார். 

 நாசரின் தந்தை

சிறுவயது முதலே நாசர் நடிகராக வேண்டும் என்பது அவரது தந்தை மெஹபூப் பாஷாவின் விருப்பமாக இருந்து வந்துள்ளது. செங்கல்பட்டில் நகைகளுக்கு பாலிஷ் போடும் பணி செய்து தனது குடும்பத்தை நடத்தி வந்தார் நாசரின் தந்தை மெஹபூப். இந்நிலையில், தனது தந்தையில் ஆசை நிறைவேற்ற சென்னையில் கூத்துப் பட்டறையில் சேர்ந்தார் நடிகர் நாசர். அவரது விருப்பப்படியே தமிழ் சினிமாவின் முக்கிய நடிகர்களுள் ஒருவராக நாசர் உருவெடுத்து கோலிவுட் ரசிகர்களின் இதயங்களில் இத்தனை ஆண்டுகளாக இடம்பிடித்துள்ளார்.

இதனிடையே நாசரின் தந்தை, உடல் நலக்குறைவால் சில ஆண்டுகளாக நாசரின் சகோதரர் ஜவஹர் வீட்டில் தங்கியிருந்தார். இந்நிலையில், தனது 95 ஆவது வயதில் இன்று உயிரிழந்துள்ளார் மெஹபூப். அவரது இறப்புச் செய்தியைக் கேட்டு பிரபலங்கள் தங்களது இரங்கலை நேரிலும் சமூக வலைதளங்களிலும் தெரிவித்து வருகிறார்கள்.

அவரது இறுதிச் சடங்கு குறித்த தகவல் விரைவில் வெளியாகும். மேலும் திரைப்பிரபலங்களின் தனிப்பட்ட உறவினர்களின் இறப்பில் பத்திரிகையாளர்கள் புகைப்படங்கள் எடுக்கக் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

 

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by ABP Nadu (@abpnadu)

நாசரின் தந்தை உயிரிழந்தது தமிழ் திரையுலகினர் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

லைவ் டிவி

ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

ரஜினியும் மோகன்லாலும் உறவினர்களா! இத்தன நாள் இது தெரியாம போச்சே
ரஜினியும் மோகன்லாலும் உறவினர்களா! இத்தன நாள் இது தெரியாம போச்சே
ரஜினி படத்தில் லாபமில்லையா ? ரஜினி ரசிகர்களிடம் சிக்கிய தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி
ரஜினி படத்தில் லாபமில்லையா ? ரஜினி ரசிகர்களிடம் சிக்கிய தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி
ஜெயிலர் 2 படத்தின் 6 நாள் கேரளா வசூல்
ஜெயிலர் 2 படத்தின் 6 நாள் கேரளா வசூல்
Karthigai Deepam: மகேஷின் மட்டமான புத்தி.. தப்புவாளா சுவாதி? சதீஷை கண்டுபிடித்தாளா ரேவதி?
Karthigai Deepam: மகேஷின் மட்டமான புத்தி.. தப்புவாளா சுவாதி? சதீஷை கண்டுபிடித்தாளா ரேவதி?

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Kovai Sathyan: அதிமுகவில் கோவை சத்யனுக்கு முக்கிய பதவி... யார் இவர்?
Kovai Sathyan: அதிமுகவில் கோவை சத்யனுக்கு முக்கிய பதவி... யார் இவர்?
மன்னிப்பு கேட்ட முதல்வர் விஜய்.. இந்த வேலையில் அவர் சூப்பர் ஸ்டார் - சபாநாயகர் புகழாரம்
மன்னிப்பு கேட்ட முதல்வர் விஜய்.. இந்த வேலையில் அவர் சூப்பர் ஸ்டார் - சபாநாயகர் புகழாரம்
மூதாட்டிக்காகப் பேருந்து நிறுத்தத்தில் காத்திருந்த தவெக அமைச்சர்: சேலத்தில் நெகிழ்ச்சி சம்பவம்
மூதாட்டிக்காகப் பேருந்து நிறுத்தத்தில் காத்திருந்த தவெக அமைச்சர்: சேலத்தில் நெகிழ்ச்சி சம்பவம்
"இங்க சேர்க்கிறது பெருமை" காமராஜர் பள்ளியில் அலைமோதிய கூட்டம்... விஜயதசமி சிறப்புச் சேர்க்கை!
MK Stalin: அதிகார துஷ்பிரயோகத்தை தட்டிக்கேட்டால் கைதா? சர்வாதிகாரியாக செயல்படும் தவெக அரசு! சீறும் மு.க.ஸ்டாலின்!
MK Stalin: அதிகார துஷ்பிரயோகத்தை தட்டிக்கேட்டால் கைதா? சர்வாதிகாரியாக செயல்படும் தவெக அரசு! சீறும் மு.க.ஸ்டாலின்!
செஞ்சி சிறுமி மாய வழக்கில் புதிய திருப்பம்? வீட்டருகே தோண்டி தடயங்களைத் தேடும் போலீசார்!
செஞ்சி சிறுமி மாய வழக்கில் புதிய திருப்பம்? வீட்டருகே தோண்டி தடயங்களைத் தேடும் போலீசார்!
coimbatore power cut: கோவையில் நாளை (21-10-2026) எங்கெல்லாம் கரண்ட் இருக்காது? - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
கோவையில் நாளை (21-10-2026) எங்கெல்லாம் கரண்ட் இருக்காது? - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
ABP Nadu LIVE TV: இனிமேல் 24 மணி நேரமும்! உதயமானது ABP Nadu LIVE தொலைக்காட்சி!
ABP Nadu LIVE TV: இனிமேல் 24 மணி நேரமும்! உதயமானது ABP Nadu LIVE தொலைக்காட்சி!
Embed widget