Karthi Meets Vijayakanth: விஜயகாந்த்தை சந்தித்த நடிகர் கார்த்தி... வெளியில் வந்து சொன்னதை கேளுங்க!
நடிகர் விஜயகாந்தின் பிறந்தநாளை முன்னிட்டு, நடிகர் கார்த்தி அவரை சந்தித்து வாழ்த்து தெரிவித்துள்ளார்.
நடிகர் விஜயகாந்தின் பிறந்தநாளை முன்னிட்டு, நடிகர் கார்த்தி அவரை சந்தித்து வாழ்த்து தெரிவித்துள்ளார்.
தென்னிந்திய நடிகர் சங்கம் முன்னாள் தலைவர் கேப்டன் விஜயகாந்தின் 70 வது பிறந்த நாளான இன்று ,
நடிகர் சங்கம் சார்பில், பொருளாளர் கார்த்தி அவரை நேரில் சென்று மலர்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தார். இவருடன் சங்க செயற்குழு உறுப்பினர்கள் பிரேம்குமார், ஹேமசந்திரன் ஆகியோர் இருந்தார்கள்.
நடிகர் கார்த்தி பேசியதாவது:
நடிகர் விஜயகாந்தைப் பற்றி நடிகர் கார்த்தி கூறும் போது, “ விஜயகாந்த் என்றாலே முதலில் நினைவிற்கு வருவது அவருடைய தைரியம் தான். அதேபோல், யார் வந்தாலும் சாப்பிடலாம் என்று சிறு வயதிலிருந்தே கேள்விபட்டிருக்கேன். யாரிடமும் எந்த பாகுபாடும் இல்லாமல் அன்பு காட்டுவது எவ்வளவு பெரிய விஷயம்.
இப்படி ஒரு மனிதரை அவருடைய பிறந்தநாளில் நேரில் வந்து வாழ்த்துவது தான் அவருக்கு செய்யும் மரியாதையாக இருக்கும். அதிலும் சங்கம் சார்பாக வந்து வாழ்த்தியது நிறைவாக உள்ளது என்றார்.