மேலும் அறிய

Nagesh on Vaali: “கழிவறை சுத்தம் செய்ய ஒரு பொண்ணு வரும்; நானும் வாலியும் காத்திருப்போம்” - வைரலாகும் நாகேஷின் வீடியோ

கலைஞர்கள் மறைந்தாலும் அவர்களின் நினைவுகளும், சினிமாத்துறைக்கான பங்களிப்பும் சமூக வலைத்தளங்கள் மூலமாக இக்கால தலைமுறையினருக்கும் கொண்டு செல்லப்படுகிறது. 

கவிஞர் வாலியுடனான உறவு குறித்து நடிகர் நாகேஷ் பேசிய பழைய வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகியுள்ளது. 

தமிழ் சினிமாவுக்கு கிடைத்த பொக்கிஷங்களில் நடிகர் நாகேஷூம், கவிஞர் வாலியும் மிக முக்கியமானவர்கள். நாகேஷ் பன்முக மொழிகளில் 1000 படங்களுக்கு மேல் நடித்துள்ளார். அதேபோல் வாலியும் 15 ஆயிரம் பாடல்களுக்கு மேல் எழுதியுள்ளார். இந்த இரு கலைஞர்கள் மறைந்தாலும் அவர்களின் நினைவுகளும், சினிமாத்துறைக்கான பங்களிப்பும் சமூக வலைத்தளங்கள் மூலமாக இக்கால தலைமுறையினருக்கும் கொண்டு செல்லப்படுகிறது. 

 இளமை காலத்தில் அதாவது சினிமாவில் வாய்ப்புக்காக காத்திருந்த போது நடிகர்கள் நாகேஷ், ஸ்ரீகாந்த், கவிஞர் வாலி ஆகியோர் சென்னை தியாகராயநகர் சிவா விஷ்ணு ஆலயத்துக்கு எதிரே இருந்த கிளப் ஹவுஸ் அறையில் தான் தங்கியிருந்துள்ளனர். அங்கு உருவான அவர்களின் நட்பு பிற்காலத்தில் 3 பேரும் சினிமாவில் மிகப்பெரிய இடத்தில் இருந்தபோதும் அதேபோல் தான் தொடர்ந்துள்ளது. இதனை பலமுறை வாலியும், நாகேஷூம் தங்களது பேட்டிகளின் போது வெளிப்படுத்தியுள்ளனர். 

அந்த வகையில் நிகழ்ச்சி ஒன்றில் வாலி பற்றிய பேசிய நாகேஷ், தங்களது இளமைக்கால நினைவுகளை பகிர்ந்து கொள்கிறார். அதில் கிளப் ஹவுஸ் அறையில் தங்கியிருந்த போது வாலி தன்னுடைய அன்றாட கடைமைகளை முடித்து தான் பார்த்தது இல்லை என தெரிவித்துள்ளார். எங்களுக்குள் இருந்த ஒரே ஒற்றுமை என்னவென்றால், ஒரு குறிப்பிட்ட நேரத்தில் நாங்கள் அனைவரும் ஒரு பெண்ணுக்காக காத்திருப்போம். 

அவர் வேறு யாருமல்ல... அங்குள்ள கழிவறையை சுத்தம் செய்ய வரும் பணிப்பெண் தான்.. அந்த நேரம் மட்டும் அந்த கிளப் ஹவுஸில் உள்ள அனைத்து அறைகளின் ஜன்னல் கதவுகளும் அப்பெண்ணை காண்பதற்காக திறக்கப்பட்டிருக்கும் என தெரிவிக்கிறார்.  மேலும் வாலி காசு கொடுத்தாலும் சரி, கொடுக்காவிட்டாலும் சரி பாடல் எழுதி தருவார் என யாரோ சொன்னார்கள். அதில் துளியும் உண்மையில்லை. 

எங்கள் இருவரைப் போல பாக்கி இல்லாமல் சம்பள பணம் வசூலித்தவர்கள் யாருமே இல்லை. வாலி பாடல் எழுதும் போதே பேசப்பட்ட பணம் வந்துவிட்டதா என்பதை தெரிந்துக் கொண்டு தான் முழு பாடலையும் எழுதிக் கொடுப்பார் என அவரைப் பற்றிய பல சுவாரஸ்ய தகவலை நாகேஷ் பகிர்ந்து கொண்டுள்ளார். இதனைப் பார்த்த இணையவாசிகள் பலரும் இருவருக்குமிடையேயான நட்பு குறித்து நெகிழ்ச்சியடைந்துள்ளனர். 

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண 

தலைப்பு செய்திகள்

Karthigai Deepam: கடத்தப்பட்ட சதீஷ்... தேடிவந்த கார்த்திக்.. ஷாக்கான மாயா! கார்த்திகை தீபத்தில் இன்று
Karthigai Deepam: கடத்தப்பட்ட சதீஷ்... தேடிவந்த கார்த்திக்.. ஷாக்கான மாயா! கார்த்திகை தீபத்தில் இன்று
பார்ட் 2 என்றாலே சரக்கு தீர்ந்துப்போச்சுனு சொல்லுவாங்க..ஜெயிலர் 2 படம் ஏன்..விளக்கம் கொடுத்த ரஜினி
பார்ட் 2 என்றாலே சரக்கு தீர்ந்துப்போச்சுனு சொல்லுவாங்க..ஜெயிலர் 2 படம் ஏன்..விளக்கம் கொடுத்த ரஜினி
Jailer 2 Booking : ஜெயிலர் 2 முன்பதிவுகள் தொடக்கம்!
Jailer 2 Booking : ஜெயிலர் 2 முன்பதிவுகள் தொடக்கம்!
“நான் எப்போ தப்பா நடந்தேன்?” – முத்துக்குமரன் கேள்வி.. வஹிதா வெளியிட்ட ஆடியோவால் பரபரப்பு!
“நான் எப்போ தப்பா நடந்தேன்?” – முத்துக்குமரன் கேள்வி.. வஹிதா வெளியிட்ட ஆடியோவால் பரபரப்பு!

வீடியோ

Samantha ZOY Launch: பெண்கள் ஆரோக்கியத்தில் புதிய புரட்சி! நடிகை சமந்தாவின் ZOY லான்ச்
Navanethem pillay : மண்டேலாவுக்காக வாதாடிய தமிழச்சி! ஈழத்தமிழர்களுக்காக குரல் அமைதிக்கான நோபல் பரிசு யார் இந்த நவநீதம் பிள்ளை?
Elon musk Rahul Gandhi : ”நிஜ பாஸ் யார்?இன்னொருத்தர் இருக்காரு”கொளுத்தி போட்ட மஸ்க்-ராகுல்
Thoothukudi Police Issue :
Elon musk on Ambani : இந்தியாவின் BOSS அம்பானியா? மோடி மீது எலான் மஸ்க் அட்டாக்! ஸ்டார்லிங்க்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
டிராஃபிக் பிரச்னைக்கு குட்பை! நாளை முதல் பூந்தமல்லி To வடபழனி இனி நிமிடங்களில் போகலாம்!
டிராஃபிக் பிரச்னைக்கு குட்பை! நாளை முதல் பூந்தமல்லி To வடபழனி இனி நிமிடங்களில் போகலாம்!
மக்களே உஷார்! தமிழகத்தில் எகிறப்போகும் வெயில்... எந்தெந்த மாவட்டங்களில் மழை? - வானிலை வார்னிங்
மக்களே உஷார்! தமிழகத்தில் எகிறப்போகும் வெயில்... எந்தெந்த மாவட்டங்களில் மழை? - வானிலை வார்னிங்
பூந்தமல்லி - வடபழனி மெட்ரோ சேவை நாளை தொடக்கம்! சென்னை வருகிறார் PM மோடி! வரவேற்கும் விஜய்!
பூந்தமல்லி - வடபழனி மெட்ரோ சேவை நாளை தொடக்கம்! சென்னை வருகிறார் PM மோடி! வரவேற்கும் விஜய்!
வீட்டில் விருந்து.. ஒரே காரில் எங்கு பயணம்? அந்த 45 நிமிடங்கள்.. ராகுல் - விஜய் பேசியது என்ன?
வீட்டில் விருந்து.. ஒரே காரில் எங்கு பயணம்? அந்த 45 நிமிடங்கள்.. ராகுல் - விஜய் பேசியது என்ன?
ADMK: தவெக-விற்கு தாவிய அதிமுக வாக்குகள்.. சரியாத திமுக ஓட்டுகள்! இரட்டை இலை செல்வாக்கை மீட்பாரா இபிஎஸ்?
ADMK: தவெக-விற்கு தாவிய அதிமுக வாக்குகள்.. சரியாத திமுக ஓட்டுகள்! இரட்டை இலை செல்வாக்கை மீட்பாரா இபிஎஸ்?
Delhi Protest: டெல்லியில் உச்சக்கட்ட பதற்றம்.. அடுத்தடுத்து நடக்கும் திருப்பம்..முன்னாள் முதல்வர்கள் குண்டு கட்டாக கைது
Delhi Protest: டெல்லியில் உச்சக்கட்ட பதற்றம்.. அடுத்தடுத்து நடக்கும் திருப்பம்..முன்னாள் முதல்வர்கள் குண்டு கட்டாக கைது
CJP Protest: டெல்லியில் இன்று CJP போராட்டம்.. கதிகலங்கும் தலைநகரம்.. பதவி விலகுவாரா ஞானேஷ்குமார்?

Embed widget