மேலும் அறிய

Actor Marimuthu Birthday :"இந்தாம்மா ஏய்” குணசேகரனுக்கு இன்று பிறந்தநாள் .. வில்லாதி வில்லனுக்கு வாழ்த்துக்கள்..

எதிர்நீச்சல் சீரியல் புகழ் மாரிமுத்து இன்று தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவரை பற்றிய ஒரு சிறு தொகுப்பை பார்க்கலாம்.

தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனரும் நடிகருமான மாரிமுத்து, எதிர் நீச்சல் என்ற சீரியல் மூலம்  மக்கள் மத்தியில் பிரபலமானார்.  இவர் 90களில் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி பல படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து மக்கள் மத்தியில் புகழ் பெற்றார். குறிப்பாக சமீபத்தில் வெளியான ‘பரியேறும் பெருமாள்’,  ‘கொம்பன்’ ‘ஜீவா’ ஆகிய படங்களில் இவரின் நடிப்பு கவனம் பெற்றது.  இவர் ‘கண்ணும் கண்ணும்’ மற்றும் ‘புலி வால்’ ஆகிய திரைப்படங்களை இயக்கியுள்ளார். 

பொதுவாகவே சினிமாவில் நடிகராக வேண்டும், பெரிய இயக்குனராக வேண்டும் என்ற கனவோடு சென்னை வந்து அந்த கனவு நிறைவேறாமல் ஏமாற்றத்துடன் சென்றவர்கள் ஏராளம். திறமை இருந்தாலும் சிலர் வாய்ப்பு கிடைக்காமலே காணாமல் போய் விடுகின்றனர். சிலர் மட்டுமே சினிமாவில் வெற்றி காண்கின்றனர். களத்தின் யதார்த்த நிலவரம் இப்படி இருக்க, மாரிமுத்து சினிமாவில் துணை இயக்குனராக பணியாற்றிய காலங்களில் ஒரு ஹோட்டலில் பகுதி நேரத்தில் பணி புரிந்து வந்தததுடன் அங்கே கொடுக்கும் உணவையே சாப்பிட்டு, அங்கேயே தங்கி வந்துள்ளார்.

சினிமாவில் வெற்றி பெற வேண்டும் என்ற குறிக்கோளோடு மிகவும் கஷ்டப்பட்டதாகவும் தனது பழைய நினைவுகளை நேர்காணல் ஒன்றில் பகிர்ந்திருந்தார் மாரிமுத்து.  ஒரு கட்டத்தில்  சாப்பாட்டிற்கே வழி இல்லாமல் இருந்த நிலையில் தண்ணீரை மட்டும் குடித்து வந்துள்ளார். மூன்று நாட்களில் அவரின் உடல்நிலை மிகவும் மோசமாகி வயிற்றுப்போக்கு ஏற்பட்டதுடன் நான்காவது நாளில் சுயநினைவை இழந்தார். பின்பு அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்து அவரை காப்பாற்றி உள்ளனர். இப்படி வாழ்க்கையில் அவர் சந்தித்த கஷ்டங்கள் ஏராளம். வாழ்வில் இத்தனை போராட்டங்களையும் கடந்து இன்று ஒரு சிறந்த நடிகராக ஜொலிக்கும் மாரிமுத்து, பாராட்டுக்குரியவர். 
 
தற்போது மாரிமுத்து தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ‘எதிர்நீச்சல்’ தொடரில்  குணசேகரன் என்ற வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.  இவர் மேலும் சில தொடர்களில் நடித்திருந்தாலும், எதிர்நீச்சல் தொடர் தான் இவரின் நடிப்பிற்கு பெரிய அங்கீகாரத்தையும், புகழையும் பெற்று தந்தது.  இவரது நடிப்பிற்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாளமே உள்ளது. குறிப்பாக  இந்த சீரியலில் கதாநாயகியை காட்டிலும் இவரின் கேரக்டர் ரசிகர்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்றுள்ளது. ஒரு நெகட்டிவ் கேரக்டர் இந்த அளவிற்கு மக்கள் ரசிப்பதற்கு மாரிமுத்துவின் அசாத்திய நடிப்பு திறமை தான் காரணம். சோஷியல் மீடியாக்களில் இவரின் ஏராளமான தக் லைப் ,மீம்களையும்  சேர் செய்து நெட்டிசன்கள் இவரை கொண்டாடி வருகின்றனர்.

சீரியல் என்றாலே பெண்கள் தான் பார்ப்பார்கள் என்ற பிம்பம் உள்ள நிலையில், ஆண்களையும் சீரியல் பார்க்க வைத்த பெருமை மாரிமுத்துவையே சேரும். திறமை இருந்தால் வெள்ளித்திரை என்ன சின்னைத்திரையின் மூலமும் புகழின் உச்சத்தை தொடலாம் என்பதற்கு சிறந்த உதாரணமாக விளங்கும் நடிகர் மாரிமுத்துவை அவரின் பிறந்தநாளில் வாழ்த்தி மகிழ்கிறது ஏபிபி நாடு. 

தலைப்பு செய்திகள்

Karthigai Deepam: கடத்தப்பட்ட சதீஷ்... தேடிவந்த கார்த்திக்.. ஷாக்கான மாயா! கார்த்திகை தீபத்தில் இன்று
Karthigai Deepam: கடத்தப்பட்ட சதீஷ்... தேடிவந்த கார்த்திக்.. ஷாக்கான மாயா! கார்த்திகை தீபத்தில் இன்று
பார்ட் 2 என்றாலே சரக்கு தீர்ந்துப்போச்சுனு சொல்லுவாங்க..ஜெயிலர் 2 படம் ஏன்..விளக்கம் கொடுத்த ரஜினி
பார்ட் 2 என்றாலே சரக்கு தீர்ந்துப்போச்சுனு சொல்லுவாங்க..ஜெயிலர் 2 படம் ஏன்..விளக்கம் கொடுத்த ரஜினி
Jailer 2 Booking : ஜெயிலர் 2 முன்பதிவுகள் தொடக்கம்!
Jailer 2 Booking : ஜெயிலர் 2 முன்பதிவுகள் தொடக்கம்!
“நான் எப்போ தப்பா நடந்தேன்?” – முத்துக்குமரன் கேள்வி.. வஹிதா வெளியிட்ட ஆடியோவால் பரபரப்பு!
“நான் எப்போ தப்பா நடந்தேன்?” – முத்துக்குமரன் கேள்வி.. வஹிதா வெளியிட்ட ஆடியோவால் பரபரப்பு!

வீடியோ

Samantha ZOY Launch: பெண்கள் ஆரோக்கியத்தில் புதிய புரட்சி! நடிகை சமந்தாவின் ZOY லான்ச்
Navanethem pillay : மண்டேலாவுக்காக வாதாடிய தமிழச்சி! ஈழத்தமிழர்களுக்காக குரல் அமைதிக்கான நோபல் பரிசு யார் இந்த நவநீதம் பிள்ளை?
Elon musk Rahul Gandhi : ”நிஜ பாஸ் யார்?இன்னொருத்தர் இருக்காரு”கொளுத்தி போட்ட மஸ்க்-ராகுல்
Thoothukudi Police Issue :
Elon musk on Ambani : இந்தியாவின் BOSS அம்பானியா? மோடி மீது எலான் மஸ்க் அட்டாக்! ஸ்டார்லிங்க்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பூந்தமல்லி - வடபழனி மெட்ரோ சேவை நாளை தொடக்கம்! சென்னை வருகிறார் PM மோடி! வரவேற்கும் விஜய்!
பூந்தமல்லி - வடபழனி மெட்ரோ சேவை நாளை தொடக்கம்! சென்னை வருகிறார் PM மோடி! வரவேற்கும் விஜய்!
வீட்டில் விருந்து.. ஒரே காரில் எங்கு பயணம்? அந்த 45 நிமிடங்கள்.. ராகுல் - விஜய் பேசியது என்ன?
வீட்டில் விருந்து.. ஒரே காரில் எங்கு பயணம்? அந்த 45 நிமிடங்கள்.. ராகுல் - விஜய் பேசியது என்ன?
ADMK: தவெக-விற்கு தாவிய அதிமுக வாக்குகள்.. சரியாத திமுக ஓட்டுகள்! இரட்டை இலை செல்வாக்கை மீட்பாரா இபிஎஸ்?
ADMK: தவெக-விற்கு தாவிய அதிமுக வாக்குகள்.. சரியாத திமுக ஓட்டுகள்! இரட்டை இலை செல்வாக்கை மீட்பாரா இபிஎஸ்?
Delhi Protest: டெல்லியில் உச்சக்கட்ட பதற்றம்.. அடுத்தடுத்து அதிர்ச்சி..முன்னாள் முதல்வர்கள் குண்டு கட்டமாக கைது
Delhi Protest: டெல்லியில் உச்சக்கட்ட பதற்றம்.. அடுத்தடுத்து அதிர்ச்சி..முன்னாள் முதல்வர்கள் குண்டு கட்டமாக கைது
CJP Protest: டெல்லியில் இன்று CJP போராட்டம்.. கதிகலங்கும் தலைநகரம்.. பதவி விலகுவாரா ஞானேஷ்குமார்?
CJP Protest: டெல்லியில் இன்று CJP போராட்டம்.. கதிகலங்கும் தலைநகரம்.. பதவி விலகுவாரா ஞானேஷ்குமார்?
Karthigai Deepam: கடத்தப்பட்ட சதீஷ்... தேடிவந்த கார்த்திக்.. ஷாக்கான மாயா! கார்த்திகை தீபத்தில் இன்று
Karthigai Deepam: கடத்தப்பட்ட சதீஷ்... தேடிவந்த கார்த்திக்.. ஷாக்கான மாயா! கார்த்திகை தீபத்தில் இன்று
CM Vijay:
CM Vijay: "தமிழக மக்களுக்கு 100 சதவீதம் விசுவாசமாக இருப்போம்.." வெற்றி மகிழ்ச்சியில் விஜய் திட்டவட்டம்
பூவிருந்தவல்லி – வடபழனி மெட்ரோ வழித்தடம் ரெடி! வீடு வாங்குவோர் கவனிக்க வேண்டிய 5 முக்கிய இடங்கள்!
பூவிருந்தவல்லி வடபழனி மெட்ரோ வழித்தடம் ரெடி! வீடு வாங்குவோர் கவனிக்க வேண்டிய 5 முக்கிய இடங்கள்!
Embed widget