மேலும் அறிய

Karthi Suriya : சூர்யா கூட சேர்ந்து நடிக்க பயம்... ஒரே திரையில் சூரியா கார்த்தி.. யார் அந்த லக்கி இயக்குநர்?

சூர்யாவுடன் இணைந்து நடிக்க ரெடியாக இருப்பதாகவும், நல்ல கதையை எதிர்பார்த்து காத்திருப்பதாகவும், தெரிவித்துள்ளார் நடிகர் கார்த்தி.

 நல்ல கதை அமைந்தால் நிச்சயம் தனது சகோதரர் சூரியாவுடன் இணைந்து நடிக்க திட்டமிருப்பதாக நடிகர் கார்த்தி தெரிவித்துள்ளார்.

கார்த்தி சூர்யா

 நடிகர் சிவக்குமாரின் மகன்களான சூர்யா மற்றும் கார்த்தி தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களாக இருந்து வருகிறார்கள். இருவரும் தங்களுக்கு ஏற்ற வகையிலான கதைகளைத் தேர்வு செய்து தங்களுக்கென தனித்துவமான ஒரு அடையாளத்தை உருவாக்கி இருக்கிறார்கள். கார்த்தி சமீபத்தில் நடித்த பொன்னியின் செல்வன் மற்றும் சூரியா நடித்த ஜெய் பீம் மற்றும் எதற்கும் துணிந்தவன் ஆகிய படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்ற நிலையில் மேலும் பல்வேறு இயக்குநர்களுடன் கூட்டணி அமைக்க இருக்கிறார்கள்.

ஒரே வீட்டைச் சேர்ந்த இரு நடிகர்கள் ஒரு படத்தில் கூட இதுவரை இணைந்து நடித்தது இல்லை என்கிற ஆதங்கம் இரு நடிகர்களின் ரசிகர்களிடமும் இருக்கிறது . தற்போது கார்த்தி தெரிவித்திருக்கும் தகவல்படி சூர்யா கார்த்தி ஆகிய இருவரையும் ஒரே திரையில் பார்க்கும் நாள் வெகு தொலைவில் இல்லை என்பதையே உறுதிப்படுத்துகிறது.

நாங்கள் சேர்ந்து நடிப்போம்

சமீபத்தில் வெரைட்டி என்கிற ஆங்கிலப் பத்திரகைக்கு பேட்டி அளித்த நடிகர் கார்த்தி ரசிகர்களின் நீண்ட நாள் கேள்விக்கு பதில் அளித்தார். “ நானும் சூர்யாவும் இணைந்து நடிப்பதை ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள். என் அப்பா மீண்டும் நடிக்கப் போவதில்லை என்கிற தெளிவோடு இருக்கிறார். ஆனால் நானும் சூர்யாவும் சேர்ந்து  நடிக்க ஒரு  நல்ல கதைக்காக காத்திருக்கிறோம் சினிமாவில் சகோதரர்கள் இணைந்து நடிப்பது மிக அரிதானது . அதனால் நானும் சூர்யாவும் இணைந்து ஒர் நல்ல படத்தில் நடிக்க வேண்டும் என்று ஆர்வமாக இருக்கிறோம். சூர்யாவுடன் சேர்ந்து நடிக்க எனக்கு முதலில் பயம் இருந்தது.  ஆனால் இப்போது அந்த பயம் எல்லாம் எனக்கில்லை. நிச்சயம் ஒரு நல்ல கதை அமையும் தருணத்தில் நாங்கள் இணைந்து நடிப்போம்.” என்று கார்த்தி தெரிவித்துள்ளார்.

ஜப்பான்

தற்போது ராஜு முருகன் இயக்கத்தில் கார்த்தி நடித்துள்ள திரைப்படம் ஜப்பான். அனு இமானுவேல் கதாநாயகியாக நடிக்க ஜி.வி பிரகாஷ் குமார் இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார் . இந்த ஆண்டு திபாவளி வெளியீடாக ஜப்பான் படம் திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. சமீபத்தில் இந்தப் படத்திற்கான டப்பிங் வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டார் கார்த்தி.

கங்குவா

சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகும் கங்குவா படத்தில் சூரியா நடித்து வருகிறார். திஷா பதானி கதாநாயகியாக நடிக்க தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் இந்தப் படத்தை தயாரித்துள்ளது. இதனைத் தொடர்ந்து சுதா கொங்கரா இயக்கும் சூர்யா 43 எதிர்பார்ப்பை கிளப்பியுள்ளது. துல்கர் சல்மான் , நஸ்ரியா நஸிம், விஜய் வர்மா உள்ளிட்ட நடிகர்கள் இந்தப் படத்தில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.

தலைப்பு செய்திகள்

டாக்சிக் பட விழாவில் கலந்துகொண்ட நயன்தாரா..மீண்டும் தொடரும் விமர்சனங்கள்
டாக்சிக் பட விழாவில் கலந்துகொண்ட நயன்தாரா..மீண்டும் தொடரும் விமர்சனங்கள்
"என்னைப் பத்தி கிசுகிசு வந்துடும்னு பயம்.." மனம் திறந்த ஜமீன்கோட்டை ஹீரோயின்! ஞாபகம் இருக்கா?
Jananayagan: படுதோல்வியுடன் விடை பெற்ற முதல்வர் விஜய்.. மண்ணைக் கவ்விய ஜனநாயகன்!
Jananayagan: படுதோல்வியுடன் விடை பெற்ற முதல்வர் விஜய்.. மண்ணைக் கவ்விய ஜனநாயகன்!
பணத்துக்காக எல்லாமே செய்ய மாட்டேன்.. என் அம்மா அப்படி வளர்க்கல.. முருகன் சாட்சி.. தர்ஷா குப்தா வேதனை!
பணத்துக்காக எல்லாமே செய்ய மாட்டேன்.. என் அம்மா அப்படி வளர்க்கல.. முருகன் சாட்சி.. தர்ஷா குப்தா வேதனை!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
'தமிழ் என்றால் கெத்து, தமிழ் என்றால் POWER' சட்டப்பேரவையில் முதல்வர் விஜய் கர்ஜனை
'தமிழ் என்றால் கெத்து, தமிழ் என்றால் POWER' சட்டப்பேரவையில் முதல்வர் விஜய் கர்ஜனை
இது தான் மாற்றமா.? லஞ்சம் வாங்கிய கணவனை நீக்கிட்டு மனைவிக்கு பொறுப்பு.! TVK- வை கிண்டல் செய்யும் நெட்டிசன்கள்
இது தான் மாற்றமா.? லஞ்சம் வாங்கிய கணவனை நீக்கிட்டு மனைவிக்கு பொறுப்பு.! TVK- வை கிண்டல் செய்யும் நெட்டிசன்கள்
FCRA Bill: உங்க சந்தோஷம் தான் முக்கியம்..! DMK-விற்காக FCRA மசோதாவை தாமதப்படுத்த BJP முடிவு? காரணம் என்ன?
உங்க சந்தோஷம் தான் முக்கியம்..! DMK-விற்காக FCRA மசோதாவை தாமதப்படுத்த BJP முடிவு? காரணம் என்ன?
ARR AMEEN CAR ACCIDENT : விபத்தில் சிக்கிய ஏ.ஆர்.ரகுமான் மகன் ஓட்டிய கார்.! சென்னையில் நள்ளிரவில் நடந்தது என்ன.?
விபத்தில் சிக்கிய ஏ.ஆர்.ரகுமான் மகன் ஓட்டிய கார்.! சென்னையில் நள்ளிரவில் நடந்தது என்ன.?
CM Vijay: தமிழ்த்தாய் வாழ்த்துக்கு முதலிடம்..! தனித்தீர்மானம் கொண்டு வரும் CM விஜய் - ஒருமனதாக நிறைவேறுமா?
தமிழ்த்தாய் வாழ்த்துக்கு முதலிடம்..! தனித்தீர்மானம் கொண்டு வரும் CM விஜய் - ஒருமனதாக நிறைவேறுமா?
SP Velumani: திமுக-வுடன் போகச் சொன்னவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது யார்? எஸ்பி வேலுமணி கேள்வி
SP Velumani: திமுக-வுடன் போகச் சொன்னவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது யார்? எஸ்பி வேலுமணி கேள்வி
RB Udhaykumar: ”CM விஜய்க்கு தெரிந்தது எல்லாமே த்ரிஷா மட்டும் தான்” - ADMK ஆர்.பி. உதயகுமார் அநாகரீக பேச்சு
”CM விஜய்க்கு தெரிந்தது எல்லாமே த்ரிஷா மட்டும் தான்” - ADMK ஆர்.பி. உதயகுமார் அநாகரீக பேச்சு
இந்த மழைக்கே இப்படியா? மழைக்காலத்தில் சென்னை காப்பாற்றுவாரா முதலமைச்சர் விஜய்?
இந்த மழைக்கே இப்படியா? மழைக்காலத்தில் சென்னை காப்பாற்றுவாரா முதலமைச்சர் விஜய்?
Embed widget