மேலும் அறிய

Mansoor Ali Khan: 'நீ தூக்கு மாட்டி சாவு; மகளிர் ஆணையம் என்ன கிழிக்கிறது?’ - குஷ்பூவை சரமாரியாக சாடிய மன்சூர் அலிகான்..!

மகளிர் ஆணையம் என்ன கிழித்துக் கொண்டிருக்கிறது என நடிகர் மன்சூர் அலிகான் பத்திரிக்கையாளர் சந்திப்பில் கொந்தளித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

மகளிர் ஆணையம் என்ன கிழித்துக் கொண்டிருக்கிறது என நடிகர் மன்சூர் அலிகான் பத்திரிக்கையாளர் சந்திப்பில் கொந்தளித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

தமிழ் சினிமாவில் பிரபல வில்லன் நடிகராக வலம் வருபவர் மன்சூர் அலிகான். தற்போது காமெடி கேரக்டரிலும் நடித்து வருகிறார். இவர் சமீபத்தில் விஜய் நடித்த “லியோ” படத்தில் நடித்திருந்தார். இந்த படத்தில் ஹீரோயினாக த்ரிஷா நடித்திருந்தார். இதனிடையே கடந்த வாரம் செய்தியாளர்களை சந்தித்த நடிகர் மன்சூர் அலிகான், த்ரிஷா பற்றி கொச்சையான பல கருத்துகளை தெரிவித்தார். இது சமூக வலைத்தளங்களில் வைரலாகி மன்சூர் அலிகானுக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது. 

நடிகை த்ரிஷாவும் மன்சூர் அலிகானை கண்டிக்கும் விதமாக பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார். தொடர்ந்து விளக்கம் அளித்த மன்சூர் அலிகான், “திரிஷாவிடம் தப்பான வீடியோவை காட்டியிருக்கிறார்கள். நான் பெண்களை எப்போதும் மதிப்பவன்” என தெரிவித்திருந்தார். இப்படியான நிலையில் நடிகர் சங்கம் மன்சூர் அலிகான் மன்னிப்பு கேட்க வேண்டும் என தெரிவித்திருந்தது. தேசிய மகளிர் ஆணையம் மன்சூர் அலிகான் மீது நடவடிக்கை எடுக்க டிஜிபிக்கு உத்தரவிட்டுள்ளது. 

இப்படியான நிலையில், மன்சூர் அலிகான் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, “நான் எந்த பெண்களையும் தவறாக நினைக்க மாட்டேன். எல்லோரையும் அரவணைத்து தான் செல்வேன். தமிழ்நாடே என் பக்கம் தான் உள்ளது. இந்த பூச்சாண்டி வேலைகளுக்கு எல்லாம் நான் பயப்படமாட்டேன். நடிகை குஷ்பூ, தேசிய மகளிர் ஆணையத்தை பார்த்து கேட்கிறேன். இதெல்லாம் ஒரு விஷயமா? . மூத்த நடிகர் எஸ்.வி.சேகர், காரைக்குடியில் ஷர்மா குஷ்பூ பற்றி அவதூறு பேசினார்களே. அவர்கள் பாஜகவில் தானே இருக்கிறார்கள்.  கைது பண்ண சொல்ல வேண்டிதானே. நீட் தேர்வுக்கு அனிதா தற்கொலை செய்துக் கொள்ளும் போதும் இந்த மகளிர் ஆணையம் என்ன செய்துக் கொண்டிருந்தது. வெட்கம், மானம், சூடு, சுரணை இருந்தா நீ தூக்கு மாட்டி சாவு. 

மணிப்பூரில் பெண்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டப்போது என்ன செஞ்சிட்டு இருந்தீங்க?   என்னுடைய விவகாரத்தில் 4 மணி நேரத்தில் அளித்த அறிக்கையை திரும்ப பெற்று  நடிகர் சங்கம் செய்தது மாபெரும் தவறு. 21 நாட்கள் அவகாசம் கொடுத்து விளக்கம் அளிக்க நோட்டீஸ் அனுப்ப வேண்டும். 

நேற்றில் இருந்து நடிகர் சங்கத்தைச் சேர்ந்த நாசர், விஷால் என யாருக்கு அழைத்தாலும் போனை எடுக்க மாட்டேங்குறாங்க. கார்த்தி போனை எடுத்து பூச்சி முருகனை அழைத்து பேச சொன்னார். அவருக்கு கூப்பிட்டால் போனை எடுக்கவில்லை. மன்சூர் அலிகான் என்றால் இளிச்சவாயனா?. ஒழுங்கா நடந்துகோங்க. நான் எந்திரிச்சா ஒரு பிரளயமே கிளம்பும்” என மன்சூர் அலிகான் தெரிவித்தார். 

தலைப்பு செய்திகள்

திமுக ஆட்சியில் தப்பி வந்த இர்ஃபானை தட்டி தூக்கிய தவெக! மீண்டும் சூடுபிடித்த பாலின வெளிப்படுத்தல் வழக்கு
திமுக ஆட்சியில் தப்பி வந்த இர்ஃபானை தட்டி தூக்கிய தவெக! மீண்டும் சூடுபிடித்த பாலின வெளிப்படுத்தல் வழக்கு
90 நொடி காட்சிக்காக 1.5 கோடி செலவு செய்த ஜனநாயகன் படக்குழு!
90 நொடி காட்சிக்காக 1.5 கோடி செலவு செய்த ஜனநாயகன் படக்குழு!
அரசியலில் எதிர்காலம் இருக்கா?முதல்வர் விஜயின் ஜோதிடர் ராதன் பண்டித்தை சந்தித்த தனுஷ்?
அரசியலில் எதிர்காலம் இருக்கா?முதல்வர் விஜயின் ஜோதிடர் ராதன் பண்டித்தை சந்தித்த தனுஷ்?
விஜயுடன் ஒரே பாடலில் மட்டும் தோன்றிய நடிகை... ஒரு படத்தில் கூட ஜோடியாக நடிக்காத ஆச்சர்யம்!
விஜயுடன் ஒரே பாடலில் மட்டும் தோன்றிய நடிகை... ஒரு படத்தில் கூட ஜோடியாக நடிக்காத ஆச்சர்யம்!

வீடியோ

Thanjavur Viral Video : ”உன்ன DISMISS பண்ணியாச்சே நீ எப்படி வேலை செய்ற” ரணகளமான அரசு அலுவலகம்
Sonam Wangchuk : பணிந்த மத்திய அரசு! நேரில் வந்த நட்டா26 நாள் உண்ணாவிரதத்தை முடித்த சோனம் வாங்சுக்
CM Vijay Meets DK Shivakumar : நானே களத்துல இறங்குறேன்! காவிரி விவகாரம்.. கர்நாடகா செல்லும் CM விஜய்!
Senthil Balaji Entry : ஒரு மாதம் தலைமறைவு.. STATION-ல வந்து SIGN போடணும்! ஆஜரான செந்தில் பாலாஜி
அரசு நிகழ்ச்சியில் ரீல்ஸ் தவெக-வினர் அலப்பறை கண்டுகொள்ளாத அருண்ராஜ்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
கரூர் சம்பவம்: விஜய் வழங்கிய அரசுப்பணி ஆணை ரத்து! ஆர்டர் போட்ட உயர்நீதிமன்ற மதுரை கிளை!
கரூர் சம்பவம்: விஜய் வழங்கிய அரசுப்பணி ஆணை ரத்து! ஆர்டர் போட்ட உயர்நீதிமன்ற மதுரை கிளை!
CAT 2026: IIM கனவை நனவாக்கலாம்- எம்பிஏ படிப்பில் சேர ஆக.3 முதல் பதிவு, முழு விவரம்!
CAT 2026: IIM கனவை நனவாக்கலாம்- எம்பிஏ படிப்பில் சேர ஆக.3 முதல் பதிவு, முழு விவரம்!
Thirumavalavan - Vijay: முதலமைச்சர் விஜய்க்கு திருமாவளவன் திடீர் கோரிக்கை! என்ன தெரியுமா?
Thirumavalavan - Vijay: முதலமைச்சர் விஜய்க்கு திருமாவளவன் திடீர் கோரிக்கை! என்ன தெரியுமா?
CM Vijay Karnataka Visit : ’கர்நாடகா செல்லும் முதல்வர் விஜயின் பயணம் ரத்து?’ தீவிர ஆலோசனையில் முதல்வர் அலுவலகம்..!
’கர்நாடகா செல்லும் முதல்வர் விஜயின் பயணம் ரத்து?’ தீவிர ஆலோசனையில் முதல்வர் அலுவலகம்..!
US Iran War: “நிறுத்தி இருக்கோம், ஆனா நிறுத்தல“ ஈரான் மீதான தாக்குதல் குறித்து வெள்ளை மாளிகை முக்கிய அறிக்கை
“நிறுத்தி இருக்கோம், ஆனா நிறுத்தல“ ஈரான் மீதான தாக்குதல் குறித்து வெள்ளை மாளிகை முக்கிய அறிக்கை
Maruti Safest Cars: 5 ஸ்டார் ரேட்டிங் இருக்குற மாருதியோட பாகுபலி கார்கள் எது எதுன்னு தெரியுமா.? இந்தாங்க லிஸ்ட்
5 ஸ்டார் ரேட்டிங் இருக்குற மாருதியோட பாகுபலி கார்கள் எது எதுன்னு தெரியுமா.? இந்தாங்க லிஸ்ட்
Iran Vs Ukraine: இது என்னடா புது தலைவலி.?! வர்த்தக கப்பல் மீது தாக்குதல்; உக்ரைனுக்கு ஈரான் எச்சரிக்கை; நடந்தது என்ன.?
இது என்னடா புது தலைவலி.?! வர்த்தக கப்பல் மீது தாக்குதல்; உக்ரைனுக்கு ஈரான் எச்சரிக்கை; நடந்தது என்ன.?
ஒரே சார்ஜில் 140 கி.மீட்டர் மைலேஜ்.. இளைஞர்களின் இதயமாகும் Odysse Evoqis இ பைக் - விலை எவ்ளோ?
ஒரே சார்ஜில் 140 கி.மீட்டர் மைலேஜ்.. இளைஞர்களின் இதயமாகும் Odysse Evoqis இ பைக் - விலை எவ்ளோ?
Embed widget