மேலும் அறிய

பாடகராக அறிமுகமாகும் நடிகர் இளவரசு...அட இந்த படத்துலயா!

ஏப்ரல் 10 ஆம் தேதி வெளியாகும் TN2026 திரைப்படத்தில் தான் ஒரு பாடல் பாடியிருப்பதாக நடிகர் இளவரசு அப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் தெரிவித்தார்.

நட்டி நடராஜ் நடித்து நகைச்சுவை நடிகர் தம்பி ராமையானவின் மகல் உமாபதி ராமையா இயக்கத்தில் உருவாகியுள்ள படம் TN2026. அண்மையில் இப்படத்தின் டீசர் வெளியாகி தெவக ஆதரவாளர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய நடிகர் இளவரசு தான் இந்த படத்தில் பாடியுள்ள பாடலைப் பற்றி பேசினார் .

பாடகராக அறிமுகமாகும் நடிகர் இளவரசு 

ஒரு திரைப்படத்தில் நடித்து, அந்த படம் முறையாக வெளியேறி வெற்றி பெறுவது அதை விட பெரிய சந்தோஷம், எங்கள் போன்ற திரைப்படத் துறையினருக்கு வேறு எதுவும் இல்லை. ஒரு படத்தை உருவாக்குவது முக்கியமல்ல, அதை மக்களிடம் கொண்டு சேர்ப்பதுதான் மிக முக்கியம். ரவி சார், இந்த படத்தில் எனக்கு வாய்ப்பு அளித்ததற்காக மட்டுமல்ல, இந்த நிகழ்ச்சியை இவ்வளவு அழகாக திட்டமிட்டு, படத்தை மக்களிடம் கொண்டு சேர்க்க நீங்கள் எடுத்த முயற்சி, அது உங்கள் சினிமா மீது உள்ள அன்பை தெளிவாக காட்டுகிறது. ஒரு சினிமாக்காரராக, சினிமா எப்போதும் உங்களுக்கு துணையாக இருக்க வேண்டும் என்று மனமார வேண்டுகிறேன்.

இந்த படத்தின் இயக்குநர் உமாபதி என் நண்பரின் மகன் என்பதற்காகவோ, எனக்கு வாய்ப்பு கொடுத்தவர் என்பதற்காகவோ நான் பாராட்டவில்லை. ஒரு திரைப்படத்தை எப்படி கையாள வேண்டும், அதன் மேலாண்மை, அதன் வடிவமைப்பு  எல்லாவற்றையும் தெளிவாக புரிந்துகொண்டு, மிகப் பொறுப்புடன் இந்த படத்தை இயக்கியிருக்கிறார். அவருக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள். நீங்கள் படம் பார்க்கும் போது நான் சொல்வதின் அர்த்தம் உங்களுக்கு புரியும்.

புதிய கலைஞர்களுக்கு வாய்ப்பு கொடுத்து, அவர்களை ஊக்குவிப்பது மிகவும் அவசியம். இந்த படத்தில் அவர்கள் தங்கள் திறமையை நிரூபித்துள்ளனர். இந்த படத்தில் நான் ஒரு பாடல் பாடியிருக்கிறேன், ஒரு நடனம் ஆடியிருக்கிறேன், ஒரு சண்டைக் காட்சியிலும் நடித்திருக்கிறேன். இதற்காக பாடல், நடனம், சண்டை ஆகிய துறைகளில் பணியாற்றிய அனைவருக்கும் என் நன்றி.

நானும், எம். எஸ். பாஸ்கர் சார், ராமையா சார் மூவரும் இந்த வயதில் பல அனுபவங்களை கடந்து வந்தவர்கள். அதனால் போட்டி, பொறாமை போன்றவற்றை தாண்டி, ஒரு உணர்ச்சிப்பூர்வமான உறவோடு  இந்த படத்தில் நடித்துள்ளோம். இயக்குநர் உமாபதி இந்த படத்தில் கதை, வசனம், அனைத்திலும் அக்கறையுடன் உழைத்துள்ளார். படம் மிகவும் சுவாரஸ்யமாக உருவாகியுள்ளது. டிரெய்லர் பார்த்த பிறகு பல கேள்விகள் எழுந்திருக்கும். அந்த கேள்விகள் இன்னும் அதிகரித்தால், அது எங்களுக்கு மகிழ்ச்சி. இந்த படம் ஓடி, வெற்றி பெற வேண்டும் என்பதே எங்கள் ஆசை. இந்த படத்தின் கதாநாயகி மற்றும் மற்ற கலைஞர்கள் அனைவரும் சிறப்பாக நடித்துள்ளனர். இந்த படம் பற்றி இன்னும் நிறைய பேச வேண்டியுள்ளது. ஆனால் அதை நீங்கள் திரையரங்கில் பார்த்து அனுபவிக்க வேண்டும் என நினைக்கிறேன்  இந்த படம் பெரிய வெற்றி பெறும் என்று நம்புகிறேன். நன்றி." 

TN2026 வரும் ஏப்ரல் 10 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது 

தலைப்பு செய்திகள்

"முடிந்தால் இதைச் செய்து காட்டுங்கள்!"... சவால்விட்ட சிவாஜி... எம்ஜிஆர் கொடுத்த பதில்
வேகமெடுக்கும் காவேரி பிரச்சனை..கர்நாடக திரையரங்குகளில் இருந்து நீக்கப்படும் ஜனநாயகன்
வேகமெடுக்கும் காவேரி பிரச்சனை..கர்நாடக திரையரங்குகளில் இருந்து நீக்கப்படும் ஜனநாயகன்
மூன்று தீபாவளி வரை ஹவுஸ்ஃபுல்... இதுவரை எந்த தமிழ் படமும் முறியடிக்காத சாதனை!
மூன்று தீபாவளி வரை ஹவுஸ்ஃபுல்... இதுவரை எந்த தமிழ் படமும் முறியடிக்காத சாதனை!
Sasikumar:
Sasikumar: "விஜய் முதலமைச்சரானதில் ஒரே ஒரு வருத்தம்தான்.." இயக்குனர் சசிகுமார் சொன்னது ஏன்?

வீடியோ

Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?
RSS to கல்வி அமைச்சர் மோடியின் நம்பிக்கை!யார் இந்த பிரகலாத் ஜோஷி?
வைத்திலிங்கம் ரூ.28 கோடி ஊழல்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ஸ்கார்பியோ கார், கறி விருந்து, எம்எல்ஏ சீட்டுக்கு 10 கோடி வசூல் ? விஜயபாஸ்கரை ரவுண்டு கட்டும் அதிமுக
ஸ்கார்பியோ கார், கறி விருந்து, எம்எல்ஏ சீட்டுக்கு 10 கோடி வசூல் ? விஜயபாஸ்கரை ரவுண்டு கட்டும் அதிமுக
Thoppu venkatachalam : மாஜி அமைச்சர் தோப்பு வெங்கடாச்சலம் பதவியை பறித்த ஸ்டாலின்.! இது தான் காரணமா.?
மாஜி அமைச்சர் தோப்பு வெங்கடாச்சலம் பதவியை பறித்த ஸ்டாலின்.! இது தான் காரணமா.?
Narendra Modi: மன்னிச்சு விடுறேன்.. கெட்ட வார்த்தை பேசிய போராட்டக்காரர்கள்.. வீடியோ வெளியிட்ட மோடி!
Narendra Modi: மன்னிச்சு விடுறேன்.. கெட்ட வார்த்தை பேசிய போராட்டக்காரர்கள்.. வீடியோ வெளியிட்ட மோடி!
Rahul Gandhi: தமிழ்நாடு வரும் ராகுல்காந்தி.. விஜயை சந்திக்காதது ஏன்? .. இதுதான் பிளான்!
Rahul Gandhi: தமிழ்நாடு வரும் ராகுல்காந்தி.. விஜயை சந்திக்காதது ஏன்? .. இதுதான் பிளான்!
TASMAC shops : 717 டாஸ்மாக் கடைகளுக்கு பதிலாக FL-2 மதுபான கிளப் தொடங்க அனுமதி.? விஜய் அரசை வெளுத்தெடுக்கும் நயினார்
717 டாஸ்மாக் கடைகளுக்கு பதிலாக FL-2 மதுபான கிளப்.? விஜய் அரசை வெளுத்தெடுக்கும் நயினார்
TN Weather News: காற்றழுத்த தாழ்வு நிலை.. தமிழ்நாட்டில் இன்று வெளுக்கப்போகும் கனமழை.. எங்கு?
TN Weather News: காற்றழுத்த தாழ்வு நிலை.. தமிழ்நாட்டில் இன்று வெளுக்கப்போகும் கனமழை.. எங்கு?
சிஎம் விஜய் கர்நாடகாவிற்கு வர வேண்டாம் - டி.கே.சிவக்குமார் திடீர் அறிவிப்பு - காரணம் என்ன.?
சிஎம் விஜய் கர்நாடகாவிற்கு வர வேண்டாம் - டி.கே.சிவக்குமார் திடீர் அறிவிப்பு - காரணம் என்ன.?
Commercial LPG Price : அப்பாடா..! காலையிலேயே ஜாக்பாட்.! 202 ரூபாய் குறைந்தது வர்த்தக சிலிண்டர் விலை- வெளியான சூப்பர் அறிவிப்பு
அப்பாடா..! காலையிலேயே ஜாக்பாட்.! 202 ரூபாய் குறைந்தது சிலிண்டர் விலை- வெளியான சூப்பர் அறிவிப்பு
Embed widget