மேலும் அறிய

Japan The Movie: 'மீண்டும் சிவகார்த்திகேயனுடன் மோதும் கார்த்தி’ ... ரிலீஸ் தேதியை அறிவித்த ஜப்பான் படக்குழு.. மகிழ்ச்சியில் ரசிகர்கள்..!

Japan The Movie:நடிகர் கார்த்தி நடித்துள்ள ஜப்பான் படம் எப்போது வெளியாகும் என்ற அறிவிப்பை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது. 

Japan From Diwali: நடிகர் கார்த்தி நடித்துள்ள ஜப்பான் படம் எப்போது வெளியாகும் என்ற அறிவிப்பை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது. 

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக உள்ள கார்த்தி நடிப்பில் கடைசியாக கடந்தாண்டு தீபாவளிக்கு ‘சர்தார்’ படம் வந்தது. இரட்டை வேடத்தில் இப்படத்தில் அவர் நடித்திருந்தார். பி.எஸ்.மித்ரன் இயக்கிய சர்தார் படத்தில் ராஷி கண்ணா, லைலா உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். இந்த படம் கார்த்திக்கு வெற்றிப் படமாக அமைந்தது. மேலும் கடந்தாண்டு வெளியான ‘விருமன்’, ‘பொன்னியின் செல்வன் 1’, ‘பொன்னியின் செல்வன் 2’ என கார்த்திக்கு தற்போது வரை வெற்றிமுகமாகவே உள்ளது. 

தமிழ் சினிமாவில் ஒரே இயக்குநருடன் 2வது முறையாக பணியாற்றியதில்லை என்ற கொள்கையை கார்த்தி விருமன் மற்றும் பொன்னியின் செல்வன் படங்களின் மூலம் தகர்த்தார். இப்படியான நிலையில் கார்த்தியின் 25வது படம் பற்றிய அறிவிப்பு வெளியானது. ‘குக்கூ’, ‘ஜோக்கர்’, ‘ஜிப்ஸி’ படங்களின் மூலம் தமிழ் சினிமாவின் கவனம் ஈர்த்த இயக்குநர் ராஜூ முருகனின் படத்தில் தான் கார்த்தி நடிக்கப் போகிறார் என அறிவிக்கப்பட்டது. 

ட்ரீம் வாரியர்ஸ் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்தில் அனு இம்மானுவேல் ஹீரோயினாக நடிக்கிறார். மேலும் தெலுங்கு நடிகர் சுனில், இயக்குநர் விஜய் மில்டன் முக்கிய கேரக்டரில் நடிக்கிறார். ரவி வர்மன் ஒளிப்பதிவு செய்ய, ஜப்பான் படத்திற்கு ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைக்கிறார். இந்த படத்தின் அறிவிப்பின் போதே பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்ட நிலையில் படத்தின் அப்டேட்டுகளை அடுத்தடுத்து படக்குழு வெளியிட உள்ளது. 

ஜப்பான் ரிலீஸ் எப்போது?

இதனிடையே நடிகர் கார்த்திக்கு இன்று 45வது பிறந்தநாளாகும். இதனை முன்னிட்டு அவருக்கு ஏராளமானோர் சமூக வலைத்தளங்கள் வாயிலாக வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்த நாளை மேலும் சிறப்பாக்கும் பொருட்டு அவர் நடித்து வரும் ஜப்பான் படத்தின் அப்டேட் ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி “ஜப்பான் படம் தீபாவளி வெளியீடாக தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய நான்கு மொழிகளில் வெளியாகும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் போஸ்டரை பார்க்கும் போது தன்னைச்சுற்றி இருப்பவை எல்லாம் தங்கமாக இருக்கும் நிலையில், இவற்றிற்கு நடுவே கார்த்தியும் தங்கமாகவே ஜொலிக்கிறார். இதனால் என்ன மாதிரியான கதை இது என சுவாரஸ்யம் கூடியுள்ளது. 

மேலும் இன்று காலை ‘ஜப்பான் என்றால் யார்?’ என்ற வீடியோ ஒன்றும் வெளியாகவுள்ளது. இதனை நடிகர் சிலம்பரசன் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் வெளியிடுவார் என ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. ஏற்கனவே தீபாவளிக்கு நடிகர் சிவகார்த்திகேயனின் ‘அயலான்’ படம் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது ஜப்பான் படமும் தீபாவளி ரிலீஸை உறுதி செய்துள்ளது. 

முன்னதாக கடந்தாண்டு தீபாவளிக்கு சிவகார்த்திகேயன் நடித்த ப்ரின்ஸ் படமும், கார்த்தி நடித்த சர்தார் படமும் வெளியானது. இதில் ப்ரின்ஸ் படம் படுதோல்வி அடைய, சர்தார் படம் சூப்பரான வெற்றியைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. 

தலைப்பு செய்திகள்

புக் செய்தது ஸ்பைடர்மேன்... காட்டியது ஜனநாயகன்? ரசிகர்கள் கொந்தளிப்பு
புக் செய்தது ஸ்பைடர்மேன்... காட்டியது ஜனநாயகன்? ரசிகர்கள் கொந்தளிப்பு
'ஸ்பைடர் மேன்' படம் பார்க்க வந்தவர்களுக்குள் மோதல்... ஸ்பாய்லர் சொன்னதால் அரங்கேறிய பரபரப்பு!
'ஸ்பைடர் மேன்' படம் பார்க்க வந்தவர்களுக்குள் மோதல்... ஸ்பாய்லர் சொன்னதால் அரங்கேறிய பரபரப்பு!
"மதுரைன்னா ரவுடின்னுதான் நினைப்பாங்க...ஆனா ?" – 'வதந்தி 2' அனுபவத்தை பகிர்ந்த சசிகுமார்!
240 நாடுகளை குறிவைக்கும் 'வதந்தி சீசன் 2'... உலகம் முழுவதும் வெளியாகும் சசிகுமாரின் புதிய கிரைம் திரில்லர்!
240 நாடுகளை குறிவைக்கும் 'வதந்தி சீசன் 2'... உலகம் முழுவதும் வெளியாகும் சசிகுமாரின் புதிய கிரைம் திரில்லர்!

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Cabinet: காங்., ஷாக்.. ”4 பேர் நீக்கம், 3 பேர் இலாகா மாற்றம், புதுசா 3 பேர்” CM விஜய் அமைச்சரவை மாற்றம் அப்டேட்
காங்., ஷாக்.. ”4 பேர் நீக்கம், 3 பேர் இலாகா மாற்றம், புதுசா 3 பேர்” CM விஜய் அமைச்சரவை மாற்றம் அப்டேட்
TVK Vs DMK:
"கொத்தூஸ் ஐடி விங் கவனத்திற்கு" திமுகவிற்கு டேட்டாக்களுடன் பதிலடி கொடுத்த தவெக..! எது உண்மை?
TN Weather News: 6 மாவட்டங்களுக்கு மிக கனமழை எச்சரிக்கை, சென்னையை சூழந்த கருமேகங்கள் -தமிழக வானிலை அறிக்கை
6 மாவட்டங்களுக்கு மிக கனமழை எச்சரிக்கை, சென்னையை சூழந்த கருமேகங்கள் -தமிழக வானிலை அறிக்கை
திமுகவுக்கு ஓட்டு போட மாட்டீங்க.. பொருள் மட்டும் வேணுமா?.. மக்களை சாடிய அனிதா ராதாகிருஷ்ணன்!
திமுகவுக்கு ஓட்டு போட மாட்டீங்க.. பொருள் மட்டும் வேணுமா?.. மக்களை சாடிய அனிதா ராதாகிருஷ்ணன்!
CNG SUV: 28.51KM மைலேஜ்..! டாப் 5 சிஎன்ஜி எஸ்யுவிக்கள் - விலை, வசதி , அம்சங்கள், ரேட்டிங் - முழு விவரம் இதோ
28.51KM மைலேஜ்..! டாப் 5 சிஎன்ஜி எஸ்யுவிக்கள் - விலை, வசதி , அம்சங்கள், ரேட்டிங் - முழு விவரம் இதோ
PMK vs Congress: காங்கிரசை இறங்கி அடிக்கும் அன்புமணி! பாமக போடும் ஸ்கெட்ச் என்ன?
PMK vs Congress: காங்கிரசை இறங்கி அடிக்கும் அன்புமணி! பாமக போடும் ஸ்கெட்ச் என்ன?
பனையூருக்கு தூதுவிட்ட முன்னாள் முதல்வர் மகன்! அப்பாவோட வரச் சொன்ன தவெக - நடந்தது என்ன?
பனையூருக்கு தூதுவிட்ட முன்னாள் முதல்வர் மகன்! அப்பாவோட வரச் சொன்ன தவெக - நடந்தது என்ன?
Hardik Pandya: சிஎஸ்கே வருகிறாரா ஹர்திக் பாண்ட்யா? மும்பைக்கு போகப்போகும் சென்னை வீரர் யார்?
Hardik Pandya: சிஎஸ்கே வருகிறாரா ஹர்திக் பாண்ட்யா? மும்பைக்கு போகப்போகும் சென்னை வீரர் யார்?
Embed widget