அஜித் 64 படத்தில் இணைந்த மோகன்லால்...?வெளியான மாஸ் அப்டேட்
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் நடிக்கும் அடுத்த படத்தில் மலையாள சூப்பர்ஸ்டார் மோகன்லால் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன

AK 64
குட் பேட் அக்லி படத்தின் வெற்றியைத் தொடர்ந்து ஆஜித்தின் அடுத்த படத்தையும் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்க இருக்கிறார். வேல்ஸ் ஃபிலிம்ஸ் இண்டர்நேஷ்னல் இந்த படத்தை ரு 300 கோடி பட்ஜெட்டில் தயாரிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இப்படத்தில் கன்னட நடிகை ஶ்ரீநிதி ஷெட்டி நாயகியாக நடிக்க இருப்பதாக எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது AK 64 படத்தில் நடிக்க மலையாள சூப்பர்ஸ்டார் மோகன்லால் உடன் ஆதிக் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
#AK64 - Mohanlal has been approached for a pivotal role in the film😲🌟
— AmuthaBharathi (@CinemaWithAB) June 19, 2025
If it happens we're gonna see #Ajithkumar & #Mohanlal in a single frame & Adhik definitely gonna showcase with peak elevation 🥵❤️🔥 pic.twitter.com/RCjAUoFn7X





















