Ajith Kumar: அஜித்தை விமர்சித்த போஸ் வெங்கட்.. வெகுண்டெழுந்த துணிவு பட வில்லன்!
அஜித் குமாரை விமர்சித்து நடிகர் போஸ் வெங்கட் பகிர்ந்த பதிவைத் தொடர்ந்து அவருக்கு பதிலடி கொடுக்கும் வகையில் பதிவிட்டுள்ளார் நடிகர் ஜான் கொக்கன்

விஷ்ணு விஷால், அமீர் கானுக்கு உதவிய அஜித்
மிக்ஜாம் புயல் ஏற்படுத்திய பாதிப்புகளில் பாதிக்கப்பட்டவர்களில் நடிகர் விஷ்ணு விஷாலும் ஒருவர். அவருடன் தன்னுடைய தாயின் மருத்துவ சிகிச்சைக்காக சென்னைக்கு வந்து தங்கியிருந்த பாலிவுட் நடிகர் அமீர் கானும் வெள்ளத்தில் மாட்டிக் கொண்டார்.
இதனைத் தொடர்ந்து மாநகராட்சி மீட்பு படையினர் அவர்களை மீட்டு பாதுகாப்பான இடத்தில் சேர்த்தனர். இந்தத் தகவலை தனது நெருங்கிய நண்பர்கள் வழி அறிந்துகொண்ட நடிகர் அஜித் குமார் விஷ்ணு விஷால், அமீர் கான் இருவரையும் நேரில் சந்தித்து அவர்களின் அடுத்தகட்ட பயணத்திற்கான ஏற்பாடுகளை செய்துகொடுத்தார்.
இந்தத் தகவலை நடிகர் விஷ்ணு விஷால் தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்திருந்தார். தொடர்ந்து அமீர் கான், விஷ்ணு விஷால், அஜித் குமார் ஆகிய மூவரும் சேர்ந்து எடுத்துக் கொண்ட புகைப்படம் இணையதளத்தில் வைரலாகியது.
அஜித்தை விமர்சித்த நடிகர் போஸ் வெங்கட்
இந்நிலையில், நடிகர் அஜித் குமாரை விமர்சித்து எக்ஸ் தளத்தில் நடிகர் போஸ் வெங்கட் பகிர்ந்துள்ளார். அவரது பதிவில் “வந்தோரை வாழ வைக்கும் தமிழ்நாடு.. இங்கிருக்கும் அத்தனை வட நாட்டவரையும் தமிழகம் காக்கும்... (உங்களுக்குள் நல்ல இணைப்பு உண்டு).. ஆனால் உங்களை விரும்பும்.. டிக்கெட் எடுத்து உங்களை பார்க்கும் ஏழை குரல் உங்களுக்கு எப்போதும் கேட்க வாய்ப்பில்லை. (ஒரு போட் அவனுக்கும் விட்டிருக்கலாம்)” என்று அவர் பதிவிட்டு இந்தப் புகைப்படத்தையும் பகிர்ந்திருந்தார். .
வந்தோரை வாழ வைக்கும் தமிழ்நாடு.. இங்கிருக்கும் அத்தனை வட நாட்டவரையும் தமிழகம் காக்கும்....
— Bose Venkat (@DirectorBose) December 6, 2023
(உங்களுக்குள் நல்ல இணைப்பு உண்டு).. ஆனால் உங்களை விரும்பும்.. டிக்கெட் எடுத்து உங்களை பார்க்கும் ஏழை குரல் உங்களுக்கு எப்போதும் கேட்க வாய்ப்பில்லை... ( ஒரு போட் அவனுக்கும் விட்டிருக்களாம்) pic.twitter.com/klDj5wNixx
பதிலடி கொடுத்த ஜான் கொக்கன்
இந்நிலையில் போஸ் வெங்கட்டுக்கு பதில் தரும் வகையில் நடிகர் ஜான் கொக்கன் ஒரு பதிவிட்டுள்ளார்., பாகுபலி கே ஜி எஃப் , துணிவு உள்ளிட்ட படங்களில் வில்லனாக நடித்த ஜான் கொக்கன் தன்னுடைய எக்ஸ் தளத்தில் ஒரு கேலிச்சித்திரத்தை பகிர்ந்திருந்தார்.
“ஒருவரை குறை சொல்ல வேண்டும் என்று முடிவு செய்துவிட்டால் அவர் என்ன செய்தாலும் குறை சொல்லியே ஆவார்கள் என்பது இந்த கேலிச் சித்திரத்தின் பொருள். இதனுடன் “ உங்களுக்கு புரிந்திருக்கும் போஸ் வெங்கட்” என்றும் அவர் பதிவிட்டுள்ளார்.
Hope you get the message Sir @DirectorBose . #liveandletlive #dowhatyoubelieveisright https://t.co/0ZutWrbJTu pic.twitter.com/T8rP9QE1Sa
— John Kokken (@highonkokken) December 7, 2023
பொதுவாகவே இந்த மாதிரியான சூழல்களில் அஜித் குமார் மறைமுகமாக நிறைய உதவிகளை செய்து வருவதாகவும், அவற்றை வெளியே சொல்வதன் மூலம் தேவையில்லாத ஊடக கவனம் குவியும் என்பதால் அதை வெளியில் சொல்லிக் கொள்வதில்லை என்றும் சினிமா வட்டாரங்களில் கூறப்படுவது வழக்கம். இந்நிலையில் அஜித்தை விமர்சித்த போஸ் வெங்கட்டைத் தாக்கி துணிவு வில்லன் களமிறங்கியிருப்பது இணையத்தில் பேசுபொருளாகியுள்ளது.


தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

