TCS வேலையை உதறிவிட்டு வந்த நடிகர்.. 75 படங்களுக்குப் பிறகு ஜெயிலர் 2 கொடுத்த அங்கீகாரம்!
நாடோடிகள் படத்திற்கு அடுத்தபடியாக ஜெயிலர் 2 படத்தில் நடிகர் நமோ நாராயணின் கதாபாத்திரம் பெரியளவில் ரசிகர்களால் பேசப்பட்டு வருகிறது

ரஜினிகாந்த் நடிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் வெளியாகியுள்ள ஜெயிலர் 2 திரைப்படத்தில் பழக்கடை மூர்த்தி கதாபாத்திரத்தில் நடித்துள்ள நமோ நாராயணன், ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார். இப்படத்தில் அவரது நடிப்புக்குக் கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து, அவரது திரைப்பயணம் குறித்தும் சமூக வலைதளங்களில் பேசப்பட்டு வருகிறது.
நமோ நாராயணன் ஆரம்பத்தில் மென்பொருள் துறையில் பணியாற்றியவர். பின்னர் அந்தத் துறையிலிருந்து விலகி நடிப்பில் கவனம் செலுத்தத் தொடங்கினார். டிசிஎஸ் நிறுவனத்தில் பணியாற்றிய அவர், தனது வேலையை விட்டுவிட்டு தனது நண்பர் சமுத்திரகனி அழைத்ததால் சினிமாவிற்கு வந்தார்.
நாடோடிகள் கொடுத்த அறிமுகம்
2009-ம் ஆண்டு சமுத்திரக்கனி இயக்கத்தில் வெளியான நாடோடிகள் திரைப்படம் நமோ நாராயணனுக்கு முக்கியமான அறிமுகமாக அமைந்தது. சசிகுமார் நடித்த இப்படத்தில் அவர் ஏற்றிருந்த கதாபாத்திரம் ரசிகர்களின் கவனத்தைப் பெற்றது. தொடர்ந்து ஈசன், போராளி, குட்டிப்புலி, நிமிர்ந்து நில், கொம்பன், அப்பா, விசுவாசம் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.
தொடர்ந்து துணைக் கதாபாத்திரங்களிலும் குணச்சித்திர வேடங்களிலும் நடித்து வந்த நமோ நாராயணன், தமிழ் சினிமாவில் தனது பயணத்தைத் தொடர்ந்து வந்தார். இதுவரை அவர் சுமார் 75 படங்களில் நடித்துள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.
ஜெயிலர் 2 கொடுத்த கவனம்
தற்போது வெளியாகியுள்ள ஜெயிலர் 2 திரைப்படத்தில் பழக்கடை மூர்த்தி என்ற கதாபாத்திரத்தில் நமோ நாராயணன் நடித்துள்ளார். படத்தில் அவரது நகைச்சுவை மற்றும் திருப்பங்கள் நிறைந்த காட்சிகள் ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றுள்ளன. குறிப்பாக, சுராஜ் வெஞ்சரமூடுவுடன் அவர் இடம்பெறும் செஸ் காட்சி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
நாடோடிகள் படத்தின் மூலம் அறிமுகமாகி, பல ஆண்டுகளாகத் தொடர்ந்து பல்வேறு கதாபாத்திரங்களில் நடித்துவரும் நமோ நாராயணனுக்கு ஜெயிலர் 2 தற்போது பரவலான கவனத்தைப் பெற்றுத் தந்துள்ளது. அவரது நீண்ட திரைப்பயணத்தில் இந்தப் படம் பேசப்படும் மற்றொரு படமாக அமைந்துள்ளது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்





















