மேலும் அறிய

Madhavan son Vedaant: நீச்சல் சாம்பியன்ஷிப் போட்டியில் 5 தங்கப்பதக்கங்கள் வென்ற மாதவன் மகன்!

கோலாலம்பூரில் நடைபெற்ற சர்வதேச நீச்சல் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியா சார்பில் பங்கேற்று 5 தங்கப்பதக்கங்களை மாதவனின் மகன் வேதாந்த் வென்றுள்ளார்.

உலகளாவிய நீச்சல் சாம்பியன்ஷிப் போட்டியில் நடிகர் மாதவனின் மகன் 5 தங்கப்பதக்களை வென்று சாதனை படைத்துள்ளார்.

கோலிவுட், பாலிவுட் என பிரபல நடிகர்களுள் ஒருவராக வலம் வருபவர் நடிகர் மாதவன். சீரியல் தொடங்கி வெள்ளித்திரை வரை கிட்டத்தட்ட கடந்த 25 ஆண்டுகளாக அனைவராலும் விரும்பப்படும் நடிகராக வலம் வருகிறார் மாதவன்.

நடிப்பு தாண்டி, தன் குடும்பத்தினருடன் நேரம் செலவழிப்பது, குறிப்பாக தன் மகனின் ஆசை அறிந்து நீச்சல் சாம்பியனாக அவர் சாதிக்க உறுதுணையாக வலம் வருவது என மாதவன் தொடர்ந்து  இணையத்தில் லைக்ஸ் அள்ளி வருகிறார். 

மேலும், நீச்சல் போட்டிகளில் தன் மகனின் சாதனைகள் குறித்தும் தொடர்ந்து தன் சமூக வலைதளப் பக்கத்திலும் மாதவன் பதிவிட்டு வருகிறார். 

அந்த வகையில் மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் நடைபெற்ற சர்வதேச நீச்சல் சாம்பியன்ஷிப் போட்டியில் 5 தங்கப்பதக்கங்களை மாதவனின் மகன் வேதாந்த் வென்றுள்ளார்.  மேலும்,  இதுகுறித்து மாதவன் தன் ட்விட்டர் பக்கத்தில் நெகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளார்.

மலேசியன் இன்விட்டேஷனல் ஏஜ் க்ரூப் சாம்பியன்ஷிப் போட்டியில் 50, 100, 200, 400 மற்றும் 1500 மீட்டர் போட்டிகள் அனைத்திலும் இந்தியா சார்பில் பங்குபெற்று வேதாந்த் 5 தங்கப்பதக்கங்களை வென்றுள்ளார்.

பதக்கங்களுடன் தன் தாய் சரிதாவுடன் வேதாந்த் நிற்கும் புகைப்படங்களை மாதவன் தன் ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள நிலையில் அவருக்கு ரசிகர்கள் தொடர்ந்து வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

மேலும் மாதவனை வாழ்த்திப் பதிவிட்டுள்ள நடிகர் ஜெயம் ரவி , ”அன்புள்ள மேடி.. உங்களை நீண்ட நாள்களாக நான் பாராட்ட வேண்டுமென நினைத்து வந்தேன்.. நீங்கள் ஒரு சிறந்த நடிகர். அற்புதமான தந்தையாகவும் அதே சமயம் அற்புதமான மனிதராகவும் உள்ளீர்கள். இது ஒரு அரிய காம்பினேஷன். நீங்கள் எல்லா வகையிலும் என்னை ஊக்குவிக்கிறீர்கள். கோல்டன் பாய் வேதாந்த்...” எனப் பாராட்டி பதிவிட்டுள்ளார்.

 

இந்நிலையில் மாதவனின் இந்தப் பதிவு இணையத்தில் லைக்ஸ் அள்ளி வருகிறது. 

இஸ்ரோவின் முன்னாள் விஞ்ஞானி நம்பி நாராயணின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக் கொண்ட ‘ராக்கெட்ரி நம்பி எஃபெக்ட்'  படத்தை மாதவன் முன்னதாக இயக்கி நடித்திருந்தார். இந்தப் படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது.

அடுத்ததாக அம்ரிக்கி பண்டிட் எனும் இந்தி படத்தில் மாதவன் நடிக்க உள்ளார். மற்றொருபுறம், சித்தார்த், நயன்தாரா ஆகியோருடன் இணைந்து டெஸ்ட் படத்திலும் மாதவன் நடிக்க உள்ளார். சென்ற வாரம் இந்தப் படத்தின் மோஷன் போஸ்டர் வெளியாகி வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.

தலைப்பு செய்திகள்

Dhanush : 1 கோடி செலவில் ஐடி விங்..நடிகர் தனுஷின் அடுத்த அரசியல் நகர்வு?
Dhanush : 1 கோடி செலவில் ஐடி விங்..நடிகர் தனுஷின் அடுத்த அரசியல் நகர்வு?
அந்த படம் வந்தால் எல்லாம் அடங்கிடும்...ட்ரோல்கள் குறித்து லோகேஷ் கனகராஜ்
அந்த படம் வந்தால் எல்லாம் அடங்கிடும்...ட்ரோல்கள் குறித்து லோகேஷ் கனகராஜ்
‘பாரிஸ் கஃபே’ இசை வெளியீட்டு விழா
‘பாரிஸ் கஃபே’ இசை வெளியீட்டு விழா
‘ONE MAN’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு
‘ONE MAN’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Train Service: எழும்பூரில் பராமரிப்பு பணி.. செப்டம்பரில் இந்த 4 ரயில் சேவையில் மாற்றம்.. நோட் பண்ணுங்க!
Train Service: எழும்பூரில் பராமரிப்பு பணி.. செப்டம்பரில் இந்த 4 ரயில் சேவையில் மாற்றம்.. நோட் பண்ணுங்க!
Trump Hormuz Map: ட்ரம்ப்பே, இதெல்லாம் ஓவர் யா.! ஹார்முஸ வச்சு Map-ஆ.! ஈரான் கொடுத்த தரமான பதிலடி என்ன தெரியுமா.?
ட்ரம்ப்பே, இதெல்லாம் ஓவர் யா.! ஹார்முஸ வச்சு Map-ஆ.! ஈரான் கொடுத்த தரமான பதிலடி என்ன தெரியுமா.?
CM Vijay: மக்கள் திருந்த 6 மாசம் டைம்.. மொத்தமாக மாறப்போகும் தமிழ்நாடு.. விஜய் எடுத்த முடிவு!
CM Vijay: மக்கள் திருந்த 6 மாசம் டைம்.. மொத்தமாக மாறப்போகும் தமிழ்நாடு.. விஜய் எடுத்த முடிவு!
சென்னை டூ கன்னியாகுமரி.. இனி 8 மணி நேரத்தில் செல்லலாம்.. தமிழக அரசு அதிரடி அறிவிப்பு!
சென்னை டூ கன்னியாகுமரி.. இனி 8 மணி நேரத்தில் செல்லலாம்.. தமிழக அரசு அதிரடி அறிவிப்பு!
D.K.Shivakumar: உங்க வேலையை பார்க்குறது நல்லது.. விஜயை சீண்டிய டி.கே.ஷிவகுமார்.. நடந்தது என்ன?
D.K.Shivakumar: உங்க வேலையை பார்க்குறது நல்லது.. விஜயை சீண்டிய டி.கே.ஷிவகுமார்.. நடந்தது என்ன?
விக்கிரவாண்டி மக்களுக்காக அடித்துக் கொண்ட அரசியல் கட்சிகள்.. கலவரப்பூமியான சட்டசபை!
விக்கிரவாண்டி மக்களுக்காக அடித்துக் கொண்ட அரசியல் கட்சிகள்.. கலவரப்பூமியான சட்டசபை!
தமிழகத்தில் நாளை எந்தெந்த மாவட்டத்துக்கு கனமழை எச்சரிக்கை - இன்றைய வானிலை அறிக்கை இதோ
தமிழகத்தில் நாளை எந்தெந்த மாவட்டத்துக்கு கனமழை எச்சரிக்கை - இன்றைய வானிலை அறிக்கை இதோ
Yamaha R2 Price Features: யமஹா R15 வெறியர்களே.! அதவிட இன்னும் பவர்ஃபுல்லான R2 வந்துட்டே இருக்கு.! லாஞ்ச் எப்போது, விலை என்ன.?
யமஹா R15 வெறியர்களே.! அதவிட இன்னும் பவர்ஃபுல்லான R2 வந்துட்டே இருக்கு.! லாஞ்ச் எப்போது, விலை என்ன.?
Embed widget