மேலும் அறிய

Vikram Kamal : "அந்த சீன்ல கமல் சாரைப் பாத்து பயந்து நடுங்கினேன்” : ’விக்ரம்’ கமல் குறித்து நரேன் சொன்ன சுவாரஸ்யம்..

"நிறைய லவ் பண்ணினேன். அந்த சமயத்தில் நாம பேச 10 நிமிடங்கள்தான் கிடைக்கும். அதில் 8 நிமிடங்கள் கமல்சாரை பற்றிதான் பேசுவேன்னு சொல்லி அவங்க என்னை கிண்டல் பண்ணுவாங்க.  "

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் , விஜய் சேதுபதி , ஃபஹத் பாசில் என மிகப்பெரிய நட்சத்திட பட்டாளங்களின் கூட்டணியில் உருவாகி வரும் திரைப்படம் ‘விக்ரம்’. இந்த படம் தற்போது இறுதி கட்டத்தை எட்டி வருகிறது.படத்தில் நடிக்கும் பாதி நடிகர்கள் , ஏன் இயக்குநர் உட்பட அனைவருமே உலகநாயகனின் மிகப்பெரிய ரசிகர்களாக தங்களை அடையாளப்படுத்திக்கொள்கின்றனர்.  இந்த நிலையில் படத்தில் தான் இணைந்த அனுபவங்களையும் , கமலுடன் நடித்த அனுபங்களை நடிகர் நரேன் பகிர்ந்திருக்கிறார்.

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Narain Ram (@narainraam)


அதில்" கமல் சார் பிறந்த நாளைக்கு முதல் டீசர் வெளியானது. அந்த சமயத்தில் நான் துபாயில் இருந்தேன்.ஒரு படத்திற்காக லொகேஷன் மற்றும் ஸ்கிரிப்ட் வேலை இருந்தது. அங்கிருந்து லோகேஷுக்கு கால் பண்ணி பேசினேன். டிரைலர் பார்த்தேன் ரொம்ப அருமையாக இருக்கு என்றேன். அவர் என்னிடம் எங்கே இருக்கீங்க சார் என கேட்டார் , நான் துபாயில் இருக்கிறேன் என்றேன். அதற்கு அவர் நீங்களும் இந்த படத்தில் இருக்கீங்க சார் என்றார். அப்போதுதான் முதன் முறையாக நான் அதை கேட்கிறேன் . எனக்கு அதற்கு முன்பு வரையிலும் அது தெரியாது. நீங்க இங்கே வாங்க  சார், வந்த பிறகு நான் சொல்லுறேன் என்றார்.  கமல் சாருடன் எடுத்த அந்த புகைப்படம் வெளியான பிறகு , எனது ஸ்கூல் , காலேஜ் , இன்ஸ்டிடியூட் நண்பர்கள் எல்லோருமே ரொம்ப ஹாப்பி ஆகிட்டாங்க.

நான் ஸ்கூல் படித்த காலத்தில் இருந்தே எனக்கு நிறைய கேர்ள் ஃபிரண்ஸ் இருக்காங்க. நிறைய லவ் பண்ணினேன். அந்த சமயத்தில் நாம பேச 10 நிமிடங்கள்தான் கிடைக்கும். அதில் 8 நிமிடங்கள் கமல்சாரை பற்றிதான் பேசுவேன்னு சொல்லி அவங்க என்னை கிண்டல் பண்ணுவாங்க.  அந்த அளவுக்கு நான் கமல் சார் மீது பைத்தியமா இருந்தேன். விக்ரம் படத்துல எனக்கான் போஷன்ஸ் கொஞ்சம்தான் ஆனால் ரொம்பவே  முக்கியமான கேரக்டர். நான் கமல் சார்க்கிட்ட இருக்கும் தருணங்கள்  எல்லாமே அவர்க்கிட்ட பேசிக்கிட்டே இருப்பேன்.

நிறைய படங்கள் பற்றின சந்தேகங்களை கேட்டேன் . அவர் ஒரு என்சைக்ளோபீடியா. அதோட அவருக்கு ஃபோட்டோகிராஃபிக் மெமரி அதிகம்.நான் கமல் சாரோட ரசிகன் . ஆனால் என்னை விட லோகேஷ் மிகப்பெரிய ரசிகன் போல எனக்கு தெரியும். விக்ரம் படம் மிகப்பெரிய படமாக வரும் . ஒரு சீன்ல அவர் கண்களை பார்த்ததும் ரொம்ப பயந்துட்டேன். லோகேஷ் அதிகமா பயம் வேண்டாம்னு சொன்னாரு, நான் நடிக்கவில்லை லோகேஷ் உண்மையாவே பயமாருக்கு என்றேன்.” என பகிர்ந்திருக்கிறார் நரேன்.  

தலைப்பு செய்திகள்

பார்ட் 2 என்றாலே சரக்கு தீர்ந்துப்போச்சுனு சொல்லுவாங்க..ஜெயிலர் 2 படம் ஏன்..விளக்கம் கொடுத்த ரஜினி
பார்ட் 2 என்றாலே சரக்கு தீர்ந்துப்போச்சுனு சொல்லுவாங்க..ஜெயிலர் 2 படம் ஏன்..விளக்கம் கொடுத்த ரஜினி
Jailer 2 Booking : ஜெயிலர் 2 முன்பதிவுகள் தொடக்கம்!
Jailer 2 Booking : ஜெயிலர் 2 முன்பதிவுகள் தொடக்கம்!
“நான் எப்போ தப்பா நடந்தேன்?” – முத்துக்குமரன் கேள்வி.. வஹிதா வெளியிட்ட ஆடியோவால் பரபரப்பு!
“நான் எப்போ தப்பா நடந்தேன்?” – முத்துக்குமரன் கேள்வி.. வஹிதா வெளியிட்ட ஆடியோவால் பரபரப்பு!
ஜெய் பீம் பார்த்து இயக்குநரை திட்டிய அம்மா...மணிகண்டன் பகிர்ந்த சுவாரஸ்ய நிகழ்வு
ஜெய் பீம் பார்த்து இயக்குநரை திட்டிய அம்மா...மணிகண்டன் பகிர்ந்த சுவாரஸ்ய நிகழ்வு

வீடியோ

Elon musk Rahul Gandhi : ”நிஜ பாஸ் யார்?இன்னொருத்தர் இருக்காரு”கொளுத்தி போட்ட மஸ்க்-ராகுல்
Thoothukudi Police Issue :
Elon musk on Ambani : இந்தியாவின் BOSS அம்பானியா? மோடி மீது எலான் மஸ்க் அட்டாக்! ஸ்டார்லிங்க்
TVK MLA Saravanan : ”பணத்தை வாங்கிட்டு மிரட்டுறாங்க” தவெக MLA மீது பகீர் புகார் வாலிபரின் வைரல் வீடியோ!
Uttarakhand iPhone theft :

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CJP Protest: டெல்லியில் இன்று CJP போராட்டம்.. கதிகலங்கும் தலைநகரம்.. பதவி விலகுவாரா ஞானேஷ்குமார்?
CJP Protest: டெல்லியில் இன்று CJP போராட்டம்.. கதிகலங்கும் தலைநகரம்.. பதவி விலகுவாரா ஞானேஷ்குமார்?
CM Vijay:
CM Vijay: "தமிழக மக்களுக்கு 100 சதவீதம் விசுவாசமாக இருப்போம்.." வெற்றி மகிழ்ச்சியில் விஜய் திட்டவட்டம்
Sivakrishnamurthy IAS : ‘கலெக்டரான கூலித் தொழிலாளியின் மகன்’ யார் இந்த தேனி ஆட்சியர் சிவகிருஷ்ணமூர்த்தி..!
‘கலெக்டரான கூலித் தொழிலாளியின் மகன்’ யார் இந்த தேனி ஆட்சியர் சிவகிருஷ்ணமூர்த்தி..!
மத்திய கல்வி நிறுவனங்களில் BC, MBC மாணவர்களுக்கு ரூ.2 லட்சம் கல்வி உதவித்தொகை!
மத்திய கல்வி நிறுவனங்களில் BC, MBC மாணவர்களுக்கு ரூ.2 லட்சம் கல்வி உதவித்தொகை!
MK Stalin:
MK Stalin: "துரோகத்திற்கான இடைக்கால வெற்றி.. விஜய்யின் வீழ்ச்சி தொடக்கம்.." திமுக தோல்விக்கு மு.க.ஸ்டாலின் பரபரப்பு விளக்கம்
TVK:
TVK: "தேர்தல் தோல்வியை சமாளித்து திமுக எப்படி உருட்டும்?" நக்கல் செய்த தவெக!
ADMK: இரண்டாவது இடம்கூட இல்ல.. 3வது இடம்..! தொடர் சறுக்கலில் அதிமுக! என்னதான் செய்வார் இபிஎஸ்?
ADMK: இரண்டாவது இடம்கூட இல்ல.. 3வது இடம்..! தொடர் சறுக்கலில் அதிமுக! என்னதான் செய்வார் இபிஎஸ்?
Rajesh Lakhoni IAS : ’மின்சாரத்துறைக்கு புதிய அதிகாரி – டிக் அடித்த அமைச்சர்’ யார் இந்த ராஜேஸ் லக்கானி..!
’மின்சாரத்துறைக்கு புதிய அதிகாரி' யார் இந்த ராஜேஸ் லக்கானி..!
Embed widget