மேலும் அறிய

Dhanush: "கராவும் இல்ல.. காராவும் இல்ல.. இது வெறும் கர" தலைப்புக்கு விளக்கம் கொடுத்த தனுஷ்

நடிகர் தனுஷ் தனது கர படத்தின் தலைப்பை எவ்வாறு உச்சரிக்க வேண்டும் என்று விளக்கம் அளித்துள்ளார்.

தமிழ் திரையுலகின் பிரபலமான நடிகர் தனுஷ். தனக்கென தனி ரசிகர்கள் பட்டாளத்தை வைத்துள்ள தனுஷ் நடித்துள்ள கர படம் வரும் 30ம் தேதி கோடை விடுமுறையாக வெளியாகிறது.

கர:

இந்த படத்தின் நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய தனுஷ் படத்தின் தலைப்பு குறித்து பேசினார். அதில் அவர் பேசியதாவது, இந்த படத்தின் தலைப்பு கர எனக்கு புதிராக இருந்தது. அனைவரும் இந்த தலைப்பை தவறாக உச்சரிக்கின்றனர். ஆங்கிலத்தில் நான்கு எழுத்துக்கள் உள்ளது. ஆனால் அனைவரும் இதை தவறாகவே உச்சரிக்கின்றனர். கரா, காரா என்கின்றனர்.

சிலர் மட்டுமே கர என்கின்றனர். படத்தின் கதாநாயகி கூட கரா என்று கூறுகிறார். என் தயாரிப்பாளர்கூட கரா என்று கூறுகிறார். இது வெறும் கர. உங்களுக்கு எப்படி வருகிறதோ அப்படியே கூறுங்கள். ஆனால், திரையரங்கிற்கு சென்று படத்தைப் பாருங்கள். நீங்கள் புறா, கிரா என்று என்ன வேண்டுமானாலும் சொல்லுங்கள்.

இவ்வாறு அவர் பேசினார்.

நட்சத்திரங்கள்:

விக்னேஷ் ராஜா இயக்கியுள்ள இந்த படத்தில் தனுஷுடன் மமைதா பைஜு நடித்துள்ளார். கொள்ளையை மையமாக கொண்டு இந்த படம் உருவாக்கப்பட்டுள்ளது. கே.எஸ்.ரவிக்குமார், கருணாஸ், ஜெயராம் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர்.

போர் தொழிலுக்கு பிறகு இயக்குனர் விக்னேஷ் ராஜா இயக்கும் படம் என்பதால் மிகப்பெரிய எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. இந்த படத்தை ரெட் ஜெயண்ட் மூவீஸ் விநியோகிக்கிறது. வேல்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்திற்கு தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்துள்ளார். ஸ்ரீஜித் சராங் படத்தொகுப்பு செய்துள்ளார். ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார்.

எதிர்பார்ப்பு:

இந்த படம் தமிழ் மட்டுமின்றி தெலுங்கிலும் நடிக்கிறது. 1991ம் ஆண்டு காலகட்டத்தில் நடப்பது போல இந்த படம் உருவாகியுள்ளது. படத்தின் ட்ரெயிலர் ஏற்கனவே வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.

தனுஷ் படம் இட்லிக்கடைக்கு பிறகு இந்த படம் வெளியாகிறது. இட்லிக்கடை வெளியாகி தோல்வி அடைந்த நிலையில், இந்த படம் வெளியாக உள்ளதால் இந்த படத்தின் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. 

லைவ் டிவி

ABP நாடு
ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

Inji Vellam: ஆச்சி.. ஆச்சி.... இணையத்தை கலக்கும் இஞ்சி வெல்லம் பாட்டு! சாய் பல்லவியின் புது கெட்டப்!
Inji Vellam: ஆச்சி.. ஆச்சி.... இணையத்தை கலக்கும் இஞ்சி வெல்லம் பாட்டு! சாய் பல்லவியின் புது கெட்டப்!
Vijay Sethupathi: தவெக ஆட்சி எப்படி இருக்குது? மனம் திறந்து பேசிய விஜய் சேதுபதி!
Vijay Sethupathi: தவெக ஆட்சி எப்படி இருக்குது? மனம் திறந்து பேசிய விஜய் சேதுபதி!
Karthigai Deepam: ஸ்ரேயா மீது துப்பாக்கிச்சூடு.. சுட்டது யார் தெரியுமா? கார்த்திகை தீபத்தில் திக்.. திக்..!
Karthigai Deepam: ஸ்ரேயா மீது துப்பாக்கிச்சூடு.. சுட்டது யார் தெரியுமா? கார்த்திகை தீபத்தில் திக்.. திக்..!
"என்னாலே நினைக்காம இருக்கவே முடியல.." ஹாலிவுட் ஹீரோ மனதைப் பாதித்த மகாராஜா!

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Paternity Leave: அரசு ஊழியர்களுக்கு குட்நியூஸ்! இனி ஆண்களுக்கும் மகப்பேறு விடுப்பு.. எத்தனை நாட்கள் தெரியுமா?
Paternity Leave: அரசு ஊழியர்களுக்கு குட்நியூஸ்! இனி ஆண்களுக்கும் மகப்பேறு விடுப்பு.. எத்தனை நாட்கள் தெரியுமா?
Innova Hycross: புதிய இன்னோவா ஹைக்ராஸில் வந்துள்ள டாப் 5 மாற்றங்கள் என்ன? வாங்கும் முன் அறிய வேண்டியவை
புதிய இன்னோவா ஹைக்ராஸில் வந்துள்ள டாப் 5 மாற்றங்கள் என்ன? வாங்கும் முன் அறிய வேண்டியவை
"தவெக எம்எல்ஏ-வை சும்மா விடக்கூடாது.. 116 நாட்களாக என்ன பண்ணிங்க?" பிரஸ் மீட்டில் எகிறிய உதயநிதி!
TVK On Stalin: ”மண்ணாங்கட்டிப் பரம்பரை.. ஆளுநர் காலில் விழுந்த திமுக” உதயநிதியை வெளுத்த தவெக
”மண்ணாங்கட்டிப் பரம்பரை.. ஆளுநர் காலில் விழுந்த திமுக” உதயநிதியை வெளுத்த தவெக
TASMAC: டாஸ்மாக் தற்காலிகப் பணியாளர்கள் நியமனத்தில் அதிரடி மாற்றம்! இதோ முழு விவரம்!
TASMAC: டாஸ்மாக் தற்காலிகப் பணியாளர்கள் நியமனத்தில் அதிரடி மாற்றம்! இதோ முழு விவரம்!
TN Govt: ரூ.5 கோடி நிதி ஒதுக்கீடு, 25% மானியம்..! 500 பால் பண்ணைகளுக்கு அரசு அதிரடி திட்டம்
ரூ.5 கோடி நிதி ஒதுக்கீடு, 25% மானியம்..! 500 பால் பண்ணைகளுக்கு அரசு அதிரடி திட்டம்
Hardik Pandya: ராஜஸ்தான் அணியில் இணையவிருந்த ஹர்திக்.. மும்பையின் ஒரே கண்டிஷனால் முடிந்த டோல் - என்ன ஆச்சு?
ராஜஸ்தான் அணியில் இணையவிருந்த ஹர்திக்.. மும்பையின் ஒரே கண்டிஷனால் முடிந்த டோல் - என்ன ஆச்சு?
Vijay Sethupathi: தவெக ஆட்சி எப்படி இருக்குது? மனம் திறந்து பேசிய விஜய் சேதுபதி!
Vijay Sethupathi: தவெக ஆட்சி எப்படி இருக்குது? மனம் திறந்து பேசிய விஜய் சேதுபதி!
Embed widget