மேலும் அறிய

Japan Teaser: “ஜப்பான்.. மேட் இன் இந்தியா” - அமர்க்களமாக வெளியானது கார்த்தியின் 25வது பட டீசர்...!

நடிகர் கார்த்தியின் 25வது படமாக உருவாகி வரும் ‘ஜப்பான்’ படத்தில் அவரது கேரக்டர் பற்றிய சுவாரஸ்யத்தைப் படக்குழு வெளியிட்டுள்ளது. 

நடிகர் கார்த்தியின் 25வது படமாக உருவாகி வரும் ‘ஜப்பான்’ படத்தில் அவரது கேரக்டர் பற்றிய சுவாரஸ்யத்தைப் படக்குழு வெளியிட்டுள்ளது. 

இயக்குநர் மணிரத்னத்திடம் உதவி இயக்குநராக இருந்து, அமீர் இயக்கிய பருத்திவீரன் படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானவர் நடிகர் கார்த்தி. தொடர்ந்து தமிழ் சினிமாவில் பல வெற்றிப் படங்களில் நடித்த அவருக்கு இன்று 45வது பிறந்தநாளாகும். இதனை முன்னிட்டு திரையுலக பிரபலங்கள், ரசிகர்கள் என பலரும் கார்த்திக்கு சமூக வலைத்தளங்கள் வாயிலாக வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். 

இதனிடையே கார்த்தியின் 25வது படமாக ‘ஜப்பான்’ படம் உருவாகி வருகிறது. இந்த படத்தை குக்கூ, ஜோக்கர், ஜிப்ஸி படங்களை இயக்கி தமிழ் சினிமாவில் கவனிக்கத்தக்க இயக்குநராக மாறிய ராஜூ முருகன் இயக்கி வருகிறார். இந்த படத்தில் ஹீரோயினாக அனு இம்மானுவேல் நடிக்கிறார். மேலும் தெலுங்கு நடிகர் சுனில், இயக்குநர் விஜய் மில்டன் முக்கிய கேரக்டரில் நடிக்கிறார்.

ட்ரீம் வாரியர்ஸ் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு   ரவி வர்மன் ஒளிப்பதிவு செய்ய,ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைக்கிறார். படத்தின் அறிவிப்பு வெளியானபோதே பெரிய எதிர்பார்ப்பு நிலவியது. கார்த்தியின் பிறந்தநாளான இன்று  ஜப்பான் படத்தின் அப்டேட் நள்ளிரவு வெளியானது. அதன்படி  தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய நான்கு மொழிகளில் 2023 ஆம் ஆண்டு தீபாவளிக்கு ஜப்பான் படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. இதனால் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்தனர். 

இந்நிலையில் ஜப்பான் என்றால் யார் என்ற கேரக்டரை படக்குழு அறிமுகப்படுத்தியுள்ளது. இதனை தமிழில் நடிகர் சிலம்பரசனும், கன்னடத்தில் நடிகர் ரிஷப் ஷெட்டியும், தெலுங்கில் நடிகர் விஜய் தேவரகொண்டாவும், மலையாளத்தில் நடிகர் துல்கர் சல்மானும் வெளியிட்டனர். 

அவன் பாவ மன்னிப்புகளுக்கு அப்பாற்பட்டவன். ஆண்டவருடைய அதிசய படைப்புகளில் அவன் ஒரு ஹீரோ என்ற வசனங்களுடன் கார்த்தி கேரக்டர் அறிமுகப்படுத்தப்படுகிறது.  இதேபோல் காமெடி, வில்லன் என கார்த்தியின் கேரக்டருக்கு பில்ட் அப் வசனங்கள் கொடுக்கப்படுகிறது. இறுதியாக கார்த்தியிடம் யார் நீ? என வில்லன் தரப்பு கேட்பது போலவும், அதற்கு “ஜப்பான்.. மேட் இன் இந்தியா” என சொல்லும் காட்சிகளும் இடம் பெறுகிறது. இது ரசிகர்களை பெரிதும் கவர்ந்துள்ளது. 

முன்னதாக தீபாவளிக்கு  நடிகர் சிவகார்த்திகேயனின் ‘அயலான்’ படம் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல் ஜிகர்தண்டா 2 படமும் ரிலீஸாகும் என கூறப்பட்டிருந்தது. இப்படியான நிலையில் ஜப்பான் படமும் வெளியாவதால் ரசிகர்கள் பெரும் ஆவலோடு தீபாவளியை நோக்கி காத்திருக்கின்றனர். 

தலைப்பு செய்திகள்

Dhanush : 1 கோடி செலவில் ஐடி விங்..நடிகர் தனுஷின் அடுத்த அரசியல் நகர்வு?
Dhanush : 1 கோடி செலவில் ஐடி விங்..நடிகர் தனுஷின் அடுத்த அரசியல் நகர்வு?
அந்த படம் வந்தால் எல்லாம் அடங்கிடும்...ட்ரோல்கள் குறித்து லோகேஷ் கனகராஜ்
அந்த படம் வந்தால் எல்லாம் அடங்கிடும்...ட்ரோல்கள் குறித்து லோகேஷ் கனகராஜ்
‘பாரிஸ் கஃபே’ இசை வெளியீட்டு விழா
‘பாரிஸ் கஃபே’ இசை வெளியீட்டு விழா
‘ONE MAN’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு
‘ONE MAN’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: ”எல்லாம் கொடுக்கிறேன், லஞ்சம் மட்டும் வாங்காதீங்க” MLA-க்களுக்கு கார் அறிவித்து CM விஜய் கோரிக்கை
”எல்லாம் கொடுக்கிறேன், லஞ்சம் மட்டும் வாங்காதீங்க” MLA-க்களுக்கு கார் அறிவித்து CM விஜய் கோரிக்கை
Aavin Milk Price: ஆவின் பால் கொள்முதல் விலையை உயர்த்தி அறிவித்த CM விஜய் - ஒரு லிட்டருக்கு எவ்வளவு தெரியுமா?
ஆவின் பால் கொள்முதல் விலையை உயர்த்தி அறிவித்த CM விஜய் - ஒரு லிட்டருக்கு எவ்வளவு தெரியுமா?
பணிந்த அரசு! ’கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள் போராடக்கூடாது’ கடும் எதிர்ப்பால் தடை உத்தரவு வாபஸ்!
பணிந்த அரசு! ’கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள் போராடக்கூடாது’ கடும் எதிர்ப்பால் தடை உத்தரவு வாபஸ்!
நடுத்தர SUV போர்; டாடா சியரா வருகையால் கியா செல்டோஸ்-க்கு கடும் போட்டி!- யாருக்கு முதலிடம்?
நடுத்தர SUV போர்; டாடா சியரா வருகையால் கியா செல்டோஸ்-க்கு கடும் போட்டி!- யாருக்கு முதலிடம்?
Hyundai Tucson: ரக்கட் ஆன டிசைன், பேக்கேஜ்ட் அம்சங்கள், ஹைப்ரிட் - முற்றிலும் புதிய டக்சன் SUV - விலை என்ன?
ரக்கட் ஆன டிசைன், பேக்கேஜ்ட் அம்சங்கள், ஹைப்ரிட் - முற்றிலும் புதிய டக்சன் SUV - விலை என்ன?
தோழர்களுக்கே குஜிலிமஸ்தா.! கூட்டணிக்காக கம்யூனிஸ்டுக்கு மிரட்டலா.? TVK அரசை போட்டு தாக்கும் அதிமுக
தோழர்களுக்கே குஜிலிமஸ்தா.! கூட்டணிக்காக கம்யூனிஸ்டுக்கு மிரட்டலா.? TVK அரசை போட்டு தாக்கும் அதிமுக
சிபிஐ, சிபிஎம் என்ன தடை செய்யப்பட்ட அமைப்புகளா? - வட்டாட்சியர் செயலுக்கு அன்புமணி ராமதாஸ் கொந்தளிப்பு!
சிபிஐ, சிபிஎம் என்ன தடை செய்யப்பட்ட அமைப்புகளா? - வட்டாட்சியர் செயலுக்கு அன்புமணி ராமதாஸ் கொந்தளிப்பு!
CM Joseph Vijay: பெரம்பூரில் மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை.. 7 புதிய செவிலியர் கல்லூரிகள்.. அறிவிப்புகளை அள்ளி வீசிய முதலமைச்சர்!
CM Joseph Vijay: பெரம்பூரில் மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை.. 7 புதிய செவிலியர் கல்லூரிகள்.. அறிவிப்புகளை அள்ளி வீசிய முதலமைச்சர்!
Embed widget