மேலும் அறிய

வேண்டாம் சாமி.. அஷ்வின் மாதிரி ஆகிடுவீங்க.. பிக்பாஸ் கவினுக்கு பொழியும் அன்பும், அட்வைஸும்

பொதுவாவே நமக்கு வளர்ச்சி வந்தா கூடவே பணிவையும் சேர்த்து வளர்த்துக்கணும்.. இதுதாங்க வாழ்க்கையில் வெற்றி பெற்றவர்களின் சிம்பிள் லாஜிக்.

பொதுவாவே நமக்கு வளர்ச்சி வந்தா கூடவே பணிவையும் சேர்த்து வளர்த்துக்கணும்.. இதுதாங்க வாழ்க்கையில் வெற்றி பெற்றவர்களின் சிம்பிள் லாஜிக். குறைந்தபட்சம் பணியிடத்திலாவது அந்தப் பணிவை கட்டாயம் பின்பற்ற வேண்டும். இல்லாவிட்டால் சறுக்கல் நிச்சயம்.

இதைத்தான் பிக்பாஸ் வீட்டிலிருந்து சினிமாவுக்குச் சென்ற நடிகர் கவினுக்கும் நாலாபக்கமும் இருந்தும் அட்வைஸாக சொல்லி வருகிறார்களாம் நண்பர்களும் நலன் விரும்பிகளும்.

சீரியல்களில் சிலவற்றிலும், பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் பங்குப் பெற்றதன் மூலம் பிரபலமானவர் நடிகர் கவின்.  கவின் நடித்த லிப்ட் மற்றும் ஆகாஷ் வாணி உள்ளிட்ட படங்கள் ஓடிடியில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது கவின், நயன்தாரா தயாரித்து வரும் ஊர்க்குருவி படத்தில் நடித்து வருகிறார். ஏற்கனவே விஜயின், பீஸ்ட் படத்தில் நடித்துள்ள இவர், நடிகர் அஜித்தும் இயக்குநர் ஹெச். வினோத் இணையும் அடுத்தப்படத்தில் கமிட் ஆகியுள்ளதாக சொல்லப்படுகிறது. இது மட்டுமல்லாமல் மலையாளத்தில் பிரபலமாக இருக்கும் நடிகை அபர்ணா தாஸும் இணைந்து ஒரு படத்தில் ஜோடியாக நடிக்கிறார்கள்.

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Kavin M (@kavin.0431)

இப்படி கேரியர் வைஸ் ப்ராக்ரஸ் ரிப்போர்ட்டில் சதம் அடித்து வரும் கவின் கேர்கடர் வைஸ் ரிப்போர்ட்டில் ஃபெயில் ஆகி வருகிறாராம்.

அட ஆமாங்க நம்புங்க. சினிமா துறையில் நன்றாக வளர்ந்து வரும் கவின், சில தவறான விஷயங்கள் செய்து வருகிறார் என்று அவரது போக்கைக் குறிப்பிட்டு பலரும் வருத்தப்படுகின்றனர்.ஒருத்தர் அவர் சார்ந்த துறையில் வேகமாக வளர்ச்சி காணும் போது வெற்றி அவர் கண்ணை மறைச்சு ஈகோவை முன்னால் நிறுத்தும். அதுதான் கவினுக்கும் நடந்து கொண்டிருக்கிறது எனக் கூறுகிறார்கள் விவரம் அறிந்தவர்கள்.

கவின் தான் நடித்து வரும் படங்களில் அவரை மாற்றுங்கள், இவரை மாற்றுங்கள், அவர் வேண்டாம், இவர் வேண்டாம் என சில மாற்றங்களை கூறி அனைவரையும் அதிர்ச்சி அடைய செய்கிறாராம். சீரியிலில் இருந்து பிக்பாஸ் அங்கிருந்து சினிமா என கவினே இப்போது தான் வந்துள்ளார். இன்னும் முழுசா வளராத போது இவருக்கு ஏன் இந்த வேண்டாத வேலை என்று பலரும் கூறி வருகின்றனர். இதைப் போலத்தான் அஸ்வின் என்னும் நடிகர் நடந்து கொண்டு தன் பெயரை கெடுத்துக் கொண்டார். கவினும் தன்னைத் திருத்திக் கொள்ளாவிட்டால் கோமாளி அஸ்வின் ஆகிவிடுவார் என அறிவுரை கூறி வருகின்றனராம் அவர் மீது அன்பும் அக்கறையும் கொண்டோர்.

தலைப்பு செய்திகள்

Jailer 2:
Jailer 2: "என்றைக்கும் ஒரே தலைவன்.." ஜெயிலர் 2 ட்ரெயிலரை கொண்டாடும் ரஜினி ரசிகர்கள்!
அதிமுக ஆட்சியில் கண்ணீர்...தவெக ஆட்சியில் அங்கீகாரம்...நெகிழ்ச்சியில் புஷ்பவனம் குப்புசாமி
அதிமுக ஆட்சியில் கண்ணீர்...தவெக ஆட்சியில் அங்கீகாரம்...நெகிழ்ச்சியில் புஷ்பவனம் குப்புசாமி
Vijay Sethupathi:
Vijay Sethupathi: "நான் சந்தோஷமா இருந்தால் காய்ச்சல் வரும்.." பத்தா வெற்றி விழாவில் விஜய் சேதுபதி
"என் பாடல்கள் சமுதாயத்திற்கு தீங்கா?" - விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்து ரூ.5 லட்சம் நன்கொடை அளித்த அசல் கோலார்!

வீடியோ

கேப்டனை கொல்ல சதி மிகப்பெரிய கட்டிடம் டார்கெட் கோ பைலட் பகீர் வாக்குமூலம்
Noida supernova suicide | 41வது மாடியில் இருந்து தற்கொலை! 28 வயது இளைஞர் பகீர்! விசாரணையில் அதிர்ச்சி தகவல்
TVK MLA vs Cong MP | காங்.MP-தவெக MLA மோதல்! மெழுகுவர்த்தியை தட்டிவிட்ட MLA.. அமைச்சர் முன்பே வாக்குவாதம்
Toor Dal issue :துவரம் பருப்பில் நடந்த மோசடி?அரசு கஜானாவிற்கு வந்த 187 கோடி..சாட்டையை சுழற்றிய விஜய்
Sivakarthikeyan Politics : CM விஜய் ரூட்டில் SK..ரசிகர் மன்றம் டூ நற்பணி இயக்கம்! குஷியில் ரசிகர்கள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ABP Nadu Exclusive:
ABP Nadu Exclusive: "தவெக அரசுதான் தமிழ் உணர்வோடு செயல்படுகிறது.. கேட்காமலே பதவி.." புஷ்பவனம் குப்புசாமி ஏபிபி நாடுக்கு பிரத்யேக பேட்டி
"தொட்டு தொட்டுப் பேசும் சுல்தானா... இயல் இசைக்கு இனி நீதானா.." தவெக ஆட்சியில் புஷ்பவனம் குப்புசாமிக்கு முக்கிய பதவி!
Holiday: குட்நியூஸ்.. நாளை சம்பளத்துடன் கூடிய பொது விடுமுறை அறிவிப்பு.. யார் யாருக்கு தெரியுமா?
Holiday: குட்நியூஸ்.. நாளை சம்பளத்துடன் கூடிய பொது விடுமுறை அறிவிப்பு.. யார் யாருக்கு தெரியுமா?
GOLD LOAN : அடி தூள்.! நகைக் கடன் வாங்கப்போறீங்களா- இனி ஒரு கிராமிற்கு இவ்வளவு பணமா - வெளியான சூப்பர் அறிவிப்பு
அடி தூள்.! நகைக் கடன் வாங்கப்போறீங்களா- இனி ஒரு கிராமிற்கு இவ்வளவு பணமா - வெளியான சூப்பர் அறிவிப்பு
SC On CEC: “நீங்களே சொந்தமா முடிவெடுத்திங்களா?” ஞானேஷிற்கு செக்? தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
“நீங்களே சொந்தமா முடிவெடுத்திங்களா?” ஞானேஷிற்கு செக்? தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
Maruti Suzuki Alto K10: நடுத்தர குடும்பங்களின் முதல் தேர்வு.! ரூ.3.70 லட்சத்தில் 33கிமீ மைலேஜ்.! புதிய நவீன மாருதி ஆல்டோ K10
நடுத்தர குடும்பங்களின் முதல் தேர்வு.! ரூ.3.70 லட்சத்தில் 33கிமீ மைலேஜ்.! புதிய நவீன மாருதி ஆல்டோ K10
Russia Vs Ukraine: கருங்கடலில் இந்தியர்கள் இருந்த கப்பலை தாக்கிய ரஷ்ய ட்ரோன்கள்; கேப்டன் உயிரிழந்ததாக கூறும் ஜெலன்ஸ்கி
கருங்கடலில் இந்தியர்கள் இருந்த கப்பலை தாக்கிய ரஷ்ய ட்ரோன்கள்; கேப்டன் உயிரிழந்ததாக கூறும் ஜெலன்ஸ்கி
Jailer 2:
Jailer 2: "என்றைக்கும் ஒரே தலைவன்.." ஜெயிலர் 2 ட்ரெயிலரை கொண்டாடும் ரஜினி ரசிகர்கள்!
Embed widget