மேலும் அறிய

Hrithik Roshan: எதுவுமே உண்மையில்ல...பொய் செய்தி சொல்லாதீங்க...கொந்தளித்த ஹிருத்திக் ரோஷன்

இருவருக்குள்ளும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் முறைப்படி பிரிந்துவிட்ட நிலையில் தங்களது இரண்டு மகன்களையும்  இரண்டு பேருமே சேர்ந்தே கவனித்து வருகின்றனர்.

தன்னைப் பற்றி வெளியான செய்திகளில் உண்மையில்லை என தெரிவித்து நடிகர் ஹிருத்திக் ரோஷன்  தனது ட்விட்டர் பக்கத்தில் காட்டமான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். 

குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி 2000 ஆம் ஆண்டில் வெளியான கஹோ நா... பியார் ஹே என்ற படத்தின் வழியாக ஹீரோவாக அறிமுகமான ஹிருத்திக் ரோஷன் பாலிவுட்டின் முன்னணி நடிகராக உள்ளார். கடைசியாக இவர் நடிப்பில் தமிழில் விஜய் சேதுபதி, மாதவன் நடிப்பில் வெளியான விக்ரம் வேதா படத்தின் இந்தி ரீமேக் வெளியானது. இதில் விஜய் சேதுபதி நடித்த கேரக்டரில் ஹிருத்திக் ரோஷன் நடித்திருந்தார். 

இதனிடையே காதலித்து திருமணம் செய்து கொண்ட தனது மனைவி சுஷானேயை கடந்த 2014 ஆம் ஆண்டு ஹிருத்திக் ரோஷன் விவாகரத்து செய்தார். இருவருக்குள்ளும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் முறைப்படி பிரிந்துவிட்ட நிலையில் தங்களது இரண்டு மகன்களையும்  இரண்டு பேருமே சேர்ந்தே கவனித்து வருகின்றனர். இதற்கிடையில் நடிகையும், பாடகியுமான ஷபா ஆசாத் என்பவரை ஹிருத்திக் ரோஷன் காதலித்து வருவதாக சொல்லப்பட்டது.

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Hrithik Roshan (@hrithikroshan)

அதனை உறுதிப்படுத்தும் வண்ணம் இருவரும் அடிக்கடி பொதுநிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வருகின்றனர். இவ்வளவு ஏன்  சுஷானே ஹோட்டல் திறந்தபோது கூட அதில் ஷபாவுடன் ஹிருத்திக் ரோஷன்  கலந்து கொண்டார். இதனைத் தொடர்ந்து இந்த காதல் வாழ்க்கையை அவர் அடுத்தக் கட்டத்திற்கு எடுத்துச் செல்ல முயன்றதாகவும், அதன்படி சில காலம் லிவ்இன் ரிலேசன்ஷிப்  வாழ்க்கையை வாழ முடிவு செய்துள்ளதாகவும் சொல்லப்படுகிறது. 

மேலும் இதன் ஒரு பகுதியாக மும்பை வெர்சோவா கடற்கரையில் ரூ.100 கோடி மதிப்புள்ள மூன்று மாடிகள் கொண்ட சொகுசு பங்களாவை விலைக்கு வாங்கியுள்ளதாக தகவல் வெளியானது. இந்நிலையில் தான் ஹிருத்திக் ரோஷன் காட்டமான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் ஊடகத்தில் வெளியான செய்தியை குறிப்பிட்டு இதில் எந்த உண்மையும் இல்லை. ஒரு பொது நபராக, நான் ஆர்வத்துடன் இருப்பேன் என்பதை நான் புரிந்துகொள்கிறேன், ஆனால் தவறான தகவல்களைத் தவிர்ப்பது நல்லது. இது ஒரு பொறுப்பான வேலை  என தெரிவித்துள்ளார். இதன்மூலம் தன் மீதான வதந்திகளுக்கு அவர் முற்றுப்புள்ளி வைத்துள்ளார். 

 

தலைப்பு செய்திகள்

சூர்யாவின் விஸ்வநாத் & சன்ஸ்' திரைப்படத்தின் கதை இதுவா!
சூர்யாவின் விஸ்வநாத் & சன்ஸ்' திரைப்படத்தின் கதை இதுவா!
திரையரங்கிலும் ஓடிடியிலும் நாளை வெளியாகும் முக்கிய படங்கள், வெப் சீரிஸ்கள்
திரையரங்கிலும் ஓடிடியிலும் நாளை வெளியாகும் முக்கிய படங்கள், வெப் சீரிஸ்கள்
'துரந்தர்' உலக சாதனை... இந்த ஆண்டில் நெட்ஃப்ளிக்ஸில் அதிகம் பார்க்கப்பட்ட Non-English திரைப்படம்!
'துரந்தர்' உலக சாதனை... இந்த ஆண்டில் நெட்ஃப்ளிக்ஸில் அதிகம் பார்க்கப்பட்ட Non-English திரைப்படம்!
"கருத்து சுதந்திரத்திற்கு எல்லை உண்டு" – உதயநிதி கைது விவகாரத்தில் நடிகர் விஷால் கருத்து

வீடியோ

CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: சிஎம் விஜயின் அவசர கூட்டம் ஏன்? திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் முடிவு என்ன? அரசியல் சம்பவமா?
சிஎம் விஜயின் அவசர கூட்டம் ஏன்? திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் முடிவு என்ன? அரசியல் சம்பவமா?
Sekar Babu: ”வந்து இருப்பது சேகர் பாபு-யா” ஆனாலும் வண்டியை அனுப்ப முடியாது - திருத்தணியில் நடந்தது என்ன?
”வந்து இருப்பது சேகர் பாபு-யா” ஆனாலும் வண்டியை அனுப்ப முடியாது - திருத்தணியில் நடந்தது என்ன?
கோயிலுக்கு எந்த VIP வந்தாலும் கண்டிப்பாக எனக்கு சொல்லனும்.! அமைச்சர் ரமேஷ் போட்ட உத்தரவால் பரபரப்பு
கோயிலுக்கு எந்த VIP வந்தாலும் கண்டிப்பாக எனக்கு சொல்லனும்.! அமைச்சர் ரமேஷ் போட்ட உத்தரவால் பரபரப்பு
DMK vs TVK: தவெக வெள்ளை அறிக்கை VS தவெக பட்ஜெட்! கம்பேர் செய்த திமுக - பரபரப்பு அறிக்கை
DMK vs TVK: தவெக வெள்ளை அறிக்கை VS தவெக பட்ஜெட்! கம்பேர் செய்த திமுக - பரபரப்பு அறிக்கை
Indias Best SUV: இங்க எஸ்யுவி-னாலே நாங்க தான்..! உள்ளூரில் கோலோச்சும் டாப் 5 கார் மாடல்கள் - விலையும், வசதிகளும்..
இங்க SUV-னாலே நாங்க தான்..! உள்ளூரில் கோலோச்சும் டாப் 5 கார் மாடல்கள் - விலையும், வசதிகளும்..
CM Joseph Vijay: திமுக, அதிமுக MPக்களுக்கு முதல்வர் விஜய் திடீர் அழைப்பு.. என்ன காரணம்?
CM Joseph Vijay: திமுக, அதிமுக MPக்களுக்கு முதல்வர் விஜய் திடீர் அழைப்பு.. என்ன காரணம்?
Maruti Car Offers: ரூபாய் 1.55 லட்சம் தள்ளுபடி.. ஆடி மாத ஆஃபரை அள்ளித்தெளித்த மாருதி சுசுகி - எந்தெந்த காருக்கு?
Maruti Car Offers: ரூபாய் 1.55 லட்சம் தள்ளுபடி.. ஆடி மாத ஆஃபரை அள்ளித்தெளித்த மாருதி சுசுகி - எந்தெந்த காருக்கு?
முதல் பட்ஜெட்டிலேயே பெரும் ஏமாற்றம்... கரும்பு விவசாயிகள் சங்க செயலாளர் வேதனை
முதல் பட்ஜெட்டிலேயே பெரும் ஏமாற்றம்... கரும்பு விவசாயிகள் சங்க செயலாளர் வேதனை
Embed widget