மேலும் அறிய

Kichcha Sudeep: கிச்சா சுதீப் மீது மோசடி புகார் - ரூ.10 கோடி கேட்டு மான நஷ்ட வழக்கு

நான் ஈ, பாகுபலி, விஜய் நடித்த புலி, முடிஞ்சா இவன பிடி உள்ளிட்ட தமிழ் படங்களில் நடித்த கிச்சா சுதீப் மீது பிரபல தயாரிப்பாளர்கள் மோசடி புகார்

தமிழ் திரையுலகில் ’நான் ஈ’ படத்தின் மூலம் அறிமுகமான கிச்சா சுதீப் மீது மற்றுமொரு பிரபல தயாரிப்பாளர் மோசடி புகார் கூறியுள்ளார். 

நான் ஈ, பாகுபலி, விஜய் நடித்த புலி, முடிஞ்சா இவன பிடி உள்ளிட்ட தமிழ் படங்களில் நடித்த கிச்சா சுதீப், கன்னட திரையுலகின் சூப்பர் ஸ்டார் நடிகராக வலம் வருபவர். தமிழ், கன்னடம் மட்டும் இன்றி இந்தி, தெலுங்கு திரையுலகிலும் கலக்கி வருபவர். நடிப்பு மட்டும் இல்லாமல் கிச்சா சுதீப் தயாரித்த 7 படங்கள் திரைக்கு வந்துள்ளன. நடிகராகவும், இயக்குனராகவும், தயாரிப்பாளராகவும் இருக்கும் கிச்சா சுதீப் கப்சா-2 படத்தில் நடித்து வருகிறார். பிரமாண்டமாக எடுக்கப்பட்டு வரும் இந்த படம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது. 

இந்த நிலையில் கிச்சா சுதீப் மீது பிரபல கன்னட தயாரிப்பாளர் எம்.என்.குமார் பகிரங்க மோசடி குற்றச்சாட்டை வைத்துள்ளார். அதில் கிச்சா தனது படத்தில் நடிப்பதாக பணம் பெற்று கொண்டு ஏமாற்றிவிட்டதாக கூறியுள்ளார். இவரை தொடர்ந்து கிச்சா சுதீப் மீது தயாரிப்பாளர் ரஹ்மானும் மோசடி புகார் கூறியுள்ளார். கிச்சா நடிக்க இருந்த இந்தி படத்தில் தான் ரூ.30 லட்சம் வரை முதலீடு செய்ததாகவும், அதில் முன்பணமாக ரூ.5 லட்சம் கிச்சாவுக்கு கொடுத்ததாகவும் கூறியுள்ளார். அந்த படத்தில் கிச்சா நடிக்காததால் தான் கொடுத்த தொகையில் ரூ.1.80 லட்சத்தை மட்டுமே கிச்சா திரும்ப கொடுத்துள்ளதாகவும், மீதி பணத்தை தரவில்லை என ரஹ்மான் கூறியுள்ளார். தற்போது பண நெருக்கடி இருப்பதால் தனது பணத்தை திரும்ப தரும்படி கேட்டு கொண்டுள்ளார்.

மேலும், கிச்சாவுக்கு எதிராகத்தான் எந்த ஒரு புகாரும் கூறவில்லை என்ற ரஹ்மான், கிச்சா சுதீப்பை பார்க்க அவரது வீட்டுக்கு 150 முறை சென்றிருப்பேன். ஆனால், ஒருமுறை கூட என கிச்சா பார்க்கவில்லை என கூறியுள்ளார். தயாரிப்பாளர்களின் இந்த குற்றச்சாட்டுக்கு மறுப்பு தெரிவித்துள்ளார் கிச்சா சுதீப்,  மானநஷ்ட ஈடு வழக்கு தொடர்ந்துள்ளார். தனது புகழுக்கு களங்கம் விளைவிக்கும் விதமாக தயாரிப்பாளர் எம்.என். குமார் குற்றம்சாட்டி வருவதாகவும், தன் பெயர் கெட்டுப்போனதால் ரூ.10 கோடி மான நஷ்ட ஈடாக வழங்க வேண்டும் என்றும் கிச்சா சுதீப் கேட்டுள்ளார்.

பிரபல நடிகர் மற்றும் தயாரிப்பாளரின் மோதலால் கன்னட திரையுலகம் பரபரப்பில் உள்ளது. இதேபோன்று, தமிழ் திரையுலகில் முன்னணி நடிகரான அஜித்குமார் மீது தயாரிப்பாளர் மாணிக்கம் நாராயணன் மோசடி புகார் கூறி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார். அஜித்குமார் தன்னிடம் பணம் வாங்கி கொண்டு படம் நடிக்காமல் ஏமாற்றியதாக கூறி வரும் மாணிக்கம் நாராயணன், அஜித் ஒரு மோசடி மனிதர் என பகிரங்கமாக கூறி வருகிறார். 

தலைப்பு செய்திகள்

அமைச்சரான பிறகு சூப்பர் ஸ்டாரை சந்தித்த வன்னி அரசு... “நிறைய மக்களுக்கு செய்யுங்கள்” என வாழ்த்திய ரஜினிகாந்த்!
அமைச்சரான பிறகு சூப்பர் ஸ்டாரை சந்தித்த வன்னி அரசு... “நிறைய மக்களுக்கு செய்யுங்கள்” என வாழ்த்திய ரஜினிகாந்த்!
நடிகர் கிருஷ்ணாவின் மைல்கல் படமான 'மர்டர் இன் டவுன்’
நடிகர் கிருஷ்ணாவின் மைல்கல் படமான 'மர்டர் இன் டவுன்’
அண்ணாமலையார் பாதத்தில் தனுஷ்! திடீர் ஆன்மீகப் பயணம் அரசியல் என்ட்ரிக்கு அச்சாரமா?
அண்ணாமலையார் பாதத்தில் தனுஷ்! திடீர் ஆன்மீகப் பயணம் அரசியல் என்ட்ரிக்கு அச்சாரமா?
Karthigai Deepam: கார்த்திகை மாட்டி விட நினைக்கும் சந்திரகலா.. கார்த்திகை தீபம் சீரியலில் இன்றைய அப்டேட்!
Karthigai Deepam: கார்த்திகை மாட்டி விட நினைக்கும் சந்திரகலா.. கார்த்திகை தீபம் சீரியலில் இன்றைய அப்டேட்!

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
MK Stalin: பெருக்கெடுக்காத காவிரி..! பொங்கிய திமுக, விவசாய விரோதி விஜய் - DMK தலைவர் ஸ்டாலின் காட்டம்
பெருக்கெடுக்காத காவிரி..! பொங்கிய திமுக, விவசாய விரோதி விஜய் - DMK தலைவர் ஸ்டாலின் காட்டம்
‘என்னாச்சு, என்னாச்சு CM சார் என்னாச்சு..’ தஞ்சையில் தவெக அரசுக்கு எதிராக களத்தில் இறங்கிய உதயநிதி..!
‘என்னாச்சு, என்னாச்சு CM சார் என்னாச்சு..’ தஞ்சையில் தவெக அரசுக்கு எதிராக களத்தில் இறங்கிய உதயநிதி..!
TN Cabinet: காங்., ஷாக்.. ”4 பேர் நீக்கம், 3 பேர் இலாகா மாற்றம், புதுசா 3 பேர்” CM விஜய் அமைச்சரவை மாற்றம் அப்டேட்
காங்., ஷாக்.. ”4 பேர் நீக்கம், 3 பேர் இலாகா மாற்றம், புதுசா 3 பேர்” CM விஜய் அமைச்சரவை மாற்றம் அப்டேட்
Car Accident: 7 பைக்குகளை முட்டி மோதிய சிறுவன், காருக்கு அடியில் சிக்கிய முதியவர் - நையப்புடைத்த பொதுமக்கள்
7 பைக்குகளை முட்டி மோதிய சிறுவன், காருக்கு அடியில் சிக்கிய முதியவர் - நையப்புடைத்த பொதுமக்கள்
கேந்திரிய வித்யாலயா பள்ளியில் ஆசிரியர் வேலை: நேர்காணல் மட்டுமே- கலந்துகொள்வது எப்படி?
கேந்திரிய வித்யாலயா பள்ளியில் ஆசிரியர் வேலை: நேர்காணல் மட்டுமே- கலந்துகொள்வது எப்படி?
Nexon Rival: நெக்ஸான் தான் வேண்டுமென அடம் பிடிக்காதிங்க - அம்சங்கள், மைலேஜ்- டஃப் கொடுக்கும் மூன்று SUV-க்கள்
நெக்ஸான் தான் வேண்டுமென அடம் பிடிக்காதிங்க - அம்சங்கள், மைலேஜ்- டஃப் கொடுக்கும் மூன்று SUV-க்கள்
TVK Vs DMK:
"கொத்தூஸ் ஐடி விங் கவனத்திற்கு" திமுகவிற்கு டேட்டாக்களுடன் பதிலடி கொடுத்த தவெக..! எது உண்மை?
IIT Madras: மாணவர்களே.. ஆண்டுக்கு ரூ.40,000 உதவித்தொகை- ஐஐடி சென்னை அழைப்பு, விண்ணப்பம், தகுதி- முழு விவரம்
IIT Madras: மாணவர்களே.. ஆண்டுக்கு ரூ.40,000 உதவித்தொகை- ஐஐடி சென்னை அழைப்பு, விண்ணப்பம், தகுதி- முழு விவரம்
Embed widget