மேலும் அறிய

Watch Video: 60 வயதில் 4-வது திருமணம்.. பிரபல நடிகையை மணந்தார் மகேஷ் பாபுவின் அண்ணன்.. வைரலாகும் வீடியோ..!

பிரபல தெலுங்கு நடிகர் நரேஷ் 60 வயதில் நடிகை பவித்ரா லோகேஷை திருமணம் செய்துக் கொண்ட வீடியோ, புகைப்படங்கள் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. 

பிரபல தெலுங்கு நடிகர் நரேஷ் 60 வயதில் நடிகை பவித்ரா லோகேஷை திருமணம் செய்துக் கொண்ட வீடியோ, புகைப்படங்கள் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. 

மகேஷ்பாபுவின் அண்ணன்

தெலுங்கு சினிமாவின் சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் நடிகர் மகேஷ் பாபு. இவரது அண்ணன் நரேஷ் பாபு 1970 ஆம் ஆண்டுகளில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி ரசிகர்களிடம் பிரபலமானார். இதுவரை 200க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள அவர் நரேஷ் முதலில் மூத்த நடன மாஸ்டர் ஸ்ரீனுவின் மகளை மணந்தார். இந்த தம்பதியினருக்கு  நவீன் விஜய்கிருஷ்ணா என்ற மகன் பிறந்த நிலையில் இருவரும் பிரிந்தனர். 

இதனைத் தொடர்ந்து 2வதாக திரைப்பட பாடலாசிரியர் தேவுலபள்ளி கிருஷ்ண சாஸ்திரியின் பேத்தி ரேகா சுப்ரியாவை மணந்தார். இவர்களுக்கு தேஜா என்ற மகனும் உள்ள நிலையில் ரேகா சுப்ரியாவை பிரிந்தார். தொடர்ந்து 50 வயதை  தாண்டிய நிலையில், தன்னை விட 20 வயது சிறியவரான ரம்யா ரகுபதியை நரேஷ் திருமணம் செய்துக் கொண்டார்.

ஆனால்  சமீப காலமாக இவர்கள் இருவருக்கும் இடையில் கருத்து வேறுபாடு இருந்து வந்தது. இதனால் கன்னட நடிகை பவித்ரா லோகேஷைவுடன் தொடர்பில் இருப்பதாகவும், நரேஷ் அவரை திருமணம் செய்துக் கொள்ளப்போவதாகவும் தகவல் வெளியானது. கடந்தாண்டு ஜூலை மாதம் நடிகை பவித்ராவும் நரேஷும்  மைசூரில் பிரபல ஹோட்டல் ஒன்றில் தங்கியிருந்தார்கள். 

செருப்பால் அடிக்கச் சென்ற முன்னால் மனைவி 

இதனைத் தெரிந்துக் கொண்ட  ரம்யா ரகுபதி இருவரையும் கையும் களவுமாக பிடித்ததோடு மட்டுமல்லாமல், ஊழியர்களின் உதவியுடன் அறையினுள் நுழைய முற்பட்டார். ஆனால் நரேஷோ கொஞ்சம் கூட இதனைப் பொருட்படுத்தாமல்  விசில் அடித்துக்கொண்டு, சிரித்துக்கொண்டே சென்றார். இதனால் ஆத்திரமடைந்த ரம்யா நரேஷை செருப்பால் அடிக்க முயன்ற வீடியோக்கள் சமூக வலைத்தளத்தில் வைரலானது. 

இந்நிலையில் தான் பவித்ரா லோகேஷை நரேஷ் நான்காவதாக திருமணம் செய்துள்ளார். இதுதொடர்பான வீடியோக்கள் இணையத்தில் வைரலானது. ஆனால் நரேஷ் தனது மூன்றாவது மனைவியான ரம்யா ரகுபதியிடம் இருந்து இன்னும் சட்டப்படி விவாகரத்து பெறவில்லை என தகவல்கள் வெளியாகியுள்ளது. நரேஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் தனது திருமண வீடியோவை வெளியிட்டு, “எங்களின் இந்த புதிய பயணத்தில் அமைதி மற்றும் மகிழ்ச்சி வாழ்நாள் முழுவதும் இருக்க உங்கள் ஆசீர்வாதங்கள் தேவை” என தெரிவித்துள்ளார். 

அதேசமயம் நடிகை பவித்ராவுக்கும் இது3வது திருமணம் ஆகும். முதலில் மென் பொறியாளர் ஒருவரையும், பின்னர் கன்னட திரைப்பட நடிகர் சுசேந்திர பிரசாத்தையும் திருமணம் செய்து பிரிந்த அவர் நரேஷூடன் 2021 ஆம் ஆண்டு முதல் உடனிருந்து வந்ததாக சொல்லப்படுகிறது.இந்த  திருமணம் தெலுங்கு திரையுலகில் பெரும் புயலை கிளப்பியிருந்தாலும் ரசிகர்கள் தங்கள் வாழ்த்துக்களை திருமண ஜோடிக்கு தெரிவித்துள்ளனர்.

தலைப்பு செய்திகள்

Actress Vaishali: ப்ளீஸ்.. 200 யூனிட் இலவச மின்சாரமே வேண்டாம்.. விஜயால் மன்னிப்பு கேட்ட நடிகை!
Actress Vaishali: ப்ளீஸ்.. 200 யூனிட் இலவச மின்சாரமே வேண்டாம்.. விஜயால் மன்னிப்பு கேட்ட நடிகை!
Trisha: விஜயும் - த்ரிஷாவும் லவ் பண்ணாங்க... கொளுத்திப்போட்ட குட்டி பத்மினி.. கடுப்பான த்ரிஷா?
Trisha: விஜயும் - த்ரிஷாவும் லவ் பண்ணாங்க... கொளுத்திப்போட்ட குட்டி பத்மினி.. கடுப்பான த்ரிஷா?
Vishal:
Vishal: "உதயநிதி பேசுனாருனு உள்ளே வச்சாங்க.. வெளிய நிறைய பேரு அப்படி இருக்காங்க.." நடிகர் விஷால் பேச்சு
Vishal:
Vishal: "2031ல் மாற்றம் வரலாம்.." அரசியல் என்ட்ரியை மறைமுகமாக அறிவித்தார் விஷால்

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: தொகுதி மறுவரையறைக்காக மகளீர் இடஒதுக்கீட்டை தாமதப்படுத்துவதா? - CM விஜய் அடுக்கடுக்கான கேள்விகள்
தொகுதி மறுவரையறைக்காக மகளீர் இடஒதுக்கீட்டை தாமதப்படுத்துவதா? - CM விஜய் அடுக்கடுக்கான கேள்விகள்
TN Govt: காசு தான பிரச்னை நானே கொடுக்கிறேன்..! அதிகாரிகளுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த CM விஜய் - என்ன ஆச்சு?
காசு தான பிரச்னை, நானே கொடுக்கிறேன்..! அதிகாரிகளுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த CM விஜய் - என்ன ஆச்சு?
TVK Vs DMK: எஸ்கேப் ஆகுறிங்களா? திமுகவிற்காகவே இன்று தனித்தீர்மானம் கொண்டு வரும் தவெக அரசு - பக்கா ப்ளான்
எஸ்கேப் ஆகுறிங்களா? திமுகவிற்காகவே இன்று தனித்தீர்மானம் கொண்டு வரும் தவெக அரசு - பக்கா ப்ளான்
TN Weather News: தமிழ்நாட்டில் இன்று எந்தெந்த மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு? - வானிலை எச்சரிக்கை
தமிழ்நாட்டில் இன்று எந்தெந்த மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு? - வானிலை எச்சரிக்கை
US Iran War: யப்பா, உங்க சண்டை ஓயவே ஓயாதா.? ஈரான் பகுதிக்குள் நுழைய முயன்ற கப்பலை தாக்கிய அமெரிக்கா; போச்சா.?!
யப்பா, உங்க சண்டை ஓயவே ஓயாதா.? ஈரான் பகுதிக்குள் நுழைய முயன்ற கப்பலை தாக்கிய அமெரிக்கா; போச்சா.?!
Ration Shop Time : ரேஷன் கடைகளுக்கு விடுமுறை, வேலை நேரம் மாற்றம்.? ஊழியர்கள் எதிர்பார்த்த நியூஸ்-வெளியாகப்போகும் அறிவிப்பு
ரேஷன் கடைகளுக்கு விடுமுறை, வேலை நேரம் மாற்றம்.? ஊழியர்கள் எதிர்பார்த்த நியூஸ்-வெளியாகப்போகும் அறிவிப்பு
NEET Coaching Centre : ’நீட் தேர்வுக்கு எதிர்ப்பு – பயிற்சி மையத்திற்கு Personal Loan’ இருமுகன் முதல்வர் விஜய்..?
’நீட் தேர்வுக்கு எதிர்ப்பு – பயிற்சி மையத்திற்கு Personal Loan’ இருமுகன் முதல்வர் விஜய்..?
Gold and silver rate today : இறங்கிய வேகத்தில் அதிகரித்த தங்கம் விலை.! ஒரு சவரனுக்கு இவ்வளவா.? தங்கம், வெள்ளி விலை இதோ..
இறங்கிய வேகத்தில் அதிகரித்த தங்கம் விலை.! ஒரு சவரனுக்கு இவ்வளவா.? தங்கம், வெள்ளி விலை இதோ..
Embed widget